Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழக நகரங்கள் புது பொலிவு பெற வாய்ப்பு:திட்டத்தை துவக்கினார் பிரதமர் மோடி

Posted:

புதுடில்லி:மத்திய அரசின், நகர்ப்புற வீட்டு வசதித் துறையின் கனவுத் திட்டங்களான, புதிதாக இரண்டு கோடி வீடுகள் கட்டும், பிரதமர் அவாஸ் யோஜனா எனப்படும் அனைவருக்கும் வீடு திட்டம், 'ஸ்மார்ட் சிட்டி' மற்றும் 'அம்ருட்' திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கினார். இதில், தமிழகத்திற்கு, 12 ஸ்மார்ட் சிட்டிகளும், 33 அம்ருட் நகரங்களும் கிடைக்க உள்ளன. இதனால், தமிழக நகரங்கள் புதுப் பொலிவு பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட, 100, ஸ்மார்ட் சிட்டிகள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரிலான நகர்ப்புற, ...

குஜராத்தில் தொடரும் கனமழை; சாலைக்கு வந்த ஆசிய சிங்கங்கள்

Posted:

ஜூனாகட் : தாமதமாக துவங்கிய பருவமழை, நாட்டின் பல பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றி வருகிறது. குஜராத் மாநிலத்தில், பெய்து வரும் தொடர் கன மழைக்கு, இதுவரை, 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் : அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியதையடுத்து, குஜராத், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில், தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ராஜ்கோட்டில், 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, 16.7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக, குஜராத்தில், 51 பேர் உயிரிழந்துள்ளனர். ...

வெண்மை புரட்சியை ஏற்படுத்தவில்லை ஜெ., மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு

Posted:

சென்னை: 'தமிழகத்தில் வெண்மை புரட்சியை உருவாக்குவேன் என, முதல்வர் ஜெயலலிதா கூறினாலும், அதற்குரிய திட்டம் எதையுமே செயல்படுத்தவில்லை என்பது தான், உண்மை' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
பால், அனைவருக்கும் இன்றிமையாத உணவு; அதில், பல ஆண்டுகளாக கலப்படம் செய்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த செயலை செய்த குற்றவாளியான, அ.தி.மு.க., பிரமுகர் வைத்தியநாதன் ஜாமினில் வெளியே வந்துவிட்டார். பாலில் கலப்படம் செய்து, அவர் சம்பாதித்த பணத்தில், வாங்கி குவித்த சொத்துகளை, முடக்கவோ, கையகப்படுத்தவோ, அரசு இன்று வரை ...

ஐ.ஐ.டி., கவுன்சிலிங் நடவடிக்கைகள் ரத்து :தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் குளறுபடி

Posted:

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு குளறுபடியை தொடர்ந்து, இன்ஜி., படிப்புக்கான தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடுவதிலும், திடீர் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால், உயர்கல்வி நிறுவனங்களின் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்திய தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வில், வினாத்தாள் வெளியான புகாரைத் தொடர்ந்து, நுழைவுத்தேர்வை மீண்டும் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கையை, 'ஜாய்ன்ட் சீட் அலொக்கேஷன் அதாரிட்டி' என்ற, ஒருங்கிணைந்த இட ...

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக் கு மத்திய அரசு விருப்பம்

Posted:

உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், நாடு முழுவதும் பல வகை பாடத்திட்டங்கள் உள்ளன. இதில், உயர்கல்வி படிப்புகள் மட்டும், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகக் கட்டுப்பாட்டில் அமலாகின்றன. ஆனால், பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை, மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் தனித்தனியே இருக்கின்றன.
இந்நிலையில், நாடு ...

'கையெழுத்தெல்லாமா போட்டு தொலைப்பீர்கள்'

Posted:

லலித் மோடிக்கு, பயண ஆவணங்களை அளித்து உதவும்படி, பிரிட்டன் அரசிடம், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, கேட்டுக் கொண்ட விவகாரம், பெரிதாக வெடிக்கத் துவங்கியுள்ளது; இதை, காங்., ஊதி பெரிதாக்கி வருகிறது.
துணை நின்றன:இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக, பா.ஜ.,வின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:துவக்கத்தில், லலித் மோடிக்கு, சுஷ்மா சுவராஜ் உதவியதாக, செய்திகள் வெளியான போது, அவருக்கு ஆதரவாக கட்சியும், அரசும் துணை நின்றன. ஆனால், வசுந்தராவின் பெயர் அடிபட துவங்கியதும், அந்தளவுக்கு ஆதரவு குரல் எழவில்லை.
டில்லிக்கு வந்து, பா.ஜ., தலைவர் அமித் ஷாவை ...

ஆம் ஆத்மி அரசின் முதல் பட்ஜெட்

Posted:

புதுடில்லி:டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் முதல் பட்ஜெட், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. டில்லி சட்டசபையில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான மணிஷ் சிசோடியா, நடப்பு 2015 - 16ம் நிதியாண்டிற்கான, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:
இது, நாட்டின் முதல் சுயாட்சி பட்ஜெட். அடித்தட்டு மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. மதிப்புக் கூட்டு வரியை, பெருமளவு குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து கல்லுாரிகளிலும், இலவச, 'வை - பை' வசதி வழங்கப்படும்.
கடந்த பட்ஜெட்டை ...

'இந்தியா மீது போர்' என்ற முஷாரப் யோசனையை நிராகரித்த பெனாசிர்

Posted:

புதுடில்லி: இந்தியா மீது போர் தொடுக்க விரும்பிய, பாக்., ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப்பின் யோசனையை, மறைந்த பாக்., பிரதமர் பெனாசிர் பூட்டோ நிராகரித்தார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் துணை துாதராக, 1992 - 94 வரை, கராச்சியில் பணியாற்றியவர், ராஜிவ் டோக்ரா. இத்தாலி, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில், இந்திய துாதராக பணியாற்றிய இவர்,
'எல்லைகளில் ரத்தம்;
இந்தியா - பாக்., உறவுகள் - உட்பார்வை' என்ற நுாலை எழுதியுள்ளார். அதில் உள்ள சில
தகவல்கள்: கார்கில் போருக்கு முன்பாகவே, இந்தியா மீது போர் தொடுத்து, ஸ்ரீநகரை கைப்பற்றும் யோசனையை, பர்வேஸ் ...

நாட்டையே சிறையாக மாற்றியது 'எமர்ஜென்சி!'

Posted:

டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'எமர்ஜென்சி'யின், 40வது நினைவு தினம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சி, இந்தியாவின் இருண்ட காலங்களில் ஒன்று. ஜனநாயகத்தின் சக்தியைக் கண்டு பயந்த காங்கிரஸ், இந்தியாவை சங்கிலியால் பிணைத்தது; நாட்டையே சிறைச் சாலையாக ஆக்கியது. இதற்கெல்லாம் காரணம், காங்கிரசின் பதவி ஆசை தான்.ஜனநாயகம் இருந்தால் தான் நாடு வளர்ச்சி அடையும். ஜனநாயகக் கொள்கைகளையும், அதன் பாரம்பரியத்தையும் வலுப்படுத்துவதே எங்கள் பணி. இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சியை ...

திருமங்கலம் 'பார்முலா'வுக்கு ஆர்.கே.நகரில் தடை:ஜெ., முடிவால் அமைச்சர்கள் 'கிலி'

Posted:

இடைத்தேர்தல் நடைமுறை யில் திடீர் மாற்றமாக, ஆர்.கே.நகரில், வாக்காளர்களுக்கு, 'கவனிப்பு' இல்லை என, அ.தி.மு.க.,வில் முடிவாகி உள்ளது; இது, தொகுதியில் ஒரு மாதமாக ஓட்டு வேட்டையாடிய அமைச்சர்களுக்கு, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தங்கள் பகுதியில் ஓட்டுகள் குறைந்தால், தலைமையின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்ற அச்சமே, அதற்கு காரணம்.சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, 28 அமைச்சர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொருவருக்கும் பகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் வசிக்கும் மக்களை நாள் தவறாமல், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™