Tamil News | Online Tamil News |
- அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சேர மறுதேர்வு: நான்கு வாரத்துக்குள் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை: மருந்துகளில் புதுவிதமான பித்தலாட்டம்
- யோகா கலையை அனைவரும் கற்று கொள்ள வேண்டும்: கருணாநிதி
- மீண்டும் எகிறியது பெட்ரோல்; குறைந்தது டீசல்
- ஆட்கடத்தல் கும்பல் கைவரிசை: அவலத்தில் மியான்மர் தமிழர்கள்
- லலித் மோடி விவகாரம் வெடித்தது ஏன்? உட்கட்சி மோதல் என்கின்றன வட்டாரங்கள்
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க வாய்ப்பு: முதன்முறையாக பீகார் தேர்தலில் அறிமுகம்
- தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படும் அரசு : ராகுல் தாக்கு
- போக்குவரத்து விதிகளை மீறுவோர் சமூக சேவை செய்ய பரிந்துரை
- உலகின் 6வது பெரிய நிலக்கரி நிறுவனமானது இந்திய நிலக்கரி நிறுவனம்
- மத்திய அரசிடம் கெஜ்ரிவால் சரண்டரா?
- 16 வழக்குகளில் லலித் மோடி மீது ரூ. 1700 கோடி அபராதம் விதிக்க முடிவு
| Posted: புதுடில்லி: நாடு முழுவதும், கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற, ஏ.ஐ.பி.எம்.டி., எனப்படும், அனைத்திந்திய மருத்துவ மாணவர் நுழைவுத்தேர்வை, நேற்று ரத்து செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், நான்கு வாரங்களுக்குள், மறு தேர்வு நடத்தி, மாணவர்களைத் தேர்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.மருத்துவக் கல்லுாரிகளில், மத்திய அரசின் ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வு, மே 3ம் தேதி நடைபெற்றது; 6.3 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வு முடிவு, ஜூன் 5ம் தேதி வெளியாக இருந்தது. |
| இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை: மருந்துகளில் புதுவிதமான பித்தலாட்டம் Posted: அடுத்த ஆண்டு தேதியிட்டு உற்பத்தியான மருந்து, இன்றே சந்தையில் கிடைக்கும் ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகள், இப்படி முன்கூட்டியே சந்தைக்கு வருவதன் மர்மம் என்ன என, நுகர்வோர் அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளன. தர நிர்ணய விதிகள்: |
| யோகா கலையை அனைவரும் கற்று கொள்ள வேண்டும்: கருணாநிதி Posted: சென்னை: 'யோகா கலையை, அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது, என் விருப்பம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:வரும் 21ம் தேதி, சர்வதேச யோகா தினம், மத்திய அரசு கொண்டாட உள்ளது.யோகாவை, பெரிதும் விரும்புவன் தான் நான்; அந்த கலையை, அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது, என் விருப்பம்.அரசின் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடுவது பற்றி, சீத்தாராம் யெச்சூரியிடம் கருத்து கேட்ட போது, அவர் கூறியது, அலட்சியப்படுத்தக்கூடியதல்ல.அதாவது, நாட்டில் உள்ள குழந்தைகளில், ஒரு கோடியே, 95 லட்சம் சதவீதத்தினர், போதிய சத்துணவு இன்றி வாடிக் ... |
| மீண்டும் எகிறியது பெட்ரோல்; குறைந்தது டீசல் Posted: புதுடில்லி: பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 64 காசுகள் நேற்று, உயர்த்தப்பட்டது. டீசல் விலை, லிட்டருக்கு, 1.35 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் விலை, கடைசியாக, கடந்த மே 15ம் தேதி உயர்த்தப்பட்டது. அப்போது, பெட்ரோல், லிட்டருக்கு, 3.13 ரூபாயும், டீசல், லிட்டருக்கு, 2.71 ரூபாயும் உயர்த்தப்பட்டது.இந்நிலையில், பெட்ரோல் விலை நேற்று, மீண்டும், 64 காசுகள் உயர்த்தப்பட்டது. மாறாக, டீசல் விலை லிட்டருக்கு, 1.35 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த விலை மாற்றம், நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.நேற்றைய விலை உயர்வை அடுத்து, பெட்ரோல் விலை, சென்னையில் லிட்டருக்கு, 70.10 ரூபாயாக ... |
| ஆட்கடத்தல் கும்பல் கைவரிசை: அவலத்தில் மியான்மர் தமிழர்கள் Posted: கோலாலம்பூர்: மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் படும் துயரை விட, அங்குள்ள சிறுபான்மை தமிழர்கள், ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கி, சொல்லொணாத் துயரை அனுபவித்து வருகின்றனர்.அண்டை நாடுகளில் அடைக்கலம் புகும் ரோஹிங்யா மக்களுக்காவது, அகதிகள் என்ற அந்தஸ்து கிடைக்கிறது.ஆனால், தமிழர்களுக்கு, அது கூட கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சி தகவலை மலேசியாவின், 'ஸ்டார் பேப்பர்' தெரிவித்துள்ளது.மலேசியாவில் சட்டப்பூர்வமாக குடியேற்றுகிறோம் என, ஆட்கடத்தல் கும்பல் கூறுவதை நம்பி, அவர்களிடம் மியான்மர் தமிழர்கள் பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர்.ரோஹிங்யாவினருடன், ... |
| லலித் மோடி விவகாரம் வெடித்தது ஏன்? உட்கட்சி மோதல் என்கின்றன வட்டாரங்கள் Posted: லலித் மோடி விவகாரத்தில், அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குற்றம் செய்துள்ளாரா, அல்லது பலிகடா ஆக்கப்பட்டுள்ளாரா என்ற புதிய சந்தேகம், பா.ஜ.,வுக்குள் நிலவுகிறது. இதே சந்தேகத்தை, காங்., - ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகளும் எழுப்பியுள்ளதால், இப்பிரச்னையில், மேலும் பரபரப்பு கிளப்பியுள்ளது. |
| வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க வாய்ப்பு: முதன்முறையாக பீகார் தேர்தலில் அறிமுகம் Posted: புதுடில்லி:வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாங்கள் வசிக்கும் நாடுகளில் இருந்தவாறே, பீகாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க வாய்ப்பு கிடைக்க உள்ளது. அதற்கு முன், மத்திய அரசு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்தால், வெளிநாடுகளில் வசிக்கும், 1 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள், தங்கள் ஓட்டுரிமையை செயல்படுத்த முடியும்.ஜனநாயகத்தின் அடிப்படை அடையாளமாக விளங்குவது தேர்தல். குடிமக்களில் தகுதியுடையோருக்கு ஓட்டுரிமை வழங்கப்படுகிறது. அதாவது, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்படுகிறது. |
| தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படும் அரசு : ராகுல் தாக்கு Posted: கோர்பா: ''மத்திய அரசு, சில தொழிலதிபர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களால், மலைவாழ் மக்களுக்கு உரிய பலன்கள் கிடைப்பதில்லை,'' என, காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். சத்தீஸ்கரில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, காங்., துணைத் தலைவர் ராகுல், தலைநகர் ராய்ப்பூருக்கு 300 கி.மீ., தொலைவில், கனிம சுரங்கங்கள் அதிகமுள்ள, கோர்பா மாவட்டத்துக்கு நேற்று சென்றார். அங்கு, பல்வேறு கிராமங்களுக்கு சென்று, அப்பகுதி மக்களை சந்தித்து பேசினார். மலைவாழ் மக்களையும் அவர் சந்தித்தார். அப்போது, மலைவாழ் மக்களிடையே, ... |
| போக்குவரத்து விதிகளை மீறுவோர் சமூக சேவை செய்ய பரிந்துரை Posted: புதுடில்லி: போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், தண்டனையாக சமூக சேவை செய்வதற்கான பரிந்துரை, மத்திய போக்குவரத்து துறையின், புதிய வரைவு மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.கடந்த 2012ம் ஆண்டு, வேகமாக காரை ஓட்டி, போக்குவரத்து விதிகளை மீறிய, அமெரிக்காவின் பிரபல நடிகையும், மாடலுமான லிண்ட்சே லோஹானுக்கு, அபராதத்துடன், 125 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்று, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.அபராத தொகையை செலுத்திய லிண்ட்சே, சாலைகளை சுத்தப்படுத்துதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தோட்டம் அமைத்தல் போன்ற வேலைகளை ... |
| உலகின் 6வது பெரிய நிலக்கரி நிறுவனமானது இந்திய நிலக்கரி நிறுவனம் Posted: மும்பை: இந்திய நிலக்கரி நிறுவனம் உலக அளவில் விற்பனை மற்றும் உற்பத்தியில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் உலகில் முன்னணியாக விளங்கும் 40 சுரங்க நிறுவனங்களில் எட்டாவது இடத்தில் இருந்தது. "மைன் ' என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் உலகில் உள்ள 40 பெரிய சுரங்க நிறுவனங்களின் செயல்பாடுகளையும், விற்பனை விவரங்களையும் சேகரித்து அறிக்கை வெளியிடுகிறது. அதில் உலகில் உள்ள பெரிய சுரங்க நிறுவனங்களின் விற்பனை 2013 ல் இருந்ததை விட பத்து சதவிகிதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கிறது. விற்பனை சரிவுக்கு காரணம் பல புதிய இரும்பு தாது சுரங்கங்கள் ... |
| மத்திய அரசிடம் கெஜ்ரிவால் சரண்டரா? Posted: புதுடில்லி:''மாநில அரசு நிர்வாகத்தை சுமுகமாக நடத்துவதற்கு, மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் ஆகிய விஷயங்களில் கவர்னர் நஜீப் ஜங்கிற்கும், முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால், நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இந்த விவகாரத்தில், கவர்னருக்கு ஆதரவாக, மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து ... |
| 16 வழக்குகளில் லலித் மோடி மீது ரூ. 1700 கோடி அபராதம் விதிக்க முடிவு Posted: புதுடில்லி: சர்ச்சைக்குள்ளான பிரிமியர் லீக் கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது 16 வழக்குகளின் கீழ் ரூ. 1700 கோடி அபராதம் விதிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பூதாகரமாக வெடித்துள்ளது.சட்டவிரோத பணி பரிமாற்றம் ,வரிஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கிய லலித் மோடி தேடப்படும் குற்றவாளியாக மத்திய அமலாக்கத்துறை அறிவித்திருந்தது. லண்டனில் தலைமறைவாக உள்ளார்.போர்ச்சுகலில் சிகிச்சை பெற்று வரும் தனதுமனைவியை சந்திக்க பயண ஆவணங்களை சரி செய்ய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியதாக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 16,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |