Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு: ஒருவர் கைது
- கேஜரிவாலை கடவுள்தான் மன்னிக்க வேண்டும்: நஜீப் ஜங்
- சிறுமி கடத்தப்பட்டு கட்டாயத் திருமணப் புகார்
- குடிநீர் விநியோகப் பகுதிகளை அதிகரிக்க "டிஜேபி' நடவடிக்கை
- மருந்துக் கடைகளில் திடீர் சோதனை
- குழந்தைகளை விளையாட்டில் ஊக்கப்படுத்த வேண்டும்
- மோட்டார் சைக்கிளில் குமரியில் இருந்து ஆக்ரா வந்த கோவை கல்லூரி மாணவருக்குப் பாராட்டு
- 77 உணவகங்களுக்கு சீல் வைக்க தில்லி அரசு உத்தரவு
- ஐஎன்ஏ தில்லி ஹாட்டில் தொடங்கியது ஷர்பத் மேளா
- 50 ஆயிரம் பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி
- ஆம் ஆத்மி, பாஜக மீது காங்கிரஸ் கடும் சாடல்
- தில்லி சீக்கிய குருத்வாரா கமிட்டியில் நிதி முறைகேடு
- மீஞ்சூர்
- காஞ்சிபுரம்
- நிர்வாகிகள் தேர்வு
- பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம்
- நூடுல்ஸ்..!
- நூல் வெளியீட்டு விழா
- பயமா இருக்குது சார்..!
- இடி தாக்கி இரு விவசாயிகள் சாவு
- அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு
- டேங்கர் லாரி வெடித்து வெல்டிங் ஊழியர் சாவு
- 665 பேருக்கு அரசின் விலையில்லா ருள்கள் விநியோகம்
- வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை
- முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்க தயார்நிலை:ஆய்வுக்குப் பின் ஐவர் துணைக் குழு முடிவு
- பாஜக ஆலோசனைக் கூட்டம்
- தனிநபர் இல்லக் கழிப்பறை: விழிப்புணர்வுக் கூட்டம்
- முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு புதிய கலந்தாய்வு
- "விவசாயிகளுக்கான நிவாரணம் போதுமானது அல்ல'
- ஜூன் 15-இல் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்:கரும்பு விவசாயிகள் சங்கம் முடிவு
- சில இடங்களில் மழை வாய்ப்பு
- நெல் பயிர்களில் நோய்த் தாக்குதலை தடுக்கப் பயிற்சி
- பசுமைத் தாயகம் சார்பில் கையெழுத்து இயக்கம்
- ராமேசுவரம் மீனவர்கள் 2 -ஆவது நாளாக வேலைநிறுத்தம்
- புதுவையில் வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு
- ஆங்கில வழிக் கல்வி இல்லை
- களவு - வானவியல் - சிறைகாவல்
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி
- எல்லை - எல்லி - எல்லு!
- பொன்னுசாமித் தேவரின் தமிழ்த்தொண்டு
- ஜூன் 8 முதல் "இந்திரதனுஷ்' தடுப்பூசி முகாம்
- சொல் தேடல் -11
- சென்னை- பெங்களூரு விரைவுச் சாலை திட்டப் பணிகள்: துரிதப்படுத்த அறிவுறுத்தல்
- 19-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- கழிவுநீர்க் கால்வாயில் திடீர் தடுப்பு ஏற்படுத்திய பொது மக்கள்
- வேலூர்
- கூட்டுறவுச் சங்க அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- இந்த வாரம் கலாரசிகன்
- வெடிபொருள்கள் பறிமுதல்: இளைஞர் கைது
- வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
- ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பாஜக போட்டியிடக் கூடாது
- குரூப்-2 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
- இந்தியா - வங்கதேசம் இடையே பேருந்துச் சேவைகள் தொடக்கம்
- நிலம் கையக சட்டத்தில் சமரசம் கிடையாது
- ஜவ்வாதுமலையில் 2 நாள் கோடை விழா
- "ஆதார்' அட்டை கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்
- மகளிர் குழுவினருக்கு கடனுதவி
- ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: விஜயகாந்துடன் தமிழிசை மீண்டும் சந்திப்பு
- திரிணமூல்-பாஜக திடீர் நட்பு: ராகுல் தாக்கு
- குடியரசுத் தலைவர் தலையிட விவசாயிகள் வலியுறுத்தல்
- ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் :வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர் புகைப்படம்
- 3,698 பேருக்கு விலையில்லா பொருள்கள் அளிப்பு
- ஓய்வூதியம் தொடர்பான பேச்சு தோல்வி :போராட்டத்தில் ஈடுபட முன்னாள் ராணுவத்தினர் முடிவு
- "மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்'
- தூத்துக்குடி அனல் மின் நிலைய 2-ஆவது அலகு: இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடக்கம்
- குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
- மேலும் 6 மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்குத் தடை
- கருணாநிதி பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
- புளூ ஸ்டார் நடவடிக்கை நினைவு தினம்:பொற்கோயிலுக்குள் மோதல்; 5 பேர் காயம்
- நில எல்லை ஒப்பந்தம்: அஸ்ஸாம் தேயிலைத் தோட்ட அதிபர்கள் எதிர்ப்பு
- பள்ளிகளில் உலக சுற்றுச்சூழல் தின விழா
- கேஜரிவாலுக்கு அழைப்பாணை
- ஹெளரா ரயில் நிலையத்தில் வை ஃபை
- குழந்தைகளை விளையாட்டில் ஊக்கப்படுத்த வேண்டும்:மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் வலியுறுத்தல்
- பேரறிவாளன் புழல் சிறைக்கு மாற்றம்
- விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சாவு
- திராட்சையில் புழு: தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல்
- எல்லையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
- ஜேடியூ - ஆர்ஜேடி கூட்டணியைக் கண்டு பாஜக, ஆர்எஸ்எஸ் கவலை: லாலு
- வீடு புகுந்து 20 பவுன் நகை, பணம் திருட்டு
- ஜம்முவில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தினர் குவிப்பு
- பிற நிறுவன நூடுல்ஸ்களையும் ஆய்வு செய்ய முடிவு
- டிஎஸ்பியை கைது செய்ய மாவட்டக் காவல் துறை தீவிரம்
- வங்கதேசத்தில் மின் நிலையம்:ரிலையன்ஸ் ஒப்பந்தம்
- நிலுவையில் மின்னூர் செம்மரக் கடத்தல் வழக்கு: விசாரணையை தீவிரப்படுத்த கோரிக்கை
- மோடியுடன் ஒரே காரில் பயணித்த மம்தா
- கண்ட்லா, குவாஹாட்டியில் கப்பல் பராமரிப்பு மையம்: கட்கரி
- கார்-லாரி மோதி 7 பேர் பலி
- 2 நாள் தோல் பொருள் கண்காட்சி தொடக்கம்
- ரயில்வே துறையில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடுகளைத் திரட்ட திட்டம்
- தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த லத்தேரி ராணுவ வீரர்
- கணினி விவரப் பதிவாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
- "கலைஞனை மக்களிடம் நேரிடையாக கொண்டு சேர்ப்பது நாடகமே'
- ஆந்திரத்துக்கு உலகத் தரத்தில் புதிய தலைநகரம்
- கானாற்று வெள்ளம்: பாதுகாப்பான இடங்களில் பொதுமக்கள் தஞ்சம்
- மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
- நாடக மன்ற பொன் விழா
- யேமன் கிளர்ச்சியாளர்கள் - சவூதி படையினர் மோதல்:ஏராளமானோர் பலி
- அட்சர முருகர் கோயிலில் குரு பூஜை
- மலேசியாவில் நிலநடுக்கம்:11 பேர் சாவு; 8 பேர் மாயம்
| கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு: ஒருவர் கைது Posted: 06 Jun 2015 01:58 PM PDT |
| கேஜரிவாலை கடவுள்தான் மன்னிக்க வேண்டும்: நஜீப் ஜங் Posted: 06 Jun 2015 01:57 PM PDT தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னை விமர்சித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, "அவர் பேசியதற்கு, கடவுள்தான் மன்னிக்க வேண்டும்' என்று நஜீப் ஜங் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. |
| சிறுமி கடத்தப்பட்டு கட்டாயத் திருமணப் புகார் Posted: 06 Jun 2015 12:58 PM PDT தில்லியில் சிறுமியைக் கடத்தி திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக பதில் அளிக்குமாறு தில்லி காவல் துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. |
| குடிநீர் விநியோகப் பகுதிகளை அதிகரிக்க "டிஜேபி' நடவடிக்கை Posted: 06 Jun 2015 12:57 PM PDT தில்லி ஜல் போர்டு (டிஜேபி) குடிநீர் ஒருங்கிணைப்பில் உள்ள குடிநீர் விநியோகப் பகுதிகளை அதிகரிக்கும் வகையில், துவாரகா கமான்ட் பகுதியில் புதிதாக குடிநீர் விநியோகிக்கும் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. |
| மருந்துக் கடைகளில் திடீர் சோதனை Posted: 06 Jun 2015 12:55 PM PDT கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை ஆகியவற்றை தடுக்கும் நடவடிக்கையாக, தேசியத் தலைநகர் வலயப் பகுதியான ஃபரீதாபாதில் உள்ள மருந்துக் கடைகளில் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. |
| குழந்தைகளை விளையாட்டில் ஊக்கப்படுத்த வேண்டும் Posted: 06 Jun 2015 12:55 PM PDT விளையாட்டுத் துறையில் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வலியுறுத்தினார். |
| மோட்டார் சைக்கிளில் குமரியில் இருந்து ஆக்ரா வந்த கோவை கல்லூரி மாணவருக்குப் பாராட்டு Posted: 06 Jun 2015 12:54 PM PDT |
| 77 உணவகங்களுக்கு சீல் வைக்க தில்லி அரசு உத்தரவு Posted: 06 Jun 2015 12:53 PM PDT தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே, உரிய அனுமதி பெறாமல் இயங்கிவருவதாகக் கூறப்படும் 77 உணவகங்களுக்கு சீல் வைக்குமாறு ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. |
| ஐஎன்ஏ தில்லி ஹாட்டில் தொடங்கியது ஷர்பத் மேளா Posted: 06 Jun 2015 12:52 PM PDT தில்லியில் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில், தில்லிவாசிகளை குளிர்விக்கும் வகையில் ஐஎன்ஏ தில்லி ஹாட்டில் ஷர்பத் மேளா தொடங்கியுள்ளது. |
| 50 ஆயிரம் பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி Posted: 06 Jun 2015 12:51 PM PDT தில்லி காவல் துறை மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று தில்லி மாநகர் காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸி தெரிவித்தார். |
| ஆம் ஆத்மி, பாஜக மீது காங்கிரஸ் கடும் சாடல் Posted: 06 Jun 2015 12:50 PM PDT தில்லியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு, மின் வெட்டு ஆகிய பிரச்னைகளுக்கு தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசும், மத்தியில் ஆளும் பாஜக அரசும்தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. |
| தில்லி சீக்கிய குருத்வாரா கமிட்டியில் நிதி முறைகேடு Posted: 06 Jun 2015 12:50 PM PDT தில்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டியில் நிதி முறைகேடுகள் நடப்பதாகவும், அதைக் கண்டறிய சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதன் முன்னாள் தலைவர் பரம்ஜித் சிங் சர்னா தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் புகார் தெரிவித்தார். |
| Posted: 06 Jun 2015 12:48 PM PDT |
| Posted: 06 Jun 2015 12:47 PM PDT |
| Posted: 06 Jun 2015 12:46 PM PDT தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்தல் மதுராந்தகத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் Posted: 06 Jun 2015 12:45 PM PDT காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 06 Jun 2015 12:45 PM PDT நூடுல்ஸ்..! |
| Posted: 06 Jun 2015 12:44 PM PDT காஞ்சிபுரத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் பாக்கியராஜ் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை வெளியிட்டார். |
| Posted: 06 Jun 2015 12:43 PM PDT பயமா இருக்குது சார்..! |
| இடி தாக்கி இரு விவசாயிகள் சாவு Posted: 06 Jun 2015 12:42 PM PDT கும்மிடிப்பூண்டி அருகே இரு வேறு பகுதிகளில் கடந்த இரு நாள்களில் இடி தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்தனர். |
| அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு Posted: 06 Jun 2015 12:41 PM PDT எளாவூர் அருகே ஏழுகிணறு பாலம் பகுதியில் சாலையோரம் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை ஆரம்பாக்கம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| டேங்கர் லாரி வெடித்து வெல்டிங் ஊழியர் சாவு Posted: 06 Jun 2015 12:40 PM PDT வெல்டிங் செய்தபோது டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் உயிரிழந்தார். |
| 665 பேருக்கு அரசின் விலையில்லா ருள்கள் விநியோகம் Posted: 06 Jun 2015 12:39 PM PDT சித்தாமூர் ஒன்றியம், வெடால் ஊராட்சியில் 665 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை Posted: 06 Jun 2015 12:38 PM PDT உத்தரமேரூரில் அரசுப் போக்குவரத்து ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்க தயார்நிலை:ஆய்வுக்குப் பின் ஐவர் துணைக் குழு முடிவு Posted: 06 Jun 2015 12:37 PM PDT கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால், முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்ட ஐவர் துணைக் குழுவினர், அணையில் 142 அடி தண்ணீர் தேக்குவதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்க சனிக்கிழமை முடிவு செய்தனர். |
| Posted: 06 Jun 2015 12:36 PM PDT ஸ்ரீபெரும்புதூர் மண்டல பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மகா சம்பர்க் அபியான் திட்டத்தின் பயிற்சி முகாம் ஸ்ரீபெரும்புதூரில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தனிநபர் இல்லக் கழிப்பறை: விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 06 Jun 2015 12:36 PM PDT உத்தரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு புதிய கலந்தாய்வு Posted: 06 Jun 2015 12:36 PM PDT முதுநிலை மருத்துவப் படிப்புகள், முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு, ஆறு ஆண்டு நரம்பியல் அறுவைச் சிகிச்சை படிப்பு ஆகியவற்றுக்கு மீண்டும் புதிய கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. |
| "விவசாயிகளுக்கான நிவாரணம் போதுமானது அல்ல' Posted: 06 Jun 2015 12:35 PM PDT குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு அரசு அளித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கூறியுள்ளனர். |
| ஜூன் 15-இல் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்:கரும்பு விவசாயிகள் சங்கம் முடிவு Posted: 06 Jun 2015 12:34 PM PDT நிலுவையில் உள்ள கரும்புக்கான தொகையை வழங்கக் கோரி, தமிழக முதல்வருக்கு வருகிற 15-ஆம் தேதி, தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. |
| Posted: 06 Jun 2015 12:34 PM PDT தமிழகம், புதுவையின் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| நெல் பயிர்களில் நோய்த் தாக்குதலை தடுக்கப் பயிற்சி Posted: 06 Jun 2015 12:34 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூர், பல்லவாடா பகுதிகளில் இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை பாதுகாக்கும் வகையில், விவசாயிகளுக்கு சனிக்கிழமை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. |
| பசுமைத் தாயகம் சார்பில் கையெழுத்து இயக்கம் Posted: 06 Jun 2015 12:33 PM PDT புகையிலைக் கட்டுப்பாடு சட்டத் திருத்த மசோதாவை உடனே சட்டமாக்கக் கோரி, பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் போரூரில் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ராமேசுவரம் மீனவர்கள் 2 -ஆவது நாளாக வேலைநிறுத்தம் Posted: 06 Jun 2015 12:33 PM PDT இலங்கைச் சிறையில் இருக்கும் 14 மீனவர்களை விடுதலை செய்ய கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் 2-ஆவது நாளாக சனிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
| புதுவையில் வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு Posted: 06 Jun 2015 12:33 PM PDT புதுவையில், முன்விரோதத்தில் வீட்டின் மீது மர்ம நபர்கள் சனிக்கிழமை அதிகாலை நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. |
| Posted: 06 Jun 2015 12:32 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். |
| Posted: 06 Jun 2015 12:32 PM PDT களவில் தலைவி, தலைவனைச் சந்திக்க முடியாமைக்குக் காரணமாக அமையும் தடை "சிறைகாவல்' எனப்படும். இதை இறையனார் களவியல் உரைகாரர் நக்கீரர் விளக்கும் பாங்கு (இறை.கள. நூற்பா-29 இன் உரை) கவனிக்கத்தக்கது. |
| சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி Posted: 06 Jun 2015 12:32 PM PDT உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, மணவாளநகர், பெரியகுப்பம் பகுதிகளில் இயங்கி வரும் ஜேக்கப் கல்விக் குழுமம் சார்பில், விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 06 Jun 2015 12:30 PM PDT "எல்' என்ற சொல், ஒளி, பகல், கதிரவன் ஆகிய பொருள்தரும் சொற்களாகச் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளது. பழந்தமிழர், "எல்' என்ற இச்சொல்லை வேர்ச் சொல்லாகக்கொண்டு, நாளின் முப்பொழுதுகளுக்கும் பெயர்களை வழங்கியுள்ளனர். பகற்பொழுதைக் குறிக்க, "எல்லை' என்ற சொல்லைப் பயன்படுத்தியமையை, |
| பொன்னுசாமித் தேவரின் தமிழ்த்தொண்டு Posted: 06 Jun 2015 12:30 PM PDT வள்ளல் பாண்டித்துரையாரைப் போலவே, அவருடைய தந்தை பொன்னுசாமித் தேவரும் தமிழ்ப் புலமையிலும் தமிழ் நூல்களை ஆதரிப்பதிலும் நிகரற்று விளங்கினார். |
| ஜூன் 8 முதல் "இந்திரதனுஷ்' தடுப்பூசி முகாம் Posted: 06 Jun 2015 12:29 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக "இந்திரதனுஷ்' தடுப்பூசி முகாம் வருகிற 8 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார். |
| Posted: 06 Jun 2015 12:28 PM PDT முதன்முதலில் விமானம் வைத்திருந்தவன் யார்? குபேரன். அதுவும் மிகப்பலர் ஏறிச் செல்லக்கூடிய விமானம். ஓட்டுநர் இல்லாத விமானம். இராவணன் தந்தை விச்சிரவசுவுக்கு நான்கு மனைவியர். விச்சிரவசுவுக்கும் தேவகன்னிக்கும் பிறந்தவன் குபேரன்; அவனுக்கும் கைகசிக்கும் பிறந்தவர்கள் |
| சென்னை- பெங்களூரு விரைவுச் சாலை திட்டப் பணிகள்: துரிதப்படுத்த அறிவுறுத்தல் Posted: 06 Jun 2015 12:27 PM PDT சென்னை - பெங்களூரு இடையிலான விரைவுச் சாலைத் திட்டப் பணிகளைத் (எக்ஸ்பிரஸ் ஹைவே) துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| 19-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 06 Jun 2015 12:26 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக, ஆட்சியர் வி.கே. சண்முகம் தெரிவித்தார். |
| கழிவுநீர்க் கால்வாயில் திடீர் தடுப்பு ஏற்படுத்திய பொது மக்கள் Posted: 06 Jun 2015 12:25 PM PDT காஞ்சிபுரம் அருகே கழிவுநீர்க் கால்வாயில் ஒரு பகுதி மக்கள் தடுப்பு ஏற்படுத்தியால், ஐயன்பேட்டை கிராமத்தில் சாலைகளில் கழிவுநீர் தேங்கியது. இந்தப் பிரச்னை குறித்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். |
| Posted: 06 Jun 2015 12:23 PM PDT |
| கூட்டுறவுச் சங்க அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 06 Jun 2015 12:23 PM PDT தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பணிபுரியும் ஊழியர்களிடம் உள்நோக்கத்துடன் அதிகாரிகள் ஏற்படுத்திவரும் மன உளைச்சல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என திருவண்ணாமலை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியது. |
| Posted: 06 Jun 2015 12:22 PM PDT இப்படிச் செய்வார் தருண் விஜய் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. திருக்குறளையும், திருவள்ளுவரையும் தேசிய அளவில் கொண்டு செல்லவும், உரிய மரியாதையைப் பெற்றுத் தரவும் உத்தரகண்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் முனைப்புக் காட்டுவதால்தான் தமிழகம் அவருக்கு நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது. |
| வெடிபொருள்கள் பறிமுதல்: இளைஞர் கைது Posted: 06 Jun 2015 12:22 PM PDT வந்தவாசி அருகே வீட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு Posted: 06 Jun 2015 12:21 PM PDT திருவண்ணாமலையில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பாஜக போட்டியிடக் கூடாது Posted: 06 Jun 2015 12:20 PM PDT ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார். |
| குரூப்-2 பயிற்சி வகுப்புகள் தொடக்கம் Posted: 06 Jun 2015 12:19 PM PDT திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், குரூப்-2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| இந்தியா - வங்கதேசம் இடையே பேருந்துச் சேவைகள் தொடக்கம் Posted: 06 Jun 2015 12:19 PM PDT இந்தியா - வங்கதேசம் இடையே 2 வழித்தடங்களிலான பேருந்துச் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகிய மூவரும் இணைந்து டாக்காவில் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தனர். |
| நிலம் கையக சட்டத்தில் சமரசம் கிடையாது Posted: 06 Jun 2015 12:18 PM PDT நிலம் கையக சட்டத்தின் அடிப்படை நோக்கத்தில் மத்திய அரசு சமரசம் செய்து கொள்ளாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். |
| ஜவ்வாதுமலையில் 2 நாள் கோடை விழா Posted: 06 Jun 2015 12:18 PM PDT ஜவ்வாதுமலையில் 2 நாள் கோடை விழா நடத்துவது குறித்து அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் அ.ஞானசேகரன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| "ஆதார்' அட்டை கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் Posted: 06 Jun 2015 12:17 PM PDT ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கவும், புகைப்படம் எடுப்பதற்கான அடையாளச் சீட்டு பெறவும் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| Posted: 06 Jun 2015 12:17 PM PDT தண்டராம்பட்டு உழவர் பணி கூட்டுறவுச் சங்கம் சார்பில், இரு மகளிர் குழுக்களைச் சேர்ந்த 25 உறுப்பினர்களுக்கு ரூ.6,16,000 நேரடி கடனுதவி அளிக்கப்பட்டது. |
| ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: விஜயகாந்துடன் தமிழிசை மீண்டும் சந்திப்பு Posted: 06 Jun 2015 12:16 PM PDT ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இரண்டாம் முறையாக சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| திரிணமூல்-பாஜக திடீர் நட்பு: ராகுல் தாக்கு Posted: 06 Jun 2015 12:15 PM PDT திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே திடீர் நட்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார். |
| குடியரசுத் தலைவர் தலையிட விவசாயிகள் வலியுறுத்தல் Posted: 06 Jun 2015 12:14 PM PDT காவிரி விவகாரத்தில் தலையிடும்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடும் தமிழக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். |
| ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் :வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர் புகைப்படம் Posted: 06 Jun 2015 12:13 PM PDT ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒட்டப்படும் வாக்குச் சீட்டில் வேட்பாளரின் புகைப்படம் இடம் பெறும் என்று தேர்தல் ஆணயம் தெரிவித்துள்ளது. |
| 3,698 பேருக்கு விலையில்லா பொருள்கள் அளிப்பு Posted: 06 Jun 2015 12:13 PM PDT புதுப்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த 3,698 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டன. |
| ஓய்வூதியம் தொடர்பான பேச்சு தோல்வி :போராட்டத்தில் ஈடுபட முன்னாள் ராணுவத்தினர் முடிவு Posted: 06 Jun 2015 12:13 PM PDT "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டம் தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருடன் சனிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி போராட்டத்தில் ஈடுபட முன்னாள் ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர். |
| "மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்' Posted: 06 Jun 2015 12:12 PM PDT மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார். |
| தூத்துக்குடி அனல் மின் நிலைய 2-ஆவது அலகு: இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடக்கம் Posted: 06 Jun 2015 12:12 PM PDT தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் உள்ள 2-ஆவது அலகில், இந்த மாத இறுதியில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல் Posted: 06 Jun 2015 12:11 PM PDT வந்தவாசியில் குடிநீர் வழங்கக் கோரி சனிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. |
| மேலும் 6 மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்குத் தடை Posted: 06 Jun 2015 12:11 PM PDT மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மேலும் 6 மாநிலங்களில், நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ்க்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது. |
| கருணாநிதி பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் Posted: 06 Jun 2015 12:11 PM PDT திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தெற்கு மாவட்ட திமுக அறிவித்து இருந்தது. அதன்படி, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| புளூ ஸ்டார் நடவடிக்கை நினைவு தினம்:பொற்கோயிலுக்குள் மோதல்; 5 பேர் காயம் Posted: 06 Jun 2015 12:10 PM PDT பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலுக்குள் ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர். |
| நில எல்லை ஒப்பந்தம்: அஸ்ஸாம் தேயிலைத் தோட்ட அதிபர்கள் எதிர்ப்பு Posted: 06 Jun 2015 12:10 PM PDT வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையில் சனிக்கிழமை கையெழுத்தான நில எல்லை வரையறை ஒப்பந்தத்துக்கு, அஸ்ஸாம் தேயிலைத் தோட்ட அதிபர்கள் கடும் |
| பள்ளிகளில் உலக சுற்றுச்சூழல் தின விழா Posted: 06 Jun 2015 12:09 PM PDT உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுதல், பேச்சுப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. |
| Posted: 06 Jun 2015 12:09 PM PDT கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பி அமேதி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| ஹெளரா ரயில் நிலையத்தில் வை ஃபை Posted: 06 Jun 2015 12:09 PM PDT மேற்கு வங்க மாநிலத்தின் ஹெளரா ரயில் நிலையத்தில் வை ஃபை இணையதள வசதி சனிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. |
| குழந்தைகளை விளையாட்டில் ஊக்கப்படுத்த வேண்டும்:மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் வலியுறுத்தல் Posted: 06 Jun 2015 12:08 PM PDT விளையாட்டுத் துறையில் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வலியுறுத்தினார். |
| பேரறிவாளன் புழல் சிறைக்கு மாற்றம் Posted: 06 Jun 2015 12:08 PM PDT வேலூர் மத்திய சிறையில் இருந்து வந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு சனிக்கிழமை மாற்றப்பட்டார். |
| Posted: 06 Jun 2015 12:07 PM PDT வேலூரில் நடந்த வாகன விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். |
| திராட்சையில் புழு: தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் Posted: 06 Jun 2015 12:07 PM PDT போளூரில் அடுமனையில் வாங்கிய உலர் திராட்சையில் புழு இருந்தது குறித்து தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| எல்லையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 06 Jun 2015 12:06 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்குள் சனிக்கிழமை அதிகாலையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். |
| ஜேடியூ - ஆர்ஜேடி கூட்டணியைக் கண்டு பாஜக, ஆர்எஸ்எஸ் கவலை: லாலு Posted: 06 Jun 2015 12:06 PM PDT ""ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணியைக் கண்டு, பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் அதிக கவலையில் உள்ளன'' என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார். |
| வீடு புகுந்து 20 பவுன் நகை, பணம் திருட்டு Posted: 06 Jun 2015 12:06 PM PDT ஆம்பூரில் பூட்டிய வீட்டினுள் புகுந்து 20 பவுன் நகைகள், ரொக்கப் பணம் திருடு போனது. |
| ஜம்முவில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தினர் குவிப்பு Posted: 06 Jun 2015 12:06 PM PDT ஜம்முவில் போலீஸாருடனான மோதலில் சீக்கிய இளைஞர் உயிரிழந்ததை அடுத்து அங்கு நடைபெற்று வரும் போராட்டங்களால் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். |
| பிற நிறுவன நூடுல்ஸ்களையும் ஆய்வு செய்ய முடிவு Posted: 06 Jun 2015 12:06 PM PDT நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிற நிறுவனங்களின் நூடுல்ஸ்களையும் ஆய்வு செய்ய இருப்பதாக மத்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) தெரிவித்துள்ளது. |
| டிஎஸ்பியை கைது செய்ய மாவட்டக் காவல் துறை தீவிரம் Posted: 06 Jun 2015 12:05 PM PDT செம்மரக் கட்டை கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள டிஎஸ்பி தங்கவேலுவை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கையை மாவட்டக் காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. |
| வங்கதேசத்தில் மின் நிலையம்:ரிலையன்ஸ் ஒப்பந்தம் Posted: 06 Jun 2015 12:05 PM PDT வங்கதேசத்தில் ரூ.19,000 கோடி மதிப்பில் மின் உற்பத்தி நிலையமும், இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான முனையம் அமைக்கவும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. |
| நிலுவையில் மின்னூர் செம்மரக் கடத்தல் வழக்கு: விசாரணையை தீவிரப்படுத்த கோரிக்கை Posted: 06 Jun 2015 12:05 PM PDT ஆம்பூர் அருகே மின்னூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. |
| மோடியுடன் ஒரே காரில் பயணித்த மம்தா Posted: 06 Jun 2015 12:05 PM PDT வங்கதேச தலைநகர் டாக்காவில், நில எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தான இடத்துக்கு பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சனிக்கிழமை ஒரே காரில் சென்றனர். |
| கண்ட்லா, குவாஹாட்டியில் கப்பல் பராமரிப்பு மையம்: கட்கரி Posted: 06 Jun 2015 12:04 PM PDT குஜராத்தின் கண்ட்லா, அஸ்ஸாமின் குவாஹாட்டி, அந்தமான் ஆகிய இடங்களில் கப்பல்களுக்கான புதிய பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். |
| Posted: 06 Jun 2015 12:04 PM PDT ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். |
| 2 நாள் தோல் பொருள் கண்காட்சி தொடக்கம் Posted: 06 Jun 2015 12:04 PM PDT இந்திய ஷூ பெடரேஷன் சார்பில் தோல், தோல் பொருள்கள் 2 நாள் கண்காட்சி ஆம்பூர் வர்த்தக மையத்தில் சனிக்கிழமை தொடங்கியது. |
| ரயில்வே துறையில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடுகளைத் திரட்ட திட்டம் Posted: 06 Jun 2015 12:03 PM PDT "ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 8.5 லட்சம் கோடி முதலீடுகளை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது' என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். |
| தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த லத்தேரி ராணுவ வீரர் Posted: 06 Jun 2015 12:03 PM PDT மணிப்பூர் அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த காட்பாடி, லத்தேரியைச் சேர்ந்த ராணுவ வீரரின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. |
| கணினி விவரப் பதிவாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 06 Jun 2015 12:02 PM PDT அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கணினி விவரப் புதிவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| "கலைஞனை மக்களிடம் நேரிடையாக கொண்டு சேர்ப்பது நாடகமே' Posted: 06 Jun 2015 12:02 PM PDT நாடகம் மட்டுமே ஒரு கலைஞனை மக்களிடம் நேரிடையாகக் கொண்டு சேர்க்கிறது என திருப்பத்தூர் கேலக்ஸி நிறுவனர் மதியழகன் கூறினார். |
| ஆந்திரத்துக்கு உலகத் தரத்தில் புதிய தலைநகரம் Posted: 06 Jun 2015 12:01 PM PDT ஆந்திரத்துக்கு உலகத் தரத்தில் புதிய தலைநகரம் அமைக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்தார். |
| கானாற்று வெள்ளம்: பாதுகாப்பான இடங்களில் பொதுமக்கள் தஞ்சம் Posted: 06 Jun 2015 12:01 PM PDT ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் கானாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக் காரணமாக அங்கிருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. |
| மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 06 Jun 2015 12:00 PM PDT ஆம்பூர் அருகே ஒட்டர்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 06 Jun 2015 12:00 PM PDT குடியாத்தம் அமுது அமெச்சூர்ஸ் நாடக மன்றத்தின் 50-ஆம் ஆண்டு பொன் விழா திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| யேமன் கிளர்ச்சியாளர்கள் - சவூதி படையினர் மோதல்:ஏராளமானோர் பலி Posted: 06 Jun 2015 11:59 AM PDT சவூதி அரேபியா எல்லைப் பகுதிகள் மீது, யேமன் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேயின் ஆதரவாளர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் ஏராளமானோர் பலியாகினர். |
| அட்சர முருகர் கோயிலில் குரு பூஜை Posted: 06 Jun 2015 11:59 AM PDT குடியாத்தம் ஆசிரியர் காலனி, பாண்டியன் நகரில் உள்ள ஸ்ரீஅட்சர முருகர் கோயிலில் 50-ஆம் ஆண்டு குரு பூஜை விழா, பொன் விழா அண்மையில் நடைபெற்றன. |
| மலேசியாவில் நிலநடுக்கம்:11 பேர் சாவு; 8 பேர் மாயம் Posted: 06 Jun 2015 11:58 AM PDT மலேசியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 8 பேரைக் காணவில்லை. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |