Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிரியங்கா விவகாரத்தை மறைத்தது ஏன்? : தகவல் தெரிவிக்க உத்தரவு

Posted:

சிம்லா: 'காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, சிம்லாவில் எட்டு ஆண்டு களுக்கு முன் நிலம் வாங்கியது தொடர்பான விவரங்களை, 10 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்' என, தகவல் ஆணைய உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது; வீரபத்ர சிங் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், சிம்லா நகரில், கடந்த 2007ல், ஒரு ஏக்கர் நிலத்தை 47 லட்சம் ரூபாய்க்கு,
பிரியங்கா வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விவரங்களை அளிக்குமாறு, தகவல் உரிமை ஆர்வலர் தேபாசிஸ் பட்டாச்சார்யா, கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்திருந்தார். ...

சட்டச்சூழலே இல்லை; பிறகெப்படி கூட்டுக் கூட்டம்? : பா.ஜ.,வுக்கு இம்சையை தரும் நிலம் எடுப்பு மசோதா

Posted:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு, அமைச்சர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாலும், கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதாலும், பா.ஜ., பெரும் யோசனை யில் ஆழ்ந்துள்ளது.

இதனால், மசோதாவை நிறைவேற்ற, பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுவது என, அக்கட்சி எடுத்திருந்த முடிவை, மறுபரிசீலனை செய்யத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடும் எதிர்ப்பு
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, நிறைவேற்றியே தீருவது என, மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு ...

ராஜஸ்தான் அரண்மனையை முதல்வர் வசுந்தரா ராஜே ஆக்கிரமிப்பு ! : ஆதாரங்களுடன் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

Posted:

புதுடில்லி: ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடி விவகாரத்தில் சிக்கி, பா.ஜ., மேலிடத் தலைவர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ள, ராஜஸ்தான் முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த வசுந்தரா ராஜே மீது, தோல்பூர் அரண்மனையை அபகரித்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், பரபரப்பு புகார் கூறி, வசுந்தராவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து, டில்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:* ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமான, தோல்பூர் அரண்மனையை, அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆக்கிரமித்துள்ளார். ...

அமெரிக்க கோழிக்கறி இறக்குமதி அபாயம்

Posted:

புதுடில்லி: அமெரிக்க முட்டை, கோழிக்கறி, பன்றி இறைச்சி போன்றவற்றை இறக்குமதி செய்ய இந்தியா விதித்துள்ள தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என, ஜூன் 4ல், உலக வர்த்தக அமைப்பு எனப்படும், டபிள்யு.டி.ஓ., பிறப்பித்துள்ள உத்தரவை செயல்படுத்த, மத்திய வர்த்தகம் மற்றும் விவசாய அமைச்சகங்கள் முயற்சி கள் மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்க முட்டை, இறைச்சி போன்ற பொருட்களுக்கு இந்தியாவில் தடைகள் விலக்கிக் கொள்ளப் படுமானால், உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.
இதுகுறித்து, வர்த்தகத்துறை செயலர் ராஜிவ் கெர் நேற்று கூறும் போது, ...

காஸ் மானியம் பெற இன்றே கடைசி நாள்...உஷார்:இன்னும் 14 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை

Posted:

சமையல் காஸ் மானியத் திட்டத்தில் இணைய, இன்றே கடைசி நாள். கடந்த, 20 நாட்களில், இரண்டு லட்சம் பேர் பதிவு செய்திருந்தாலும், இன்னும், 14 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. அவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில், ஜனவரி முதல் வாங்கிய சிலிண்டர்களுக்கான மானியத்தைப் பெற முடியாது என, உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

சமையல் காஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாகச் செலுத்தும் திட்டம், ஜனவரி மாதம், நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

இந்த நேரடி மானியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஜூன், 30ம் தேதி ...

தமிழக பா.ஜ.,வுக்கு அமித் ஷா அழைப்பு கூட்டணி பற்றி பெங்களூரில் முடிவு

Posted:

தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களை, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பெங்களூரு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அங்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில், கூட்டணி வாய்ப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக, பா.ஜ., வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அடுத்த மாதம் 5ம் தேதி, அமித் ஷா பெங்களூரு வருகிறார்; அங்கு, தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார். வழக்கமாக, மாநில நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு வரும்.இந்த முறை, மாவட்ட தலைவர்களும் அவசியம் கலந்து ...

கேள்வி கேட்டிருந்தால் ஊழல் நடந்திருக்காது! *பொங்கிய விஜயகாந்த்

Posted:

- நமது நிருபர் - ''எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் இருந்தவர்கள், என்னை போல், முதல்வரிடம் கேள்வி கேட்டிருந்தால், ஊழல் நடந்திருக்காது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு, தண்ணீர் பெற்றுத் தராத தமிழக அரசைக் கண்டித்து, திருவாரூரில், தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:தமிழகத்தில் பசுமை புரட்சியோ, வேளாண் புரட்சியோ நடக்கவில்லை; ஊழல் புரட்சி தான் நடந்திருக்கிறது.ஜெ., சொத்து குவிப்பு வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள், காவடி துாக்கி, ...

மெட்ரோ ரயில் திட்டம் யாரால் வந்தது?:அரசியல் கட்சிகள் லாவணி

Posted:

'சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை, நாங்கள் தான் கொண்டு வந்தோம்' என, உரிமை கொண்டாடும், தி.மு.க., - காங்., கட்சிகளுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்து உள்ளார்.சென்னையில் நேற்று, முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்:தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்டது தான், சென்னை மெட்ரோ ரயில் திட்டம். அப்போது, உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த நான், இத்திட்டத்துக்கு நிதியுதவி பெற ஜப்பான் சென்றேன்; வெற்றி பெற்றேன். பின், 2009ல் துவக்கப்பட்ட இந்த திட்டத்தின் ...

மெட்ரோ ரயில் சேவையை துவக்கினார் முதல்வர் ஜெ.,

Posted:

சென்னை:ஆலந்துார் -- கோயம்பேடு மெட்ரோ ரயில் சேவையை, முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தார். ஏழு மெட்ரோ ரயில் நிலையங்களையும், அவர் திறந்து வைத்தார்.

சென்னை: பிரம்மாண்ட கட்டமைப்பு, குளிர்சாதன பெட்டியில் சொகுசு பயணம் என, நேற்று கோலாகலமாக துவங்கியுள்ள சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தால், சென்னைவாசிகள் அளவில்லா மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னையில், கடந்த சில ஆண்டுகளாக சாலையின் மையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருப்பதை மட்டும் பார்த்து பார்த்து, எப்போது இந்த பணிகள் முடியுமோ, எப்போது இந்த ரயிலில் நாம் ...

இந்தியாவிலிருந்து ரயில்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி

Posted:

புதுடில்லி: இந்தியாவில் உற்பத்தியாக உள்ள பம்பார்டியர் ரயில்கள் 2019ல் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதியாக உள்ளன.

மோடி அரசு, வெளி நாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி, பெர்லினை தலைமையகமாகக் கொண்ட பம்பார்டியர் நிறுவனத்தின் கனாடா நாட்டின் கிளை ஒன்று, ஆஸ்திரேலியாவுக்கு ரூ 26,000 கோடி மதிப்பிலான 75 ரயில்களை தயார் செய்து ஏற்றுமதி செய்ய இருக்கிறது.
கனாடாவின் பம்பார்டியர் நிறுவனம், ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கும் ரயில்களின் ஒரு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™