Tamil News | Online Tamil News |
- கூடங்குளத்தில் பராமரிப்பு பணி 2 மாதங்களுக்கு உற்பத்தி நிறுத்தம்
- ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு கவனிப்பு கிடைக்குமா? பிரசாரம் இன்று ஓய்வதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
- போதையில் வாகனம்: ரூ.10 ஆயிரம் அபராதம்!
- மதுபானம் அருந்தும் 'குடி'மகன்களுக்கு குஷி: 'சரக்கின்' தரத்தை நிர்ணயம் செய்ய முடிவு
- பார்லி., கேன்டீனில் சாப்பிடுவோர் 6,000 பேராம்...: உண்மை நிலை என்ன?
- ரூ.1,400 கோடி பங்குகளை மறைத்த சோனியா, ராகுல்
- இந்தியாவில் 'எமர்ஜென்சி' இனி வராது: அருண் ஜெட்லி உறுதி
- ஸ்மிருதி மீது கல்வித்தகுதி மோசடி புகார்!
- மகா., அமைச்சர் பங்கஜ முண்டே மீது ரூ.206 கோடி ஊழல் குற்றச்சாட்டு
- ஒரு பதிலுக்கு 1 லட்சம் ரூபாய் கேட்ட பொ.ப.துறை அதிகாரி: ஆர் .டி.ஐ.,யில் தகவல் கேட்ட மனுதாரருக்கு தலை கிறுகிறுப்பு
- இணையத்தில் தனி மனித டி.என்.ஏ தகவல்கள் சேகரிக்கும் திட்டம்
- 6 ஐ.ஐ.எம்.,களுக்கு அரசு ஒப்புதல்
| கூடங்குளத்தில் பராமரிப்பு பணி 2 மாதங்களுக்கு உற்பத்தி நிறுத்தம் Posted: திருநெல்வேலி: ''பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக, கூடங்குளம் முதலாவது அணு உலையின் மின் உற்பத்தி பணிகள், இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன,'' என, வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில், ஒவ்வொன்றும், 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் உள்ளன. இதில், முதலாவது அணு உலையில், தற்போது மின் உற்பத்தி நடந்து வருகிறது. இரண்டாவது அணு உலை, மின் உற்பத்திக்காக, தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், முதலாவது அணு உலையின் மின் உற்பத்தி, இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி ... |
| Posted: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை நிறைவு பெறுகிறது; இதையடுத்து தொகுதிக்குள் பணப் பட்டுவாடா துவங்கும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ளது.ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியின் வேட்பாளர் வெற்றி வேல் ராஜினாமா செய்ததால் அத்தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.அ.தி.மு.க., சார்பில் முதல்வர் ஜெயலலிதாவும் இ.கம்யூ., சார்பில் மகேந்திரனும் போட்டியிடுகின்றனர். மற்ற முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தலை புறக்கணித்ததால் தேர்தலில் விறுவிறுப்பு இல்லை. போட்டி பலமாக இல்லாத போதிலும் பதிவாகும் ஓட்டுகள் ... |
| போதையில் வாகனம்: ரூ.10 ஆயிரம் அபராதம்! Posted: புதுடில்லி: குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள், போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது போன்ற கடுமையான போக்குவரத்து விதிகளை, மத்திய சட்ட அமைச்சகம் இறுதி செய்துள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதின் கட்காரி தலைமையிலான, மத்திய சாலை போக்குவரத்து துறை, புதிய, சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வர முடிவு செய்து, வரைவு மசோதாவை தயாரித்தது.அந்த வரைவு மசோதாவில் பல கடுமையான கெடுபிடிகள் இருந்தன. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், அப்பாவிகள் உயிர்ப்பலியை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை ... |
| மதுபானம் அருந்தும் 'குடி'மகன்களுக்கு குஷி: 'சரக்கின்' தரத்தை நிர்ணயம் செய்ய முடிவு Posted: புதுடில்லி:'மேகி நுாடுல்ஸ்' விவகாரத்தை அடுத்து, நுகர்வோர் நலன்களை பாதுகாக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், மதுபான பிரியர்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், பீர், விஸ்கி போன்ற மதுபானங்களின் தரத்தையும் பரிசோதிக்க, விரைவில் களத்தில் இறங்க உள்ளது.இது நடைமுறைக்கு வந்தால், மதுபான பாட்டில்களுக்குள் பல்லி, கரப்பான் பூச்சி, வண்டு போன்றவை கிடக்கும் நிலைமாறும் என்பதுடன், தரமான, உடல்நலத்திற்கு தீங்கிழைக்காத மதுபானங்களும் விற்பனைக்கு வரும். |
| பார்லி., கேன்டீனில் சாப்பிடுவோர் 6,000 பேராம்...: உண்மை நிலை என்ன? Posted: பார்லி., கேன்டீனுக்கு வழங்கப்படும் மானியத்தால், எம்.பி.,க்கள் மட்டுமே பயனடைவதாககூறப்படும் குற்றச்சாட்டில், முழு உண்மை இல்லை. |
| ரூ.1,400 கோடி பங்குகளை மறைத்த சோனியா, ராகுல் Posted: புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா, அவர் மகனும், அக்கட்சியின் துணைத் தலைவருமான ராகுல், 'தி நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின், 1,400 கோடி ரூபாய் பங்குகளை தங்களுக்கு மாற்றிக் கொண்ட விவரத்தை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்காதது குறித்து, இருவருக்கும் வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்ப உள்ளது.நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில், இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்ட வேண்டும் என்பதற்காக, நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, காங்கிரஸ் கட்சி வெளியிட்டு வந்தது. அந்த பத்திரிகையை, 'அசோசியேடட் ஜேர்னல்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம் நடத்தி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன், அந்த பத்திரிகை ... |
| இந்தியாவில் 'எமர்ஜென்சி' இனி வராது: அருண் ஜெட்லி உறுதி Posted: பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 62, பத்து நாள் பயணமாக, அமெரிக்கா சென்றிருந்தார். அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களுக்கு சென்று, தொழிலதிபர்களை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.இந்தியா திரும்பும் முன் நேற்று, பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்களாவன: |
| ஸ்மிருதி மீது கல்வித்தகுதி மோசடி புகார்! Posted: புதுடில்லி: மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, ஸ்மிருதி இரானியின், 39, கல்விச் சான்று குறித்த வழக்கை விசாரணைக்கு ஏற்க, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட் நேற்று முன்வந்துள்ளது. இது, அந்த பெண் அமைச்சருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.'ஸ்மிருதி, தன் கல்வித்தகுதியை வேண்டுமென்றே மறைத்து மோசடியில் ஈடுபட்டார்' என தெரிவித்து, டில்லியைச் சேர்ந்த எழுத்தாளர், அஹமர் கான் என்ப வர், டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சில வாரங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதை விசாரித்த மாஜிஸ்திரேட், ஆகாஷ் ஜெயின், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் ... |
| மகா., அமைச்சர் பங்கஜ முண்டே மீது ரூ.206 கோடி ஊழல் குற்றச்சாட்டு Posted: மும்பை: மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜ முண்டே 206 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.மாநிலம் முழுவதும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் நொறுக்குத் தீனி, புத்தகம் உட்பட பல்வேறு பொருட்களை வாங்கியதில் அவர் முறைகேடு செய்துள்ளதாக, காங்., முன்னாள் முதல்வர் பிரித்வி ராஜ் சவான் குற்றம்சாட்டியுள்ளார்.சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மகாராஷ்டிர அரசு 3 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட ஒப்பந்தங்களை, மின்னணு முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.ஆனால் பங்கஜ ... |
| Posted: கோவை: ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக தகவல் கேட்ட விண்ணப்பதாரரை, 92 ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டச் சொல்லி, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர், மிரள வைத்துள்ளார். 'ஒரு பதிலுக்கு, ஒரு லட்சம் ரூபாயா' என, விண்ணப்பதாரர், தலை கிறுகிறுத்து, அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்.கோவையைச் சேர்ந்தவர் லோகநாதன்; வழக்கறிஞர். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான இவர், தமிழக ஆறுகளில் மணல் அள்ளுவது தொடர்பாக, பல்வேறு தகவல்களை வழங்குமாறு, பொதுப்பணித்துறை, அரசு சார்பு செயலரிடம் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த விவரங்களை, ... |
| இணையத்தில் தனி மனித டி.என்.ஏ தகவல்கள் சேகரிக்கும் திட்டம் Posted: வாஷிங்டன்: இணையத்தில் தனி மனித டி.என்.ஏ தகவல்களை சேகரிப்பதில் கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. டி.என்.ஏ எனப்படும் டிஆக்சி ரிபோ நியூக்ளிக் அமிலம், மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது. இதில் தனி மனிதனின் மரபு சார்ந்த விஷயங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கும் தனி மனித டி.என்.ஏ தகவல்கள் சேகரிப்பு, புதிய மருந்துகள் பற்றிய ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 2018 ல் டி.என்.ஏ தகவல்கள் சேமிப்பு 100 கோடி டாலர் வணிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.என்.ஏ தகவல்கள் ... |
| 6 ஐ.ஐ.எம்.,களுக்கு அரசு ஒப்புதல் Posted: புதுடில்லி: எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நற்செய்தியாக, நாட்டில் மேலும் ஆறு ஐ.ஐ.எம்., கல்வி மையங்களுக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டு, ஜூலை மாதம், பார்லிமென்டில் பட்ஜெட் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்திய மேலாண்மை கல்வி மையம் எனப்படும் ஐ.ஐ.எம்.,கள், ஐந்து நிர்மாணிக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிதாக ஆறு ஐ.ஐ.எம்.,கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்: ஆந்திராவில் விசாகப்பட்டினம், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 25,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |