Tamil News | Online Tamil News |
- 'பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நேர்மை முக்கியம்' :அத்வானி மீண்டும் சலசலப்பு!
- ஜீன்ஸ், மிடி அணிய தடை மாணவியருக்கு அதிரடி உத்தரவு
- காந்தி படுகொலை எப்.ஐ.ஆர்., இருக்கா?
- சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்று துவக்கம்: நகரின் 376 ஆண்டு வரலாற்றில் மற்றொரு புதுமை
- துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்: குப்பை போடுபவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவு
- குட்டி தொழிற்சாலைகளுக்கு வரப்போகுது நிம்மதி: கெடுபிடி தொழிலாளர் சட்டங்கள் விரைவில் ரத்து
- 100 மாவட்டங்களில் பெண் விகிதம் குறைவு: பிரதமர் மோடி கவலை
- இலங்கை பிரதமராக ராஜபக் ஷே திட்டம்
- தமிழக காய்கறி, பழங்களுக்கு வந்த 'சோதனை': கேரளாவில் 'மொபைல் லேப்' அறிமுகம்
- 2 நாளில் பதில் தந்த துணை ஜனாதிபதி
- பண மோசடி குறித்து சீரான தகவல்: வங்கிகளுக்கு சி.பி.ஐ., வேண்டுகோள்
- வெடித்து சிதறியது 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட்
| 'பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நேர்மை முக்கியம்' :அத்வானி மீண்டும் சலசலப்பு! Posted: புதுடில்லி:'பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நேர்மை முக்கியம்' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ள கருத்து, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 'லலித் மோடி விவகாரத்திற்கு பொறுப்பேற்று, சுஷ்மா, வசுந்தரா ஆகியோர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்' என, காங்., போர்க்கொடி துாக்கியுள்ளது. ஐ.பி.எல்., கிரிக்கெட்டின் கமிஷனராக இருந்த லலித் மோடி, சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி வழக்கில் சிக்கினார். விசாரணைக்கு பயந்து, லண்டனுக்கு தப்பி ஓடினார். அவருக்கு, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜஸ்தான் முதல்வர் ... |
| ஜீன்ஸ், மிடி அணிய தடை மாணவியருக்கு அதிரடி உத்தரவு Posted: திருவனந்தபுரம்:கேரளாவில் உள்ள தனியார் பெண்கள் கல்லுாரியில், மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், குட்டை பாவாடை ஆகியவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மாணவியருக்கு சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே நடக்காவு என்ற இடத்தில், முஸ்லிம் கல்வி சமூகத்தின் சார்பில், பெண்கள் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லுாரியில், மாணவியர் ஜீன்ஸ் பேன்ட், குட்டை பாவாடை, டிஷர்ட், இறுக்கமான உடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கல்வி ஆண்டு முதல், முதலாமாண்டு படிக்கும் மாணவிகளுக்கு ... |
| காந்தி படுகொலை எப்.ஐ.ஆர்., இருக்கா? Posted: புதுடில்லி:'மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்., மற்றும் குற்றப்பத்திரிகை குறித்த விஷயங்களை தெரிவிக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தர விட்டு உள்ளது. தேசப்பிதா மகாத்மா காந்தி, 1948, ஜனவரி, 30ல், டில்லியில் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தை ஹேமந்தா பண்டா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு அளித்திருந்தார்.அதில், காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையான, எப்.ஐ.ஆர்., மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை வெளியிடும்படி உள்துறை ... |
| சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்று துவக்கம்: நகரின் 376 ஆண்டு வரலாற்றில் மற்றொரு புதுமை Posted: சென்னை மக்களின் நீண்டகால கனவான, மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்று துவங்குகிறது. மாநகரின், 376 ஆண்டுகால வரலாற்றில், மற்றொரு புதுமையாக இந்த சேவை அமைகிறது.தமிழக தலைநகரான சென்னை, பல்வேறு சிறப்புக்களை கொண்டது. இந்திய ரயில் போக்குவரத்தின் பிறப்பிடமே சென்னை நகரம் தான். 'டிராம்' வண்டியில் துவங்கி, மேம்பால ரயில் சேவை வரை, காலத்திற்கேற்ப பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட்டன. 'குளுகுளு' வசதியுடன்...: இந்த வகையில், நகரின், 376 ஆண்டுகால வரலாற்றில், மற்றொரு புதுமையாக, மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான, 'குளுகுளு' வசதியுடன் கூடிய, மெட்ரோ ரயில் ... |
| Posted: புதுடில்லி: சாலைகள், தெருக்களில் எச்சில் துப்புவோர், குப்பைகளை வீசி, சுற்றுப்புற சுகாதாரத்தை சீர்கெடுப்பவர்களுக்கு கண்டனம், அபராதம், சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்தை மத்திய கொண்டு வர உள்ளது. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின், 'துாய்மை இந்தியா' திட்டத்திற்கு சட்ட அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு மே மாதம், பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாளில், 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து, துடைப்பத்தை கையிலெடுத்தார். |
| குட்டி தொழிற்சாலைகளுக்கு வரப்போகுது நிம்மதி: கெடுபிடி தொழிலாளர் சட்டங்கள் விரைவில் ரத்து Posted: புதுடில்லி: 'உங்க கம்பெனியில, 40க்கும் குறைவான தொழிலாளிங்க தான் வேலை பார்க்கிறாங்கன்னா, 14 தொழிலாளர் சட்டங்களில் இருந்து, உங்க நிறுவனங்களுக்கு விடுதலை கிடைக்கப் போகுதுங்கோ!''இதனால என்ன லாபம்ன்னா, தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கு பயப்படாமல், நாம உண்டு; நம்ம வேலை உண்டுன்னு, ஒழுங்கா தொழில்களை கவனிக்க முடியுமுங்கோ!'ஆம், நிலம், வரி முறைகளில் மாற்றத்தை கொண்டு வர, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய அரசு, தொழிலாளர் சட்டங்களிலும் மாற்றத்தை கொண்டு வர உள்ளது.இதன்படி, கடுமையான, தொழிலாளர்களுக்கு விரோதமான பல சட்டங்கள் கிடப்பில் போடப்பட உள்ளன. ... |
| 100 மாவட்டங்களில் பெண் விகிதம் குறைவு: பிரதமர் மோடி கவலை Posted: புதுடில்லி: மாதம் ஒருமுறை, 'மன் கீ பாத்' என்ற பெயரில், மனதில் பட்டதை பேசுகிறேன் என்ற அர்த்தத்தில், வானொலியில் பேசுவதை, பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று அவர் ஆற்றிய, அரசியல் கலப்பற்ற, 20 நிமிட உரையின் முக்கிய அம்சங்களாவன: கண்டுக்காத துறை: மத்திய அரசில், 'ஆயுஷ்' என்றொரு துறை இருப்பதே, பலருக்கும் தெரியாது. ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை சட்டம், சித்தா மற்றும் ஓமியோபதி என்பதன் சுருக்கமான அந்த துறை தான், நாடு முழுவதும், பல கோடி பேரை, கடந்த 21ம் தேதி, சர்வதேச யோகா நாளில், யோகா செய்ய வைத்தது. இதன் மூலம், இலக்கு நிர்ணயித்தால், நாம் எதையும் ... |
| இலங்கை பிரதமராக ராஜபக் ஷே திட்டம் Posted: கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து, அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த ராஜபக் ஷே, மீண்டும் அரசியலில் குதிக்க திட்டமிட்டு உள்ளார். ''இலங்கை சுதந்திரா கட்சி (எஸ்.எல்.எப்.பி.,) அல்லது ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி (யு.பி.எப்.ஏ.,) கட்சியின் பிரதமர் வேட்பாளராக, ராஜபக் ஷே போட்டியிடுவார்,'' என, அவருக்கு நெருக்கமான குமார் வெல்கமா தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:இலங்கை அதிபர் சிறிசேன, எஸ்.எல்.எப்.பி., மற்றும் யு.பி.எப்.ஏ., கூட்டணி தலைவராக உள்ளார். அவருக்கு ராஜபக் ஷேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதில் விருப்பமில்லை. ஆனால், சிறிசேனவுடன் பேச, ஆறு ... |
| தமிழக காய்கறி, பழங்களுக்கு வந்த 'சோதனை': கேரளாவில் 'மொபைல் லேப்' அறிமுகம் Posted: கோவை: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் காய்கறி, பழங்களில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை, நடமாடும் ஆய்வகம் வாயிலாக பரிசோதனைக்கு உட்படுத்தும் புதிய நடைமுறையை, கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழக-கேரள எல்லையான வாளையாறில், ஏழு சோதனைச்சாவடிகள் வரிசையாக அமைந்துள்ளன. இவற்றை கடந்து செல்லும் சரக்கு வாகன டிரைவர்கள், கொண்டு செல்லப்படும் சரக்கு குறித்த தகவல், பற்றுச்சீட்டு(இன்வாய்ஸ்) மற்றும் இ-டிக்ளரேசன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.சோதனைச்சாவடி பணியாளர்கள், வாகனத்தில் இருக்கும் சரக்குக்கும், ... |
| 2 நாளில் பதில் தந்த துணை ஜனாதிபதி Posted: புதுடில்லி: சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்காத காரணத்தை கூறுமாறு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விக்கு, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, இரு நாட்களுக்குள் பதில் தந்து, அசத்தி உள்ளார். |
| பண மோசடி குறித்து சீரான தகவல்: வங்கிகளுக்கு சி.பி.ஐ., வேண்டுகோள் Posted: புதுடில்லி: வங்கிகளில் பண மோசடி, அளவுக்கு அதிகமான சொத்து குவிப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்களை சீரான வடிவத்தில் தர வேண்டும் என மத்திய புலானாய்வுத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவில் வங்கிகள் சம்பந்தப்பட்ட மோசடி வழக்குகளை விசாரிக்க, மோசடி செய்தவரின் தகவல்களை மத்திய உளவுத்துறை மற்றும் சி.பி.ஐ., அமைப்பினர் விசாரணை செய்து சேகரிக்கின்றனர். . அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்களைக் கொண்டு, மோசடி செய்தவரின் விவரங்களை அறிந்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும் ... |
| வெடித்து சிதறியது 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் Posted: மியாமி:விண்ணில் அமைக்கப்பட்டு வரும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு, ஏவப்பட்ட, அமெரிக்க தனியார் ராக்கெட், 'ஸ்பேஸ் எக்ஸ்' வெடித்துச் சிதறியது.பெரிய பங்களா அளவுக்கு, விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் அந்த ஆய்வு மையத்தில், விண்வெளி விஞ்ஞானிகள் சிலர், மாதக்கணக்கில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும், ஆய்வு மையத்திலிருந்து பொருட்களை, கருவிகளை பூமிக்கு கொண்டு வரவும், அமெரிக்காவின் ராக்கெட் விண்ஓடங்கள் பயன்படுத்தப்பட்டன.விபத்தில் சிதறியது; ஓய்வு கொடுக்கப்பட்டது போன்ற பல காரணங்களால், அமெரிக்க ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 29,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |