Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டிக், டிக் நிமிடங்கள்: யாகூப் மேமன் மனு மீது 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்சு விசாரணை தொடங்கியது

Posted: 28 Jul 2015 10:47 PM PDT

தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க கோரி மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகளை கொண்ட பெஞ்சு

திருப்பதியில் 8 மணி நேரத்தில் சாமி தரிசனம்

Posted: 28 Jul 2015 10:24 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 44,812 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 17 அறைகளில் 8 மணி நேரம் காத்து இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆந்திராவில் வெங்காயம் விலை திடீர் உயர்வு: கிலோ ரூ.40–க்கு விற்பனை

Posted: 28 Jul 2015 09:54 PM PDT

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஆந்திராவுக்கு லாரிகள் மூலம் வெங்காயம் வந்து கொண்டு இருந்தது. தற்போது அங்கு கடும் மழை பெய்தது. பயிரிடப்பட்டு இருந்த வெங்காயம் அழுகியது. இதனால் ஆந்திராவுக்கு வெங்காயம் வரவில்லை. இதன் காரணமாக வெங்காயம் விலை உயர்ந்து

அபூர்வ மனிதர் கலாம்: அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை

Posted: 28 Jul 2015 09:49 PM PDT

தன் மீது அரசியல் சாயம் பூசப்படுவதை விரும்பாதவர் கலாம். அதே சமயம், அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும், எப்படி செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றும் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

தானேயில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 6 பேர் பலி

Posted: 28 Jul 2015 09:43 PM PDT

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள 3 மாடிக்கட்டிடம் நேற்றிரவு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பலியானார்கள். முன்னதாக தானேயின் தகுர்லி என்ற பகுதியில் அமைந்துள்ள 'மாத்ரு சயா' என்ற 3 மாடிக்கட்டிடம் நேற்றிரவு 10.40 மணியளவில் திடீரென இடிந்து

அப்துல் கலாம் சைவப் பிரியராக மாறியது எப்படி?: ருசிகர தகவல்

Posted: 28 Jul 2015 09:35 PM PDT

திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் அரசின் கல்வி உதவித்தொகை மூலம் அப்துல் கலாம் இயற்பியல் படித்துவந்த வேளையில் குடும்ப வறுமையால் அந்த உதவித் தொகையை மட்டும் வைத்தே வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. எனவே,

அப்துல் கலாம் மறைவையொட்டி கேரளாவில் கூடுதல் நேரம் பணிபுரிந்த அரசு ஊழியர்கள்

Posted: 28 Jul 2015 09:01 PM PDT

மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அப்துல் கலாம் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கேரளாவில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது.

மும்பையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

Posted: 28 Jul 2015 08:38 PM PDT

மும்பையில் மழைக்கால நோய்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் டெங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தென்மும்பை பகுதிகளான கொலபா, கிர்காவ், ஒர்லி, மாகிம், தாதர், தாராவி ஆகிய இடங்களில் ஏராளமானவர்கள் டெங்கு காய்ச்சலால்

மும்பை கடற்கரை சாலைக்கு அப்துல்கலாம் பெயர்: சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தல்

Posted: 28 Jul 2015 08:32 PM PDT

மும்பை நரிமண் பாயிண்ட் பகுதியில் இருந்து வடக்கு மும்பை காந்திவிலி வரை 35.6 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.12 ஆயிரம் கோடி செலவில் கடற்கரை சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியின்கீழ் நிறைவேற்றப்படும் இந்த கடற்கரை சாலைக்கு

அபூர்வ மனிதர் கலாம்: செருப்பு தைக்கும் தொழிலாளியை கவர்னர் மாளிகைக்கு வரவழைத்து நட்பு பாராட்டியவர்

Posted: 28 Jul 2015 08:30 PM PDT

திருவனந்தபுரத்தில் அப்துல் கலாம் பணியாற்றியபோது, அங்குள்ள காந்தாரியம்மன் கோவில் பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்தவர், ஜார்ஜ். அவரிடம் அப்துல் கலாம் நேசமுடன் பழகி வந்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ஒருமுறை திருவனந்தபுரத்துக்கு அப்துல்

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் தூதர், பஞ்சாப் முதல்-மந்திரி சந்திப்பு ரத்து

Posted: 28 Jul 2015 08:23 PM PDT

பஞ்சாப் மாநிலத்துக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், தினாநகர் பகுதியில் பொதுமக்கள் மீதும் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தும், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 8 பேர் பலியானார்கள். 18 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.

அபூர்வ மனிதர் கலாம்: 21 வருடங்கள் உணவிட்டவரை மறக்காத நல்ல உள்ளம்

Posted: 28 Jul 2015 08:17 PM PDT

மறைந்த முன்னாள் ஜனாதிபதி 1963 முதல் 1984–ம் ஆண்டு வரை 21 ஆண்டுகள் திருவனந்தபுரம் தும்பா ராக்கெட் நிலையத்தில் அப்துல்கலாம் விஞ்ஞானியாக பணிபுரிந்தார். அப்போது அவர் காந்தாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு ஓட்டலில்தான் வாடிக்கையாக சாப்பிடுவார்.

குஜராத்தில் கொட்டித் தீர்த்த பேய் மழைக்கு 22 பேர் பலி: சாலை, ரெயில் போக்குவரத்து பாதிப்பு

Posted: 28 Jul 2015 08:08 PM PDT

குஜராத் மாநிலத்தை உலுக்கி எடுத்த தொடர் மழைக்கு 22 பேர் பலியாகியுள்ளனர். தலைநகர் அகமதாபாத், பனஸ்கந்தா, படான், ராஜ்கோட் மற்றும் கட்ச் ஆகிய மாவட்டங்கள் இந்த மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக

குடிநீர் திட்ட ஊழல்: கோவா முன்னாள் மந்திரியிடம் போலீசார் விசாரணை

Posted: 28 Jul 2015 08:03 PM PDT

கோவா மாநிலத்தில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் அமெரிக்க நிறுவனம் மேற்கொண்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்துக்காக மந்திரி மற்றும் அதிகாரிகள் பல கோடி ரூபாய் பெற்றதாக அமெரிக்க நிறுவனம் அந்நாட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது.

மரண தண்டனைக்கு எதிரானவர் கலாம்

Posted: 28 Jul 2015 07:55 PM PDT

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மரண தண்டனைக்கு எதிரான கருத்தை கொண்டிருந்தார். இது தொடர்பாக அவர், "நீதிமன்றங்கள் விதித்த மரண தண்டனையை, ஜனாதிபதி என்ற நிலையில் உறுதி செய்து, முடிவு எடுப்பது என்பது மிக

அப்துல் கலாம் உடல் மதுரை புறப்பட்டது: இறுதி அஞ்சலி செலுத்த ராமேஸ்வரத்தில் குவியும் தலைவர்கள்

Posted: 28 Jul 2015 07:54 PM PDT

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், இன்று காலை சுமார் 8.05 மணியளவில் டெல்லியில் இருந்து மதுரைக்கு விமானப்படை சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மதுரையில் இருந்து ராமேசுவரம் கொண்டு வரப்படும் அவரது உடல் அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை (வியாழக்கிழமை) ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்த குடும்பத்தினர் மறுப்பு

Posted: 28 Jul 2015 07:45 PM PDT

பஞ்சாப் மாநிலம் டினா நகரில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் போலீஸ் சூப்பிரண்டு பல்ஜித் சிங், 2 போலீசார் உள்பட 8 பேர் இறந்தனர்.

தமிழக வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்ய திட்டம்: தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. புகார்

Posted: 28 Jul 2015 07:19 PM PDT

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி ஆகியோரிடம் தி.மு.க. சார்பில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, எஸ்.தங்கவேலு ஆகியோர் ஒரு மனு கொடுத்தனர். தி.மு.க. எம்.பி. கனிமொழி கையெழுத்திட்ட அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

ஏவுகணை மூலம் மல்லிகைப்பூவை அனுப்பி சமாதானமும் செய்யலாம்: அப்துல்கலாமின் வார்த்தையை நினைவுகூர்ந்த நேர்முக உதவியாளர்

Posted: 28 Jul 2015 05:13 PM PDT

'ஏவுகணை மூலம் அணு ஆயுதம் மட்டுமல்ல, மல்லிகைப் பூவை அனுப்பி சமாதானமும் செய்யலாம்' என்று அப்துல்கலாம் அடிக்கடி கூறியதை அவரது நேர்முக உதவியாளர் நினைவுகூர்ந்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாம் கவுரவ பேராசிரியராக பணியாற்றியபோது அவருக்கு பல்கலைக்கழகம் சார்பில் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டவர் எஸ்.பாபு. அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் எஸ்.பாபு பேசியதாவது:-

2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கலாமின் கனவை நிஜமாக்குவோம்: அஞ்சலி நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதிமொழி

Posted: 28 Jul 2015 04:58 PM PDT

'2020-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவை நிஜமாக்குவோம்' என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த அப்துல்கலாமுக்கு நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாணவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார். இந்த செய்தி அறிந்ததும் நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியது. ஜனாதிபதி பதவிக்கு பிறகு, அப்துல்கலாம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 11 மாதங்களாக சமுதாயத்திற்கான மாற்றம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™