Tamil News | Online Tamil News |
- 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை மாற்ற 9 நாள் அவகாசம்:வங்கிகளில் டிபாசிட் செய்யலாம் என ரிசர்வ் வங்கி யோசனை
- உலகம் முழுவதும் யோகா தின கொண்டாட்டம் பிரம்மாண்டம்: இந்தியாவில் குக்கிராமங்களிலும் உற்சாக பயிற்சி
- ராகுலுக்கு ரகசிய திருமணமா? குடும்பத்தோடு வெளிநாடு சென்றதால் பரபரப்பு
- ரயில்கள் பராமரிப்பு பணி தனியார் வசம்!
- சமையல் 'காஸ்' சிலிண்டர் மானியத்தை விட்டு கொடுத்தது 5 லட்சம் பேர் தான்
- எம்.பி.,க்கள் தற்காலிகமாக தங்க ரூ.24 கோடி செலவு
- ஐ.ஐ.எம்.,களை கட்டுப்படுத்த அரசு திட்டம்
- இளவரசர் சார்லஸ் பெயரில் லலித் மோடி மோசடி!
- சுவிஸ் வங்கிகளில் முதலீடு: இந்தியாவுக்கு 61வது இடம்
- பார்வையற்ற முதல் வெளியுறவு துறை அதிகாரி விரைவில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
- இந்தியாவில் தொழில் செய்ய வாங்க: அமெரிக்க தொழிலதிபர்களுக்கு அருண் ஜெட்லி அழைப்பு
- லலித் மோடியை சந்தித்தது ஏன்?
| Posted: புதுடில்லி: 'கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள், இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள், வங்கிகளில் கொடுத்து இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்குகளில், 'டிபாசிட்' செய்யலாம்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கறுப்பு பண புழக்கத்தை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கடந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதில், 'கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட, 1,000 மற்றும் 500 ரூபாய் உட்பட, அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகாது. எனவே, இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், ... |
| உலகம் முழுவதும் யோகா தின கொண்டாட்டம் பிரம்மாண்டம்: இந்தியாவில் குக்கிராமங்களிலும் உற்சாக பயிற்சி Posted: புதுடில்லி : சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 35 ஆயிரம் பேர் முன்னிலையில், பிரதமர் மோடி ஆசனங்களை செய்தார். நாட்டின் அனைத்து நகரங்களிலும், குக்கிராமங்களிலும் யோகா பயிற்சிகள் நேற்று நடைபெற்றது, மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.இந்தியாவில், 5,000 ஆண்டு களுக்கு முன்தோன்றிய, யோகா கலையை உலகறியச் செய்த பெருமை, யோகாசன கலைஞர்கள், வல்லுனர்கள் பலருக்கும் உள்ளது. எனினும், இந்த கலைக்கு ஐ.நா., கவுரவம் அளித்தது, பிரதமர் நரேந்திர மோடி, 64, தலைமையிலான அரசின் முயற்சியால் தான் என்றால் ... |
| ராகுலுக்கு ரகசிய திருமணமா? குடும்பத்தோடு வெளிநாடு சென்றதால் பரபரப்பு Posted: புதுடில்லி: காங்., தலைவர் சோனியா, மகள் பிரியங்கா மற்றும் துணைத் தலைவர் ராகுல், திடீரென வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். ராகுலின் திருமணத்திற்காகவே, மூவரும் வெளிநாடு சென்றுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளதால், கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
| ரயில்கள் பராமரிப்பு பணி தனியார் வசம்! Posted: புதுடில்லி:மொத்தம், 2,500 கோடி ரூபாய் செலவில், 15 ரயில் செட்டுகளை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்க உள்ள ரயில்வே துறை, அவற்றின் பராமரிப்பையும், தனியார் துறையிடமே வழங்க உள்ளது. இந்திய ரயில்வேயில் இவ்வாறு செய்ய உள்ளது, இதுவே முதல் முறை.ரயில் இன்ஜின்கள் தனியாகவும், பெட்டிகள் தனியாகவும் வெவ்வேறு பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. ரயில்களை இயக்கும் ரயில்வே துறை, பெட்டி களை சுத்தப்படுத்தும் பணிகளை மட்டும்ஆங்காங்கே தனியார் வசம்ஒப்படைத்துள்ளது.இப்போது முற்றிலும் மாறுபாடாக, ரயில் பெட்டிகளுடன் ரயில் இன்ஜின்களும் தனியாரிடம் இருந்து ... |
| சமையல் 'காஸ்' சிலிண்டர் மானியத்தை விட்டு கொடுத்தது 5 லட்சம் பேர் தான் Posted: புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதனால், அரசுக்கு, கடந்தாண்டு மட்டும், 36,580 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, கடந்த மார்ச்சில், பிரதமர் மோடி, ஒரு கோரிக்கை விடுத்தார். 'சமையல் காஸ் மானியம், சாதாரண ஏழை மக்களுக்கானது. வசதி படைத்தவர்கள், தங்களுக்கான மானியத்தை தானாக முன்வந்து விட்டு கொடுக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.இதன்படி, வசதி படைத்த ஒரு சிலர், தங்களுக்கு மானியம் வேண்டாம் என, தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மத்திய பெட்ரோலிய ... |
| எம்.பி.,க்கள் தற்காலிகமாக தங்க ரூ.24 கோடி செலவு Posted: புதுடில்லி: புதிய எம்.பி.,க்கள் தற்காலிகமாக தங்குவதற்கு, மத்திய அரசு, கடந்த ஓராண்டில், 24 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.டில்லியில், புதிய எம்.பி.,க்கள் தங்குவதற்கான அறைகளை ஒதுக்குவதற்கு முன், அவர்கள், தற்காலிகமாக அரசு பவன்கள், நட்சத்திர ஓட்டல்கள் ஆகியவற்றில் தங்கவைக்கப்படுகின்றனர். இந்த வகையில், கடந்த ஆண்டு, அரசுக்கு ஏற்பட்ட செலவு குறித்த விவரங்களை வழங்குமாறு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சுபாஷ் அகர்வால் கோரியிருந்தார். இதற்கு, மத்திய பொது தகவல் அதிகாரி ஜி.பி.சர்கார் அளித்துள்ள பதில்:2014, ஜனவரி 1 முதல், டிசம்பர் 31 வரை, புதிய எம்.பி.,க்கள் ... |
| ஐ.ஐ.எம்.,களை கட்டுப்படுத்த அரசு திட்டம் Posted: புதுடில்லி: இந்திய மேலாண்மை கல்வி மையங்களின் நிர்வாக விஷயங்களில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அளப்பரிய அதிகாரம் தரும் சட்ட வரைவு குறித்து, இம்மையங்கள் இடையே, முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி மையங்களில் பயிலும் மாணவர்கள், உலகின் முன்னணி நிறுவனங்களில் உயர் மட்ட நிர்வாகப் பணிகளில் கோலோச்சுகின்றனர். இக்கல்வி மையங்களில் பயில, இந்திய மாணவர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. |
| இளவரசர் சார்லஸ் பெயரில் லலித் மோடி மோசடி! Posted: லண்டன்: சுஷ்மா மட்டுமின்றி, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அவரது சகோதரர் ஆண்ட்ரூ ஆகியோரது பெயரையும் பயன்படுத்தி, லலித் மோடி பயண ஆவணங்களை பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 'கழுவுற நீரில் நழுவுற மீன்' என்பது போல், ஜகஜ்ஜால ஜித்தர் லலித் மோடி, லண்டனில் இருந்து போர்ச்சுகல் செல்வதற்கான பயண ஆவணங்களை பெற, என்னென்ன செய்துள்ளார் என்பதை, 'சண்டே டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. தஞ்சம் அடைந்தார்: அதன் விவரம்: ஐ.பி.எல்., கிரிக்கெட் ஊழல் காரணமாக, லலித் மோடி, 2010ல், இந்தியாவில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தார். அவர் அங்கு ... |
| சுவிஸ் வங்கிகளில் முதலீடு: இந்தியாவுக்கு 61வது இடம் Posted: ஜூரிச்:சுவிஸ் வங்கிகளில், அயல்நாடுகள் மேற்கொண்ட முதலீடுகள் குறித்த பட்டியலில், இந்தியா, மூன்று இடங்கள் கீழிறங்கி, 61வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.பாகிஸ்தான், ஒரு படி முன்னேறி, 73வது இடத்தை பிடித்துள்ளது.கடந்த ஆண்டு நிலவரப்படி, சுவிஸ் வங்கிகளில், 1.6 லட்சம் கோடி டாலர் புழக்கத்தில் உள்ளது. இதில், இந்தியாவின் பங்கு, 0.123 சதவீதம் என்ற அளவிற்கு, மிகச் சொற்பமாக உள்ளது.சுவிஸ் வங்கிகளில் அதிக அளவில் முதலீடு செய்த நாடுகளில், இங்கிலாந்து முதலிடத்தையும், அமெரிக்கா இரண்டாவது இடத்தையும், தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளன. சுவிஸ் வங்கிகளின் மொத்த அயல்நாட்டு ... |
| பார்வையற்ற முதல் வெளியுறவு துறை அதிகாரி விரைவில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு Posted: இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள, சென்னையைச் சேர்ந்த, பார்வையற்ற பெண் பெனோ ஜெபின், விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, வாழ்த்து பெற உள்ளார்.வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 'டுவிட்டர்' இணையதளத்தில், பெனோஜெபின் குறித்து கூறும்போது, 'கனவுகளுக்கு தடை எதுவும் இல்லை' என, குறிப்பிட்டுள்ளார். இன்று அகில உலகத்தையும், தன் பக்கம் ஈர்த்துள்ள, பெனோ ஜெபின், சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை அந்தோணி சார்லஸ். ரயில்வே ஊழியராக உள்ளார். தாய் பத்மஜா. இவர்கள் மகளின் வளர்ச்சிக்கு, பெரிதும் உதவியாக ... |
| இந்தியாவில் தொழில் செய்ய வாங்க: அமெரிக்க தொழிலதிபர்களுக்கு அருண் ஜெட்லி அழைப்பு Posted: வாஷிங்டன் : ''அமெரிக்க முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும், ஸ்திரமான தொழில் கொள்கைகள், முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம்,'' என, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த அருண் ஜெட்லி கூறினார்.பத்து நாள் பயணமாக, அமெரிக்கா சென்றுள்ள அருண் ஜெட்லி, அமெரிக்க தொழிலதிபர்களை சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கோரி வருகிறார்.வாஷிங்டன் நகரில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது:உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இந்திய பொருளாதாரம் பிரகாசமாக விளங்குகிறது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. ... |
| Posted: மும்பை:சர்ச்சையில் சிக்கிய லலித் மோடியை லண்டனில் சந்தித்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவுக்கு, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.ஐ.பி.எல்., கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் லலித் மோடி, மோசடி புகாரில் சிக்கியதை அடுத்து, லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், அவருக்கு, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஆகியோர் உதவி செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 22,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |