Tamil News | Online Tamil News |
- சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட இந்தியர்கள் பணம்... மாயம்: ரூ.13 ஆயிரம் கோடி மட்டும் இருப்பதாக அறிவிப்பு
- குஜராத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிப்பது...கட்டாயம் பா.ஜ., அரசின் முடிவுக்கு காங்., கடும் எதிர்ப்பு
- அத்வானி பேட்டியால் அரசியலில் அவசர நிலை!
- ஆஹா... ஆளுக்கொரு திசையில் எதிர்க்கட்சிகள்...!:அவசரப்படாமல் அமைதி காக்கிறது பா.ஜ.,
- செம்மரம் கடத்தல் வழக்கு கருணாநிதி கோரிக்கை
- யோகா மாஸ்டர் ஆகிறார் விஜயகாந்த்
- 'பள்ளி, கல்லூரி கட்ட நிலம் கொடுங்க'வெங்கையாவிடம் கெஜ்ரிவால் கெஞ்சல்
- ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ரத்து ஏன்?:ஐ.டி., துறை வீழ்ச்சியே காரணம்
- தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த ஓராண்டுக்குள் சட்டம்: உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வி துறை தகவல்
- ராகுல் பிறந்த நாள்: இல்லத்தில் குவிந்த நிர்வாகிகள்
| Posted:
ஜூரிச்:சுவிட்சர்லாந்து வங்கிகளில், 2014-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியர்களின் டெபாசிட், கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் குறைந்து, 13 ஆயிரம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இந்தியர்கள், 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ளதாக, சில ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட நிலையில், சமீப காலமாக, சுவிஸ் வங்கியில், இந்தியாவின் டெபாசிட், 'மளமள'வென குறைந்துள்ளது, பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. சுவிஸ் தேசிய வங்கியான, எஸ்.என்.பி., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சுவிஸ் வங்கிகளில், இந்தியர்களின் டெபாசிட், முன்பு எப்போதும் ... |
| Posted: ஆமதாபாத்:குஜராத் மாநிலத்தில், வரும் அக்டோபரில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மாநில முதல்வர் ஆனந்திபென் படேல், ஓட்டளிக்காதவர்களுக்கு பெரிய அளவில் தண்டனை வழங்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார். நரேந்திர மோடி, 2009ல், குஜராத்தில் முதல்வராக இருந்த போது, உள்ளாட்சி தேர்தல்களில் அனைவரும் ஓட்டளிப்பது கட்டாயம் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்த மசோதாவை அங்கீகரிக்க, அப்போது கவர்னராக இருந்த கமலா பெனிவால் மறுத்தார். இதனால், மோடி ... |
| அத்வானி பேட்டியால் அரசியலில் அவசர நிலை! Posted: புதுடில்லி:'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி அளித்த பேட்டியில், 'ஜனநாயகத்தை நசுக்கும் சக்திகள் வலுப்பெற்றுள்ளன. 1975ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது போன்ற அவசர நிலை மீண்டும் பிறப்பிக்கப்படாது என உறுதியாகக் கூற முடியாது. தனியொரு மனிதரால், அத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது' என கூறியிருந்தார்.'பிரதமர் மோடிக்கும், அத்வானிக்கும் இடையே நல்லுறவு இல்லை; மோதல் இருப்பதால் தான், இவ்வாறு அவர் கூறியுள்ளார்' என, ஊடகங்களில் நேற்று பரபரப்பு காணப்பட்டது.இது தொடர்பாக, பல தரப்பினரின் ... |
| ஆஹா... ஆளுக்கொரு திசையில் எதிர்க்கட்சிகள்...!:அவசரப்படாமல் அமைதி காக்கிறது பா.ஜ., Posted: லலித் மோடி விவகாரம் பெரிதாகிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த மாதம் 22ம் தேதி, மழைக்கால கூட்டத்தொடருக்காக, பார்லி., கூடவுள்ளது. ஆனால், கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை கிளப்ப வேண்டிய எதிர்க்கட்சிகள், பிளவுபட்டு நிற்பதால், இதுவே தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கை, பா.ஜ., வட்டாரங்களில் காணப்படுகிறது. மத்திய அமலாக்கத் துறையால், தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு, பயண ஆவணங்கள் கிடைக்கச் செய்வதில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரம், பெரியளவில் வெடித்துள்ளது. சுஷ்மா சுவராஜை மையமாக வைத்துக் கிளப்பிய இப்பிரச்னை, தற்போது, ... |
| செம்மரம் கடத்தல் வழக்கு கருணாநிதி கோரிக்கை Posted: சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை: செம்மரம் கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்ட, டி.எஸ்.பி., தங்கவேலு, 'அ.தி.மு.க., பிரமுகர்கள் நான்கு பேர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், 11 பேர் உட்பட, 37 பேருக்கு கடத்தலில் தொடர்பு உள்ளது' என கூறியதாக, போலீசார் முதலில் தெரிவித்தனர். ஆந்திர மாநில போலீசாரும் இதை உறுதி செய்தனர். இந்நிலையில், தங்கவேலுவிடம் விசாரணை நடந்த போது, 'செம்மரம் கடத்தலில் அரசியல்வாதிகளுக்கோ, போலீசாருக்கோ எந்தத் தொடர்பும் இல்லை' என, ஏற்கனவே சொன்னதை மாற்றிச் சொல்லியுள்ளார். இதில் இருந்தே, இந்த வழக்கை திசை திருப்பும் ... |
| யோகா மாஸ்டர் ஆகிறார் விஜயகாந்த் Posted: சர்வதேச யோகா தினத்தையொட்டி, வரும் 21ம் தேதி, கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். ஆண்டுதோறும், ஜூன் 21ம் தேதியை, சர்வதேச யோகா தினமாக கொண்டாட, ஐ.நா., சபை வலியுறுத்தி உள்ளது. இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாட, மத்திய அரசும் பல ஏற்பாடுகளை செய்துள்ளது. அதனால், வரும் 21ம் தேதி, கட்சியினருடன், யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட, விஜயகாந்தும் திட்டமிட்டு உள்ளார். இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: 'யோகா தின கொண்டாட்டத்தில், கட்சியினர், கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, தே.மு.தி.க., ... |
| 'பள்ளி, கல்லூரி கட்ட நிலம் கொடுங்க'வெங்கையாவிடம் கெஜ்ரிவால் கெஞ்சல் Posted: புதுடில்லி:பள்ளி, கல்லூரிகள் கட்டுவதற்கு தேவையான நிலம் பெறுவதற்கான உதவி கோரி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜந்தர் மந்தரில், ஆம் ஆத்மியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய, அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், 'இளைஞர்களுக்காக, புதிதாக 20 கல்லூரிகளைக் கட்டுவோம். புதிதாக 500 பள்ளிகள் கட்டுவோம்' என்றார். இந்நிலையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா ... |
| ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ரத்து ஏன்?:ஐ.டி., துறை வீழ்ச்சியே காரணம் Posted: 'தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான, 'டிட்கோ' உள்ளிட்ட, ஏழு நிறுவனங்களின் சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு, தகவல் தொழில்நுட்ப துறை வீழ்ச்சியே காரணம்' என, மத்திய வர்த்தக துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. வரிச்சலுகை:இதுகுறித்து, மத்திய வர்த்தக துறை வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டின் பல பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க, மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அங்கு அமையும் ஆலைகளுக்கு, ஏற்றுமதி வரிச்சலுகையும் வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசு அனுமதி வழங்கி, பல ஆண்டுகளாக தொழில் துவங்காமல் இருந்ததால், 22 ... |
| தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த ஓராண்டுக்குள் சட்டம்: உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வி துறை தகவல் Posted: சென்னை: 'அனைத்து தனியார் பள்ளிகளுக்கான, ஒருங்கிணைந்த சட்டத்தை கொண்டு வர, ஓராண்டு காலம் அவகாசம் தேவை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்தது.முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க., பிரமுகருமான ஆர்.வேலு, தாக்கல் செய்த மனு:விசாரணை'மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான விதிமுறைகள், செல்லாது' என, அறிவிக்க வேண்டும். சென்னை மற்றும் மதுரை பல்கலைக் கழகங்களால், 1976 ஜூன் 1ம் தேதி, அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை தவிர, மற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. இம்மனு, தலைமை ... |
| ராகுல் பிறந்த நாள்: இல்லத்தில் குவிந்த நிர்வாகிகள் Posted: புதுடில்லி: காங். துணை தலைவர் ராகுல் இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இதற்காக கட்சியினர் அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர். காங்.துணை தலைவர் ராகுல், நடந்து முடிந்த பார்லி.பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திடீரென மாயமானார். 2 மாதங்களுக்கு பின்னர் டில்லி திரும்பி தீவிர அரசியலில் ஈடுபட்டு பா.ஜ. ஆட்சியை விமர்சித்தும், நில எடுப்பு அவசர சட்டம், விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார். 45 கிலோ கேக்இந்நிலையில் ராகுலுக்கு இன்று 45-வது பிறந்த தினம். இதையடுத்து டில்லி துக்ளக் சாலையில் உள்ள அவரது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 19,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |