Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆர்.கே.நகரில் தி.மு.க.,வின் 50 ஆயிரம் ஓட்டுகள் எங்கே? 88 சதவீத ஓட்டுகளை பெற்று ஜெயலலிதா அபாரம்

Posted:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளில், 88.43 சதவீதமான, 1.60 லட்சம் ஓட்டுகள் பெற்று, முதல்வர் ஜெயலலிதா, சாதனை வெற்றியை நிகழ்த்தியுள்ளார். இந்த தொகுதியில், தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாக கருதப்படும், 50 ஆயிரம் ஓட்டுகள், இம்முறை எங்கே சென்றது என்ற, தீவிர ஆய்வில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், முதல்வர் ஜெயலலிதா களம் இறங்கினார். கடந்த மாதம், 27ம் தேதி, ஓட்டுப்பதிவு நடந்தது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஓட்டு எண்ணிக்கை முடிவில், முதல்வர் ஜெயலலிதா, 1.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், மிகப்பெரிய வெற்றியை பெற்றார்; ...

பாக்.,கில் தயாராகும் கள்ளநோட்டு தமிழகம் வருவது அம்பலம்: வங்கதேசம் - மேற்குவங்கம் வழியே இங்கே புழக்கம்

Posted:

புதுடில்லி : பாகிஸ்தான் அரசு மற்றும் பயங்கரவாதிகளால், இந்தியாவில் புழக்கத்தில் விடப்படும் கள்ள நோட்டுகள், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு, வங்கதேசம் வழியாக, மேற்கு வங்கம் அனுப்பி வைக்கப்பட்டு, அந்த மாநில இளைஞர்கள் மூலம் தமிழகம், பெங்களூரு நகரங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, நல்ல நோட்டாக மாற்றப்படுவதை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு கண்டறிந்துள்ளது.இந்தியா மீது மூன்று போர்களை நடத்தி, அதில்தோல்வியடைந்த பாகிஸ்தான், நான்காவது போராக, மறைமுக போரை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்து, ...

கெஜ்ரிவாலின் ஒருமாத 'கரன்ட்' பில் 50 ஆயிரம் ரூபாயா?

Posted:

புதுடில்லி : அனைத்து விதத்திலும் சிக்கனத்தை வலியுறுத்தும், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரி வால், மாதம், 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், வழக்கறிஞர் விவேக் கார்க் என்பவர், டில்லி யூனியன் பிரதேச அரசிடம், முதல்வர் கெஜ்ரிவால் பயன்படுத்தும், வீடு மற்றும் அலுவலகத்தின் மின் கட்டணம் எவ்வளவு என்பதை கேட்டார். அதற்கு, 'மாதம், 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அவர் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்' என, பதில் கிடைத்தது. இந்த தகவல், ஊடகங்களில் வெளியானதும், முதல்வர் ...

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு: கையெழுத்திட அன்பழகன் மறுப்பு?

Posted:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு ஆவணங்களில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் கையெழுத்திட மறுத்ததாக, அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதல்வர் ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில், 'அப்பீல்' செய்துள்ளது. இதன் மீதான விசாரணை, இம்மாதம் வருகிறது. 'ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து, தி.மு.க., தரப்பிலும், உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்படும்' என, மே மாதம் நடந்த தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், ...

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: கருணாநிதி

Posted:

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:சென்னை மெட்ரோ ரயில் திட்டம், மாநகரின் மிக பெரிய போக்குவரத்து திட்டம்; 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கான, அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டம்.இது, தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதனால், ஆட்சிக்கு வந்தவுடன், 'மெட்ரோ ரயில் திட்டத்தை விட, மோனோ ரயில் தான் சிறந்தது' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார். பின், அவரே மெட்ரோ ரயில் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்.'மெட்ரோ ரயில் தொடங்குவதை தாமதித்து, தள்ளிக்கொண்டே போனால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அறிவிப்பு செய்தபின், தற்போது வேறு ...

10 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது கூகுள் எர்த்

Posted:

நியூயார்க்: கூகுள் எர்த் தனது 10 ஆண்டு நிறைவை பல புதிய அம்சங்களுடன் கொண்டாடுகிறது.

கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர கூகுள் எர்த் எனும் சிறப்பு அம்சத்தை 2004ல் அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க மேலும் பல சிறப்பு அம்சங்களை அதில் சேர்த்துள்ளது.
வாயேஜர் மற்றும் விரிவு படுத்தப்பட்ட உலக வரைபட தொகுப்பு என புதிதாக இரண்டு சிறப்பு அம்சங்கள் இடம் பெறுகின்றன.
தற்போது வாயேஜர் அனுபவத்தை கூகுள் எர்த்தின் டெஸ்க்டாப் பதிப்பில் மட்டுமே அனுபவிக்க முடியும். இதன் மூலமாக உலகில் ...

இலங்கை பொதுத்தேர்தல் தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணுமா? கவலையில் தமிழர்கள்

Posted:

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல், தமிழர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வைத் தருமா, இலங்கையில் ஆதிக்க இனமாக உள்ள, சிங்களர்களின் கரத்தை வலுப்படுத்துமா என்ற சந்தேகங்கள், சர்வதேச அரங்கில் பேசப்படும் முக்கிய பிரச்னையாகி விட்டது.இலங்கையின் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்பாக, தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனையில், சிக்கல்கள் எழுந்தன. ஏனென்றால், 20வது அரசியல் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர, அரசுக்குள், ஆட்சியாளர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இலங்கையின் முக்கிய கட்சிகளான, ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா ...

மெட்ரோ ரயிலில் குறைந்தது பயணிகள் கூட்டம்: யோசிக்க வைக்கிறதா கட்டணம்?

Posted:

மெட்ரோ ரயில்களில், துவக்கப்பட்ட முதல் நாளில், ரயிலில் ஏறவே முடியாத அளவிற்கு, ரயில் நிலையங்களில் கூட்டம் குவிந்தது. ஆனால், இரண்டாம் நாளான நேற்று கூட்டம் குறைந்து காணப்பட்டது. சென்னைவாசிகளின் கனவான மெட்ரோ ரயிலில் பயணிக்க, துவக்க நாளான நேற்று, முன்தினம், பயணிகள் கூட்டம் குவிந்தது. இந்த நிலையில், நேற்று மெட்ரோ ரயிலில் பயணிக்க பலரும் ஆர்வமுடன் வந்தனர். பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையம், ஆலந்துார் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் ஓரளவு பயணிகள் கூட்டத்தை பார்க்க முடிந்தது.

தொடரும் ...

ஹெல்மெட் விவகாரம்: போலீசிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

Posted:

தமிழகத்தில் இன்று முதல், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர், 'ஹெல்மெட்' அணிவதுகட்டாயமாக்கப்பட்டு உள்ளது.கண்காணிப்பு பணியில், 1 லட்சம் போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்.உயர் போலீஸ் அதிகாரிகள் பிறப்பித்துள்ள உத்தரவு:* இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர், ஹெல்மெட் அணிந்து இருந்தால், தேவையில்லாமல் அவர்களைதொந்தரவு செய்யக்கூடாது.* சாலையில் தடுப்பு அமைத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், சோதனை நடத்தக்கூடாது.* ஹெல்மெட் அணியாமல் பிடிபடுவோருக்கு, எந்த வகையிலும் சலுகை காட்டக் கூடாது. ஓட்டுனர் ...

கல்வியில் தப்பி கான்ட்ராக்ட்டில் சிக்கிய மந்திரி: டெண்டர் இல்லாமல் ரூ.191 கோடிக்கு ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு

Posted:

மும்பை: மகாராஷ்டிராவில், 'டெண்டர்' இல்லாமல், 200 கோடி ரூபாய் கான்ட்ராக்ட் விடப்பட்ட விவகாரத்தில், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே சிக்கியுள்ள நிலையில், அதுபோல, 191 கோடி ரூபாய் கான்ட்ராக்ட் கொடுக்க முயன்றதாக, கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கடந்த ஜனவரியில், அரசு பள்ளிகளுக்கு தீயணைப்பான்கள் வாங்க, சில தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் இல்லாமல், அமைச்சர் வினோத் தாவ்டே, ஒப்பந்தம் வழங்கியுள்ளார். அதற்காக நிதி அனுமதிக்க கோரி, அந்த உத்தரவு, நிதியமைச்சகத்திற்கு சென்ற போது, கேள்வி எழுப்பிய ...

சுனந்தா கொலை வழக்கில் திருப்பம்: தரூரிடம் உண்மை அறியும் சோதனை

Posted:

புதுடில்லி: சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக, அவரது கணவரும், காங்., மூத்த தலைவருமான, சசி தரூரிடம், உண்மை கண்டறியும் சோதனை நடத்த, நீதிமன்றத்தை அணுகுவது குறித்து, டில்லி போலீஸ் தீவிர பரிசீலனையில்ஈடுபட்டுள்ளது.இதுகுறித்து, டில்லி போலீஸ் வட்டாரங்கள், நேற்று கூறியதாவது:கடந்த 2014 ஜனவரி மாதம், காங்., மூத்த தலைவர் சசி தரூரின் மனைவி, சுனந்தா புஷ்கர், 51, டில்லி லீலா ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய டில்லி போலீசார், சுனந்தா விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தெரிவித்தனர். அடையாளம் தெரியாத மர்ம நபர்களுக்கு எதிராக, கொலை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™