Tamil News | Online Tamil News |
- பொதுமக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடி தொடர்பு: மொபைல் போனில் புது செயலி அறிமுகம் செய்தார்
- அனைவருக்கும் வீடு: 2022ம் ஆண்டிற்குள் செயல்படுத்த மத்திய அரசு முடிவு: தலா 30 ச.மீ.,யில் இரண்டு கோடி வீடுகள் கட்டப்படுகின்றன
- சுஷ்மாவை சுழற்றி அடிக்கும் பிரச்னைகள்
- விமான பணிப்பெண்ணிடம் எம்.பி., ரகளை: செருப்பை காட்டி மிரட்டியதால் சர்ச்சையில் சிக்கினார்
- கெஜ்ரிவால் உட்பட 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்குகள்
- ஜெ., மீதான 'அப்பீல்' அடுத்த வாரம் தாக்கல்: கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தகவல்
- பத்திரிகா தர்மம் ஆகுமா? கருணாநிதி கேள்வி
- டூவீலர் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும் 'ஹெல்மெட்' கட்டாயம்
- பள்ளி புத்தகத்தில் கருணாநிதி, 'மாஜி' அமைச்சர் பெயர்: பக்கங்களை நீக்க அதிகாரிகள் ஆலோசனை
- உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக "கத்தார்' தேர்வு
- ரபேல் போர் விமான ஒப்பந்தம் சில மாதங்களில் முடியும்: பிரான்ஸ்
| பொதுமக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடி தொடர்பு: மொபைல் போனில் புது செயலி அறிமுகம் செய்தார் Posted: புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடிக்கு, குறுந்தகவல் மற்றும் இ-மெயில் அனுப்பவும், உடனடி தகவல் பெறவும் வசதியாக, 'மொபைல் போன் ஆப்' என்ற, 'நரேந்திர மோடி மொபைல் செயலி' சேவை நேற்று துவக்கப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி, தன்னுடன் இ-மெயில், குறுந்தகவல் மூலம், கருத்து பரிமாற்றம் செய்ய, பொதுமக்களுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கப்பட்ட, மொபைல் போன்களில் பயன்படுத்தக்கூடிய இந்த செயலி, ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது. இதுகுறித்து, பிரதமர் மோடி, 'டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், ... |
| Posted: புதுடில்லி: 'அனைவருக்கும், 2022ம் ஆண்டுக்குள் வீடு' என்ற மத்திய அரசின் திட்டம் நேற்று செயல்வடிவம் பெற்றது. நாடு முழுவதும் புதிதாக, இரண்டு கோடி வீடுகள் கட்ட, செயல்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும், 30 சதுர மீட்டர் பரப்பில், அனைத்து வசதிகளுடன் கட்ட, மத்திய அரசு கடன் வழங்கும். இதில், ஏழைகளுக்கும், குறைந்த வருவாய் பிரிவினருக்கும் வட்டிச்சலுகை வழங்கப்படும்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. அதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.குறிப்பாக, இன்னும் ஏழாண்டுகளுக்குள், அனைவருக்கும் வீடு ... |
| சுஷ்மாவை சுழற்றி அடிக்கும் பிரச்னைகள் Posted: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, அமலாக்க இயக்குனரகத்தால் தேடப்படும், ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடி, லண்டனில் பதுங்கியுள்ளார். அவர், லண்டனில் இருந்து, போர்ச்சுகல் நாட்டிற்கு, மனைவியை பார்க்க செல்ல, வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ், 63, உதவி செய்தார் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக நேற்றைய பரபரப்பு தகவல்கள்:*தன் மீதான புகார்களுக்கு அமைதி காத்து வந்த சுஷ்மா, அவரின் மகள் பன்சூரி, லலித் மோடியின் தயவால் தான், மருத்துவ கல்லுாரியில் சேர்ந்து படித்தார் என, தகவல்கள் ... |
| விமான பணிப்பெண்ணிடம் எம்.பி., ரகளை: செருப்பை காட்டி மிரட்டியதால் சர்ச்சையில் சிக்கினார் Posted: புதுடில்லி: ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவரும், லோக்சபா எம்.பி.,யுமான பப்பு யாதவ், டில்லி சென்றபோது, விமானப் பணிப் பெண்ணிடம் போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. |
| கெஜ்ரிவால் உட்பட 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்குகள் Posted: புதுடில்லி: அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில், 21 எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, டில்லி போலீசார், ஆறு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இரண்டு வழக்குகளை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான வழக்கு கள், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது; போராட்டம் செய்தது போன்றவையே.கெஜ்ரிவால் அரசில் துணை முதல்வராக இருக்கும் மணிஷ் சிசோடியா மீதும் வழக்குகள் உள்ளன. ... |
| ஜெ., மீதான 'அப்பீல்' அடுத்த வாரம் தாக்கல்: கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தகவல் Posted: பெங்களூரு : தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 'அப்பீல்' செய்யும் பணிகள், துரித கதியில் நடந்து வருகிறது. அடுத்த வாரத்தில், உச்ச நீதிமன்றத்தில், அப்பீல் செய்யப்படும், என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி குன்ஹா அளித்த தண்டனையை எதிர்த்து, நான்கு பேரும், கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், ... |
| பத்திரிகா தர்மம் ஆகுமா? கருணாநிதி கேள்வி Posted: சென்னை : ''உண்மைக்கு மாறான செய்திகளை, உண்மை போல திரித்து, பொதுமக்களை குழப்பி, திசை திருப்புவதற்காக வெளியிட்டால், அது, பத்திரிகா தர்மம் ஆகுமா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.அவர், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:''power corrupts; Absolute power corrupts Absolutely'' - என்பது ஆங்கிலப் பழமொழி!அதாவது - அதிகாரம், ஊழலுக்குக் காரணமாகிறது; முழு அதிகாரம், முழுமையான ஊழலுக்குக் காரணமாகிறது.லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும், குற்றவாளிகள் அல்ல; லஞ்சம் கொடுப்பவர்களும், குற்றவாளிகள் தான் என்பது சட்டம்! தான் லஞ்சம் வாங்கும் செய்தியை, யார் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்களோ, அவர்களையே, எந்த ... |
| டூவீலர் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும் 'ஹெல்மெட்' கட்டாயம் Posted: சென்னை: 'அடுத்த மாதம், முதல் தேதி முதல், இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வோர் மற்றும் உடன் பயணிப்போர், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது; பின் இருக்கையில், பெண்கள் அமர்ந்திருந்தால், அவர்களும் கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.'தமிழகம் முழுவதும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், ஜூலை முதல் தேதி முதல், கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும். இதை தமிழக உள்துறை மற்றும் டி.ஜி.பி., நிறைவேற்ற வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம், சமீபத்தில் உத்தர விட்டது. |
| பள்ளி புத்தகத்தில் கருணாநிதி, 'மாஜி' அமைச்சர் பெயர்: பக்கங்களை நீக்க அதிகாரிகள் ஆலோசனை Posted: தமிழக பாடநுால் கழகத்தின் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பெயர்களை நீக்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 2011 முதல், சமச்சீர்க்கல்வி பாடத்திட்டம் அமலில் உள்ளது. 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் இன்னும் மாற்றப்படவில்லை. இந்நிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொருளியல் பாடத்துக்கான, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகங்களின் முகவுரையில், ... |
| உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக "கத்தார்' தேர்வு Posted: தோஹா: உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக "கத்தார் ஏர்லைன்ஸ்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் அன்று பாரிஸ் விமான கண்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்விருது அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. "ஸ்கைடிராக்ஸ்' எனப்படும் விமான போக்குவரத்து நுகர்வோர் இணையதளம் ஒவ்வொரு ஆண்டும், உலகின் 110 நாடுகளில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட விமானப் பயணிகளிடம் சிறந்த விமான சேவை நிறுவனம் பற்றிய கருத்துக் கணிப்பை நடத்துகிறது. பாதுகாப்பான பயணம், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு, பானங்களின் தரம், கனிவான சேவை, நல்ல வசதிகளுடன் கூடிய இருக்கைகள், அழகான ... |
| ரபேல் போர் விமான ஒப்பந்தம் சில மாதங்களில் முடியும்: பிரான்ஸ் Posted: பாரீஸ்: இந்தியாவுக்கு ரபேல் ரக போர் விமானங்களை விற்பது குறித்த ஒப்பந்தம் இன்னும் 3 மாதங்களுக்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரான்ஸ் கூறியுள்ளது.இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் நோக்கத்தில், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது. சுமார் 5.5 பில்லியன் டாலர் செலவில் இந்த விமானங்களை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பாஜ அரசின் இத்திட்டத்தை காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. பிரான்ஸ் உடன் இந்தியா நடத்தி வரும் பேச்சுவார்த்தையிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக முதலில் தகவல்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 18,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |