Tamil News | Online Tamil News |
- வியாபம்' ஊழலால் ம.பி., மாநில கவர்னருக்கு... நெருக்கடி:சி.பி.ஐ., விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- ராமேஸ்வரம் - இலங்கை பாலம் - சுரங்கப்பாதை மூலம் இணைக்க முடிவு: ரூ.22,000 கோடியில் மத்திய அரசு திட்டம்
- தேர்தல் கூட்டணி வியூகம்: ஸ்டாலின் பேட்டி
- நவீன வசதி கொண்ட புதிய இணையதளம் : தி.மு.க.,வுக்காக கருணாநிதி துவக்கி வைத்தார்
- கதறி அழுதார் தந்தை; தவறை மறுத்தார் தாய்: மது அருந்திய மாணவியால் சிக்கல்
- சாஸ்திரி மரண விவரம்: கேட்கிறார் மகன் சுனில்
- அரசியல் வாரிசு யார்? லாலு பிரசாத்தின் மகள்- மகன்களுக்கு மோதல்
- சீன பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி ஏன்
- இந்திய திட்டங்கள் உலக வங்கி பாராட்டு
- பாக்., பிரதமரை மோடி இன்று சந்திக்கிறார்
| வியாபம்' ஊழலால் ம.பி., மாநில கவர்னருக்கு... நெருக்கடி:சி.பி.ஐ., விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: புதுடில்லி:மத்திய பிரதேசத்தில் நடந்த, 'வியாபம்' முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மேலும், முறைகேடு குறித்து விளக்கம் அளிக்கும்படி, ம.பி., அரசுக்கும், அம்மாநில கவர்னர் ராம் நரேஷ் யாதவுக்கும், மத்திய அரசுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பவும் உத்தரவிட்டு உள்ளது. அதனால், கவர்னர் ராம் நரேஷ் யாதவுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது. ம.பி.,யில், அரசுப் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய, 'வியாபம்' என்ற வாரியம் செயல்படுகிறது. இதில், 2007 - 13 ஆண்டுகளுக்கிடையே 20 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு ... |
| ராமேஸ்வரம் - இலங்கை பாலம் - சுரங்கப்பாதை மூலம் இணைக்க முடிவு: ரூ.22,000 கோடியில் மத்திய அரசு திட்டம் Posted: புதுடில்லி: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு துவங்கவுள்ளது. 22,000 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையும், கடலுக்கு மேல் பாலமும் அமைக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, அண்டை நாடுகளுடன் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதற்காக, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ... |
| தேர்தல் கூட்டணி வியூகம்: ஸ்டாலின் பேட்டி Posted: சென்னை: ''சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி வியூகம், நல்லபடியாக அமைக்கப்பட்டு வருகிறது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.சென்னை, அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:மின்வாரிய முறைகேடு குறித்த வழக்கு, நீதிமன்றத்திற்கு வந்துள்ளது; இது குறித்து கருணாநிதி விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.மின்வாரியத்தில் ஊழல் நடந்துள்ளது உண்மையாக இருக்குமானால், மக்கள் மன்றம் முன், விளக்கம் அளிக்கும் பொறுப்பு அரசுக்கும், அதை வழி நடத்தக்கூடிய முதல்வருக்கும் உள்ளது.எனவே, மக்கள் மன்றத்தில், இதுபற்றி, முதல்வர் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ... |
| நவீன வசதி கொண்ட புதிய இணையதளம் : தி.மு.க.,வுக்காக கருணாநிதி துவக்கி வைத்தார் Posted: சென்னை :தி.மு.க.,வில் புகார்களை தெரிவிக்க நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார்.அக்கட்சியின் செய்திக் குறிப்பு:கடந்த 1998ல் தி.மு.க., இணையதளம் துவக்கப்பட்டது.அதிவேகமாக வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப பொருளாளர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.இந்த புதிய இணையதளத்தை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார்.புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் கட்சியின் வரலாறு, கொள்கை கள், கட்சி அமைப்பு, செய்தி ... |
| கதறி அழுதார் தந்தை; தவறை மறுத்தார் தாய்: மது அருந்திய மாணவியால் சிக்கல் Posted: கோவையில் தனியார் பள்ளி மாணவி மது அருந்தி, பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக, அந்த மாணவி மற்றும் பெற்றோரிடம், கல்வி அதிகாரிகள் விசாரணையை துவங்கினர். மாணவியை மது அருந்த துாண்டியோரை, கண்டுபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை பிறப்பித்த உத்தரவுப்படி, பள்ளிக் கல்வித்துறை மற்றும் மெட்ரிக் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று, மாணவியின் பெயர் மற்றும் பெற்றோர் முகவரியை அறிந்து அவர்களை சந்தித்துப் பேசினர்.அப்போது, மாணவியின் தாய், 'என் மகள் எந்த தவறும் செய்யவில்லை; நீங்கள் ... |
| சாஸ்திரி மரண விவரம்: கேட்கிறார் மகன் சுனில் Posted: புதுடில்லி :''என் தந்தை, லால் பகதுார் சாஸ்திரி மரணம் குறித்த அனைத்து விவரங்களையும், கோப்புகளையும் வெளியிட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, லால் பகதுார் சாஸ்திரியின் மகனும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, சுனில் சாஸ்திரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.சுற்றுப்பயணம்ரஷ்ய யூனியனிலிருந்து பிரிந்த, உஸ்பெகிஸ்தானுக்கு, சில நாட்களுக்கு முன் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் தாஷ்ெகன்ட் நகரில், தன் 66 வயதில், திடீரென உயிரிழந்த, இந்தியாவின் மூன்றாவது பிரதமர் லால் பகதுார் சாஸ்திரியை நினைவுக் கூர்ந்தார்.இந்தியா - பாக்., இடையே, 1966 ஜன., 11ம் தேதி, ... |
| அரசியல் வாரிசு யார்? லாலு பிரசாத்தின் மகள்- மகன்களுக்கு மோதல் Posted: பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளதலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவின், அரசியல் வாரிசு யார் என்பதில், அவரின் மகள் - மகன்களுக்கு இடையே, கடும் மோதல் உருவாகி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ். பீகார் முன்னாள் முதல்வரான இவருக்கு, இரு மகன்கள், ஏழு மகள்கள் உள்ளனர். 'கால்நடை தீவன ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவ், குற்றவாளி' என, கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளதால், அவரின் அரசியல் எதிர்காலம் முடங்கி போயுள்ளது. இதனால், தன் வாரிசுகளை அரசியல் களத்தில் இழுத்து விட முடிவு செய்துள்ளார். அவரின் மூத்த மகள் மிசா பாரதி, கடந்த லோக்சபா தேர்தலில் ... |
| சீன பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி ஏன் Posted: பீஜிங்:உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்குகிறது. எனினும், ஓரிரு ஆண்டுகளாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. கடந்த ஆண்டு, சீனாவின் உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதத்திற்கும் கீழாக சரிவடைந்துள்ளது. தேவை குறைந்து, தயாரிப்பு துறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த ஆண்டு, அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையும் படுத்து விட்டது. இதனால், சில்லரை முதலீட்டாளர்களுக்கு, பங்குச் சந்தை உட்பட, மாற்று முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை சீனா எடுத்தது.குறிப்பாக, உள்நாட்டு ... |
| இந்திய திட்டங்கள் உலக வங்கி பாராட்டு Posted: வாஷிங்டன்:இந்தியாவின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் (மன்ரேகா), உலகின் மிகப்பெரிய பொது பணி திட்டம் என்றும், இதன் மூலம், நாட்டின் ஏறக்குறைய 15 சதவீத மக்களுக்கு, சமூக பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்றும் உலக வங்கி பாராட்டியுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள, 'தி ஸ்டேட் ஆப் சோஷல் சேப்டி நெட்ஸ் 2015' என்னும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா, இந்தியா, தென்னாப்ரிக்கா மற்றும் எதியோப்பியா உள்ளிட்ட ஐந்து நாடுகளில், நடுத்தர வர்க்கத்தினருக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம், 52.6 கோடி மக்களை சென்றடைகிறது. ... |
| பாக்., பிரதமரை மோடி இன்று சந்திக்கிறார் Posted:
உபா:ரஷ்யாவின் உபா நகரில் இன்று நடைபெற உள்ள, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க உள்ள, பிரதமர் நரேந்திர மோடி, அதில் கலந்து கொள்ளும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேச உள்ளார் என, அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற, பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, நவாஸ் ஷெரீப், டில்லி வந்திருந்தார்.அதன் பிறகு, நவம்பரில், நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நடைபெற்ற, 'சார்க்' மாநாட்டில், இரு தலைவர்களும் சந்தித்து கொண்டனர். ஆனால், பேசவில்லை.கடந்த மாதம், ரமலான் நோன்பு துவங்கியதை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 10,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |