ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இதோ ஒரு சாரதி
- தமிழன்
- INS Vishal விமானம் தாங்கி போர்கப்பல்
- அரசி (Queen- Pablo Neruda)
- மொழி பெயர்ப்பு ஹைக்கூ கவிதைகள்
- இருள்
- மேலூர் தென்றலின் கவிதைகள் - 3 வாழ்க்கை
- மேலூர் தென்றலின் கவிதைகள் - 4 அக்னிக்குஞ்சு
- வாழ்க்கை
- காத்திருப்பு
- மேலூர் தென்றலின் கவிதைகள் - 5 அகம்
- மேலூர் தென்றலின் கவிதைகள் - 6 படிப்பு 2
- மேலூர் தென்றலின் கவிதைகள் - 7 பிராயசித்தம்
- மேலூர் தென்றலின் கவிதைகள் - 9 மனிதம்
- மேலூர் தென்றலின் கவிதைகள் - 10 வாழ்க்கை
- விவசாய தினம்
- வாழ்க்கை
- மேலூர் தென்றலின் கவிதைகள் - 12 அழுகை
- மேலூர் தென்றலின் கவிதைகள் - 13 இதற்காகத்தான்...
- ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
- ஓங்காரம் பண்ணி விடு !
- ஈழம்
- களவாடப்பட்ட பொழுதுகள்!
- பாரதி கண்ட புதுமைப் பெண்
- அன்பை செதுக்கிய சிற்பி அம்மா!-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- அம்மா-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- மூட நம்பிக்கை தான்!
- உள்ளம் விற்கும் உலகு-: கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- சற்று ஏதாவது செய்!
- கிழட்டுப் பருவம்..!! - Mano Red
- ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
- மனம் பறி போனது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- அப்பா ! கவிஞர் இரா .இரவி !
- கொடியது மது !கவிஞர் இரா .இரவி !
- கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி !
- ஹைக்கூ கவிஞர் இரா இரவி
- ஹைக்கூ கவிஞர் இரா இரவி
- ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
- ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
- ஹைக்கூ கவிஞர் இரா இரவி
- உதிர அருவியில் மூழ்கும் பர்மா-முஹம்மத் ஸர்பான்
- ஹைக்கூகள்-முஹம்மத் ஸர்பான்
- அம்பலம் ஏறும் அம்மணம்!
- தோழன் சே குவேரா..!! -Mano Red
- கண் திருஷ்டி ...!
| Posted: 14 Jun 2015 08:09 PM PDT இதோ ஒரு சாரதி அன்று பார்த்தனுக்கு , அவர் பார்த்தசாரதி . காலம் மாற்றிய கோலம் இன்று இந்த பார்த்தசாரதிகளுக்கு , இவர் ஒரு சாரதி ரமணியன் |
| Posted: 14 Jun 2015 08:09 PM PDT தமிழர்கள் பலர் அயல்நாட்டில் அடிமையாக வாழ்ந்துகொண்டுஇருக்க சுதந்திர இந்தியா என்று மார்தட்டி உன்னையே நீ ஏமாற்றிகொள்ளாதே ? |
| INS Vishal விமானம் தாங்கி போர்கப்பல் Posted: 14 Jun 2015 08:07 PM PDT . இந்திய கப்பல் படையில் வருகின்ற 2025 இல் சேர்க்கப்படும் உலகின் அதி நவீன விமானம் தாங்கி போர்கப்பலான INS Vishal மாதிரி வடிவம் This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 14 Jun 2015 08:04 PM PDT நான் உன்னை அரசியாக்கினேன். உன்னை விட உயரமானவர்கள் உண்டு; உன்னை விட தூய்மையானவர்கள் உண்டு; உன்னை விட அழகானவர்கள் உண்டு; ஆனால் அரசி நீயே. நீ வீதிகளில் நடக்கும் போது ஒருவரும் உன்னை உணர்வதில்லை; உனது வெண்கிரீடத்தை எவரும் காண்பதில்லை; நீ நடக்கும் சிவப்புக் கம்பளத்தை யாரும் பார்ப்பதில்லை. (அப்படியொரு கம்பளம் இருந்ததேயில்லை) நீ தோன்றும் போது, நதிகள் என் உடலில் ஓலமிடுகின்றன; மணியோசை ஆகாயத்தை அசைக்கிறது; இசை இவ்வுலகை நிறைக்கிறது. நீயும் நானும் மட்டும்- அன்பே, நீயும் நானும் ... |
| மொழி பெயர்ப்பு ஹைக்கூ கவிதைகள் Posted: 14 Jun 2015 08:04 PM PDT *ஓரு விரைவாக ஓலிக்கிறது கருமையான இருளின் ஊடே பயணம் செய்கிறது இரவு நாரைகள் கூவுகின்றன. -பாசோ *எதுவும் நிகழலாம் அது குறித்து பேசாமல் அமைதிக்காகச் செயல்படுங்கள். -க்யோரை . *வாருங்கள் போகலாம் பனிப் படலம் பார்க்க நாம் அதில் புதையுண்டு போகும் வரை. பாசோ. *பிணத்தின் மேல் இருக்கும் பூமாலையை பட்டாம்பூச்சி விருப்பத்துடனேயே அணுகிறது. -மீசெட்சூ. |
| Posted: 14 Jun 2015 08:02 PM PDT இருளின் நிசப்தம் அலாதியானது இமைகளின் மூடலில் இருளின் தேடலில் இதயத்தின் ஒலியும் இனிய இசையாகும் .....!!! |
| மேலூர் தென்றலின் கவிதைகள் - 3 வாழ்க்கை Posted: 14 Jun 2015 08:02 PM PDT வாழ்க்கை பத்தாம் வகுப்பில் பத்மா அழகானவள் அவளைக் கவர்வதற்காக எத்தனையெத்தனை முயற்சிகள். பிளஸ் - டூ படிக்கும்போது பிரேமா அழகானவள் பிரேமா பேசிய ஒவ்வொரு வார்த்தையுமே கவிதை கவிதை. கல்லூரியில் காயத்ரி அழகானவள் சிரிப்பு கண் பாஷை கவிதை. இரவும், பகலும் மாறி மாறி நாட்காட்டிகளை மெலிய வைத்தன. நிரந்தர வேலையின்றி மனம் நொந்து திரிந்த சந்தர்ப்பங்களில்... பத்மாவை பரமக்குடியிலும், பிரேமாவை மதுரையிலும், காயத்ரியை கணக்கன்பட்டியிலும், பார்த்தேன். தலைநிறைய மல்லிகைப்பூ தளும்பிய ... |
| மேலூர் தென்றலின் கவிதைகள் - 4 அக்னிக்குஞ்சு Posted: 14 Jun 2015 08:01 PM PDT அக்னிக்குஞ்சு கவிதையெழுதும் ஆசை ஊற்றுநீராய் பெருகிவரும் வேளை சம்மட்டி அடியொன்று அதன் தலையில் வலுவாய் விழுந்தது. கவிதை எதற்கு உனக்கு? கணக்கெழுது காசாவது கிடைக்கும் தாய், தந்தை அண்ணன், தங்கையின் அபாரமான அறிவுரைகள். குறிப்பேடுகளிலும், பேரேடுகளிலும் மூழ்கிப்போனது மூளை கவிதை போனது ஓர் மூலை. என்றாவது ஒருநாள் அடங்கிப்போன கவிதை ஊற்று ஆக்ரோஷமாய், அக்னிக்குழம்பாய் பீறிட்டுக் கிளம்பும் முழு வீரியத்துடன்.... அப்போது, கவிதையில் மறையும் குறிப்பேடும், பேரேடும்.... |
| Posted: 14 Jun 2015 08:01 PM PDT நம் வாமும் போகும் காலத்தை வருடத்தில் எண்ணாதிர்கள் நாள்கள் எண்ணுகள் அப்போது தெரியும் தப்புகள் குறையும் பிற உயிர்கள் இடத்தில் அன்பு மேல்ஓங்கும்........... ![]() |
| Posted: 14 Jun 2015 08:01 PM PDT வானம் ஏற்றிவைத்த நிலா வெளிச்சத்துல தெருவிளக்கும் சேர்ந்து போட்டிபோட வாசல் முற்றத்தில் காதுகுடையும் தாத்தாவோடும் கண்டிக்கும் பாட்டியோடும் கதைபேசி மகிழும் அம்மாவோடும் கண்ணாமூச்சி விளையாடும் அக்காவோடும் காத்திருக்கிறேன் நான்.... வேலைமுடிந்து வேர்க்கடலை வாங்கிவரும் அப்பாவுக்காக.... |
| மேலூர் தென்றலின் கவிதைகள் - 5 அகம் Posted: 14 Jun 2015 08:00 PM PDT அகம் என் புருஷன் அழகில்லையென அவளும், என் மனைவி அசிங்கமானவளென அவனும், அலுத்துக் கொண்டனர் உள்ளம் பிரதிபலிக்க வரவில்லையின்னும் ஒரு கண்ணாடி. |
| மேலூர் தென்றலின் கவிதைகள் - 6 படிப்பு 2 Posted: 14 Jun 2015 08:00 PM PDT படிப்பு 2 எம்.ஏ., எம்.எட்., படித்து முடித்தும் வேலையின்றி பலர், எட்டாம் வகுப்புடன் ஊரைவிட்டு ஓடியவர்கள் லட்சாதிபதிகளாய், வாழ்க்கையென்பது அரிச்சுவடி படிப்பதல்ல சம்பாத்யம் படிப்பது... |
| மேலூர் தென்றலின் கவிதைகள் - 7 பிராயசித்தம் Posted: 14 Jun 2015 08:00 PM PDT பிராயசித்தம் சாலைகளில் திரியும் அனாதைகளைப் பார்க்கும்போது கண்ணீர் தளும்பி வழிகிறது. மழைத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓலைக்குடிசைகளை மூழ்கடித்தபோது மனம் கலங்குகிறது. என் மனைவிக்கும் இப்போது வயதாகி விட்டது. இப்போதெல்லாம் உதவும் கரங்கள் அமைப்பிற்கு பணம் அனுப்பத் தவறுவதில்லை ஒவ்வொரு மாதமும். ஒருவேளை அப்பா அங்கிருந்தாலும் இருக்கக்கூடும். |
| மேலூர் தென்றலின் கவிதைகள் - 9 மனிதம் Posted: 14 Jun 2015 07:59 PM PDT மனிதம் கத்தின கட்டப்பட்ட ஆடுகள் துள்ளின அடைபட்ட கோழிகள் அய்யனார் கோவில் திருவிழா வீடுகளில் ஆட்டுக்கறி, கோழிக்குழம்பு தெருவே மணந்தது மனிதர்களின் முகங்களில் மகிழ்ச்சி அய்யனார் முறுக்கிவிடப்பட்ட மீசையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் எவ்வித சலனமுமின்றி... |
| மேலூர் தென்றலின் கவிதைகள் - 10 வாழ்க்கை Posted: 14 Jun 2015 07:59 PM PDT வாழ்க்கை வேகவைத்த முட்டை ஆம்லெட் ஆஃப் பாயில் முட்டைப் பொரியல் இன்னபிற சுவையான அயிட்டங்கள் மெனுகார்டில் கண்முன்னே ஆடியது குஞ்சின் சிறகுகள் |
| Posted: 14 Jun 2015 07:58 PM PDT ஒரு வேல சோறு தின்ன உசுரகொடுத்து வேல செஞ்சி நீ மூணு வேல நிம்மதியா இருக்க தன் ரத்தசிந்தி வேல பாக்கும் ஒவ்வொரு உழவனுக்கும் இனிய விவசாய தின வாழ்த்துகள் |
| Posted: 14 Jun 2015 07:58 PM PDT வாழ்க்கை நமக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழலாம் . |
| மேலூர் தென்றலின் கவிதைகள் - 12 அழுகை Posted: 14 Jun 2015 07:57 PM PDT அழுகை நேற்று.. அவன் இறந்தபோதும் இப்படித்தான் அழுதார்கள். இன்று.. அவனை மறந்துவிட்டார்கள். இன்று.. இவன் இறந்துவிட்டான். அப்படியேதான் அழுகின்றனர். நாளை.. இவனையும் மறந்துவிடுவார்கள். மற்றொருநாள் வேறொருவன் இறந்தாலும் அப்படியேதான் அழுவார்கள். |
| மேலூர் தென்றலின் கவிதைகள் - 13 இதற்காகத்தான்... Posted: 14 Jun 2015 07:55 PM PDT இதற்காகத்தான்... அவர் கொஞ்சம் கறுப்பு அதனாலென்ன? பல் கொஞ்சம் தூக்கல் பரவாயில்லை. முன்கோபம் அதிகமாம் சமாளித்துக் கொள்கிறேன். சிகரெட்டும், தண்ணியும் பழக்கமுண்டாம் சகித்துக் கொள்கிறேன் அவர் தாலிகட்ட வசதியாய் தலைகுனிந்தேன். என் பெற்றோர் முகத்தில் சிரிப்பு நிலைத்திருந்தது. இதற்காகத்தான்... |
| Posted: 14 Jun 2015 07:54 PM PDT பதற்றம்…!! * பார்வை எதிலோ லயித்திருந்தது எதையோ நினைக்கிறது மனம் சுடர்விடும் சிந்தனையில் சூரியன். * எதிர்ப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் ஏமாந்தவர்களுக்கு பதற்றம் சலசலத்து ஒடுகிறது ஆற்றுநீர். * இன்னும் எவரொருவராலும் முழுமையாக எழுதப்படவில்லை எந்தக் கேள்விக்குமான பதில். ந.க. துறைவன் * |
| Posted: 14 Jun 2015 07:54 PM PDT கும்பி கொதித்தென் குருதி துடிக்குதடி! குவலயத்தின் அவலம் தனை குமுறி மனம் கொட்டுதடி! ஆவி பதறியென் ஆதங்கம் பொங்குதடி ஆகாத பாவமெல்லாம் ஆகுதியாகுமாடி!? பெறு மகளை பெண்டாழும் பேடித்தன உலகமடி கர்ப்பத்தை பகிர்ந்தவளை கற்பழிக்கும் கயமையடி !? வேட்டையாடும் வேலிக்குள் வெள்ளாட்டுக் கூட்டமடி வெளியிலிருந்து நரி வந்தா பலியெடுக்க வேண்டுமடி!? பெற்ற மகள் என்னையவள் மாற்றானாய் பார்க்கையிலே ஆணாய் நான் பிறந்த தவமானம் தானேடி !? தீட்டான உறவுகளால் தீய்ந்து விட்ட மரபுகளால் தீராத பழி சுமந்து தீக்குளிக்க ... |
| Posted: 14 Jun 2015 07:53 PM PDT ஈழம் என்ற வார்த்தை சங்க இலக்கியங்களில்உயிர் பெற்றது பாடல் பாடிய புலவரின் பெயரும் ஈழத்து பூதந் தேவனார் அதற்கு முன்பே இலங்கை தீவுக்கு ஈழம் என்ற நாமம் வந்தது. ஒரு தேசத்தின் யுத்தம் முப்பது ஆண்டுகள் தாண்டிய இரத்தம் வடக்கு –கிழக்கு எங்கள் தாயம் வாழ்வோம் அதில் மட்டுமே என்ற எண்ண குமுறல்கள் ஈழத்து தந்தை செல்வா தொடக்கம் ஒவ்வொரு தமிழனின் காதிலும் எழுச்சி குரலாக எழுந்தது அந்த எழுச்சியின் வளர்ச்சிதான் தனி ஈழம் என்ற கொள்கை ஒளிர்ந்தது. உறவுகளை இழந்தோம் உரிமையும்இழந்தோம் எப்போது ஈழம் ... |
| Posted: 14 Jun 2015 07:53 PM PDT - முன்பு… அலுவலகம் சென்று வேலை பார்ப்பது என்றால் அனைவருக்குமே அலாதி இன்பம் தான்! அலுவலகத்தில் நுழையும் போதே… ஆங்காங்கே புன்னகை தென்றலும் நட்பு மலர்களும் பூத்து நல்லிணக்க வாசம் வீசும்! சிறகடித்து பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளாய் இங்குமெங்கும் சுறுசுறுப்பாய் இயங்கும் காட்சி காண்போர் விழிகளை வியக்க வைக்கும்! விதவிதமான அனுபவங்கள் வியக்க வைக்கும் படிப்பினைகள் என பயிற்றுவிக்கும் பட்டறையாய் அலுவலகம் திகழ்வதால் பணிபுரிவோருக்கு அது ஓர் பல்கலைக்கழகம்! வாழ்க்கை வளமாக எண்ணற்ற ... |
| Posted: 14 Jun 2015 07:53 PM PDT ஆங்கில வல்லாதிக்க சக்தியுடன் வெற்றித் திலகமிட்ட வீர மங்கை தன்நம்பிகை தளராத மன உணர்வுடன் வீரவாள் கொண்டு குதிரைப்படை கொண்டு வெள்ளைக்காரனை புறமுதுகு காட்டி ஓடஓட விரட்டியவள் பாரதி கண்ட புதுமை பெண் அல்லவா அவள்தான் வீர மங்கை வேலு நாச்சியார். அன்று சொன்னான் சமைக்கும் கரங்களும் சரித்திரம் படைக்கும் அதை பூமி பார்க்கவேண்டும்…..என்ற பாடல் தற்கால யுகத்தில் ஆணுக்கு பெண் சரி நிகராக வாழும் காலம் கண் முன்னே கடவுள் சாட்சியாக விரிகிறது. உழைப்பின் சுகமறிந்த பெண்கள் இன்று வானளவில்கொடிகட்டிபறக்கிறார்கள். வண்ண ... |
| அன்பை செதுக்கிய சிற்பி அம்மா!-கவிஞர் முஹம்மத் ஸர்பான் Posted: 14 Jun 2015 07:48 PM PDT உன் வயிற்றில் எட்டி உதைத்த உதைகள் அதிகம்-அந்த வலியும் சுகமென்று என்னை தாங்கினாய்யமா. பத்து திங்களிலே அல்லும் பகலும் உடல் வருத்தி என் குழந்தையே! என்று பாசத்தோடு என்னை காத்தாய்யம்மா. பிரசவ வலியில் துடிதுடித்து சுவனச்சோலை வாசலடிக்குச் சென்று மறுஜென்மம் பிறப்பெடுத்து என்னை ஈன்றவளே.....!!!!!!!!!! உன் உடலும் உள்ளமும் என்னால் பட்ட வேதனை மறந்து ஈன்றெடுத்த மறுநொடியில் உன் மார்பிலணைத்து நோவினை மறந்து பாசத்தோடு முத்தமிட்டாய். உனக்கு செய்த கொடுமைகள் போதாது என்று உன் உடலில் ... |
| Posted: 14 Jun 2015 07:48 PM PDT பிறப்புறுப்பை கிழித்து உதிரமுலாம் பூசி பத்து திங்களிலே ஜீவன் வெளிவர 'அய்யோ அம்மா'என்று வேதனையால் துடித்து கடவுளிடம் சேயையும் எமனிடம் தன்னையும் அடகு வைத்த கண்கண்ட தெய்வம் ஆத்தா. சேய்யில் மார்பை பற்றி பிடித்தேன். குழந்தையில் மடியை நாடி நின்றேன். வளர்ந்ததும் பாதத்தில் கிடந்து உனக்கு பணிவிடை செய்தாலும் உன் பாசத்திற்கு ஈடாகுமா? நீ எனக்கு அன்னமூட்டுவதனால் தான் அம்மா அதற்கு நிலாச்சோறு என்று பெயரா? நான் அழுதாலும் நீ அழுவாய் சிரித்தாலும் உன் கண்கள் ஆனந்த நீரை ஊற்றெடுக்கும். உன் ... |
| Posted: 14 Jun 2015 07:48 PM PDT அகாலத்தில் அகாலமாக்கப் பட்டவர்கள் தமை அகாலமாக்கியவர்களை ஆவியாக வந்து அழித்தொழிப்பார்கள்! என்பது மூடநம்பிக்கை தான்! ஆனால் சொந்த மண்ணில் அகமிழந்து சுயமிழந்து ஓட ஓட விரட்டப்பட்டு செந்தழழில் வெந்தழிந்து குருதிச்சகதியில் உழுதழிக்கப்பட்ட நம் உறவுகளை அழித்தொழித்த கயவர்களின் எக்காள முழக்கங்கள் கேட்கும் போது மூர்க்கத் தனமாக ஏங்குகிறேன் அது உண்மையாகக் கூடாதா!!!? இன்று மே 17 -தமிழினியன்- |
| உள்ளம் விற்கும் உலகு-: கவிஞர் முஹம்மத் ஸர்பான் Posted: 14 Jun 2015 07:47 PM PDT மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம் மனச்சாட்சி கொன்றவர்க்கே பொருட்ச்செல்வம் குவியும் தாயை கைவிட்டார்கள் சேய் எனும் நயவஞ்சகர்கள் ஆத்திகன் தன்னையே விமர்சித்தான் நாத்திகன் உலகையே விமர்சித்தான். அகரத்தில் தவழ்கிறது நன்மை சிகரத்தில் கொடிகட்டி பறக்கிறது பாவம் மகப்பேற்றின் புனிதம் அறியாதவள் குழந்தையை தாலாட்டுகிறாள் குப்பைதொட்டியினால் சிலை செய்யும் கல் தான் சாலையில் தெருநாய் துறத்தும் ஆயுதம் பல்கலைக்கழகம் எனும் ஓவியம் தினந்தோறும் எழுதுகிறது காதல் காவியம் வைத்தியன் ... |
| Posted: 14 Jun 2015 07:47 PM PDT உதிரும் நிமிடத் துளிகள் உனைக் கடந்து போகும் ! உலகிலோர் உயர்திணையாய் உதித்து நீ என்ன செய்தாய்? ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என்று போக நீ என்னவோர் அஹ்ரினைப் பூச்சியா? உன்னுயிர் உதிர்ந்தழிந்து உலர்ந்து போகுமுன் உலகம் உள்ள வரை உன்நாமம் உயிர் வாழ உயர்திணையாய் உதித்து நீ என்ன செய்தாய்? எண்ணூறு கோடியில் எப்படி உன் பெயர் பதிப்பாய்? புத்தன் இயேசு காந்தி அன்னை தெரேசா நெல்சன் மண்டேலா ஏன் ஹிட்லரும் இடியமீனும் கூட இன்னும் பெயர் வாழ்கையில் நீ யாராய் பெயர் ... |
| கிழட்டுப் பருவம்..!! - Mano Red Posted: 14 Jun 2015 07:47 PM PDT ] முதுமையின் பருவ வயது அது..!! இரண்டு மனைவிகள் தவறியிருந்தாலும், மூன்றாவது காலின் முக்கிய துணை(வி)யுடன் தவறாமல் இருப்பவர்..!! ஒரு குரல் கேட்டு ஓடி ஓடி வேலை செயதவர்கள் அவர் முதுமையின் தொல்லையால் எங்கோ ஓடிவிட்டனர்..!! இப்போது அவரின் காது கூட எதுவுமே கேட்பதில்லை..!! நாட்டு நடப்புகளை தினசரியில் தினசரி மேயந்தவருக்கு, நரை வந்து நடை தளர்ந்து நடப்பதற்கு முடியாத போது செய்தி சொல்ல ஆளில்லை..!! தரையில் எதையோ தடவிக் கொண்டிருந்தார்..!! கண்ணாடியால் பதித்த அத்தனை பெரிய வீட்டில் கீழே ... |
| ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான் Posted: 14 Jun 2015 07:47 PM PDT வலி ------- பார்வையில்லாதவன் பேனா விற்று வாழ்கிறான். உள்ளம் ஊனமானவன் யாசிக்கின்றான். வயல் --------- பச்சை சேலையுடுத்த கன்னி ஒருத்தி நாட்டியமாடி சிரிக்கின்றாள். கணணி ----------- ஆண் பெண் ஆகிய இருவர் மார்பிலும் தூங்கும் புதுக்குழந்தை. முகவரி ------------ உண்மைக்கும் பொய்க்கும் முகவரி மனச்சாட்சி. விபச்சாரம் ---------------- கரு சுமந்து பால் தந்தவளை மறந்தவன் தேடும் உடல் மோப்பம். சீதனம் ---------- 1.நான்கு எழுத்து தெரிந்தவன் கை நீட்டி வாங்கும் பிச்சை. 2.பெண்ணை ... |
| Posted: 14 Jun 2015 07:46 PM PDT அனுபவம்…!! *. மனிதனுக்கு உணர்த்துகிறது வாழ்க்கை அனுபவத்தை துயரமில்லாதத் தும்பைப் பூக்கள். * விண்ணில் மண்ணில் தேடினும் எளிதில் கிடைக்குமா? வாழ்த்கை இரகசியம். . * சலிப்பில்லாத உறவு வெறுப்பில்லாத அன்பு தேடுகின்றது மனம். * |
| மனம் பறி போனது-கவிஞர் முஹம்மத் ஸர்பான் Posted: 14 Jun 2015 07:46 PM PDT நான் வழமையாக செல்லும் சாலையில்,புத்தம் புது மலராய் புத்தம் புது வரவாய்,என் இளமையை சீர்குலைக்க பெண் குளத்தின் தேவதையாய் ஒருத்தி வந்தாள். பூங்கோதை அழகோ?ஆயிரம் கம்பன் கவிதைகள் அவளுக்கு இரண்டு தோழிகள்.மூத்த தோழி நிலா.இளைய தோழி மலர். அவள் விழிகள் தரையை விட்டு எழவில்லை.யாக்கை மூடிய துப்பட்டா நாணத்தால் தென்றலில் ஆடவில்லை.அவள் பேசுகிறாள்,இதழும் பிரியவில்லை வார்த்தை செவியில் கேட்கவில்லை என்னவோர் அடக்கம். கன்னி என்னை கடந்து சென்றால் அந்த நிமிடம் என்ன தான் நடந்ததோ? எனக்கு ... |
| Posted: 14 Jun 2015 07:46 PM PDT அப்பா ! கவிஞர் இரா .இரவி ! திடிரென ஒரு நாள் அப்பா காணாமல் போனார் ! திக்குத் தெரியாத காட்டில் விட்டது போலானேன் ! காவல் நிலையம் சென்று புகார் தந்தேன் ! காவலரோடு சென்று தம்பியும் நானும் தேடினோம் ! கடவுள் நம்பிக்கை இல்லாத நான் இராமேஸ்வரம் கோயில் பழனி கோயில் என்று சென்று தேடினேன் ! முதியோர் விடுதிகள் தோறும் தேடினோம் ! மதுரை விடுதிகள் அனைத்திலும் தேடினோம் ! அரசு ராசாசி மருத்துவமனையிலிருந்து அழைப்பார்கள் ! அங்குள்ள பிணவறைக்கு பலமுறை சென்று பார்த்தேன் ! நடமாடும் நடைப்பிணமாக ... |
| கொடியது மது !கவிஞர் இரா .இரவி ! Posted: 14 Jun 2015 07:46 PM PDT கொடியது மது !கவிஞர் இரா .இரவி ! மது மதியை இழக்க வைக்கும் ! மது கல்லறைக்கு விரைவில் அனுப்பும் ! மது தொடாமல் இருந்தால் சிறப்பாய் ! மது தொட்டு விட்டால் சீரழிவாய் ! மது சிந்தனையை சிதைத்து விடும் ! மது சீரழிவை விதைத்து விடும் ! மது ஆற்றலை அழித்து விடும் ! மது அறிவை குறைத்து விடும் ! மது தவறான வழியைக் காட்டும் ! மது தாயையும் மதிக்க மறுக்கும் ! மது குழந்தைகளை வெறுக்க வைக்கும் ! மது குவளயம் தூற்ற வைக்கும் ! மது கேடுகளை வரவழைக்கும் ! மது கோபத்தை அழைத்து வரும் ... |
| Posted: 14 Jun 2015 07:46 PM PDT கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி ! பிராத்தனையிலும் சிறந்தது பிறர் கண்ணீர் துடைப்பது ! நல்ல கணவன் மனைவியைக் கண்ணீரின்றிக் காப்பவன் ! இறப்பிற்கு ஊரே அழுதால் உத்தமன் ! இறப்பிற்கு குடும்பம் மட்டுமே அழுதால் தன்னலமிக்கவன் ! பிறப்பில் தொடங்கி இறப்பு வரை தொடர்கிறது ஏழைகளுக்கு கண்ணீர் ! துகிலுரிபவனையும் கண் கலங்க வைப்பாள் வெங்காயம் ! சோகத்தில் மட்டுமல்ல மகிழ்விலும் வரும் கண்ணீர் ! . சிரிக்க வைப்பது சிறப்பு அழ வைப்பது வெறுப்பு ! அழுது பிறக்கும் ... |
| Posted: 14 Jun 2015 07:45 PM PDT யானை வரும் பின்னே மணி ஓசை வரவில்லை முன்னே காட்டு யானை ! பாதாளம் மட்டுமல்ல மேலோகமும் பாயும் பணம் ! |
| Posted: 14 Jun 2015 07:45 PM PDT ரசித்துப் பார்த்தால் அழகுதான் எருக்கம் பூவும் ! |
| Posted: 14 Jun 2015 07:45 PM PDT ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! பிறந்தது எங்கோ ? இணைந்தன இங்கே ! மலர்கள் ! பிரிந்து இருந்தவைகளை இணைத்தது நார் மலர்கள் ! பயணம் எங்கோ கோவிலுக்கா ? மயானத்திற்கா ? மாலை ! யாருக்கோ ? மணமக்களுக்கா ? மரணித்தவர்களுக்கா ? மாலை ! ஆடாதே மனிதா ஆடி உணர்த்தியது மாலை ! |
| Posted: 14 Jun 2015 07:45 PM PDT ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! சிரித்துக் கொண்டே இரு கலங்காதே கற்பிக்கும் மலர்கள் ! மரணிக்கும் வேளையிலும் சிரிக்கும் மலர்கள் ! ஒரு நாள் வாழ்க்கை ஓயாத புன்னகை மலர்கள் ! ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு அழகு ! |
| Posted: 14 Jun 2015 07:43 PM PDT யானை வரும் பின்னே மணி ஓசை வரவில்லை முன்னே காட்டு யானை ! பாதாளம் மட்டுமல்ல மேலோகமும் பாயும் பணம் ! |
| உதிர அருவியில் மூழ்கும் பர்மா-முஹம்மத் ஸர்பான் Posted: 14 Jun 2015 07:42 PM PDT உதிர அருவியில் தத்தளிக்கும் சிநேகிதனே!! உடலை கடித்து குதறியது இனவெறி பிடித்த நாயா? திரிபீடகத்தின் எத்தனையாம் பக்கத்தில் மனித உயிரை பலியிடச் சொல்கிறது. அப்படி சொல்லியிருந்தால் அது வேதமல்ல. விஷ ஜந்துக்கள் கூடி வாழும் நரகத்தின் கதை. பர்மா மண்ணில் காவிச்சட்டை அணிந்த மனித மிருகங்களை கொண்டு போலி புத்தனும் கசாப்புக்கடை நடாத்துகின்றான். புண்ணியமான மார்க்கத்தில் பிறந்த எங்கள் தொப்புள்கொடிகளை சிங்களத்தி கருவில் பிறந்த அம்புலி கடித்து துப்புகிறது. மனித உரிமை என்று வாய்க்கு வாய் ... |
| Posted: 14 Jun 2015 07:42 PM PDT செல்போன் ---------------- எண்ணங்கள் அலை மோதுகின்ற வண்ணங்கள் நிலை மாறுகின்ற உள்ளங்கைக்குள் பொத்திவைக்கப்பட்ட இதயம் மழை -------- விண்ணின் தாகத்தால் முகிலின் கண்ணீர் மண்ணை நனைக்கும்.., ரவிவர்மாவின் தூரிகைக்கு எட்டாத ஒன்றோடு ஒன்று ஒட்டாத ஓவியம் சிகரெட் ---------- மரணத்திற்கு ஒத்திகை பார்ப்பதற்காய் மனிதனால் நாசிக்குள் அனுப்பப்படும் சுவாசக் காற்று. மரம் ------- சொந்தக்காலில் எழுந்து நின்றாலும் கொள்ளைக்கு துணைபோகின்ற வாயில்லா ஜீவன். மது ----- ஆசையால் ஏற்பட்ட தாகம் ... |
| Posted: 14 Jun 2015 07:42 PM PDT பகிர்ந்து வாழ சொல்லித் தந்தது முகநூல் ! பகிர்ந்து வாழக் கற்றுக் கொண்டான் மனிதன்! அடுத்தவன் அவலத்தை அசிங்கத்தை அம்மணத்தை! கைபேசி தூக்கி காட்சிகள் கைது செய்து கணப்பொழுதில் பதிவேற்றி விருப்புகளையும் பகிர்வுகளையும் கணக்கிட்டு தன் பிரதாபம் மெச்சிக் கொள்கையில் ! மறந்து விடுகிறான் மனிதம் தொலைத்த தன் அம்மணத்தை அம்பலம் ஏற்றிக் கொண்ட அசிங்கத்தை! -தமிழினியன்- |
| Posted: 14 Jun 2015 07:41 PM PDT கண்களில் தீப்பொறி பறக்க, நட்சத்திர தொப்பியுடன் சேவை செய்ய வந்தான் ஒரு சே.!! ஒல்லியான தேகம் அழுக்குஉடை , கலைந்த தலை என கந்தல் கோல வசீகரன் அவன்..!! எளியோரை ஏமாளிகள் ஆக்கும் ஏகாதிபத்தியத்தை ஊதுபத்தி புகையாய் ஊதித் தள்ளி, யாருக்காகவும் தன்னை மாற்றாத பிடிவாதக்காரன்..!! ஆஸ்த்துமா அவனின் ஆத்மாவை பிழிந்த போதும் கொதிக்கும் ரத்தத்துடன் உயிரை பணயம் வைத்து போர்ப் பயணம் செய்த வீர தீர சூரன்.!! அமெரிக்கா அநாவசியம் ஆயுதம் அவசியம் என ஆவேசமாக வெடித்தவன், புரட்சி கண்டு மிரட்சி ... |
| Posted: 14 Jun 2015 07:40 PM PDT கற்பூரம் ஏற்றி கை தொழுத காதலை தூக்கி எறிந்துவிட்டாள் கண் திருஷ்டி சுடராக ...! |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

வாழ்க்கை நமக்காக மட்டும் வாழாமல்