Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இலங்கை பார்லிமென்ட் கலைப்பு

Posted:

கொழும்பு:இலங்கை பார்லி மென்ட் நேற்றிரவு கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்தார்.

இலங்கை பார்லி.,க்கு 2016, ஏப்ரல் வரை பதவி காலம் இருந்தது. இப்போது, பார்லி., கலைக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் மாதம், தேர்தல் நடைபெற உள்ளது. சென்ற ஏப்ரலில், தான் அதிபராக பதவியேற்ற நுாறாவது நாள் விழாவில், சிறிசேன பேசியபோது, 'இலங்கை பார்லி.,க்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். அதற்கு முன், முக்கிய அரசியல் சட்ட திருத்தங்கள், தேர்தல் சீர்திருத்தங்கள் செய்யப்படும்' என அறிவித்திருந்தார்.
அதன்படி, இலங்கை அரசியல் சாசனத்தின், 19வது சட்ட ...

'வாட்ஸ் ஆப்'பில் சிக்கினார் சவுகான்? தேர்தல் விதிமுறையை மீறியதாக புகார்

Posted:

போபால்:இடைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்தால், பதவி தருவதாக, பா.ஜ., நிர்வாகி ஒருவரிடம், ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுவது போன்ற மொபைல் போன் உரையாடல்,'வாட்ஸ் ஆப்'பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கரோ சட்டசபை தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட, ராஜேஸ் சவுத்ரி சீட் கேட்டிருந்தார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை; அவர் அதிருப்தியில் இருந்தார். பா.ஜ., வேட்பாளருக்கு எதிராக, அவர் பிரசாரம் செய்ததாகவும் ...

அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம்: தனியார் கல்லூரிகள் ஆள் பிடிப்பதை தடுக்க சிறப்பு ஏற்பாடு

Posted:

தமிழகத்தில் உள்ள, 539 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்காக, சென்னை அண்ணா பல்கலையால் நடத்தப்படும் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தனியார் கல்லுாரிகள் ஆள் பிடிப்பதை தடுக்க, இடைத்தரகர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள் குளிக்கவும் தனி வசதி செய்யப்பட்டுள்ளது.*மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோரிடம் ஆசை வார்த்தை கூறி, தனியார் கல்லுாரிகளை தேர்வு செய்ய வைக்கும் இடைத்தரகர்கள், உள்ளே வர தடை விதிக்கப் பட்டுள்ளது.*அண்ணா பல்கலை ஊழியர்கள் அல்லது மாணவர்களின் ...

கங்கை நதி சுத்தப்படுத்தும் முயற்சியில் புதுமை: மாசுபடுத்தாத நிறுவனங்களுக்கு நிதியுதவி

Posted:

புதுடில்லி: புனித கங்கை நதியை சுத்தப்படுத்துவதை கனவு கொள்கையாக கொண்டுள்ள, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நதிக்கரையோரம் அமைந்துள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் ஆசிரமங்களின் கழிவுகள், நதியில் கலக்காமல் தடுக்கும் வகையில், தர நிர்ணய குறியீடு மற்றும் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை நதி, 2,525 கி.மீ., பல மாநிலங்கள் வழியாக பயணம் மேற்கொண்டு, வங்கதேச நாடு அருகே, வங்காள விரிகுடாவில் சேர்கிறது.

அரசு உத்தரவு:
கங்கை நதி பாயும், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் ...

லலித் மோடியை பிரியங்கா சந்தித்தாரா? அடித்துக்கொள்ளாத குறையாக கட்சிகள் மோதல்

Posted:

புதுடில்லி:ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடிக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர், மறைமுகமாக உதவினர் எனக் கூறி, இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, கடந்த சில நாட்களாக, காங்கிரசார் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவையும், பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ராவையும் தான் சந்தித்தது குறித்து, லலித் மோடி, 'டுவிட்டரில்' செய்தி வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார்.ஓட்டல் ஒன்றில், அவர்கள் இருவரையும் தற்செயலாக சந்தித்ததாக, லலித் மோடி ...

பங்கஜாவின் முறைகேட்டை அம்பலப்படுத்திய மகா., - காங்., பிரமுகருக்கு கொலை மிரட்டல்

Posted:

மும்பை: 'டெண்டர்' வெளியிடாமல், 206 கோடி ரூபாய் கொள்முதல்களுக்கு ஒப்புதல் பெற்ற, மகாராஷ்டிர, பா.ஜ., பெண் அமைச்சர் பங்கஜாவை அம்பலப்படுத்திய, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணமாக உள்ளது. போனில் மிரட்டியவர்கள், 'பங்கஜா மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று, வலியுறுத்தி உள்ளனர். இவ்வாறு, 40க்கும் மேற்பட்ட மிரட்டல் போன் அழைப்புகள், சச்சின் சவந்துக்கு வந்துள்ளதால், அவர் போலீசில் புகார் அளித்து, தனக்கு பாதுகாப்பு கேட்டுள்ளார்.இதையடுத்து, அவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பங்கஜா ...

கடை விரித்தும்கூட கொள்வாரில்லையே...: உதட்டை பிதுக்கியபடி நிற்கிறது காங்.,

Posted:

பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை, மேலும் தீவிரப்படுத்துவதற்கு, முக்கிய எதிர்க்கட்சிகளின் ஆதரவு இதுவரையில் கிடைக்காமலிருப்பது, காங்கிரசுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இவ்விஷயத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்திலும் அக்கட்சி இருக்கிறது.சுஷ்மா சுவராஜ், ஸ்மிருதி இரானி, வசுந்தரா ராஜே, பங்கஜா முண்டே போன்ற பெண் பிரபலங்களால், பா.ஜ.,வுக்கு, கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வசுந்தரா ராஜேவை மையமாக வைத்து கிளம்பியுள்ள குற்றச்சாட்டு, உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஊடகங்களும், ...

'வாட்ஸ் ஆப்'பில் வலம் வந்த அ.தி.மு.க., ஆதரவு பிரசாரம்

Posted:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, ஜெயலலிதாவை பாராட்டி, பெண்கள் பேசும் வீடியோ காட்சி, 'வாட்ஸ் ஆப்'பில் நேற்று பரவியது.ஆர்.கே.நகரில் நேற்று முன்தினம் பிரசாரம் முடிந்தது; இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, பெண்கள் பேசும் வீடியோ காட்சி, நேற்று வாட்ஸ் ஆப் மூலம் வேகமாக பரவியது.

வீடியோ பதிவில்...:
தன்னை ஐ.டி., ஊழியர் என, அறிமுகப்படுத்தி பேசும் உமா என்ற பெண், 'வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க, உரிய வழி வகுத்த, 'அம்மா'வுக்கு தான் எங்கள் ஓட்டு' என்கிறார். மற்றொரு வீடியோ பதிவில், ...

உலக பொருளாதாரத்திற்கு சோதனை: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை

Posted:

லண்டன்: ''சர்வதேச பொருளாதாரம், 1930ல் ஏற்பட்ட மிகப்பெரிய மந்தநிலையை போன்ற சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது,'' என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.லண்டன் வர்த்தக கல்வி மைய கருத்தரங்கில், அவர் மேலும் பேசியதாவது:வளர்ச்சிக்கான முயற்சிகளில், 1930ல் ஏற்பட்ட சோதனைகளை போன்ற நிலையை நோக்கி நாம் மெல்ல நகர்ந்து வருகிறோம். இது, தொழில்மயமான நாடுகள் அல்லது வளரும் நாடுகள் என்றில்லாத, உலகளாவிய பிரச்னை. இதற்கு சர்வதேச மத்திய வங்கிகள், தீர்வு காண்பதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.அதற்கான விவாதத்தை துவங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. சர்வதேச ...

ஜூலை 1ல் மெட்ரோ ரயில் :சேவை துவக்கம்?

Posted:

'சென்னை மெட்ரோ ரயில் சேவை துவக்க விழா, ஜூலை, 1ம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளது' என, தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது:மெட்ரோ ரயில் முதற்கட்ட சேவை துவக்க விழாவிற்கு, தேதியை முடிவு செய்யும்படி, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசு, ஜூன், 28, 30 மற்றும் ஜூலை, 1 ஆகிய மூன்று தேதிகளை, தேர்வு செய்து அனுப்பியது. தற்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும், 30ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளதாலும், ஜூலை, 1ம் தேதி, மெட்ரோ ரயில் சேவை துவக்க விழா நடைபெற அதிக ...

பயங்கரவாதிகள் அட்டகாசம்:50 பேர் படுகொலை

Posted:

டுனிஸ்:டுனிசியா, குவைத், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளில் நேற்று, பயங்கரவாதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாயினர்.டுனிசியாவில், சுற்றுலாப் பயணிகள் மீது, பயங்கரவாதி சரமாரியாக சுட்டதில், வெளிநாட்டவர் உட்பட, 27 பேர் உயிரிழந்தனர். வடஆப்ரிக்காவில், அல்ஜீரியா அருகே உள்ள இஸ்லாமிய நாடு, டுனிசியா. இந்நாட்டில், சோசி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கும், ஒரு ஓட்டலில் நேற்று, ஆயுதம் தாங்கிய மர்ம நபர் ஒருவன் நுழைந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில், ...

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு: முக்கியஸ்தர்களுக்கு மட்டும் 'கவனிப்பு?'

Posted:

'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு ஓட்டுக்கு பணம் தரப்படும்' என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஆனால் அ.தி.மு.க., தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் எம்.பி.க்கள் ஆகியோருக்கு தேர்தல் பிரசாரத்தின் போது உதவிக் கரம் நீட்டிய கட்சி சாராத ஆர்.கே.நகர் பகுதி முக்கியஸ்தர்களுக்கு நேற்று 'சிறப்பு கவனிப்பு' நடந்துள்ளது.கொடுங்கையூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவுடன் தலா 2000 ரூபாய் தரப்பட்டுள்ளதாகவும் வாக்காளர்களை ஓட்டுச் சாவடிக்கு அழைத்து வந்து ஓட்டு போட ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™