Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Posted: 07 Jun 2015 01:20 PM PDT

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கு செல்ல, 5 கி.மீ., துார புதிய தேசிய சாலை அமைக்கும் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த, 1964ல் ஏற்பட்ட புயலில், தனுஷ்கோடியில் இருந்த ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, பள்ளிக்கூடம், கோவில்கள் ஆகியவை இடிந்து தரைமட்டமாயின. அதுமுதல், கடந்த 51 ஆண்டுகளாக, தனுஷ்கோடிக்கு செல்ல, சாலை வசதி இன்றி, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.பிரதமராக மோடி பதவி ஏற்றதும், தீர்த்த தலமான தனுஷ்கோடிக்கு, முதல்கட்டமாக, 2 கி.மீ., துாரத்திற்கு, தேசிய சாலை அமைக்க, ...

சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Posted: 07 Jun 2015 12:56 PM PDT

சன் டி.வி. குழுமத்துக்கு சொந்தமான 33 தொலை க்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இதனால், சன் டி.வி. தொலைக்காட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒளிபரப்பு உரிமங்கள் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சன் டி.வி. உட்பட 33 சேனல்களின் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க வேண்டி மத்திய அரசிடம் அந்நிறுவனம் விண்ணப்பம் அளித்தது. இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு உரியது ஆகும். தற்போது சன். டிவி.யின் 33 ...

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Posted: 07 Jun 2015 12:54 PM PDT

- நியூஜெர்ஸி: - உடல்நலக் குறைவு காரணமாக நடிகை ஆர்த்தி அகர்வால் நேற்று காலமானார். 'பம்பரக் கண்ணாலே' படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆர்த்தி அகர்வால். குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த இவர், அமெரிகாவிலுள்ள நியூஜெர்ஸியில் பிறந்தார். தனது 16வது வயதில் 'பாகல்பன்' என்ற இந்தி படத்தில் முதலாவதாக அறிமுகமான நடிகை ஆர்த்தி அகர்வால், 2001ஆம் ஆண்டு 'நூவு நாகு நச்சவாவ்' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, 25க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். ...

எனது அறிமுகம்

Posted: 07 Jun 2015 12:52 PM PDT

பெயர்: sivamsenthil
சொந்த ஊர்: திருவண்ணாமலை அருகில் மணலுர்பேட்
ஆண்/பெண்: Male
ஈகரையை அறிந்த விதம்: வலைதள தேடலில் கண்டேன்.
பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது மற்றும் இசை கேட்பது.
தொழில்: வரைகலை வடிவமைப்பாளர்
மேலும் என்னைப் பற்றி: நான் யார்? (searching)

உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்......

Posted: 07 Jun 2015 12:49 PM PDT

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும். உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ...

முதுகில் வரைந்துள்ள ஓவியம் என்ன?

Posted: 07 Jun 2015 12:36 PM PDT


-
ஜொள்ளு ஜொள்ளு
-

மைக்ரோ கதை

Posted: 07 Jun 2015 12:34 PM PDT

– - மனநோய் மருத்துவமனை. மூன்றாம் அறையில் ஒரு வாலிபன் "மாலினி… மாலினி' என்று நடந்து புலம்பிக் கொண்டிருந்தான். பார்வையாளர் ஒருவர் டாக்டரிடம் விளக்கம் கேட்டார். "இவன் மாலினி என்ற பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தான். ஆனால் கல்யாணம் பண்ண முடியவில்லை. அதனால் அந்தத் துக்கத்தைத் தாங்க முடியாமல் இப்படி ஆயிட்டான்" என்றார் டாக்டர். – எட்டாம் அறையில் இருந்த இளைஞன் ஒருவனும் சுவரில் தலையை மோதிக் கொண்டு "மாலினி… மாலினி' என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். – ""ஐயோ… பாவம். இவனும் அந்த மாலினியைக் ...

சூரிய காந்தி!

Posted: 07 Jun 2015 12:26 PM PDT

- – வீரிய எண்ணெய் வித்துக்களின் விவரக் குறிப்புப் பட்டியலில் ஓரிடம் சூரிய காந்திக்கும் உள்ளதை நாமும் கண்டிடலாம்! – ஏரியின் குளத்தின் நீர்பாய்ச்ச இயலாப் புஞ்சை நிலத்தினிலும் ஏரினை ஓட்டி விதை போட்டு எளிதாய்ப் பயிறும் செய்திடலாம்! — பேரிடர் விளைக்கும் கொழுப்புதனைப் பெரிதும் விலக்கித் தயாரித்த சூரிய காந்தி எண்ணெயினால் சுவையாய்ச் சமைத்து உண்டிடலாம்! – நீரினில் பூக்கும் தாமரைபோல் நிலத்தினில் பூக்கும் பூயிதுவும் காரிருள் போக்க எழும் கதிராய்க் கவனத்தை ஈர்க்கும் செண்டெனலாம்! – சூரியன் ...

தேடல்..!

Posted: 07 Jun 2015 12:25 PM PDT

– கை வளையல்களில் புதுவித டிசைன்களை தேடினாள்! பல மணித்துளிகளாய்..! – நெற்றிப்பொட்டு பளிச்சென இருக்க அலசினாள் சில நாழிகைகளாய்! – காதணியும் கழுத்தணியும் அணிந்து பார்த்து வாங்கினாள் அரை நாட்களாய்! – புது ரக சேலையை தேர்வு செய்ய கடைகளில் தேடினாள், நாள் முழுக்க.. – காலம் பூரா வாழப்போகும் ஆண் மகனை மட்டும் பார்த்த நொடியில் தேர்ந்தெடுத்தாள் காதல் என்ற பெயரில்! – ————————- மல்லிகா ராம் நன்றி- வாரமலர் – பெண்கள் மலர்

எது நாகரீகம்?

Posted: 07 Jun 2015 12:24 PM PDT


-
எல்லோரும் நின்ற
வரிசையில் நின்று
பொருட்களை வாங்கினான்
படிக்காத கிராமத்தான்,
வரிசையில் நிற்காமல்
இடையில் புகுந்து
முன்னால் சென்று
பொருட்களை
வாங்கினான்
படித்த நகரத்தான்!

–
———————–
-மல்லிகா ராம்
நன்றி- வாரமலர் – பெண்கள் மலர்

படம் – இணையம்

பிபி ரிப்போர்ட் சொல்லும் ரகசியம்…!!

Posted: 07 Jun 2015 12:18 PM PDT

- டிராபிக் போலீஸ் இருக்கும்போதே, நீ சைக்கிள் திருடினது உண்மையா? – ஆமா எஜமான்…அவர்தான் சீக்கிரமா வண்டியை எடுன்னு அவசரப்படுத்தினாரு..! – பி,கவிதா – ———————————– – ஊர்லேர்ந்து உங்க அம்மா வந்திருக்காங்களா? – எப்படிக் கண்டு பிடிச்சீங்க, டாக்டர்? – உங்க மனைவியோட பிபி ரிப்போர்ட்டை பார்த்தாலே தெரியுதே..! – ஜெயலட்சுமி – ————————————— – தலைவர் வீட்டுலேயும் அரிசியல்வாதியாத்தான் நடந்துப்பார்,! – எப்படி? – அவர் அம்மாவுக்கும், மனைவிக்கும் சண்டை வந்தா, ஜெயிக்கற பக்கம் ஒதுங்கிடுவாரு..! – வி,ரேவதி – ————————————— – பிறக்கும்போதே ...

நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

Posted: 07 Jun 2015 11:10 AM PDT

வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம் என் குரு அருளிய பரிகாரம் வாஸ்து தோஷம் , முச்சந்தி வீடு , இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு , அல்லது ஒரு சிலருக்கு புதியதாக குடி போனதிலேயிருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும் , எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது , எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் எதாவது குறையோ தோஷமோஇருந்து கொண்டே இருக்கும். இப்படிபட்ட தோஷங்கள் / குறைகள் ...

நீ ஒல்லிங்கறதால தான் கூப்பிட்டேன்..!!

Posted: 07 Jun 2015 10:44 AM PDT

- — நன்றி காட்டணும்னு எண்ணி, அதைக் காட்டாமல் இருப்பது எதைப் போன்றது தெரியுமாடா? மற்றவன்: எதைப் போன்றதுடா? கிப்ட் கவர்ல பணம் போட்டுவிட்டு, அதை தம்பதிகளுக்குப் பரிசளிக்காமல், திருப்பிக் கொண்டு போறையே… அதைப் போன்றதுதான்டா! – வி.சி.கிருஷ்ணரத்னம், – —————————————— – "ரொம்ப தேங்க்ஸ்ங்க, வாலண்டரியா கூப்பிட்டு, உங்க பக்கத்துல இருக்கிற சீட்டை எனக்கு உட்காரத் தந்ததுக்கு" – "அட… உன் மேல எனக்கு என்னப்பா அக்கறை? பொது பொதுன்னு குண்டா இருக்கிற ஒருத்தன் எனக்குப் பக்கத்துல உட்கார்ந்துட்டு ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(377)

Posted: 07 Jun 2015 10:43 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Posted: 07 Jun 2015 10:34 AM PDT

படம்- ஆலயமணி குரல்: எஸ் ஜானகி வரிகள்: கண்ணதாசன் ========================== – தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே – அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும் அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன் – தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – காலையில் நான் ஓர் கனவு கண்டேன் அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன் எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல் கொடுத்துவிட்டேன் ...

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

Posted: 07 Jun 2015 10:31 AM PDT

– இப்படத்தை பார்த்ததும், ஏதாவது, 'கிராபிக்ஸ்' செய்த படமாக இருக்குமோ என நினைக்க வேண்டாம். உண்மையிலேயே, வனப் பகுதியில், சிங்கத்தின் குகைக்கே சென்று, உயிரை கையில் பிடித்தபடி, எடுக்கப்பட்ட படம். – லாகூரில் உள்ள வனப் பகுதியில், லயன் சவாரிக்குக்கு, சக பயணிகளுடன் வேனில் சென்றார் பாகிஸ்தானின் பிரபல புகைப்பட நிபுணர் அதீப் சயீது. அப்போது, ஒரு சிங்கம், பிடரியை சிலிர்த்து, வாயை பிளந்து உறுமியபடி, வேனை பார்த்து சீறியது. மற்றவர்கள் எல்லாம், இதைப் பார்த்து அலற, சயீதோ, வேனின் கதவை திறந்து, ...

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…!

Posted: 07 Jun 2015 10:19 AM PDT

ஆத்திர, அவசரத்திற்கு ரயிலில் தொலை தூரங்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கைகொடுப்பது தட்கல் முறையிலான டிக்கெட். ஆனால் தட்கலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பதென்பது அத்தனை சுலபமானதாக இருந்ததிலை. – முன்பதிவு கவுண்டர்களில் முந்தைய நாள் இரவிலேயே காத்துக்கிடந்தும், புக்கிங் தொடங்கிய 3 அல்லது 4 நிமிடங்களிலேயே "வெயிட்டிங் லிஸ்ட்தான்…!" என்று கவுண்டரிலிருந்து வரும் குரலை கேட்டு கடுப்பானவர்களுக்கும், காலை 10 மணிக்கு தொடங்கும் முன்பதிவுக்கு 9.30 மணிக்கே கம்ப்யூட்டரை ஆன் செய்து, ஸ்கிரீனையே வெறிக்க ...

சினி துளிகள்!

Posted: 07 Jun 2015 09:25 AM PDT


-

-
–
* மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து,
நடிப்புக்கு டாடா காட்டிய நஸ்ரியா, மீண்டும்
சினிமாவில் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறார்.

-

விக்ரமுடன் இணையும் கவுதம் மேனன்!

Posted: 07 Jun 2015 09:22 AM PDT

- – வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் மற்றும் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த கவுதம் மேனன், மீண்டும் விக்ரமை வைத்து போலீஸ் படமெடுக்க உள்ளார். அதனால், சிம்பு நடிக்கும், அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வரும் அவர், அப்பட வேலைகள் முடிந்ததும், விக்ரம் பட வேலைகளில் இறங்க உள்ளார். மேலும், இதற்கு முன், சாமி படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்த விக்ரம், 'இப்படம், அதை விட பிரமாண்டமாக இருக்க வேண்டும்…' என்று சொன்னதையடுத்து, ஹாலிவுட் படங்களுக்கு ...

அதிரடி ரோலில் ரம்யாகிருஷ்ணன்!

Posted: 07 Jun 2015 09:20 AM PDT

- – ராஜமவுலி இயக்கியுள்ள வரலாற்று காவியமான, பாகுபாலியில் அனுஷ்கா நடித்துள்ள தேவசேனா கதாபாத்திரத்தின், 'பர்ஸ்ட் லுக்' வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அதே படத்தில் சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரம்யாகிருஷ்ணனின், 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி, செம கலக்கு கலக்கியிருக்கிறது. ஏற்கனவே, படையப்பா நீலாம்பரியாக கெத்தாக நடித்திருந்த ரம்யாகிருஷ்ணன், இப்படத்தில், அதை விட பன்மடங்கு தில்லான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார். அதனால், தெலுங்கில் வீழ்ந்து ...

ரசூல் மாதிரி காதலர் கேட்கும் ஆண்ட்ரியா!

Posted: 07 Jun 2015 09:18 AM PDT

- – மலையாளத்தில் பகத்பாசிலுடன் இணைந்து ஆண்ட்ரியா நடித்த படம், அன்னயும் ரசூலும். இப்படத்தின் விளம்பரத்திற்காக ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பகத்பாசில் செய்தி வெளியிட்ட போது, தன் இமேஜை கெடுத்து விட்டதாக எகிறி குதித்தார் ஆண்ட்ரியா. ஆனால், தற்போது, 'அப்படத்தில் பகத்பாசில் நடித்த ரசூல் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்; காரணம், அவர் அந்த அளவுக்கு உருகி உருகி காதலிப்பார். அதனால், அந்த ரசூல் மாதிரி ஒருவர் தான், எனக்கு கணவராக வர வேண்டும்…' என்றார். இதையடுத்து, அவர் ...

டல்லடிக்கும் பாபநாசம்!

Posted: 07 Jun 2015 09:12 AM PDT

- கமல் நடித்து வெளியான, உத்தமவில்லன் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதனால், பாபநாசம் படத்தின் வியாபாரம் டல்லடிக்கிறது. அதனால், கமல் நடிக்கும், தூங்காவனம் படத்தை தயாரிப்பதாக சொன்ன இரு நிறுவனங்கள் பின்வாங்கி விட்டதால், தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பிலேயே அப்படத்தை தயாரித்து, நடிக்கிறார் கமல். மேலும், இப்படத்தின் நாயகியாக, த்ரிஷாவை நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கும் கமல், மெயின் வில்லனாக நடிக்க பிரகாஷ்ராஜை அழைத்த போது, ஒரு தெலுங்கு படத்தை தவிர்த்து, கமலுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். மேலும், ...

சாதிப்பதில் இன்னும் அசத்தும் செரீனா!

Posted: 07 Jun 2015 08:49 AM PDT

- உலக சாதனைக்கு இன்னும் 2 உலக அளவில் (Oper era) 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளராக ஸ்டெபி கிராப் இருக்கிறார். அவரது சாதனையை சமன் செய்ய இன்னும் 2 பட்டங்களே செரீனாவுக்குத் தேவை. – எதிரில் யார் நின்றாலும் தன்னை எதிர்த்து மோதுவது யார் என்று அச்சப்படுவதே இல்லை செரீனா. தனது முழு பலத்தையும், திறமையையும் திரட்டி வாயடைத்துப் போக வைத்து விடுவார் செரீனா. 33 வயதானவர் ஆடும் ஆட்டமா என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும். – காதலர் வந்த பிறகு செரீனா கடந்த 2012ம் ஆண்டுக்குப் பிறகுதான் ...

அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்

Posted: 07 Jun 2015 08:22 AM PDT

நேற்று (06.06.15) அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற , மலேயாப் பல்கலைக் கழகமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் கலைஞன் பதிப்பகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் (கின்னசு சாதனை நூல் வெளியீட்டு விழா) வெளியிடப் பட்ட என் நூல்.

உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Posted: 07 Jun 2015 07:55 AM PDT

பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க

அப்படீங்களா! –

Posted: 07 Jun 2015 04:13 AM PDT

- – தண்ணீர் பாட்டில் வட்டமாக, உருளை வடிவத்தில்தான் இருக்க வேண்டுமா? தட்டையாக, செவ்வக வடிவத்தில் இருந்தால் என்ன? என்று யோசித்தார்கள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு அருகிலுள்ள மானிங்டன் பெனின்சுலாவைச் சேர்ந்தவர்கள். அவர்களால் தயாரிக்கப்பட்ட தட்டையான தண்ணீர் பாட்டில்களால் எதிர்பாராத பயன்கள். பயன் ஒன்று: இதை உங்கள் பையில் உள்ள லே டாப், புத்தகங்களுக்கு நடுவிலும் இந்தத் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளலாம். பயன் இரண்டு: கழுவுவது எளிதானது. மூலை முடுக்கெல்லாம் எளிதாகக் கழுவலாம். – ————————————– – என்.ஜே.,

ஸ்மார்ட்போனில் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் காலியாகிறதா?

Posted: 07 Jun 2015 04:03 AM PDT

நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன், பலவகையிலும் வசதியானதுதான். ஆனால் அதன் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிடுவதுதான் பிரச்சினை. சரி, ஏன் ஸ்மார்ட்போன் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது? இலவச அப்ளிக்கேஷன்கள் மற்றும் சில விளையாட்டுகளை டவுன்லோடு செய்யும்போது அவற்றில் இடம்பெறும் விளம்பரங்களே அதிகமாக சார்ஜ் எடுத்து கொள்கின்றன. எனவே, அதிக விளம்பரங்கள் இருக்கும் இலவச அப்ளிக்கேஷன்களை டவுன்லோடு செய்யாதீர்கள். சிலர் தாங்கள் வைத்திருக்கும் அனைத்து அப்ளிக்கேஷன்களையும் 'ஆன்' செய்து வைத்திருப்பார்கள். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™