Tamil News | Online Tamil News |
- பால் உற்பத்தியாளர் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை தேவை: கருணாநிதி வலியுறுத்தல்
- வேட்பாளர் கிடைக்காமல் தே.மு.தி.க., திணறல்: கடும் குழப்பத்தில் விஜயகாந்த்
- ரூ.10 கோடியை 'சும்மா' வைத்திருக்கும் எம்.பி.,:தொகுதி நிதியை செலவழிக்காத மத்திய அமைச்சர்கள்
- ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிப்போம்!
- விளம்பரத்துக்கு ரூ.445 கோடி :தர பரிசோதனைக்கு ரூ.19 கோடி
- மோடி மீதான எதிர்ப்பை அதிகரிக்க வியூகம்: பாய்ச்சலுக்கு தயாராகிறார் ராகுல்
- வாஜ்பாய்க்கு வங்கதேச உயரிய விருது!
- மருந்து கடைகளில் குழந்தைகள் உணவு விற்பனைக்கு தடை? மேகியை அடுத்து மற்ற துரித உணவுகள் மீதும் நடவடிக்கை
- சில்லரை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 34 சதவிதம்உயர்வு
- ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுப்பொருட்களும், ரசாயன பொருட்களும்
- பீகார் தேர்தலை ஒன்றாக சந்திக்க லாலு - நிதிஷ் உடன்பாடு: தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய ஆறு பேர் குழு
- கெஜ்ரிவால் அரசுக்கு மத்திய அரசு அடுத்த 'செக்!'
| பால் உற்பத்தியாளர் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை தேவை: கருணாநிதி வலியுறுத்தல் Posted: சென்னை:'பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு, அ.தி.மு.க., அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை:அ.தி.மு.க., ஆட்சியினருக்கு, மக்கள் நலப் பணியாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் மீது எந்த அளவுக்கு, 'அலர்ஜி'யோ, அதே அளவுக்கு, பால் உற்பத்தியாளர்கள் மீதும், என்ன காரணத்தாலோ ஒருவகை வெறுப்பும், அலர்ஜியும் ஏற்படுகிறது. ஒட்டன்சத்திரம் அருகில், விவசாயிகள், 1,000 லிட்டர் பாலை, சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். பால் உற்பத்தியாளர்களிடமிருந்து அரசின், 'ஆவின்' நிர்வாகம் பாலை ... |
| வேட்பாளர் கிடைக்காமல் தே.மு.தி.க., திணறல்: கடும் குழப்பத்தில் விஜயகாந்த் Posted: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், போட்டியிட நம்பிக்கைக்குரிய வேட்பாளர் கிடைக்காததால், தே.மு.தி.க., திணறி வருகிறது. வேறு வழியின்றி, பா.ஜ.,விற்கு வழிகொடுத்து விலகவும் திட்டமிட்டுள்ளது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், முதல்வர் ஜெயலலிதா களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து, இ.கம்யூ., சார்பில் மகேந்திரன் போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி உட்பட, பல அமைப்புகள் மற்றும் சிறு கட்சிகளை சேர்ந்தவர்களும் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். 'தே.ஜ., கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்' என, தேர்தல் தேதி ... |
| ரூ.10 கோடியை 'சும்மா' வைத்திருக்கும் எம்.பி.,:தொகுதி நிதியை செலவழிக்காத மத்திய அமைச்சர்கள் Posted: பெங்களூரு:தொகுதி வளர்ச்சி திட்ட நிதியை, கர்நாடகாவில், 20 எம்.பி.,க்கள், பயன்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடகாவில் தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேஉட்பட, ஐந்து எம்.பி.,க்கள் மட்டும், 16.96 சதவீதம் நிதியை பயன்படுத்தியுள்ளனர். ஆண்டுதோறும்... கடந்த வாரம், மத்திய புள்ளி விவரம் மற்றும் திட்ட நடைமுறை துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, தேசிய அளவில் நிதி பயன்பாடு, சராசரியாக, 16.81 சதவீதம். ஆண்டுதோறும், ஒவ்வொரு எம்.பி.,க்கும், அவரவர் தொகுதி மேம்பாட்டுக்காக, 5 கோடி ரூபாய் ... |
| ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிப்போம்! Posted: புதுடில்லி:'பார்லிமென்டில் சட்டம் இயற்றுவதன் மூலமோ அல்லது அரசின் நடவடிக்கை மூலமோ, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியாது. இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கோர்ட் என்ன உத்தரவிடு கிறதோ, அதை மதித்து நடக்க நாங்கள் தயார்' என, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும், பா.ஜ.,வின் தாரக மந்திரங்களில் ஒன்று, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது. ஆனால், கூட்டணி ஆட்சி என்பதாலும், ராஜ்யசபாவில் போதிய, எம்.பி.,க்கள் பலம் இல்லை என்பதாலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை, பா.ஜ., ஆற போட்டுள்ளது. ஆனால், பா.ஜ.,வைச் சேர்ந்த ... |
| விளம்பரத்துக்கு ரூ.445 கோடி :தர பரிசோதனைக்கு ரூ.19 கோடி Posted: புதுடில்லி:இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள, 'மேகி' நுாடுல்ஸ் நிறுவனம், கடந்தாண்டில், விளம்பரத்துக்காக மட்டும், 445 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஆனால், நுாடுல்சின் தர பரிசோதனைக்கு, 19 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டு உள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த,'நெஸ்லே' நிறுவனத்தின் தயாரிப்பான, 'மேகி' நுாடுல்சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, காரீயம் மற்றும் ரசாயன உப்பு அதிகமாக இருப்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.இதனால், மேகி நுாடுல்ஸ் நிறுவனத்தின் ஒன்பது வகையான நுாடுல்சுகளுக்கு, நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நெஸ்லே நிறுவனத்தின் ... |
| மோடி மீதான எதிர்ப்பை அதிகரிக்க வியூகம்: பாய்ச்சலுக்கு தயாராகிறார் ராகுல் Posted: புதுடில்லி:அடுத்த ஆண்டில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ள, காங்., ஆளும், அசாம், கேரளா மாநிலங்களில், அரசியல் வியூகங்கள் வகுப்பது தொடர்பாக, காங்., மாநில முதல்வர்கள் மாநாடு, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் தலைமையில், நாளை நடைபெறுகிறது. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், சட்டசபைத் தேர்தல்களிலும் படுதோல்வியை காங்., சந்தித்தது. அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், ஆட்சியை, பா.ஜ.,விடம் பறிகொடுத்தது. ஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசையும், காங்., இழந்தது; அதுபோலவே, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் படுதோல்வி அடைந்தது. இதனால் வெறுப்படைந்த ராகுல், 56 நாட்கள் திடீரென ... |
| வாஜ்பாய்க்கு வங்கதேச உயரிய விருது! Posted: தாகா:வங்கதேசத்தில், சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியிடம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கான, வங்கதேச சுதந்திர போர் விருதை, அந்நாட்டின் அதிபர் அப்துல் ஹமித் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். உத்வேகம்; விருதை பெற்ற மகிழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:பாகிஸ்தானின் பிடியிலிருந்து, வங்கதேசம் தனிநாடாக உருவாக நடைபெற்ற போரின் போது, வங்கதேசத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர், வாஜ்பாய்; அவரின் போராட்டம், என்னைப் போன்ற, பா.ஜ., கட்சியினருக்கு பெரும் உத்வேகம் அளிப்பதாக இருந்தது. ... |
| மருந்து கடைகளில் குழந்தைகள் உணவு விற்பனைக்கு தடை? மேகியை அடுத்து மற்ற துரித உணவுகள் மீதும் நடவடிக்கை Posted: புதுடில்லி: ''மருந்து கடைகளில், குழந்தைகள் உணவு, ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்க தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணைஅமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் கூறினார். அதுபோல, பிற துரித உணவுகளான, மக்ரோனி, பாஸ்தா போன்றவற்றையும் சோதனைக்கு உட்படுத்தப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 'நெஸ்லே' என்ற சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் தயாரித்து, குழந்தைகள் விரும்பிச் |
| சில்லரை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 34 சதவிதம்உயர்வு Posted: மும்பை: மும்பை பங்குச்சந்தையில், நடப்பு நிதி ஆண்டில் சில்லரை பங்கு வர்த்தகத்தில் 34 சதவீதம் பேர் அதிகம் ஈடுபட்டுள்ளனர் நடப்பு நிதி ஆண்டில் சென்ற ஆண்டைக் காட்டிலும் 34 சதவீதம் பேர்அதிகம் மும்பை பங்குச் சந்தையில் சில்லரை பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். பங்குகளின் விலை யேற்றமும், மும்பை பங்கு வர்த்தகத்தால் அவ்வப்போது நடத்தப்பட்ட விழிப்புணர்வு பிர சாரங்களும் அதிகம் பேர் சில்லரை பங்கு வர்த்தகத்தில் ஆர்வத்துடன் ஈடுபட காரணங்களாக அமைந்தன.சென்ற நிதி ஆண்டில் (2013-14) மும்பை பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் என்று இருந்த ... |
| ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுப்பொருட்களும், ரசாயன பொருட்களும் Posted: ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில்அதிக அளவு வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் "மேகி நூடுல்ஸ்' ன் விற்பனை நாட்டின் பல் வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட நிலையில் மேலும் பல பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் விற்பனைக்கும் தடை வரும் நிலை உருவகி உள்ளது. "ருசியானது, ஆரோக்கியமானது' என்று மேகி தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டாலும், பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்பட்ட ரெடிமேட் நூடுல்ஸ் உணவு வகைகள் என்றுமே உடல் நலத்திற்கு நல்லதல்ல.கடந்த வாரம் "மேகி நூடுல்ஸ்' நாடு முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதில் அளவுக்கு அதிகமான காரீயம் ... |
| பீகார் தேர்தலை ஒன்றாக சந்திக்க லாலு - நிதிஷ் உடன்பாடு: தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய ஆறு பேர் குழு Posted: புதுடில்லி:பீகாரில், ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், ஒரே அணியில் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. காங்கிரசும், இந்த கூட்டணியில் இணைய உள்ளது. தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய, ஆறு உறுப்பினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது; இங்கு, அடுத்த சில மாதங்களில், சட்டசபைத் தேர்தல் நடக்கஉள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், பீகாரில் தனித்து போட்டியிட்ட பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றது.இதனால், 'சட்டசபைத் தேர்தலிலும், அந்த கட்சி வெற்றி ... |
| கெஜ்ரிவால் அரசுக்கு மத்திய அரசு அடுத்த 'செக்!' Posted: புதுடில்லி : 'நீதிமன்றங்களில் மேல் முறையீடு, வழக்கறிஞர்கள் நியமனம் போன்ற விவகாரங்களை, டில்லி யூனியன் பிரதேச அரசுடன் கலந்தாலோசனை செய்யாமல், டில்லி போலீஸ் கமிஷனரே முடிவெடுக்கலாம்' என, விதிகளை திருத்த, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.மாநில அந்தஸ்து பெற்றுள்ள டில்லி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக உள்ள, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசின் பிரதிநிதியான, லெப்டினன்ட் கவர்னர் நஜிப் ஜங்கிற்கும் இடையே, 'யாருக்கு அதிகாரம்' என்பதில் மோதல் நீடித்து வருகிறது.'டில்லி போலீஸ், சட்டம் - ஒழுங்கு மற்றும் அதிகாரிகள் நியமனம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 08,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |