Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'விழிஞ்ஞம் துறைமுக திட்டம் தமிழகத்திற்கு மாற்றப்படும்' என எச்சரிக்கை:முரண்டு பிடிக்கும் கேரள கட்சிகளுக்கு நிதின் கட்காரி கண்டிப்பு

Posted:

மும்பை:''கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான, சர்வதேச துறைமுக திட்டத்தை, அதானி குழுமம்நிறைவேற்ற, அம்மாநில அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தத் திட்டம் தமிழகத்திற்குமாற்றப்படும்,'' என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகேயுள்ளது விழிஞ்ஞம். இங்கு, 'சர்வதேச துறைமுகம் அமைக்க வேண்டும்' என, அங்கு ஆட்சியில் உள்ள, முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான, காங்கிரஸ் கூட்டணி அரசு பல ஆண்டுகளாக கோரி வருகிறது.
அதனால், துறைமுக பணிக்கான டெண்டர் ...

கிரிமினல்கள் பட்டியலில் மோடி படம்

Posted:

புதுடில்லி:கூகுள் தேடு பொறியில், 'உலகின் மோசமான, 10 கிரிமினல் கள்' பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதனால், கூகுள் தேடு பொறியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

உலகில் உள்ள பல விஷயங்களைப் பற்றி, உடனே அறிந்து கொள்ள, உலகம் முழுவதும் உள்ளவர்கள் பயன்படுத்தும் வலைதளம் கூகுள் தேடு பொறி. இதில், நேற்று உலகின் மோசமான, 10 கிரிமினல்கள் யார் என, டைப் செய்த போது, மோடியின், மூன்று படங்கள் இடம் பெற்றுள்ளது, சர்ச்சையை எழுப்பி உள்ளது.மோடி படத்துடன், அமெரிக்க படையினரால், கொல்லப்பட்ட அல்-குவைதா ...

ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான புகார்:சி.பி.ஐ., பதில் தாக்கல் செய்ய உத்தரவு

Posted:

புதுடில்லி:சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர், சாட்சியை கலைக்க முற்பட்டது தொடர்பாக, சி.பி.ஐ., பதில் அளிக்க வேண்டும் என, சிறப்பு கோர்ட்உத்தரவிட்டுள்ளது.கடந்த, 1984ல் நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு, போதிய ஆதாரம் இல்லாததால், அவருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் எனக்கோரி, டில்லி சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ., மனுத்தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, வன்முறையால் ...

திறமையற்ற அதிகாரிகளுக்கு மத்திய அரசு கல்தா

Posted:

புதுடில்லி:பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல முக்கிய துறைகளின் செயலர் பதவிகளுக்கு, தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்துள்ளது; குறிப்பாக, 16 புதிய செயலர்கள், மத்திய அரசால் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, மத்திய அரசின் கொள்கை திட்டங்களை, துரிதமாக செயல்படுத்த முடியாத திறமையற்ற அதிகாரிகளுக்கு, மத்திய அரசு, கல்தா கொடுத்துள்ளது.

மூன்றாவது முறை:கடந்தாண்டு மே மாதத்தில், பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு பதவியேற்று கொண்டது முதல், மூன்றாவது முறையாக, உயர் பதவி வகித்தவர்கள் கூண்டோடு துாக்கி அடிக்கப்பட்டு உள்ளனர்.வர்த்தகம், சுரங்கம் ...

ஒரே பள்ளி, ஒரு பாடப்பிரிவு இரு வேறு கட்டணங்கள்? விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

Posted:

கட்டணப் பிரச்னைக்கு உள்ளான அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி குறித்து விசாரணை நடத்த, சிறப்பு அதிகாரியை நியமித்து, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சிங்காரவேலு பரிந்துரையின்படி, தமிழக பள்ளிக்கல்வித் துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை, அடையாறு, காந்திநகரில், கூட்டுறவு சங்க பதிவில் உள்ள, 'பாலவித்யா மந்திர்' என்ற பள்ளி, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் நடத்தப்படுகிறது.அங்கு, 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, 1,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்; ஆசிரியர்கள், 104 பேர் பணிபுரிகின்றனர்.அந்த பள்ளியில், அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட, அதிகமாக ...

குஷியில் நிதிஷ்; அதிர்ச்சியில் லாலுபிரசாத்

Posted:

நிதிஷ் குமாருக்கும், லாலுபிரசாத்தும் இடையில் நடக்கும், முட்டல் மோதல் பிரச்னையில், காங்., திடீரென மூக்கை நுழைத்து உள்ளது; இதன்மூலம், இரு தலைவர்களும், ஒன்று சேர்வதை தடுக்கும் வகையில், யாரும் எதிர்பாரத வகையில், காய் நகர்த்தப்பட்டு உள்ளதால், பீகார் அரசியலில், புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்பாடுகள்:
பீகாரில், வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபரில், சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில், அம்மாநில அரசியல் கட்சிகள், தீவிரம் காட்டி வரும் நிலையில், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ...

'மேகி நூடுல்ஸ்' தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்துக்கு நெருக்கடி முற்றுகிறது: வேதிப்பொருள் கலப்படம் குறித்து தமிழகத்திலும் சோதனை

Posted:

குழந்தைகள் விரும்பி சாப்பிடும், 'மேகி நுாடுல்ஸ்'சில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும், ரசாயனம் அதிகம் உள்ளது என்ற குற்றச்சாட்டால், அதை தயாரிக்கும், 'நெஸ்லே' நிறுவனத்துக்கு நெருக்கடி முற்றுகிறது. வேதிப்பொருட்கள் கலப்படம் குறித்து, தமிழகத்திலும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பி உள்ளனர்; இதன் முடிவின் அடிப்படையில், நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும், 'நெஸ்லே' இந்தியா நிறுவனத்தின், பிரபல தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்' பின்னணியில், பெரும் ஆபத்து இருப்பது, உ.பி., மூலம் ...

அடக்க நினைத்தால் பதிலடி கொடுப்போம்: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை

Posted:

''தி.மு.க., மத்திய அரசுக்கு எதிரானது அல்ல, மதித்தால் மதிப்போம், அடக்க நினைத்தால், இமயம் முதல் குமரி வரை தக்க பதிலடி கொடுப்போம்'' என, பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்தாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில், ஸ்டாலின், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கருணாநிதி பேசியதாவது:ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தில் பல பொறுப்புகளில் இருந்து இதுவரை பொருளாளராக ...

ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் முகாம்

Posted:

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில், அமைச்சர்களுக்கு மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர்களுக்கும், சில பகுதிகளை ஒதுக்க, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஜெயலலிதா போட்டியிடுகிறார். எனவே, இதுவரை இல்லாத அளவிற்கு, அதிக ஓட்டு வித்தியாசத்தில், ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற துடிப்புடன், அ.தி.மு.க.,வினர் களமிறங்கி உள்ளனர்.தேர்தல் பொறுப்பாளர்களாக, 28 அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, 50 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுக் கூட்டம், இரு நாட்களுக்கு முன், ஆர்.கே.நகரில் ...

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் 11 இந்தியர்கள்: உளவு அமைப்புகள் அறிக்கை

Posted:

புதுடில்லி:ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், 11 இந்தியர்கள் இணைந்துள்ளதாக, ஐ.பி., எனப்படும் உளவு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம், ரகசிய அறிக்கை அளித்துள்ளது. மகாராஷ்டிராவின் கல்யாண் நகரை சேர்ந்த ஆரிப் மஜீத் உள்ளிட்ட நான்கு பேர், கடந்த ஆண்டு, துருக்கி வழியாக, சிரியாவில் உள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்துள்ளனர்.

சிரியா போரில், ஆரிப்பிற்கு, மூன்று குண்டு காயங்கள் ஏற்பட்டதை அடுத்து, அவர், துருக்கி வழியாக, மும்பைக்கு திரும்பினார். விமான நிலையத்தில், ஆரிப் கைது செய்யப்பட்டு, அவர் மீது, சட்ட விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ...

விளம்பரங்களால் சிக்கல்: நடிகர், நடிகையர் அலறல்

Posted:

'மேகி நுாடுல்ஸ்' விளம்பர படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மீது வழக்கு பதிவு செய்ய, பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், உணவுப் பொருட்கள் சம்பந்தமான விளம்பர படங்களில் நடித்த, தமிழக நடிகர், நடிகையரிடையே பீதி ஏற்பட்டு உள்ளது.

கண்டனம்:
தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களான விஷால், கார்த்தி, சூர்யா, தனுஷ், சிம்பு, ஆர்யா, நடிகை ஜோதிகா, தேவயானி, ராதிகா, சினேகா, பிரபு, விஜய், விக்ரம், சரத்குமார் ஆகியோர் விளம்பரங்களில் நடித்து உள்ளனர். 'டிவி' தொடர்களில் நடிக்கும் பல நடிகர், நடிகையர், 'ரியல் எஸ்டேட்' விளம்பர படங்களிலும் நடித்துள்ளனர்.நடிகை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™