Tamil News | Online Tamil News |
- இந்தியாவில் புல்லட் ரயில் சேவை மலிவு
- விஜயகாந்த் வரவில்லை; தி.மு.க., 'அப்செட்' : கூட்டணி வாய்ப்பு கேள்விக்குறி
- 100 வயது வரை வாழ்ந்து, உங்களோடு நூற்றாண்டு விழாவை கொண்டாடுவேன்: கருணாநிதி நெகிழ்ச்சி
- எல்.இ.டி., விளக்குகள் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி மிச்சப்படுத்த திட்டம் :10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சேமிக்கவும் அரசு தீவிரம்
- முல்லை பெரியாறில் ஆய்வுக்கு அனுமதியா? டில்லியில் பரபரப்பை கிளப்பும் கேரளா
- மணிப்பூரில் பிரிவினைவாதிகள் தாக்குதல்:ராணுவ வீரர்கள் 20 பேர் பலி; 11 பேர் காயம்
- 'குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மனித வெடிகுண்டுக்கு சமமானவர்கள்'
- தமிழக காய்கறிகள் விஷத்தன்மை வாய்ந்ததாம்: டில்லி கூட்டத்தில் கேரளா புகார்
- தமிழகத்தில் நூடுல்ஸ் விற்பனைக்கு அரசு தடை: கையிருப்பை உடனே திரும்ப பெறவும் உத்தரவு
- தென் சீன கடற்பகுதியில் ஆய்வுக்கு சீனா எதிர்ப்பு
- தனியார் பள்ளி விவகாரம்: சிறப்பு அதிகாரி விசாரணை : பள்ளி செயலர் ரமண பிரசாத் ஆஜராகாமல் 'எஸ்கேப்'
- அலுவலகங்களில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்?
- டில்லி மெட்ரோ முதன் முதலாக டிரைவர் இல்லாத ரயிலை அறிமுகப்படுத்துகிறது
| இந்தியாவில் புல்லட் ரயில் சேவை மலிவு Posted: புதுடில்லி:'இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை, உலகிலேயே விலை மலிவானதாக இருக்கும்' என, ஜப்பான் குழு தெரிவித்துள்ளது. நம் நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை, மும்பை - ஆமதாபாத் இடையே அமைய உள்ளது. இந்த புல்லட் ரயில் பாதைக்கான சாத்தியக் கூறுகள் குறித்து, ஜப்பான் நாட்டு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்தக் குழுவினர் கூறியுள்ளதாவது: மும்பை - ஆமதாபாத் இடையே, புல்லட் ரயில் பாதை அமைக்க, 98 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இந்த பாதையில், 10 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இந்த பாதையில், புல்லட் ரயில் ஓடத் துவங்கும் போது, உலகிலேயே கட்டணம் மலிவானதாக ... |
| விஜயகாந்த் வரவில்லை; தி.மு.க., 'அப்செட்' : கூட்டணி வாய்ப்பு கேள்விக்குறி Posted: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு வாழ்த்து சொல்ல, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேரிலும் வரவில்லை; தொலைபேசியிலும் வாழ்த்து சொல்லவில்லை என்பதால், தி.மு.க., தலைமை 'அப்செட்'டாகி உள்ளது. மேலும், கூட்டணிக்கு, தே.மு.தி.க., வரும் என்ற நம்பிக்கையையும் தி.மு.க., இழந்துள்ளது. இது குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கருணாநிதியின் 92வது பிறந்த நாளுக்கு, பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பே இல்லாத கட்சித் தலைவர்களும், அரசியல் நாகரிகம் கருதி, கருணாநிதிக்கு, வாழ்த்து தெரிவித்தனர்.அதேபோல், ... |
| 100 வயது வரை வாழ்ந்து, உங்களோடு நூற்றாண்டு விழாவை கொண்டாடுவேன்: கருணாநிதி நெகிழ்ச்சி Posted: சென்னை:'மக்கள் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், எனக்கு பிறந்த தின வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:என், 92வது பிறந்த தினத்தை ஒட்டி, உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என, 47,66,837 பேர், என்னிடம் கொண்டுள்ள பாசம், அன்பின் காரணமாக குறுஞ்செய்தி வாயிலாகவும், முகநுால், 'டுவிட்டர், கூகுள் ப்ளஸ், ஹாஸ்டாக்' மற்றும் இணையதளத்தின் வாயிலாகவும், நேரிலும், கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாகவும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். குறிப்பாக, இந்தியாவில், 'டுவிட்டர் ... |
| Posted: புதுடில்லி:''மின்சார பயன்பாடு அதிகமாக உள்ள நேரங்களில், 'எல்.இ.டி.,' (ஒளி உமிழ் இரு முனையம்) விளக்குகளை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதன் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்தி, 12 ஆயிரம் கோடி ரூபாயை சேமிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,'' என, மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பீயுஷ் கோயல் தெரிவித்தார். சமூக வலைதளமான, 'பேஸ்புக்' பயன்பாட்டாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர் பீயுஷ் கோயல் அளித்துள்ள பதில்: மின்சார பயன்பாடு அதிகமாக உள்ள நேரங்களில், தெருக்களிலும், ... |
| முல்லை பெரியாறில் ஆய்வுக்கு அனுமதியா? டில்லியில் பரபரப்பை கிளப்பும் கேரளா Posted: முல்லைப் பெரியாறு பகுதியில், புதிய அணை கட்டுவதால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கு, கேரள அரசு கேட்டிருந்த அனுமதிக்கு, ஒப்புதல் வழங்கிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோரிக்கை: முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதி கோரி, கடந்த மாதம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், கேரள அரசு சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று, டில்லியில் இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தொழில்நுட்ப ... |
| மணிப்பூரில் பிரிவினைவாதிகள் தாக்குதல்:ராணுவ வீரர்கள் 20 பேர் பலி; 11 பேர் காயம் Posted: புதுடில்லி:மணிப்பூரின் சந்தல் மாவட்டத்தில், பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள், 20 பேர் கொல்லப்பட்டனர்; 11 பேர், காயம் அடைந்தனர். மணிப்பூர் மாநிலத்தின், தலைநகர் இம்பாலில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் உள்ள, சந்தல் மாவட்ட சாலை ஒன்றில், ராணுவத்தினர் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த சிலர், கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தும், கையெறி குண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகள் மூலமாகவும் தாக்குதல் நடத்தினர்.காயமடைந்த வீரர்கள் உடனடியாக, ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு ... |
| 'குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மனித வெடிகுண்டுக்கு சமமானவர்கள்' Posted: புதுடில்லி:'போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், மனித வெடிகுண்டுக்கு சமமானவர்கள்' என, டில்லி செஷன்ஸ் கோர்ட் கருத்து தெரிவித்து உள்ளது. போதையில், டூவீலர் ஓட்டிச் சென்ற குற்றத்திற்காக, ரோகித் பார்கவ் என்பவருக்கு, மூன்று நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை உறுதி செய்த, டில்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி லோகேஷ் குமார் சர்மா பிறப்பித்த உத்தரவு:போதையில் டூவீலர் ஓட்டிச் சென்ற குற்றத்திற்காக, ரோகித் பார்கவிற்கு, கீழ் நீதிமன்றம், மூன்று நாள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அந்த தண்டனை சரியானதே; அதில் தலையிட முடியாது. பார்கவிற்கு எந்த விதமான கருணையும் காட்ட முடியாது ... |
| தமிழக காய்கறிகள் விஷத்தன்மை வாய்ந்ததாம்: டில்லி கூட்டத்தில் கேரளா புகார் Posted: நாகர்கோவில்:'தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள், விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது' என, டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், கேரளா புகார் கூறி உள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில், ரசாயன உரத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாக, கேரள அரசு கூறி வருகிறது.இதனால், தமிழக காய்கறிகள் உற்பத்தியாகும் இடங்களில், கேரள தோட்டக்கலைத் துறையினர், கடந்த மாதம் ஆய்வு நடத்தினர்.பின், அக்கு-ழு அளித்த அறிக்கையின்படி, கேரள உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அனுபமா, தமிழக வேளாண் உற்பத்தித்துறை கமிஷனர் ராஜேஷ் லக்கானிக்கு கடி-தம் எழுதினார்.அதில், ... |
| தமிழகத்தில் நூடுல்ஸ் விற்பனைக்கு அரசு தடை: கையிருப்பை உடனே திரும்ப பெறவும் உத்தரவு Posted: தமிழகத்தில், 'மேகி' உட்பட, நான்கு நிறுவனங்களின், நுாடுல்ஸ் விற்பனைக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது; கையிருப்பு சரக்குகளை உடனே திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும், உணவுப் பொருளில், கிட்டத்தட்ட, 30 ஆண்டு காலமாய் இடம் பிடித்துள்ளது, 'நெஸ்லே' நிறுவன தயாரிப்பான, 'மேகி' நுாடுல்ஸ். இதனால், இதன் விற்பனை படு வேகமாக அதிகரித்தது .இந்நிலையில், 'மேகி' நுாடுல்சில் உள்ள காரீயத்தின் அளவு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட, அதிகம் உள்ளது, சில ... |
| தென் சீன கடற்பகுதியில் ஆய்வுக்கு சீனா எதிர்ப்பு Posted: பீஜிங்:தென் சீன கடற்பகுதியில், வியட்னாம் நாட்டுடன் இணைந்து, பொதுத் துறை நிறுவனமான, ஓ.என்.ஜி.சி., எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்வதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை தலைமை இயக்குனர் ஹூவாங் ஜிலியான், இந்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டி:சீனாவின் தெற்கு கடல் பகுதியில், இந்தியாவும், சீனாவும் தாராளமாக கப்பல் போக்குவரத்து மேற்கொள்ளலாம். ஆனால், அங்கு வர்த்தக ரீதியில், இந்தியா, எண்ணெய் வள ஆய்வில் ஈடுபடுவதை, சீனா விரும்பவில்லை. அதுபோல், சீனா அங்கு வர்த்தக நோக்கில் மேற்கொள்ளும் பணியை எதிர்க்க, இந்தியாவிற்கு ... |
| தனியார் பள்ளி விவகாரம்: சிறப்பு அதிகாரி விசாரணை : பள்ளி செயலர் ரமண பிரசாத் ஆஜராகாமல் 'எஸ்கேப்' Posted: அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி விவகாரம் குறித்து, சிறப்பு விசாரணை அதிகாரி, நேற்று விசாரணையைத் துவக்கினார். பள்ளியின் செயலர் ஆஜராகவில்லை. அவரை நேரில் ஆஜராகச் சொல்லி, சிறப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதிக கட்டணம்: சென்னை, அடையாறில் செயல்படும் பால வித்யா மந்திர் என்ற தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளியில், அதிக கட்டணம் வசூலிப்பதாக, பெற்றோர், கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர்.முதல்வரின் குறை தீர்க்கும் தனிப்பிரிவு அதிகாரி, இன்னசன்ட் திவ்யா, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அதிகாரிகள், சி.பி.எஸ்.இ., தென் மண்டல ... |
| அலுவலகங்களில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்? Posted: சென்னை: பொதுவாக அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோர் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டியதாகிறது. அவ்வாறு உட்காரும் போது பல விதமான உடல் பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அலுவலகங்களில் வேலை செய்யும் போது பெரும்பாலானவர்கள் முக்கால்வாசி நேரத்தை உட்கார்ந்தே கழிக்கின்றனர். அதிலும் மொத்த நேரத்தில் பாதி நேரம் தொடர்ந்து உட்கார்ந்தபடியே இருக்கின்றனர். தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காருவதால் இருதய நோய்கள், நீரிழிவு, மூலம் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், குறைந்தது ... |
| டில்லி மெட்ரோ முதன் முதலாக டிரைவர் இல்லாத ரயிலை அறிமுகப்படுத்துகிறது Posted: புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயில் சேவை முதன் முதலாக டிரைவர் இல்லாத ரயிலை அறிமுகம் செய்கிறது.தென்கொரியாவின் சாங்வான் நகரில், அந்நாட்டு தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்படும், டிரைவர் இல்லாமல் ஓடக்கூடிய இந்த ரயில், டில்லி மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு மையங்கள் மூலமாக இயக்கப்படும்.இந்த ரயில், டில்லியில் மஜ்லிஷ் பூங்கா-ஷிவ் விஹார் மார்க்கத்தில் 59 கி.மீ., தூரமும், ஜனக்பூரி மேற்கு-பொட்டானிக்கல் கார்டன் மார்க்கத்தில் 38 கி.மீ., தூரமும் தினமும் பயணிகளை சுமந்து செல்ல காத்திருக்கிறது. இதில் டிரைவருக்கு என்று தனியாக கேபின் இல்லை என்பதால் வழக்கமாக டிரைவரால் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 05,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |