Tamil News | Online Tamil News |
- ஜூலை 1 முதல் புதிய பெயரில் இயங்கப்போகும் ரயில்கள் : பிரீமியம் ரயில்களுக்கு பதில் புதுவித கட்டணம் நிர்ணயம்
- வங்கதேசத்துக்கு ரூ.12,000 கோடி கடன்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
- 'வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி'
- ஆர்.கே.நகர் பளபளக்கிறது: விழிக்குமா தேர்தல் ஆணையம்: கருணாநிதி
- முதல்வர் ஜெ.,வின் சொத்து மதிப்பு ரூ. 117 கோடி
- 'கெஜ்ரிவாலை கடவுள் மன்னிக்கட்டும்'
- 30 கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம்: *நீர்வளத்துறைக்கு ரூ.3 லட்சம் செலவு
- விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்க கட்டுப்பாடு: கடுமையாகிறது பயன்பாடு நடைமுறை மாற்றம்
- பாலியல் பலாத்காரம் ஒரு 'ஸ்டன்ட்': கோவா அமைச்சர் மீண்டும் ஆணவம்
- கூடங்குளம் 2வது உலையில் செப்டம்பரில் மின் உற்பத்தி
- விமானம் தாங்கி கப்பல் தயாரிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி
| Posted: கிராக்கிக்கு ஏற்ப, சிறிய அளவில் உயரும் டிக்கெட் விலை; மூன்று வகையான கட்டணங்கள்; டிக்கெட்டை ரத்து செய்யும் வசதி உள்ளிட்ட அம்சங்களுடன், பிரீமியம் ரயிலுக்கு மாற்றாக, 'சுவிதா' - சவுகரியம் என்ற ரயில், ஜூலை முதல் இயக்கத்திற்கு வருகிறது.பண்டிகை, விடுமுறை நாட்களில், முக்கிய வழித்தடங்களில் அதிகளவில் ரயில்களை இயக்கவும், ரயில்வே வருவாயை பெருக்கவும், பிரீமியம் ரயில்கள் இயக்கப்படுகின்றன .டிக்கெட்டுக்கு இருக்கும் கிராக்கிக்கு ஏற்ப, பல மடங்கு கட்டணம் உயர்ந்து செல்வது; டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது உள்ளிட்ட பல காரணங்களால், பிரீமியம் ரயில்களுக்கு, ... |
| வங்கதேசத்துக்கு ரூ.12,000 கோடி கடன்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு Posted: தாகா : வங்கதேசத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக, 12,000 கோடி ரூபாய் கடன் உதவி அளிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் நேற்று பேச்சு நடத்தினார்.அப்போது, இரு தரப்புக்கும் இடையே, கடலோர பாதுகாப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவது, கள்ள ரூபாய் நோட்டுகளை தடுப்பது, மனித கடத்தலை தடுப்பது உட்பட, 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பின், வங்கதேசத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு உதவும் வகையில், 12,000 கோடி ரூபாய் கடன் அளிப்பதாக மோடி அறிவித்தார்.பின், பிரதமர் மோடி ... |
| 'வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி' Posted: கோல்கட்டா: ''புதுப்புது திட்டங்களை அறிவித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில், யோகா முகாம் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார்,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார். |
| ஆர்.கே.நகர் பளபளக்கிறது: விழிக்குமா தேர்தல் ஆணையம்: கருணாநிதி Posted: சென்னை : 'தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும், ஆர்.கே.நகரில், பணிகள் வேகம் பெற்றுள்ளது பற்றி, தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளுமா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பால் வளத்துறை அமைச்சர், வேளாண்மை துறை அமைச்சர் மீது, புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் மீது எழுந்துள்ள புகார் குறித்து, கண்டுகொள்ளாமல் உள்ளது.குறுவை சாகுபடிக்கு, மேட்டூர் அணை நீர், உரிய காலத்தில் திறக்காத நிலையில், உரிய நிவாரணத்தை, தமிழக அரசு, ... |
| முதல்வர் ஜெ.,வின் சொத்து மதிப்பு ரூ. 117 கோடி Posted: சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும், முதல்வர் ஜெயலலிதா, தன் சொத்து மதிப்பை வெளியிட்டு உள்ளார். |
| 'கெஜ்ரிவாலை கடவுள் மன்னிக்கட்டும்' Posted: புதுடில்லி : டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. நஜீப் ஜங், துணை நிலை ஆளுனராக பதவி வகிக்கிறார். அதிகாரிகள் நியமனம் தொடர்பான விஷயத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆளுனர் நியமித்த அதிகாரிகளை முதல்வர் டிஸ்மிஸ் செய்வதும், முதல்வர் நியமித்த அதிகாரிகளை ஆளுனர் டிஸ்மிஸ் செய்வதும் என, டில்லி நிர்வாகம் குழப்ப மயமாக உள்ளது. இந்த விஷயத்தில் தலையிட்ட மத்திய அரசு, 'யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான விஷயங்களில், துணை நிலை ஆளுனருக்கே அதிகாரம் உள்ளது' என, அறிவித்தது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ... |
| 30 கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம்: *நீர்வளத்துறைக்கு ரூ.3 லட்சம் செலவு Posted: திருச்சி மண்டல நீர்வளத் துறையினர், 30 கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த, மூன்று லட்சம் ரூபாய் செலவழித்துள்ளனர்.பொதுப்பணித்துறையின் அங்கமான நீர்வளத்துறைக்கு, சென்னை, திருச்சி, மதுரை, கோவை என நான்கு மண்டலங்கள் உள்ளன. இதில், திருச்சி மண்டலத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.டெல்டா மாவட்டங்களின் பாசன தேவையை பூர்த்தி செய்யும் மேட்டூர் அணை, திருச்சி நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு, தண்ணீர் திறக்கப்படவில்லை. ... |
| விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்க கட்டுப்பாடு: கடுமையாகிறது பயன்பாடு நடைமுறை மாற்றம் Posted: விவசாய நிலங்களில் புதிய மனைப் பிரிவுகளை (லே - அவுட்) உருவாக்க, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க, தமிழக நகரமைப்பு துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், சென்னை பெருநகருக்கு வெளியில் உள்ள பகுதிகளில், சிறப்பு மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள், மனைப் பிரிவுகளுக்கு நகரமைப்புத் துறை அனுமதி அளித்து வருகிறது. இதற்காக, நகரமைப்புத் துறையில், 13 மண்டல அலுவலகங்கள், 26 உள்ளூர் திட்டக் குழுமங்கள், 13 புது நகர் வளர்ச்சிக் குழுமங்கள் செயல்படுகின்றன. சென்னையில் தலைமை அலுவலகம் உள்ளது.தமிழகத்தில், நகர்ப்புற பகுதிகளில் அதிகரித்து வரும் குடியிருப்பு தேவைக்காக, கடந்த சில ... |
| பாலியல் பலாத்காரம் ஒரு 'ஸ்டன்ட்': கோவா அமைச்சர் மீண்டும் ஆணவம் Posted: பனாஜி : கோவாவில் இரு பெண்கள் மீதான, பாலியல் பலாத்காரத்தை, 'ஸ்டன்ட்' என, வர்ணித்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அம்மாநில சுற்றுலா துறை அமைச்சர் திலீப் பருலேகர். டில்லியில் இருந்து கோவாவை சுற்றிப் பார்க்க வந்த இரு பெண்களை, போலீஸ் உடையில் வந்த ஐந்து பேர், பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பான புகாரில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். |
| கூடங்குளம் 2வது உலையில் செப்டம்பரில் மின் உற்பத்தி Posted: மும்பை:''கூடங்குளம், இரண்டாவது அணு உலையில், செப்டம்பர் அல்லது அக்டோபரில், மின் உற்பத்தி துவங்கும்,'' என, பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் சேகர் பாசு தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:கூடங்குளம் முதலாவது அணு உலை, 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உடையது. ஆனால், இந்த அணு உலையில், முழு அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. படிப்படியாக, மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இரண்டாவது அணு உலையில், மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபரில் மின் உற்பத்தி துவங்கும். கூடங்குளம் அணு ... |
| விமானம் தாங்கி கப்பல் தயாரிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி Posted: புதுடில்லி:இந்தியாவில் தயாரிக்கப்படும், 'ஐ.என்.எஸ்., விஷால்' விமானம் தாங்கி போர்க் கப்பலுக்கு, அதிநவீன தொழில்நுட்ப உதவியை அமெரிக்கா வழங்குகிறது. அமெரிக்காவின் உதவியுடன், புதிய தலைமுறை தொழில்நுட்பத்தில், விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் ஜெட் இன்ஜின்களை, இந்தியா தயாரிக்க உள்ளது. இதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமாவின், இந்திய வருகைக்குப் பின், இந்திய - அமெரிக்க திட்டச் செயலாக்கக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்த கூட்டுக் குழுக்கள் (ஜே.டபிள்யு.ஜி.,) ஒருங்கிணைந்து, முதன் முதலாக நேற்று, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் ஆலோசனை மேற்கொண்டன.இதுகுறித்து, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 07,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |