Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அரசு ஐடிஐ-யில் சேர விண்ணப்பித்தோருக்கு ஜூன் 30இல் கலந்தாய்வு தொடக்கம்

Posted: 24 Jun 2015 01:19 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர விண்ணப்பித்தோருக்கு ஜூன் 30 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கழுகுமலை கோவிலில் சங்காபிஷேகம்

Posted: 24 Jun 2015 01:17 PM PDT

ஆனி உத்திரத்தை முன்னிட்டு, கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில், சங்காபிஷேக சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 24 Jun 2015 01:16 PM PDT

சாத்தான்குளம் அருள்தரும் தேவி அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேக கிரியாகால விழா புதன்கிழமை நடைபெற்றது.

வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் அவமரியாதை!

Posted: 24 Jun 2015 01:08 PM PDT

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் குருகுலப் பள்ளியில் ஜூன் 21-இல் நடந்த திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் ஓர் உண்மை பட்டவர்த்தனமாகப் போட்டு உடைக்கப்பட்டிருக்கிறது.  அங்கே ஆணித்தரமாக

கிடைத்தற்கரிய பொக்கிஷம்

Posted: 24 Jun 2015 01:07 PM PDT

இனக் கலவரத்தைத் தூண்டுவது எளிது. ஆனால், ஒற்றுமையை வளர்ப்பது கடினம். பாகிஸ்தான், கராச்சியில் மே மாதம் பேருந்தில் பயணித்த 43 இஸ்லாமியர்களை மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

வாயிற்படியில் ஆபத்து!

Posted: 24 Jun 2015 01:05 PM PDT

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த திங்கள்கிழமை தாக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த 6 பயங்கரவாதிகள் ஆப்கன் தேசியப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர்

நார்வே செஸ் போட்டி: ஆனந்த் - ஆரோனியன் மோதிய ஆட்டம் "டிரா'

Posted: 24 Jun 2015 01:00 PM PDT

நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் - லிவோன் ஆரோனியன் (ஆர்மேனியா) மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.

அறிமுகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்: "டி-20' ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி

Posted: 24 Jun 2015 12:59 PM PDT

நியூஸிலாந்துக்கு எதிரான டி-20 ஆட்டத்தில், அறிமுகப் பந்துவீச்சாளர்கள் அசத்தலாக விக்கெட்டுகளை கைப்பற்ற, 56 ரன்கள் வித்தியாசத்தில்

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதியில் ஜப்பான் அணி

Posted: 24 Jun 2015 12:57 PM PDT

மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு

கேரள ஆயுர்வேத விளம்பரத் தூதுவராக ஸ்டெஃபி கிராஃப் நியமனம்

Posted: 24 Jun 2015 12:56 PM PDT

கேரளத்தின் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தின் விளம்பர தூதுவராக முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் ஸ்டெஃபி கிராஃபை

கனடா ஓபன் பாட்மிண்டன்: சாய் பிரனீத், அஜய் ஜெயராம் வெற்றி

Posted: 24 Jun 2015 12:56 PM PDT

கனடா ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய் பிரனீத், அஜய் ஜெயராம், ஆனந்த் பவார் ஆகியோர்

சாய்னா நெவாலின் உடலியக்கப் பயிற்சிக்கு ரூ.9 லட்சம்

Posted: 24 Jun 2015 12:55 PM PDT

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின் உடலியக்கப் பயிற்சிக்கு மத்திய அரசு ரூ.9 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

ஏகான் சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் சானியா ஜோடி

Posted: 24 Jun 2015 12:54 PM PDT

ஏகான் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு

ஷிகர் தவண், தோனி அரை சதம்: கடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றி

Posted: 24 Jun 2015 12:53 PM PDT

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் ஷிகர் தவண், தோனி ஆகியோர் அரை சதம் விளாச, 77 ரன்கள் வித்தியாசத்தில்

பால் உற்பத்தியில் சுகாதாரம் பேணுவது எப்படி?

Posted: 24 Jun 2015 12:51 PM PDT

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் அதிகபட்ச கொள்முதலை

பீர்க்கங்காய் குறைந்த முதலீட்டில் அதிக லாபம்!

Posted: 24 Jun 2015 12:50 PM PDT

குறைந்த முதலீட்டில் பீர்க்கங்காய் பயிரிட்டு, ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் பெற்று அதிக லாபம் ஈட்ட முடியும் என

சிரியா: புராதன நகரக் கல்லறைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அழிப்பு

Posted: 24 Jun 2015 12:49 PM PDT

சிரியாவிலுள்ள புராதன பால்மைரா நகரில் பழைமை வாய்ந்த இரு கல்லறைக் கட்டடங்களை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் அழித்தனர்.

நைஜீரிய கிராமங்களில் போகோ ஹராம் தாக்குதல்; 42 பேர் சாவு: சிறுமி தற்கொலைத் தாக்குதலில் மேலும் 10 பேர் பலி

Posted: 24 Jun 2015 12:48 PM PDT

நைஜீரியாவின் இரு கிராமங்களில் 42 பேரை போகோ ஹராம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.

அனுப்பிய மின்னஞ்சலை ரத்து செய்ய "ஜிமெயில்'புதிய வசதி!

Posted: 24 Jun 2015 12:47 PM PDT

தவறுதலாக அனுப்பிவிட்ட மின்னஞ்சல்களை உடனடியாக ரத்து செய்வதற்கான புதிய வசதி, புகழ்பெற்ற "ஜிமெயில்' மின்னஞ்சல் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது.

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் பலி

Posted: 24 Jun 2015 12:46 PM PDT

மெக்ஸிகோ நாட்டில் ஆதரவற்ற முதியோருக்கான இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில், அதில் தங்கியிருந்த

பிரான்ஸ் அதிபர்களை வேவு பார்த்தது அமெரிக்கா: "விக்கிலீக்ஸ்' வெளியிட்ட அறிக்கையால் சர்ச்சை

Posted: 24 Jun 2015 12:46 PM PDT

பிரான்ஸின் கடைசி அதிபர்கள் மூவருடைய தொலைபேசி உரையாடலகளை அமெரிக்க உளவு அமைப்பான என்எஸ்ஏ ஒட்டுக் கேட்டதாக

பயங்கரவாதி லக்விக்கு எதிராக சாட்சியம்: உறுதிப்படுத்தினார் பாகிஸ்தான் நீதிபதி

Posted: 24 Jun 2015 12:44 PM PDT

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு எதிரான வாக்குமூலங்களை பதிவு செய்தது

உத்தரகண்டில் நில அதிர்வு

Posted: 24 Jun 2015 12:43 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் பகுதியை மையமாகக் கொண்டு, புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது

பிரணாப் இன்று மகாராஷ்டிரம் பயணம்

Posted: 24 Jun 2015 12:43 PM PDT

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிர மாநிலத்துக்கு வியாழக்கிழமை வருகை தர உள்ளார்.

"உயர் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியில் குறுக்கிடுகிறது மத்திய அரசு'

Posted: 24 Jun 2015 12:41 PM PDT

நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியில் மத்திய அரசு குறுக்கிடுவதாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்

உணவுப் பொருள் பரிசோதனைக்கு நடமாடும் சோதனைக் கூடம்: கேரள அரசு

Posted: 24 Jun 2015 12:41 PM PDT

அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் உணவுப் பொருள்களை சோதனை செய்ய நடமாடும் பரிசோதனைக் கூடங்களை அமைக்க

பாஜக எம்.பி. திலீப் சிங் பூரியா மறைவு

Posted: 24 Jun 2015 12:40 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லாம் - ஜாபுவா மக்களவைத் தொகுதியின் எம்.பி.யும், பாஜக மூத்த தலைவருமான திலீப் சிங் பூரியா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

Posted: 24 Jun 2015 12:40 PM PDT

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளை சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

மனிதக் கழிவுகளை அகற்றுவோரை கணக்கெடுக்க முயற்சி: மத்திய அரசு

Posted: 24 Jun 2015 12:39 PM PDT

நாட்டில் மனிதக் கழிவுகளை அகற்றுவோர் எத்தனை பேர் என்ற விவரத்தை மாநில அரசுகளிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கையில்

4 நக்ஸல் ஆதரவாளர்கள் கைது

Posted: 24 Jun 2015 12:38 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில், சுரங்கம் ஒன்றில் வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தியதில் தொடர்புடையதாக நக்ஸல் ஆதரவாளர்கள் 4 பேரை

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 24 Jun 2015 12:38 PM PDT

கோவில்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

நிலம், தொழிலாளர் சட்டங்கள், வரிவிதிப்பில் சீர்திருத்தம் அவசியம்: அருண் ஜேட்லி

Posted: 24 Jun 2015 12:38 PM PDT

"இந்தியாவில் தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதற்காகவும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் நிலம், தொழிலாளர் சட்டங்கள்,

அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 24 Jun 2015 12:37 PM PDT

தூத்துக்குடி மாவட்ட கிராம வாழ் மக்கள் நலச் சங்கம் சார்பில் மாவட்ட அளவில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்  எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சாயர்புரம் போப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

சாத்தான்குளத்தில் 3ஆவது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Jun 2015 12:37 PM PDT

சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் 3ஆவது நாளாக புதன்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வசுந்தரா ராஜேவின் லண்டன் பயணம் ரத்து

Posted: 24 Jun 2015 12:37 PM PDT

ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு உதவியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே,

கட்கரி சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு

Posted: 24 Jun 2015 12:37 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது,

சுஷ்மா நேபாளம் பயணம்

Posted: 24 Jun 2015 12:34 PM PDT

நேபாளத் தலைநகர் காத்மாண்டில் வியாழக்கிழமை நடைபெறும் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக, வெளியுறவுத் துறை அமைச்சர்

தோமரின் பதிவு எண் அடங்கிய விண்ணப்ப மனு மாயம்

Posted: 24 Jun 2015 12:33 PM PDT

தில்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமரின் கல்விச் சான்றிதழ் தொடர்பாக ஆய்வு செய்துவரும் தில்லி போலீஸார்,

கடலில் மூழ்கிய கப்பல்: 14 பேர் மீட்பு

Posted: 24 Jun 2015 12:32 PM PDT

டாமன் தெற்குப் பகுதியில் கடலில் மூழ்கிய கப்பலை சமிக்ஞை மூலம் கண்டறிந்து கப்பலில் இருந்த 14 பேரை கடற்படையினர் மீட்டனர்.

வதோதரா: மேம்பால மேற்கூரை மீது சூரிய மின்தகடு அமைப்பு

Posted: 24 Jun 2015 12:32 PM PDT

குஜராத் மாநிலம், வதோதராவில் மேம்பாலத்தின் மீது சூரிய மின்தகடுடன் கூடிய மேற்கூரை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சுஷ்மா, ஸ்மிருதி பதவி விலகத் தேவையில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

Posted: 24 Jun 2015 12:30 PM PDT

லலித் மோடி விவகாரத்துக்காக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், போலி கல்விச் சான்றிதழ் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்காக

மதுபானங்களுக்கும் தரநிர்ணயம்: மத்திய அரசு முடிவு

Posted: 24 Jun 2015 12:29 PM PDT

மகாராஷ்டிர அமைச்சர் மீது ஊழல் புகார்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை

Posted: 24 Jun 2015 12:28 PM PDT

மகாராஷ்டிர மாநில மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பங்கஜா முண்டே ரூ.206 கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக

மூத்த தலைவர்களைப் புறக்கணிக்கிறது மோடி அரசு: யஷ்வந்த் சின்ஹா வேதனை

Posted: 24 Jun 2015 12:27 PM PDT

"மோடி தலைமையிலான மத்திய அரசு, 75 வயதைக் கடந்த தலைவர்களுக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாகக் கருதி புறக்கணிக்கிறது;

3 முக்கிய திட்டங்களை இன்று தொடக்கி வைக்கிறார் மோடி

Posted: 24 Jun 2015 12:26 PM PDT

மத்திய அரசின் முக்கிய நகர்ப்புற திட்டங்களான நவீன நகரங்கள் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், நகரங்களை புனரமைப்பதற்கான

அவசரநிலையை மீண்டும் கொண்டுவர வாய்ப்பில்லை

Posted: 24 Jun 2015 12:25 PM PDT

இந்தியாவில் மீண்டும் அவரசநிலையைக் கொண்டுவர வாய்ப்பில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

புதிதாக தொடங்கப்பட்ட திருப்பதி, பாலக்காடு ஐ.ஐ.டி.க்களில் மாணவர் சேர்க்கை

Posted: 24 Jun 2015 12:24 PM PDT

திருப்பதி, பாலக்காடு ஆகிய இடங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஐஐடி-க்களில் தலா 4 துறைகளின் கீழ் மொத்தம் 120 இடங்களுக்கு,

கூடங்குளத்தில் 60 நாள்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தம்

Posted: 24 Jun 2015 12:22 PM PDT

வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக, கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி 60 நாள்களுக்கு

சென்னையில் மூன்று இடங்களில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் சோதனை

Posted: 24 Jun 2015 12:22 PM PDT

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் சார்பில் சென்னையில் மூன்று இடங்களில் ஸ்மார்ட் மீட்டர்களின் சோதனை தொடங்கியது.

சமையல் எரிவாயு உருளை நேரடி மானியத் திட்டம்: விண்ணப்பிக்காதவர்களுக்கு ஜூன் 30 வரை அவகாசம்

Posted: 24 Jun 2015 12:21 PM PDT

சமையல் எரிவாயு உருளை நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்கள் வரும் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என,

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

Posted: 24 Jun 2015 12:19 PM PDT

வேப்பனஅள்ளி அருகே மரக் கிளையை வெட்டும்போது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்த விவசாயி உயிரிழந்தார்.

ஆர்.கே.நகர் பிரசாரம்: சரத்குமாருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 24 Jun 2015 12:18 PM PDT

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் சரத்குமார் பிரசாரம் செய்ய தடை கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை

5 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்

Posted: 24 Jun 2015 12:18 PM PDT

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 5 நகரங்களில் புதன்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது.

செக்கானூர் கதவணை மதகு உடைந்தது: மின் உற்பத்தி பாதிப்பு

Posted: 24 Jun 2015 12:17 PM PDT

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கதவணை மதகு உடைந்ததால் மின் உற்பத்தி தடைபட்டது.  மேட்டூர் அணையிலிருந்து க

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில்

Posted: 24 Jun 2015 12:16 PM PDT

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி, தேனி, கோவையில் பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted: 24 Jun 2015 12:15 PM PDT

தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக

சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

Posted: 24 Jun 2015 12:14 PM PDT

சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் வேகமாக நிரம்பி வரும் அணைகள்

Posted: 24 Jun 2015 12:14 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகள் முழுக் கொள்ளளவை எட்டி வருவதால், குழித்துறை தாமிரவருணி ஆற்றின் கரையோரப் பகுதி

சென்டாக்: தலித் பழங்குடி இன மாணவர்கள் 27ஆம் தேதி கலந்தாய்வில் பங்கேற்கலாம்

Posted: 24 Jun 2015 12:13 PM PDT

தலித் பழங்குடியின மாணவர்கள் வரும் 27ஆம் தேதி, சென்டாக் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என, சென்டாக் தலைவர் ராகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 37.87 லட்சம்

Posted: 24 Jun 2015 12:11 PM PDT

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 37.87 லட்சம் செலுத்தியிருந்தனர்.

ஆந்திர துப்பாக்கிச்சூடு சம்பவம்; மேலும் பலரிடம் விசாரணை தேவை: சிறப்புப் புலனாய்வுக் குழு ஐ.ஜி. பேட்டி

Posted: 24 Jun 2015 12:10 PM PDT

ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக அம்மாநில

பேரறிவாளனுக்கு நோய்த் தொற்றை கண்டறிய புதிய பரிசோதனை

Posted: 24 Jun 2015 12:09 PM PDT

பேரறிவாளனுக்கு நோய்த் தொற்றை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை வேண்டும்: ஹிந்து அமைப்பினர் காவல் ஆணையரிடம் மனு

Posted: 24 Jun 2015 12:08 PM PDT

மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, 9 ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள்,

சென்னை ஐஐடி-யில் 200 பேராசிரியர் பற்றாக்குறை; படிப்படியாக நிரப்பப்படும்: இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி

Posted: 24 Jun 2015 12:07 PM PDT

சென்னை ஐஐடி-யில் இப்போது 200 முதல் 240 பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது. இந்த காலிப் பணியிடங்கள் படிப்படியா

போர்ப்படையினர் ஊதியத்துக்காக தனி ஆணையம்: அன்புமணி வலியுறுத்தல்

Posted: 24 Jun 2015 12:06 PM PDT

போர்ப்படையினரின் ஊதியம் தொடர்பான விஷயங்களைத் தீர்மானம் செய்வதற்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று

நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம்

Posted: 24 Jun 2015 12:05 PM PDT

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நடராஜமூர்த்தியும்,

ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வு: வெளி நபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற உத்தரவு

Posted: 24 Jun 2015 12:04 PM PDT

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் முடிகிறது. அதன்பிறகு, வெளி ஊர்களைச் சேர்ந்த

சீரான குடிநீர் கோரி தூத்துக்குடியில் காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Posted: 24 Jun 2015 12:03 PM PDT

தூத்துக்குடியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் புதன்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒரு கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திருமாவளவன் வலியுறுத்தல்

Posted: 24 Jun 2015 12:03 PM PDT

இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

கோவில்பட்டி தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது

Posted: 24 Jun 2015 12:02 PM PDT

கோவில்பட்டி நூற்பாலை தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

உப்பூர் அனல் மின் நிலைய திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகளை செப்.9-க்குள் சமர்ப்பிக்கலாம்

Posted: 24 Jun 2015 12:02 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,600 மெகாவாட் திறனுள்ள உப்பூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகளை

எம்.பி.பி.எஸ்.: இன்று கலந்தாய்வு நிறைவு: 2,173 மாணவர்கள் தேர்வு

Posted: 24 Jun 2015 12:01 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 25) நிறைவடைகிறது.

"மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த வேண்டும்'

Posted: 24 Jun 2015 12:01 PM PDT

கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 2ஆவது மாநில மாநாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.5ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

களியக்காவிளை பேரூராட்சியில் தண்ணீர் பிடிப்பதில் முறைகேடு: பிளாஸ்டிக் குழாய்கள் பறிமுதல்

Posted: 24 Jun 2015 12:00 PM PDT

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிகளில் பொது குடிநீர் குழாய்களிலிருந்து முறைகேடாக தண்ணீர் பிடிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் குழாய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தில் குறையிருந்தால் புகார் தெரிவிக்கலாம்

Posted: 24 Jun 2015 12:00 PM PDT

நியாயவிலைக் கடைகள் மூலமான அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால், அது குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி.

பி.எம்.எஸ். தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எம்.எஸ். தொழிற்சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சியில் பட்டாசு லாரி தீ விபத்து

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி இருந்து பட்டாசு ஏற்றிக்கொண்டு கொல்கத்தாவுக்கு சென்ற லாரி திருச்சி அருகே புதன்கிழமை அதிகாலை தீ விபத்துக்குள்ளானது.

அங்கன்வாடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் அங்கான்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சேவைகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவாண் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

இருசக்கர வாகன ஓட்டுநர்களும், பின்னால் அமர்ந்து  பயணம் செய்பவர்களும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பத்மநாபபுரம் வட்டார போக்குவரத்து போலீஸார் மற்றும் திருவிதாங்கோடு முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி தக்கலை பகுதியில் நடைபெற்றது.

கருங்கலில் சி.ஐ.டி.யூ. ஆலோசனைக் கூட்டம்

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

கன்னியாகுமரி மாவட்ட சி.ஐ.டி.யூ.வின் மோட்டார் தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் கருங்கலில் நடைபெற்றது.

"மத்திய பாடத் திட்டத்துக்கு இணையாக மாநிலக் கல்வியில் மாற்றம் தேவை'

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

மத்திய பாடத் திட்டத்துக்கு இணையாக மாநிலத்தில் கல்வியை மாற்றியமைக்க வேண்டும் என அகில இந்திய கிறிஸ்தவ சமூக பொருளாதார முன்னேற்ற கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கைவினைக் கலைஞர்களுக்கு மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம்

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

மத்திய அரசு சார்பில் கைவினைக் கலைஞர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மத்திய கைவினைப் பொருள்கள் உதவி இயக்குநர் எல்.பாலு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர்,தலைமை காவலர் மீது தாக்குதல்

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

திருச்சி புத்தூர் அருகே உய்யக்கொண்டான் கரையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை தாக்கிய கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.

திருவட்டாறு: ஆதிகேசவப் பெருமாள் திருவுருவத்தில் கடுசர்க்கரை சாந்து பூசும் பணி தொடக்கம்

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில், பெருமாளின் திருவுருவத்தின் மீது கடுசர்க்கரை சாந்து பூசும் சிறப்புத் திருப்பணி புதன்கிழமை தொடங்கியது.

குமரி கடற்கரையில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளதால் கடற்கரைப் பகுதிகளில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதனைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குமாரபுரத்தில் இன்று மனுநீதி நாள்

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

குமாரபுரம் பேரூராட்சியில் வியாழக்கிழமை (ஜூன் 25) மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார்.

"நவீன கவிதை': கருத்தரங்கம்

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

சமூக, இலக்கியப் பண்பாட்டு அமைப்பாகிய அனக்கம் சார்பில் நவீன கவிதை குறித்த மாலைநேரக் கருத்தரங்கம் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்றது.

சிற்றாறு பட்டணம் கால்வாயில் கடைவரம்பு பகுதியை தூர் வாரி தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தல்

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

சிற்றாறு பட்டணம் கால்வாயின் கடைவரம்பு பகுதி வரை முறையாக தூர் வாரி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கிள்ளியூர் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் வலியுறுத்தியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் அரசு பார்வையற்றோர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு திறன்வளர் பயிற்சி

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்பக் கழகம் சார்பில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவாண் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சாஸ்த்ரா பல்கலை.யில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

Posted: 24 Jun 2015 11:59 AM PDT

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.

வேலூரில் உலக வங்கி குழுவினர் ஆய்வு

Posted: 24 Jun 2015 11:58 AM PDT

வேலூர் மாநகராட்சியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து அறிவதற்காக உலக வங்கியின் சார்பில் 8 பேர் அடங்கிய குழு புதன்கிழமை வருகை தந்தது.

"மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து பாஜக போராடும்'

Posted: 24 Jun 2015 11:58 AM PDT

மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்துப் போராடும் களத்தூர் கிராம மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி துணையாக இருக்கும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

மரம் விழுந்து இறந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Posted: 24 Jun 2015 11:58 AM PDT

ஆம்பூர் தனியார் பள்ளியில் மரம் விழுந்து இறந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.

பி.எட். இரண்டாண்டு படிப்பை அமல்படுத்த அரசு உத்தரவு

Posted: 24 Jun 2015 11:57 AM PDT

நிகழாண்டிலேயே பி.எட். இரண்டாண்டு படிப்பை துவக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரிய கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறைச் செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார்.

செம்மர வழக்கு: டிஎஸ்பி ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted: 24 Jun 2015 11:57 AM PDT

செம்மரக் கடத்தல் வழக்கில் கைதான வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலுவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சாகித்ய அகாதெமி விருது: மீனாட்சிசுந்தரம், செல்லகணபதி, வீரபாண்டியன் தேர்வு

Posted: 24 Jun 2015 11:57 AM PDT

சாகித்ய அகாதெமியின் மொழி இலக்கியத்துக்கான விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த தமிழறிஞர் கா. மீனாட்சிசுந்தரம், யுவ புரஸ்கார் விருதுக்கு

எம்.பி. தத்தெடுத்த கிராமத்தில் முழுமையான அஞ்சல் சேமிப்புத் திட்டம்

Posted: 24 Jun 2015 11:57 AM PDT

அரக்கோணம் எம்.பி. கோ.அரி தத்தெடுத்த தண்டலம் ஊராட்சியில் முழுமையான கிராமப்புற அஞ்சல் சேமிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரக்கோணம் கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அ.நடராசன் தெரிவித்துள்ளார்.

தரமற்ற தலைக்கவசம் விற்றால் நடவடிக்கை

Posted: 24 Jun 2015 11:57 AM PDT

வேலூர் மாவட்டத்தில் தரமற்ற தலைக்கவசம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி எச்சரிக்கை விடுத்தார்.

2-ஆவது நாளாக சாலை மறியல்: 75 பேர் கைது

Posted: 24 Jun 2015 11:56 AM PDT

வேலூர், சின்னஅல்லாபுரம் பகுதியில் விபத்து ஏற்படுத்தி மாணவர் சாவுக்கு காரணமான டிராக்டர் ஓட்டுநரை கைது செய்யக் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவர்களில் 75 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™