Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சோமநாத் சட்டர்ஜி மீண்டும் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார்

Posted: 18 Jul 2015 10:38 PM PDT

பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி. 86 வயதான அவர் 10 முறை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகினார். மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த அவரை மீண்டும் கட்சியில் இணையுமாறு மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். அவரும் அதை பரிசீலிப்பதாக கூறினார்.

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Posted: 18 Jul 2015 10:06 PM PDT

ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள ஜெகந்நாதர் கோவிலில் நேற்று தேரோட்ட திருவிழா தொடங்கியது. இதற்காக ஜெகந்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோருக்கான 3 தேர்கள் அணிவகுத்து வந்தன. கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த தேர்கள் சுமார் 3 கிலோ மீட்டர்

கேரளாவில் பெண்கள், குழந்தைகள் மாயம் அதிகரிப்பு: டி.ஜி.பி. சுற்றறிக்கையை படிக்காத போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை

Posted: 18 Jul 2015 09:45 PM PDT

கேரளாவில் சமீபத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக சென்குமார் புதிதாக பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றபிறகு குற்றங்களை தடுப்பதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுதொடர்பான தனது உத்தரவுகளை போலீசாருக்கு சுற்றறிக்கை மூலம் அவர் தெரிவித்து வருகிறார்.

தாக்குதல்களுக்கு மத்தியில் செப்டம்பர் 9-ந் தேதி முதல் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை

Posted: 18 Jul 2015 08:48 PM PDT

ரஷியாவில் உபா நகரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றுக்கு இடையே கடந்த 10-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையின்போது, இரு

மராட்டியத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தற்கொலை

Posted: 18 Jul 2015 08:41 PM PDT

மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் முரளிதர் சாஷ்னே. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக இருந்து வந்தார். நேற்று காலையில் ஸ்ரீராம்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த போது சஞ்சய் முரளிதர் சாஷ்னே தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்திரா இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த மார்கரெட் தாட்சரை தீர்த்துக்கட்ட முயன்ற தீவிரவாதிகள்

Posted: 18 Jul 2015 08:36 PM PDT

இங்கிலாந்து முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் தனது பதவிக் காலத்தின் போது அந்நாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் மிக நெருக்காமான நட்பு பாராட்டி வந்தார். இந்திரா படுகொலை செய்யப்பட்ட பிறகு அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக மார்கரெட் தாட்சர் டெல்லி வந்திருந்தார்.

மாணவி குத்திக்கொலை: 2 நாளில் அறிக்கை அளிக்க டெல்லி போலீஸ் கமிஷனருக்கு கெஜ்ரிவால் அரசு உத்தரவு

Posted: 18 Jul 2015 08:29 PM PDT

டெல்லியை சேர்ந்தவர் மீனாட்சி. 11-ம் வகுப்பு மாணவி. இவரை ஜெய்பிரகாஷ், அஜய் என்னும் 2 சகோதரர்கள் பின்தொடர்ந்து சென்று, கிண்டல் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி மீனாட்சி, தன் தாயாருடன் மத்திய டெல்லியில் உள்ள சந்தைக்கு போய் விட்டு வீட்டுக்கு திரும்பி

ஆட்சி பொறுப்பேற்றபின் முதல் முறையாக கூட்டணி கட்சிகளுடன் பிரதமர் நாளை ஆலோசனை

Posted: 18 Jul 2015 08:19 PM PDT

முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித்மோடி விவகாரம், வியாபம் ஊழல் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் ஆளும் பா.ஜனதா கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரங்களை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப காங்கிரஸ், கம்யூனிஸ்டு போன்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே இதற்கு பாராளுமன்றத்தில் பதில் அளிப்பது, எதிர்க்கட்சிகளின் சவால்களை சந்திப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர்

டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி: 12 பேர் உயிருடன் மீட்பு

Posted: 18 Jul 2015 05:29 PM PDT

டெல்லி மேற்கு பகுதியில் உள்ள விஷ்ணு கார்டனில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் 4 மாடிகளிலும் நிறைய பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

அடுத்த தலைமுறை மோட்டோ ஜி போன் வரும் ஜூலை 28 வெளியிடப்படுகிறது- தகவல்

Posted: 18 Jul 2015 05:02 PM PDT

வரும் ஜூலை-28 அன்று அடுத்த தலைமுறை மோட்டோ ஜி போன் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அடுத்த தலைமுறை மோட்டோ ஜி ஸ்மார்ட்போனின் படங்கள் இணையத்தில் கசிந்து பலராலும் பார்க்கப்படுவருகிறது. இந்நிலையில்

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 15 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்

Posted: 18 Jul 2015 12:23 PM PDT

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணு கார்டன் பகுதி இருந்த ஒரு 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேருக்கு மேற்பட்டோர்கள் சிக்கியிருக்கலாம்

தமிழகம் - ஆந்திரா இடையே பக்கிங்காம் கால்வாயில் விரைவில் படகு போக்குவரத்து

Posted: 18 Jul 2015 11:59 AM PDT

தமிழ்நாட்டையும் ஆந்திர மாநிலத்தையும் நீர்வழிப்பாதையில் இணைக்கும் வகையில் விரைவில் பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்கப்படும். இதற்காக சோழிங்கநல்லூர், மாமல்லபுரத்தில் விரைவில் போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படுகின்றன.

315 லட்சம் கோடி மதிப்புள்ள பிளாட்டினத்துடன் பூமியை கடந்து செல்லும் சிறுகோள்

Posted: 18 Jul 2015 10:56 AM PDT

315 லட்சம் கோடி மதிப்புள்ள பிளாட்டினத்துடன் சிறுகோள் ஒன்று பூமியை கடந்து செல்லவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த கோள் பூமியை கடந்து செல்லும் நிகழ்வு இணையத்தில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. திங்கள் அதிகாலை 4 மணியளவில் யு.டபிள்யூ-158 என்ற

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: கெஜ்ரிவால் அறிவிப்பு

Posted: 18 Jul 2015 09:07 AM PDT

டெல்லி ஆனந்த் பர்பத் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தன்னை கேலி செய்ததை எதிர்த்ததால் அண்ணன்- தம்பி ஆகியோர் அந்த பெண்ணை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்தனர். அதன்பின் போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட

விதர்பா பிராந்தியத்தில் இரண்டு விவசாயிகள் தற்கொலை

Posted: 18 Jul 2015 08:41 AM PDT

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பிராந்தியத்தில் உள்ள மாவட்டம் வாஷிம். இந்த மாவட்டத்தில் உள்ள மங்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் ஷெல்கே (வயது 22). இவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் கட்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த துர்காடை தேஷ்முக் (வயது 55) என்ற பெண் விவசாயி தனக்குத்தானே தீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அனைத்து மரணங்களையும் வியாபம் ஊழலோடு இணைக்காதீர்கள்: பாரதீய ஜனதா

Posted: 18 Jul 2015 08:28 AM PDT

வியாபம் முறைகேடு வழக்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கு பாரதீய ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தொழிற்கல்வி தேர்வு வாரியத்தில் (வியாபம்) ஊழல் முறைகேடுகள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் இறந்தது போன்ற உண்மைகள்

ஜம்மு- காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏந்துபவர்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு சூசகம்

Posted: 18 Jul 2015 08:08 AM PDT

ஜம்மு- காஷ்மீரில் பாகிஸ்தான் கொடிகள் ஏந்தும் செயல்களை மத்திய அரசு கண்காணித்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீரில் பிரிவினைவாதிகள் பேரணிகளின் போது பாகிஸ்தான் கொடிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கங்களின் கொடிகளை ஏந்திச்செல்லும் செயல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அதேபோல், இன்றும் அம்மாநில தலைநகர் ஸ்ரீநகர்

புரி ஜெகநாதர் ரதயாத்திரையில் கூட்ட நெரிசல்: 2 பெண்கள் பலி- 10 பேர் காயம்

Posted: 18 Jul 2015 07:06 AM PDT

ஒடிசாவில் இன்று தொடங்கிய புரி ஜெகநாதர் ரதயாத்திரையில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் பலியாயினர். 10 பேர் படுகாயமடைந்தனர். ஒடிசா மாநிலம் புரி நகரில் உள்ள ஜெகநாதர் கோவில் உலக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 9 நாள் ரதயாத்திரையை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

கோவா விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 2 பயணிகள் காயம்

Posted: 18 Jul 2015 05:31 AM PDT

சென்னை விமான நிலையத்தைப் போலவே கோவா விமான நிலையமும் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. கோவாவில் கடந்த 2013-ம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட விமான நிலையத்தின், ஒரு பகுதியில் உள்ள மேற்கூரை, இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது. இதில் இரண்டு பயணிகள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

உத்தர பிரதேசத்தில் பரிதாபம்: வீடு இடிந்து விழுந்ததால் தாய், மகள் பலி

Posted: 18 Jul 2015 03:37 AM PDT

உத்தரபிரதேசத்தில் கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள உத்ரஸ் கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™