Tamil News | Online Tamil News |
- விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒரே நாளில் பிடிபட்ட தங்கம் 63 கிலோ: விமானத்தில் வந்த தமிழகத்தைச் சேர்ந்த 56 பயணிகளிடம் விசாரணை
- கேரளா, கர்நாடகா மாநிலங்களின் புதிய அணை திட்டங்கள் 'டமால்'
- தாமதமாக வந்தால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
- மத்திய அரசு பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயம்: கூடுதல் பாடச் சுமையாக இருக்காது என உறுதி
- ஜி.எஸ்.டி.,க்கு 'வினையாக' மாறும் லலித் மோடி? ராஜ்யசபாவை நினைத்து கையை பிசையும் பா.ஜ.,
- யோகா பயிற்சியும் துணை ஜனாதிபதி சர்ச்சையும்...
- கம்யூனிஸ்டுகள் பாராட்டி உள்ளனர்: ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிரசாரம்
- கருணாநிதி பெயர் இருந்த பாட புத்தகங்கள் வாபஸ்
- கர்நாடகா கூடுதலாக கொடுத்த 35 டி.எம்.சி., கழிவுநீரா? விவசாயிகள் சந்தேகம்
- இந்திய செவிலியர்களை விரட்டும் இங்கிலாந்து
| Posted: சென்னை: வீட்டு உபயோகப் பொருட்களில் மறைத்து, 63 கிலோ தங்கத்தை எடுத்து வந்த, தமிழகத்தைச் சேர்ந்த, 56 பேர், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் சிக்கினர். அவர்களிடமிருந்த தங்கத்தை பறிமுதல் செய்த, வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், தங்கம் கடத்தலைத் தடுக்க, கடும் கெடுபிடிகள் காட்டப்படுவதால், விசாகப்பட்டினம் விமான நிலையம் மூலமாக, தங்கத்தைக் கடத்த முற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து, 'டிவி' உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் ... |
| கேரளா, கர்நாடகா மாநிலங்களின் புதிய அணை திட்டங்கள் 'டமால்' Posted: தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், புதிய அணைகளை கட்ட திட்டமிட்டுள்ள, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு, சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.காவிரியின் குறுக்கே, மேகதாது மற்றும் ராசி மணல் என்ற இடங்களில், புதிய அணைகள் கட்ட, கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, சர்வதேச ஒப்பந்தம் கோரும் நடவடிக்கை துவங்கி உள்ளது. இதற்காக, கர்நாடக அரசு, 20 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதேபோல், முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆய்வுப்பணிக்கு ... |
| தாமதமாக வந்தால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை Posted: புதுடில்லி: 'அலுவலகத்துக்கு தொடர்ந்து தாமதமாக வந்தால், கடும் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க வேண்டிஇருக்கும்' என, ஊழியர்களுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் சார்பில், அனைத்து அமைச்சக அலுவலகங்களுக்கும் கடிதங்கள் எழுதப்பட்டு உள்ளன. |
| மத்திய அரசு பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயம்: கூடுதல் பாடச் சுமையாக இருக்காது என உறுதி Posted: புதுடில்லி: மத்திய அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ''யோகா பாடம், மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்காது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி உறுதி அளித்துள்ளார்.கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவதோயா வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில், யோகா கலையை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பாடத் திட்டங்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, டில்லியில் நேற்று வெளியிட்டார். ... |
| ஜி.எஸ்.டி.,க்கு 'வினையாக' மாறும் லலித் மோடி? ராஜ்யசபாவை நினைத்து கையை பிசையும் பா.ஜ., Posted: காங்கிரசின் கடும் எதிர்ப்பு, லலித் மோடி விவகாரத்தால், ஜி.எஸ்.டி., மசோதா, வரும் குளிர்கால கூட்டத்தொடரிலும், முட்டுக்கட்டையை சந்திப்பதற்கான சூழல் உருவாகி உள்ளது.மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில், மிக முக்கியமானதாக கருதப்படுவது, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும், ஜி.எஸ்.டி., மசோதா. வரிவிதிப்பை, நாடு முழுவதும் சீராக நிர்ணயிப்பதற்காக, கொண்டு வரப்பட்ட இந்த மசோதா, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு, ராஜ்யசபாவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.ராஜ்யசபாவில், மத்திய அரசுக்கு போதிய பலம் இல்லை என்பதால், ... |
| யோகா பயிற்சியும் துணை ஜனாதிபதி சர்ச்சையும்... Posted: புதுடில்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நேற்று, பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் பிரம்மாண்ட யோகா பயிற்சி நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர். துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து, பா.ஜ., பொதுச் செயலர் ராம் மாதவ், சமூக வலைதளமான, 'டுவிட்டர்' மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்; இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தன்னுடைய டுவிட்டர் பதிவுகளை ராம் மாதவ் அழித்துள்ளார். இதுகுறித்து, பல்வேறு தரப்பினரும் கருத்து ... |
| கம்யூனிஸ்டுகள் பாராட்டி உள்ளனர்: ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிரசாரம் Posted: சென்னை: ''இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள், தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி உள்ளனர்,'' என, ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்த, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.அ.தி.மு.க., சார்பில், ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதா நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:இந்த இடைத்தேர்தல், நீங்கள் விரும்பாதது. பொதுத் தேர்தலுக்கு, ஓராண்டே உள்ள நிலையில், இத்தேர்தல் நடைபெறுகிறது.அரசியல் சதியால் போடப்பட்ட வழக்கால், நான் இடையில், சில காலம் முதல்வராக இருக்க முடியாத நிலை ஏற்பட்டது; அதனாலே, இந்த இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்த தேர்தல், இடையூறு ... |
| கருணாநிதி பெயர் இருந்த பாட புத்தகங்கள் வாபஸ் Posted: தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பெயர் இடம் பெற்ற, பிளஸ் ௧பொருளியல் பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு பாடநுால் கழக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்ட புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இப்பாடப் புத்தகத்தின் முகவுரையில், கருணாநிதி மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதை சமீபத்தில், பள்ளிக்கல்வி அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்து, பாடநுால் கழக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 'பாடத்திட்டம் மாறாததால், புத்தகமும் மாறவில்லை' என, ... |
| கர்நாடகா கூடுதலாக கொடுத்த 35 டி.எம்.சி., கழிவுநீரா? விவசாயிகள் சந்தேகம் Posted: காவிரி நடுவர் மன்றம் நிர்ணயித்த அளவைக் காட்டிலும், கடந்த ஆண்டு, 35 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா கூடுதலாக திறந்துள்ளது. இதில், பெரும்பகுதி கழிவுநீராக இருக்கலாம் என, விவசாயிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். கடந்த ஆண்டு, ஜூன் முதல், செப்., வரை, 142 டி.எம்.சி., காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில், 134 டி.எம்.சி., மட்டுமே கிடைத்திருக்க வேண்டும். அதன்பின், அக்., முதல், டிச., வரை, 64 டி.எம்.சி., தண்ணீர் வந்துள்ளது. ஆனால், 45 டி.எம்.சி., மட்டுமே கிடைத்திருக்க வேண்டும்.மொத்தத்தில், கடந்த நீர் ஆண்டான, 2014 ஜூன் முதல், 2015 ஏப்ரல் வரை, 35 டி.எம்.சி., கூடுதல் நீரை ... |
| இந்திய செவிலியர்களை விரட்டும் இங்கிலாந்து Posted: லண்டன்: இங்கிலாந்தின் புதிய குடியேற்ற சட்ட விதிகள் காரணமாக, இந்தியா மற்றும் ஐரோப்பா அல்லாத மற்ற நாடுகளை சேர்ந்த, 30 ஆயிரம் செவிலியர்கள் வேலையிழந்து, தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசின் தேசிய சுகாதார சேவை திட்டத்தின் கீழ், அயல்நாடுகளில் இருந்து ஏராளமானோர், செவிலியர் பணியில் அமர்த்தப்படுகின்றனர். உள்நாட்டில், செவிலியர் பயிற்சி இடங்கள் குறைக்கப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து, செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டை அடுத்து, இந்தியாவில் இருந்து தான், ஆண்டுக்கு, 30 ஆயிரம் செவிலியர்கள், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 23,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |