Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஹலோ வாசகாஸ் – குமுதம்

Posted: 09 Jul 2015 09:46 AM PDT

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன?

Posted: 09 Jul 2015 09:08 AM PDT

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம். காரணங்கள்: மிகக் குறைந்த Hard Disk Space நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது. Data Corruption அதிக சூடாகுதல் Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல். Hardware Problems Driver ...

'நான் பாதி மலையாளி... !' - பாபநாசம் வெற்றி விழாவில் கமல்

Posted: 09 Jul 2015 09:02 AM PDT

- கமலின் 'பாபநாசம்' வெற்றி அவரை மட்டுமல்ல ஒட்டுமொத்த படக்குழுவையும் பரவசத்தில் ஆழ்த்தி இருக்கிறது. படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் விழாவை சென்னையில் இன்று நடத்திய படக்குழு, 'நாங்க ஜெயிச்சதுக்கு காரணம் மீடியாக்கள் கொடுத்த சர்டிபிகேட்தான்' என்று நன்றி பட்டாசை கொளுத்தி போட்டது. 'பாபநாசம்' படத்தில் இடம்பெற்ற பிரசித்தி பெற்ற டீக்கடை, சுயம்புலிங்கம் வீடு, போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றை தத்ரூபமாக மேடையில் செட் போட்டு அசத்தினர். படக்குழு மொத்தமும் நன்று நவில, கடைசியாக மைக் ...

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Posted: 09 Jul 2015 08:50 AM PDT

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ...

ஒழுக்கம் - ஒரு பக்க கதை

Posted: 09 Jul 2015 08:40 AM PDT

டிமிக்கி – ஒரு பக்க கதை

Posted: 09 Jul 2015 08:39 AM PDT

குலப் பெருமை!

Posted: 09 Jul 2015 08:35 AM PDT

- ஓர் ஊரில், ஒரு புளுகுமூட்டை இருந்தான். அவனுடைய தொழிலே எதற்கெடுத்தாலும் புளுகுவதுதான். இதைப் பெருமையாக வேற நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தான். ஆனால், இதற்கு நேர் எதிரான குணங்களோடு... ரொம்ப சாதுவாக, பயந்த சுபாவத்துடன் வளர்ந்தான் அவனுடைய 12 வயது மகன். இது, அப்பன்காரனை ரொம்பவே வெசனப்பட வைத்தது, "ஐயோ, புளுகத் தெரியாம இப்படித் தறுதலையா திரியுறானே! நம்ம குடும்பத்துப் பெருமையைக் கெடுத்துடுவான் போலிருக்கே! என்று சொல்லி, மகனை அடிக்கவும் செய்தான். - 'அப்பா அடித்து ...

கடவுள் சொல்லைத் தட்டக் கூடாது

Posted: 09 Jul 2015 08:34 AM PDT

நண்பர்கள் மூவர் எப்போதும் இணைபிரியாமல் இருப்பவர்கள். அவர்களுக்கு ஒருவர் ஒரு அல்வா துண்டு வழங்கினார். – மூவரும் சாப்பிடும் அளவு இல்லை. ஒருவர்தான் சாப்பிட முடியும். – மூவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர். இதை ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டுத் தூங்குவோம். மூவரில் யாருக்கு அற்புதமானகனவு வருகிறதோ அவருக்கே இந்த அல்வா துண்டு என்பதே அந்த முடிவு. – இரவு என் கனவில் கடவுள் வந்தார். …என்னை அழைத்துக் கொண்டு போய் உலகம் முழுமையும் சுற்றிக் காண்பித்து வந்தார் – என்று ஒருவன் சொன்னான். – அடுத்தவன், ...

பூந்தளிர் காமிக்ஸ் ,அமர் சித்ரா கதா காமிக்ஸ்,ராணி காமிக்ஸ்,லயன் காமிக்ஸ்,வாண்டுமாமா பார்வதி சித்திரக்கதை,கஸ்தூரி சித்திரக்கதை,இந்திராஜால் காமிக்ஸ்,முத்து காமிக்ஸ்,மலர் காமிக்ஸ்,ரேகா காமிக்ஸ்,

Posted: 09 Jul 2015 08:09 AM PDT

50 காமிக்ஸ் ஒரே பதிவில் இலவசமாக ............. 1987இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் டவுன்லோட் செய்ய. (1987 காமிக்ஸ் வரிசை -2) http://www.mediafire.com/download/92hwnf8g3z8kmab/Poonthalir+comics+1987+-2.pdf 1985 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/32u5bu441nz9890/Poonthalir+1985+comics.pdf 1984 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/gcjlybqpxn4a0dk/Poonthalir+comics+1984.pdf 1987இல் ...

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 09 Jul 2015 08:06 AM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில்

Posted: 09 Jul 2015 08:01 AM PDT

கோவை: பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, துடியலூர் பகுதியில் நேற்றிரவு 9 மணி அளவில் பள்ளி மாணவி ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடி இருந்துள்ளார். ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த   மாணவியான இவர், குடிபோதையில் நண்பருடன் வந்ததாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமான போதையில் தள்ளாடிய மாணவியை பொதுமக்கள் மீட்க சென்ற போது அவர்களை, மாணவி தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனையடுத்து சம்பவ ...

‘பேயே, பிசாசே, குட்டிச் சாத்தானேனு கொஞ்சறாரு..! –

Posted: 09 Jul 2015 07:57 AM PDT

இன்று பஸ்ஸில் உன்னை மாதிரியே ஒரு பெண்ணைப் பார்த்தேன்..! – நீங்க என்ன பண்ணினீங்க? – பயந்து போய் இறங்கி வேற பஸ்ஸிலே ஏறிட்டேன்..! – அமுதா அசோக்ராஜ் – —————————————– – அடிக்கடி வீட்டுக்காரரோட பேய்ப்படத்துக்குப் படத்துக்கு போனது தப்பாப் போச்சு..! – ஏன் என்னாச்சு? – கொஞ்சும்போது கூட, 'பேயே, பிசாசே, குட்டிச் சாத்தானேனு கொஞ்சறாரு..! – லெட்சுமி மணிவண்ணன் – —————————————– – என்ன சார், இந்த டாக்டர் பார்வை நேரம் இரவு 10 முதல் அதிகாலை 5 மணிவரை-னு போட்டிருக்காரே..! – இவரு தூக்கத்துல ...

பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!

Posted: 09 Jul 2015 07:55 AM PDT

* தமிழ்செய்தி செனல்களில் சில தினங்களுக்கு முன்னர் நான்கு வயது சிறுவர்களை மது குடிக்க வைத்து, அவர்களின் உறவினர்கள் ரசித்தக் காட்சிகள் ஒலிப்பரப்பாகி, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியுள்ளாக்க வைத்து பலரின் உள்ளங்களை உறைய வைத்தன. இதுபோன்ற சம்பங்கள் எங்கேனும் நடந்துக் கொண்டு தானிருக்கின்றன என்பதற்கு இக்காட்சித் தொகுப்புகள் சான்றாகும். மதுவை ஒழிக்க வேண்டுமென்ற குரல்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அது செவிடன் காதில் ஊதியச் சங்கொலியாகத் தானிருக்கின்றது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் ...

இனிய பிறந்த தினம்--திரு Sajeev Jino வை வாழ்த்துவோம்

Posted: 09 Jul 2015 07:52 AM PDT

இனிய பிறந்த தினம் கொண்டாடும்
திரு Sajeev Jino வை வாழ்த்துவோம்






இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் , Sajeev Jino !

ரமணியன்

அது நீங்க மீட்டிங்ல பேசின பன்ச் தலைவரே..! –

Posted: 09 Jul 2015 07:40 AM PDT

ஸ்பீக்கரு: – இடைத்தேர்தல் போல 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் புறக்கணித்து, கட்சியின் மானத்தை தலைவர் நிச்சயமாக காப்பாற்றுவார் என்பதை….. – பர்வீன் யூனூஸ் – ————————————- – என்னய்யா இது…போயும் போயும் இவ்வளவு மொக்கையான பன்ச் டயலாக்கை வெச்சு டப்ஸ்மாஷ் கிரியேட் பண்ணியிருக்காங்க..? – நாசமாப்போச்சு…அது நீங்க மீட்டிங்ல பேசின பன்ச் தலைவரே..! – கே.லட்சுமணன் – —————————————– – பேச்சாளர்: - தொகுதியில் எல்லா திட்டங்களும் நிறைவேற்றப் படுவதாலும், ஓட்டுக்கு நல்ல லாபம் கிடைப்பதாக மக்கள் ...

உங்க அம்மாவுக்கு பேய் பிடிச்சிருக்குங்க…!

Posted: 09 Jul 2015 07:27 AM PDT

- அடிக்கடி நகைக்கடைகளிலேயே கொள்ளை அடிக்கிறியே,? – நகை-ன்னா எனக்கு கொள்ளை ஆசை எசமான்..! – வெ.சீதாராமன் – ————————————— – தண்ணியடிச்சிட்டு அசிங்கமா பேசினது, லோக்கல் தலைவர்களுக்கு தெரிந்து விட்டது..! – அதனால் என்ன? – கட்சியில சேரச்சொல்லி ஆளாளுக்கு கூப்பிடறாங்க..! – சி.ஆர் ஹரிஹரன் – —————————————– – என்னது, அண்ணன் தலைமையிலே நூறு பேர் இருக்காங்களா? கட்சியிலேயா…? சான்ஸே இல்லையே…! – அட..வாட்ஸ் அப்லேப்பா…!! – எஸ்.கார்த்திகேயன் – —————————————— – ஏங்க…உங்க அம்மாவுக்கு பேய் ...

சிறகுகள்

Posted: 09 Jul 2015 07:17 AM PDT


-
–
ஏழு கடல் ஏழுமைல் தாண்டி
மந்திரவாதியின்
உயிரை தேடிப்போனவன்
எப்படிப் போனான்
என்று கேட்பதே இல்லை
எந்தக் குழந்தையும்
அவர்கள் வசம் சிறுகுகள்
இருந்தன!
–

----------------------------------------------
இரா.பூபாலன்
நன்றி – ஆனந்த விகடன்

மின்குரலின் கட்டளை..!

Posted: 09 Jul 2015 07:15 AM PDT


-
–

ப்ளீஸ் குளோஸ் தி டோர்
என அதே பெண் குரல்தான்
தவறாது
மின் கட்டளை தருகிறது
அடுக்குமாடியின் மின் ஏற்றத்தில்
நாம் தனிமையாகப்
பயணிக்க நேரிடும்
ஒவ்வொரு முறையும்
–
நீதான்
தவறாக அர்த்தம் செய்து
உடல் மூடிக்கொள்கிறாய்
உன் மாராப்பு சேலையை!
–
———————-
பிராஸ்பா
நன்றி-ஆனந்தவிகடன்

பொய்ச் சோழிகள்

Posted: 09 Jul 2015 07:04 AM PDT

பாதையோரச் சோதிடன் சோழிகள் குலுக்கி எத்தனை முறை போட்டாலும் விழவில்லை தாயம் – ஆதலால் தன் காலைப் பசியின் தொடர் மதியத்துக்குமென தனக்கான சோதிடத்தால் தளர்ந்தவன் நிமிர்ந்தான் – வாராத தலையோடு வந்தமர்ந்தாள் ஒரு கிழவி சோழி பொய் சொல்லியும் சோறு கிடைக்கப் போவதால் மகிழ்ந்தவன் கைகளை இணைத்துப் பொய்களை வேகமாய்க் குலுக்கத் தொடங்கினான்! – ——————— செல்மா காமராஜன் நன்றி- ஆனந்த விகடன்

என்னிடம் பணம் பறிக்க முயற்சி: ரஜினி பரபரப்பு புகார்!

Posted: 08 Jul 2015 06:52 PM PDT

சென்னை: "என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், என்னிடம் பணம் பறிக்கவும் முகுன்சந்த் போத்ரா முயற்சிக்கிறார். போத்ராவின் வழக்கை தள்ளுபடி செய்து, அவருக்கு அபராதம் விதிக்க வேண்டும்" என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளார். சென்னையை சேர்ந்த எஸ்.முகுன்சந்த் போத்ரா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்," சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா, என்னிடம் கடந்த 2012ஆம் பல லட்சம் கடன் வாங்கினார். அப்போது, தன் மகன் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™