Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வரலாற்றில் இன்று - ஜூன்

Posted: 20 Jun 2015 07:04 PM PDT





பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ

Posted: 20 Jun 2015 06:58 PM PDT

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் ஜூலை 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்க ஐ.நா. அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில் முதலாவது சர்வதேச யோகா தினம் தலைநகர் டில்லி உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நாளை மறுநாள் அனுசரிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பி வரும் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, யோகா குறித்த வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். 'பூனம் பாண்டே ஸ்டைல் யோகா' என்ற பெயரில் வெளிவந்திருக்கும் இந்த வீடியோ தற்போது ...

சினி துளிகள்!

Posted: 20 Jun 2015 06:06 PM PDT


-
–
* சினிமாவில் ஆணாதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார்
தோனி மற்றும் வெற்றிச் செல்வன் படங்களில் நடித்த
ராதிகா ஆப்தே.
–
——————————————–
தொடரும்....

கமலுடன் மீண்டும் இணையும் மணிரத்னம்! –

Posted: 20 Jun 2015 06:03 PM PDT

கடந்த, 1987ல் கமலை வைத்து மணிரத்னம் இயக்கிய படம், நாயகன். சூப்பர் ஹிட்டான அப்படத்திற்கு பின், அவர்கள் இணையவில்லை. இந்நிலையில், ஓ காதல் கண்மணி படத்தை அடுத்து, மகேஷ்பாபு – ஐஸ்வர்யாராய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் மணிரத்னம், அதைத் தொடர்ந்து, கமலை வைத்து, ஒரு மெகா படத்தை இயக்க இருக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாகும் அப்படம், நாயகனை மிஞ்சும் ஆக் ஷன் கதையில் தயாராகிறது. தற்போது நடித்து வரும், தூங்காவனம் பட வேலைகள் முடிந்ததும், மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதை, அதிகாரபூர்வமாக ...

தலைவர் மீது செருப்பு வீசணும்னா…!

Posted: 20 Jun 2015 04:03 PM PDT


-

வீட்டுக்கு வீடு வாசப்படி!

Posted: 20 Jun 2015 04:01 PM PDT

- கோலிவுட்டில், நடிகர் அஜித்துக்கு, 'சால்ட் அன்ட் பெப்பர்' நடிகர் என்ற பெயர் இருப்பது போல், ஹாலிவுட்டில், 54 வயதான ஜார்ஸ் குளூனிக்கும் இப்பெயர் உண்டு. – நரை கலந்த இவரின் ஹேர்ஸ்டைலுக்கு ஏராளமான ரசிகைகள் உண்டு. இவரின் காதல் மனைவி அமல் அமலுதீன். தன் குடும்ப வாழ்க்கை பற்றி ஜார்ஜ் குளூனி கூறுகையில்,'என் மனைவி, என்னை, 'டிவி' பார்ப்பதற்கோ, விளையாட்டு போட்டிகளை பார்ப்பதற்கோ அனுமதிப்பது இல்லை. – ஆனால், அவள் மட்டும், 'ரியாலிட்டி ஷோ'க்களை பார்க்கிறாள்…' என, பொருமித் தீர்த்துள்ளார். – வீட்டுக்கு ...

அப்பா!

Posted: 20 Jun 2015 03:59 PM PDT

- எங்கள் இல்லத்தின் சுமைதாங்கி எங்கள் பயணத்தின் வழிகாட்டி எப்போதும் ஏழ்மை தான் எனினும் மனதில் பணக்காரர்! – நல்ல பள்ளியில் என்னை சேர்த்தார் மதிப்பெண் குறைந்த போதிலும் மனதாலும் என்னை கண்டிக்காதவர் 'பள்ளியை மாற்றுவோமா' என்பார்! – உடன்பிறந்தோர் எட்டு பேர் அனைவரும் அவருக்கு சரிசமம்! அவரால் மட்டுமே அது சாத்தியம்! – பரோட்டா கேட்போம் நானும், தங்கையும் இருந்த பணத்துடன் கூட்டிச் செல்வார் ஓட்டலுக்கு இருவருக்கும் வாங்கிக் கொடுத்து தனக்கு மட்டும், 'வயிற்று வலி' என்பார்! – நான் புகைத்தேன்; ...

கவர்ச்சி உடையணிந்தால் சாப்பாடு இலவசம்!

Posted: 20 Jun 2015 03:56 PM PDT

சீனாவின் ஜினான் மாகாணத்தில், 'வங் ஜியா ஹாட்பாட்' என்ற பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் நிர்வாகம், தன் வியாபாரத்தை அதிகரிக்க, புதிய யுக்தியை கையாண்டுள்ளது. ஓட்டலுக்கு வரும் பெண்கள், முட்டிக்கு மேல் உடையணிந்திருந்தால், அவர்களுக்கான சாப்பாட்டு பில்லில், கணிசமான தொகை தள்ளுபடி செய்யப்படும் என்றும், முட்டிக்கு மேல் உடை ஏற ஏற, தள்ளுபடி தொகை அதிகமாகும் என்றும் அறிவித்துள்ளது. அத்துடன், அவர்களின் உடையளவை கணக்கிடுவதற்காக, இரு பணியாளர்கள் ஓட்டல் நுழைவாயிலில் உள்ளனர். இதனால், இந்த ஓட்டலின் ...

தந்தையர் தின வாழ்த்துக்கள்

Posted: 20 Jun 2015 11:32 AM PDT

இன்று தந்தையர் தினம் - 2015 ' ஜூன் 21 தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. உலகளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாப்படுகிறது. மேலும் ...

இராமாயணம்

Posted: 20 Jun 2015 11:16 AM PDT

இராமாயணம் மின்நூல் கிடைக்குமா

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Posted: 20 Jun 2015 11:09 AM PDT

1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க, கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க, பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?" 2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ? "பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும். அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம். 3. டீ மாஸ்டர் டீ போடுரார்பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுரார்மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்ஹெட் மாஸ்டரால மண்டைய போட முடியுமா? 4. புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும் கண்ணுக்குட்டி ...

சுகர் ஸ்மார்ட்

Posted: 20 Jun 2015 10:00 AM PDT

1. சுவையில் குறையொன்றுமில்லை! டயாபடீஸ் வரும் வரை, நான் எவ்வளவு உறுதிமிக்கவன் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது எனக்கு உறுதியாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை! – யாரோ - - நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் ஆற்றலாக மாற்றப்படுகின்றன. நமது பிரதான ஆற்றல் மூலம் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையே. நம் உணவில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு என அனைத்துமே நம் உடலின் தேவைக்கேற்ப குளுக்கோஸ் ஆக மாற்றப்படுகிறது. இவற்றில் கார்போஹைட்ரேட் என்கிற மாவுச்சத்துதான் ரத்த சர்க்கரை விஷயத்தில் அதிக ...

'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்!

Posted: 20 Jun 2015 09:58 AM PDT

ஸ்மார்ட் போன் வாசிகள் மத்தியில் பிரபலமான `செல்பி` என்ற தன்னைத்தானே படம் எடுத்துக்கொள்வது ஃபேஷனாக இருக்கிறது. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவரையிலும் தங்களின் அன்றாட நிகழ்வுகளை `செல்பி` எடுத்து ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளும், ஷேர்களும் வாங்குவதை ஸ்மார்ட் போன் வாசிகள் பெருமையாகக் கருதுகிறார்கள். இந்தப் பெருமைக்குப் பின்னால் ஒளிந்துகிடக்கும் உண்மைகள் அதிரவைப்பதாக உள்ளது. செல்பிக்கு சாதாரண பிரஜைகள் முதற்கொண்டு நாட்டின் ...

தலையசைக்கும் நாற்றுக்கள்..!

Posted: 20 Jun 2015 09:54 AM PDT

- மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார் அறிவில்! – ———————- – காட்டில் சிதை எரிய உலை வைப்பாள் வெட்டியானின் பத்தினி! – ——————— – ஆர்வமாய் வந்த மழை குடைகள் உயர அடங்கித் திரும்பும்! – ———————– – கமலை ஏற்றப்பாட்டு சலசலக்கும் நீரோடை தலையசைக்கும் நாற்றுக்கள் – ———————— – அறுவடை முடிந்து தனியே சோளக்கொல்லை பொம்மை! – ————————— ஷங்கரநாரா#யணன்

சிம்பிள் கிச்சன் டிப்ஸ்!

Posted: 20 Jun 2015 09:50 AM PDT

- மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நொடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும். – பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலை சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும். – வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுப்பிசுப்பாக ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக் கொண்டு நறுக்க வேண்டும். – தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு, மொருவன இருக்கும். – எலுமிச்சை, ...

மழையில் நனைகிறதென்று கவலைப்பட்டது வண்டு..! ஜூன் 20, 2015 இல் 2:31 பிப (haikoo) · தொகு

Posted: 20 Jun 2015 09:47 AM PDT

- == கடற்கரை மணல் ஓவியம் நண்டு பார்த்து ரசித்தது அவளின் பாதச் சுவடுகள்! – ———————— – குதிரைகள் சுற்றி வந்தன ஒன்றை ஒன்று முந்தவில்லை குடை ராட்டினம் – ————————– – ஊருக்குள் வெள்ளம் ஊர் சுற்றக் கிளம்பியது ஆத்து மீன்கள் – ———————— – மழையில் நனைகிறதென்று கவலைப்பட்டது வண்டு செடியில் பூக்கள் – —————————- – சுருட்டை முடிக்காரி சுருட்டி விட்டாள் தொலைந்தது மனசு – ———————- – தண்ணீரில் கண்டமென்று எந்த ஜோசியரும் சொல்லவில்லையே வெள்ளத்தில் மிதந்தது செடி! – ———————————- -டி.என்.இமாஜான் நகைச்சுவையான ...

நல்ல காலம் பொறக்குது…!

Posted: 20 Jun 2015 09:38 AM PDT

- – வயிற்றின் உருமல் முள்ளுக்காட்டில் ஒதுங்க பன்றி உருமல்! – ——————— – வந்த ரயிலை அனுப்பிவிட்டு வரும் ரயிலுக்காக தண்டவாளம் – ——————– – பனியில் நனைந்த நிலவு பூத்துக் குலுங்கும் மரம் சாத்துகிறாள் ஜன்னல் – ———————- – பௌர்ணமிப் பெரு வெளிச்சம் ஒளியத் தவிக்கும் எறும்பு – ——————— – கண்ணாடி வாழையிலை அமர வந்த பனித்துளி நழுவிக் கீழிறங்கும்! – ———————— – நல்ல காலம் பொறக்குது குடுகுடுப்பை வர கலைந்தது சேவல் உறக்கம்! – ————————- டி.என்.இமாஜான்

கீச்சில் ரசித்தவை(Twitter)

Posted: 20 Jun 2015 09:35 AM PDT

செருப்ப சாணில முக்கிய அடிக்கறதுனா என்னனு தெரியுமா மக்களே நீங்க உயிரா நெனைக்கற பொண்ணு உங்கூட வாழுறதுக்கு நான் செத்தே போவன்னு சொல்றது.--புதுவை குடிமகன் ‏@iamkudimagan

ஜோடிப்பாம்புகள் நடனம்..!

Posted: 20 Jun 2015 08:54 AM PDT

- — சுற்றிப் பார்க்க வந்த ஊர் பஸ் பிரேக் டவுன் அலுப்புடன் பயணிகள் – ——————— – பாலாபிஷேகம் முடிந்தும் வெள்ளையாகவில்லை விக்கிரகம்! – ——————– – அலைகள் சுருங்கும் விழுந்தது கல் அல்ல உதை பந்து – ——————– – கோழிக் குஞ்சைத் துக்கிப் போகும் ராஜாளி மேகம் பார்க்கும் கடல் – ——————— – நிலா வெளிச்சம் தாழம் புதர் ஜோடிப்பாம்புகள் நடனம் – ———————- – சாத்திக் கிடக்கும் வீடு தாழ்வாரம் தாண்டும் மழை பிரிக்கப்படாத கடிதம் – ———————— டி.என்.இமாஜான்

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Posted: 20 Jun 2015 08:50 AM PDT

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி! மூலிகை ...

– தென்றல் விடுதூது விட்டேன்…!

Posted: 20 Jun 2015 08:23 AM PDT

- தங்கமே, வைரமே, முத்தே குழந்தையைக் கொஞ்சினாள் பிளாட்பார வாசம்! – ———————— – உடம்பு வலிக்கிறதென்று டாக்டரிடம் சென்றான் ஊசி குத்தியது வலித்தது! – ———————— – வேர்வை சிந்த உழைத்தவனை நகர்ந்து நில் நாறுகிறதென்றாள் அழகிய மனைவி – ————————– – தென்றல் விடுதூது விட்டேன் புயல்விடு தூதாய் திரும்பிது பருவகாலம் சரியில்லை! – ————————– – பூக்களைப் பறிக்காதீர்கள் போர்டு போட்டான் தோட்டக்காரன் வண்டுக்கு எச்சரிக்கை – —————————– – இரவில் பொத்தல் குடிசையில் விளக்கேற்ற வழியில்லை முழு ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (118)

Posted: 20 Jun 2015 07:40 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Posted: 20 Jun 2015 07:35 AM PDT

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா?

நிர்வாணம் கொள்!

Posted: 20 Jun 2015 07:31 AM PDT

எதிர்பார்ப்பென்னும் எடைகொண்ட சேலை களைந்துன் மனதில் நிர்வாணம் கொள்! உறவென்னும் உறை பூண்டால் உன்வரை மட்டும்தான் உள்ளெதல்லாம் வேண்டப்படும்! கொடுப்பதற்கு மட்டும் நீ எடுப்பதற்கு உரித்தில்லை! எடுப்பதற்கும் நினைத்தாலோ கடுப்பான முரண் தொடுவாய்! எட்டாத முந்திரியாய் எதிர்பார்ப்பை விட்டகலு கட்டாயம் சலனமின்றி பதிந்தெளியுமுன் மனது உறவுகளின் உன்னதமே உணர்வுகளின் பகிர்வதில்தான் உண்மையிது உணராத உறவிலென்ன வேண்டுவது! முரண்பாடு முற்றிப்போர் திரண்டெழும் போதெல்லாம் வரண்ட நம் ...

குழந்தை

Posted: 20 Jun 2015 07:11 AM PDT

உனக்கும் ஒரு காலம் வரும் அப்போது ஒரு பையன் உன்னை ரொம்ப காதல் செய்து உன்னை இறுக்கி அனைத்துகக்கொண்டு-சொல்வான் அம்மா ஐ லவ் யு என்று      

கவிதை

Posted: 20 Jun 2015 07:05 AM PDT

நீ யாருக்காக வாழ்கிறார்க யோ
அவர்களூக்காக
சிலவற்றை விட்டு கொடு
உனக்காக யார் வாழ்கிறார்களோ
அவர்களை யாருக்காவும் விட்டு கொடுக்காதே

ஊமை விழிகள் பேசும் விழிகளானது..!

Posted: 20 Jun 2015 07:02 AM PDT

- – ஊமை விழிகள் பேசும் விழிகளானது கார்னியா தானம் – —————— – வாடும் வயிற்றுக்கு வாழும்போது கொடுத்தான் வாழ்த்துகிறது மேலுலகு! – ——————- – அகதிகளாய் வாடியோர் அகமகிழ்ந்தனர் அரவணைக்கும் பேகன்கள் – ——————— – காய்க்காத மரத்தின் கைகளில் தவழ்ந்தன கருப்பை தானம்! – ——————– – உன் சாதனைகள் வரும் காலம் வாசிக்கட்டும் புதிய சரித்திரத்தில்! – ————————- கவிஞர் விகுரா இளஞாயிறே எழுந்து வா – ஹைகூதொகுப்பிலிருந்து –

நுனிப் புல் திண்போமா ?

Posted: 20 Jun 2015 06:53 AM PDT

நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ...

இளமை சொந்தம் கொண்டாடுதே

Posted: 20 Jun 2015 06:49 AM PDT

இளமை சொந்தம் கொண்டாடுதே நிலை ஆடி முன் நின்று நிலை குலைந்த மனைவி குறை பட்டுக்கொண்டாள் ,கணவனிடம் . முடி வெளுத்தும் அடர்த்தி குறைந்து புருவ முடிகள் குறைந்து முகச்சுருக்கங்கள் நிறைந்து உருவமே மாறிவிட்டதே. பருத்த வயிறும் கூன் முதுகும் தொங்கும் சதைகளும் பங்கு போடும் சொத்தை பற்களும், என் அழகு இருபதே ஆண்டில் எங்கோ போய் விட்டதே . குறைகளே உடல் முழுதும் கண்ணில் படுகின்றன . அன்பு கணவா! நிறை ஒன்றாவது சொல்லி, நிறைவாக எனை மகிழ்வாக்கேன். கணவன் கூறுவான் , உந்தன் கூரிய ...

வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை

Posted: 20 Jun 2015 06:39 AM PDT

வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம். Whatsapp கணினியில் பயன்படுத்தும் முறை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும். இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர். தற்போது ...

சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை!

Posted: 20 Jun 2015 06:30 AM PDT

சித்தார்த்தனும், கோவிந்தனும் இணைபிரியா நண்பர்கள். சித்தார்த்தன் சிறுவயதிலேயே தத்துவங்களில் பலமை பெற்று, விவாதங்களிலும் ஈடுபட ஆரம்பித்தான். கோவிந்தனும் அவனை போலவே சிந்திக்கவும், தியானங்கள் செய்யவும் பழகிக்கொண்டான். சித்தார்த்தனின் நிழலாய் அவனை பின்தொடரவும் செய்தான். அறிவில் சிறந்து விளங்கிய தன் மகனை பார்த்து சித்தார்த்தனின் தந்தை அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். ஒருநாள் சமணத்துறவிகள் மூன்று பேர் தன்னை கடந்து போவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்தன். உடனே அவனுக்கு சமணத்துறவியாகும் ...

இன்று ஷோபனாவின் திருமண நாள்!.அவங்களை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே !

Posted: 20 Jun 2015 06:02 AM PDT

இன்று ஷோபனாவின் திருமண நாள்!.அவங்களை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே ! அன்பான திருமண நாள் நல் வாழ்த்துக்கள் ஷோபனா உங்கள் கணவருக்கும் என்  வாழ்த்துக்களை தெரிவியுங்கள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Posted: 20 Jun 2015 05:58 AM PDT

Code:இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்: ...................................................... வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி      போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை       நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்    பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் ...

களிமண் மேல் விழும் மழை!

Posted: 20 Jun 2015 05:58 AM PDT

நடைபயிற்சி முடித்து, அருண் வீடு வந்து சேர்ந்தபோது, அப்பாவும், அம்மாவும் முகம் முழுக்க மலர்ச்சியுடன் வாசலில் நின்றிருந்தனர். ''என்னப்பா... ஏன் இங்கே நிக்கறீங்க?'' என்று, காலணிகளை அவிழ்த்தபடியே கேட்டான். ''எல்லாம் நல்ல செய்திதாம்பா. மிகப் பெரிய அமெரிக்க கம்பெனிக்கு, ஐ.ஐ.டி.,ல முதல் தடவையா, நீங்க 12 பேர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கீங்கள்ல... அதுக்கு, உங்க எல்லாருக்கும் பாடம் எடுத்த எட்டு ஆசிரியர்களுக்கு, நீங்க, 12 பேரும் சேர்ந்து பாராட்டு விழா எடுத்து, நினைவுப் பரிசு கொடுக்கணும்ன்னு உன் ...

வயலோடு உறவாடி…

Posted: 20 Jun 2015 05:56 AM PDT

முற்றமெங்கும் விரிந்திருந்த சுண்ணாம்புக் கோலங்கள், காவி பூசப்பட்ட மண்கட்டி அடுப்புகள், அக்னி வளர்க்க குவிக்கப்பட்டிருந்த பனையோலைகள், பொட்டும் மஞ்சள் குலையுமாக மினுங்கிய வெண்கலப் பானைகள், சூரியனை வரவேற்க ஏற்றி வைத்த ஐந்துமுகக் குத்து விளக்கு, பக்கத்தில் நெல்குவித்த நிறை நாழி, படைத்திருந்த காய் கனிகள், பனங்கிழங்கு கரும்புக் கட்டுகள்….. பார்த்துப் பார்த்து எடுத்தது எல்லாம் ஸ்லைட் ஷோவில் ஒவ்வொன்றாக விரிந்தன. "நுணுக்கமாய் கவனிச்சு எடுத்திருக்கீங்க. ம்ம். நல்லாத்தானிருக்கு. ஆனா வளச்சு வளச்சு ...

நீத்தார் பெருமை

Posted: 20 Jun 2015 05:31 AM PDT

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும். The settled rule of every code requires, as highest good, Their greatness who, renouncing all, true to their rule have stood. The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar ...

அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா?

Posted: 20 Jun 2015 05:31 AM PDT

–
அக்கி என்பது வைரஸ் பாதிப்பால் வரக்கூடியது.
அதற்கு ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உள்ளன.
-
அவற்றை மருத்துவர் ஆலோசனைப்படி வாங்கி
சாப்பிடுவது நல்லது.

வலியும் குறையும். விரைவில் நோய் முழுவதுமாக
குணமாகும். குழந்தையின் சருமம் மென்மையானது. அக்கியால்
பாதிக்கப்பட்ட குழந்தைக்குக் காவியைப் பூசும் போது
சீழ் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே
கண்டிப்பாகக் காவி பூசக் கூடாது.
–
———————————————–

அல்சீமருக்கு வருகிறது அருமருந்து!

Posted: 20 Jun 2015 05:18 AM PDT

தடுக்க முடியாதது… சிகிச்சை தரவும் முடியாதது' என்பதால் பெயரைக் கேட்டாலே அதிர வைப்பதாக இருக்கிறது அல்சீமர். - இந்தக் கொடிய நோய்க்குத் தீர்வு காணும் முயற்சியில் முதல் கட்ட வெற்றி பெற்றிருக்கிறது அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகம்.நோய்த்தொற்று ஏற்பட்டால் மூளையிலுள்ள மைக்ரால்ஜியா செல்களில் அதன் பாதிப்பு உடனடியாகத் தெரியும். - இந்தப் பகுதியை ஆராய்ந்தபோது அல்சீமரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஜினைன் என்ற அமினோ அமிலம் அதிகம் சுரப்பது தெரிய வந்தது. அல்சீமர் உண்டாக்கப்பட்ட ஓர் எலிக்கு Difluoromethylornithine ...

பக்கத்துவீட்டுக் கோழி எங்க வீட்டுக்கு வந்துட்டா மட்டும் அசைவம்!’’ –

Posted: 20 Jun 2015 05:07 AM PDT

' - நீங்க சைவமா… அசைவமா..?'' – ''பொதுவா சைவம். பக்கத்துவீட்டுக் கோழி எங்க வீட்டுக்கு வந்துட்டா மட்டும் அசைவம்!'' – – அதிரை புகாரி, – ————————————– ஸ்பீக்கரு… ''அட்ரஸ், செல் நம்பர் வரை செருப்பில் எழுதி ஒட்டி எங்கள் தலைவர் மீது தைரியமாக வீசிய அந்த வீர தீரச் செயலை வெகுவாகப் பாராட்டி அமர்கின்றேன்…!'' – – சீர்காழி ஆர்.சீதாராமன் – —————————————- – ''ஃபீஸ் நானூறு ரூபாய் குடுங்க!'' – ''ரெண்டே ரெண்டு சுமாரான நர்ஸை கண்ல காட்டினதுக்கு இது ரொம்ப அதிகம் டாக்டர்…'' – – சிக்ஸ் ...

தூக்க மாத்திரை சாப்பிடுவது அவசியம்தானா?

Posted: 20 Jun 2015 05:07 AM PDT

அவசியமே கிடையாது. இது ஒரு தீய பழக்கம். நோய்வாய்ப்பட்ட ஒரு சிலருக்கு சில காலம் மட்டுமே தூக்க மாத்திரை கொடுப்பதுண்டு. -அதாவது, அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ஏதேனும் அடிபட்டு வலியால் அவதிப்படுபவர்கள், புற்று நோயாளிகள் போன்றோருக்கு கொடுக்கப்படும். - தூக்க மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் பக்க விளைவுகள் அதிகம். தொடர்ந்து சாப்பிடும்போது மாத்திரையின் வீரியம் குறைவதுடன், நாளுக்கு நாள் அதிக மாத்திரைகளை சாப்பிட வேண்டிவரும். - மேலும் மாத்திரை போட்டு தூங்கி எழுந்திருக்கும் போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™