Tamil News | Online Tamil News |
- சந்தையில் உள்ள பாக்கெட் உணவுகள் அனைத்தையும் பரிசோதிங்க:மாநில உணவு ஆணையர்களுக்கு மத்திய அரசு உத்தரவு
- ஊழல் புகார் லலித் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் உதவியதால்...சர்ச்சைஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
- 4,300 அகதிகளுக்கு இந்திய குடியுரிமை:ஒரே ஆண்டில் மோடி அரசு அதிரடி
- பொய் வாக்குறுதி தரும் கட்சிகள் நடவடிக்கை எடுக்க திணறும் தேர்தல் கமிஷன்
- மீண்டும் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்?
- தனியார் பள்ளி கல்விக் கட்டண புகார்:விசாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம்
- பெங்களூரு பயங்கரவாதிகளின் புகலிடம் ஆகிறதா
- 'டார்னியர்' விமானத்தை தேடும் பணி நீடிப்பு
- இன்று முதல் 'ரோமிங்' இலவசம்
- கட்சியை பா.ஜ.வுடன் இணைக்கும் திட்டமில்லை: மாஞ்சி மறுப்பு
| சந்தையில் உள்ள பாக்கெட் உணவுகள் அனைத்தையும் பரிசோதிங்க:மாநில உணவு ஆணையர்களுக்கு மத்திய அரசு உத்தரவு Posted: புதுடில்லி:சந்தைகளில் விற்கப்படும் பாக்கெட் உணவுகள் அனைத்தையும் பரிசோதித்து, அவற்றின் தரத்தை மதிப்பிடும்படி மாநில உணவு ஆணையர்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. 'நெஸ்லே' நிறுவனத்தின், 'மேகி' நுாடுல்ஸ் உணவு பொருளில், காரீயம் மற்றும் ரசாயன உப்பு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது. மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிசோதனையிலும் இது உறுதியானது.சாப்பிட லாயக்கற்றவை இதையடுத்து, 'மேகி நுாடுல்ஸ் உட்பட, அந்த நிறுவனத்தின் ஒன்பது வகையான உணவு பொருட்கள் சாப்பிட லாயக்கற்றவை' எனக்கூறி, ... |
| Posted: புதுடில்லி:ஐ.பி.எல்., கிரிக்கெட்டின் முன்னாள் தலைவரும், ஊழல் புகாரில் சிக்கியவருமான லலித் மோடி, போர்ச்சுகல் நாட்டுக்குச் செல்ல, தேவையான பயண ஆவணங்களை வழங்குமாறு, பிரிட்டன் அரசுக்கு சிபாரிசு செய்ததாக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென,எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளன. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி உருவாக முக்கிய காரணமானவர், லலித் மோடி. இதன் தலைவராக பொறுப்பு வகித்து வந்த லலித், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு ... |
| 4,300 அகதிகளுக்கு இந்திய குடியுரிமை:ஒரே ஆண்டில் மோடி அரசு அதிரடி Posted: புதுடில்லி:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த, 4,300 அகதிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, குடியுரிமை அளித்துள்ளது. பாக்., ஆப்கன், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த, இரண்டு லட்சம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், அகதிகளாக இந்தியா வந்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் நடவடிக்கைகளில் மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக, கடந்த ஒரு ஆண்டில், இந்தியாவில் தங்கியுள்ள அகதிகளில், 4,300 இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு, குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ... |
| பொய் வாக்குறுதி தரும் கட்சிகள் நடவடிக்கை எடுக்க திணறும் தேர்தல் கமிஷன் Posted: புதுடில்லி:தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, அதிகாரம் இல்லை என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது; பொய் வாக்குறுதிகளை அளிக்காமல் தவிர்க்குமாறு, அரசியல் கட்சிகளை, தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது. தகவல் உரிமை சட்டத் தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, தேர்தல் கமிஷன் அளித்த பதில் விவரம்:தேர்தலின்போது, அரசியல் கட்சிகள் வெளியிடும் அறிக்கையில் இடம் பெறும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், அது தொடர்பாக, சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், ... |
| மீண்டும் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்? Posted: தமிழ்நாடு மின் வாரிய மானது, மதுரை பவர், 106; லேன்கோ, 113.20; பயோனிர் பவர், 52.80; எஸ்.டி.சி.எம்.எஸ்., 250; ஜி.எம்.ஆர்., 196; சமல்பட்டி, 105.66; பிள்ளை பெருமாள் நல்லுார் (பி.பி.என்.,), 330.50 என, மொத்தம், 1,154 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், ஜி.எம்.ஆர்., சமல்பட்டி, பி.பி.என்., மற்றும் மதுரை பவர் நிறுவனங்களிடம் இருந்து, ஒரு யூனிட் மின்சாரம், சராசரியாக, 12 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. ஜி.எம்.ஆர்., ஒப்பந்தம், பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்ததால், அந்நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கவில்லை. நிதி நெருக்கடி, மின் தேவை சரிவு போன்ற காரணங்களால், சமல்பட்டி, பி.பி.என்., மதுரை ... |
| தனியார் பள்ளி கல்விக் கட்டண புகார்:விசாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம் Posted: தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணப் புகார்கள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளான - சி.இ.ஓ.,க்கள் விசாரிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லுாரிகளில், புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணய கட்டணத்தை விட, கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக, புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, மெட்ரிக் பள்ளிகள் தவிர, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இந்தக் கட்டண விதிமீறல் அதிக அளவில் உள்ளதாகவும், பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.சென்னை, அடையாறில் உள்ள பாலவித்யா ... |
| பெங்களூரு பயங்கரவாதிகளின் புகலிடம் ஆகிறதா Posted: பெங்களூரு:ரவுடிகளின் பதுங்கு இடமாக இருந்த பெங்களூரு தற்போது, தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான இடமாக மாறி வருகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. சமீப காலமாக, சிலிகான் சிட்டி தீவிரவாதிகள் பதுங்கி வாழும் இடமாக மாறி வருகிறது. பெங்களூருவில், மக்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் பதுங்கியிருப்பதை கண்டுபிடிப்பது சிரமம். இதனால், நாட்டின் பல இடங்களில் குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடும் தீவிரவாதிகள், பெங்களூருவுக்கு தப்பி வந்து, தலைமறைவாக வாழ்கின்றனர். இவர்களை, போலீசார் கண்டுபிடித்து கைது ... |
| 'டார்னியர்' விமானத்தை தேடும் பணி நீடிப்பு Posted:
ரோந்து பணியின் போது மாயமான கடலோர காவல் படையின் 'டார்னியர்' விமானத்தை சீர்காழியை அடுத்த பழையாறு அருகே கடல் பகுதியில் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலோர காவல்படைக்கு சொந்தமான 'டார்னியர்' விமானம் கடந்த 8ம் தேதி இரவு கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது திடீரென காணாமல் போனது. அன்று இரவு முதல் தேடும் பணி நடந்தும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மாயமான விமானத்தை கடலில் தேடும் பணியில் கப்பல்கள் ஸ்கூப் டைவிங் வீரர்கள் பாரா மோட்டார் கிளைடர் விமானங்கள் கடலோர கப்பல் படையைச் சேர்ந்த படகுகள் கஸ்டம்ஸ் படகுகள் போன்றவை ... |
| Posted: புதுடில்லி:நாடு முழுவதும், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் வாடிக்கையாளர்கள், இன்று முதல், 'ரோமிங்' கட்டணமின்றி, அழைப்புகளை ஏற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., தலைமை மேலாண்மை இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா, நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்: ரோமிங் கட்டணத்தை தவிர்க்க, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் பல சிம் கார்டுகளையும், ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் போன்களையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. வெளி மாநிலங்களுக்கு செல்லும் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், ரோமிங் கூடுதல் கட்டண பயமின்றி, தமக்கு வரும் மொபைல் போன் ... |
| கட்சியை பா.ஜ.வுடன் இணைக்கும் திட்டமில்லை: மாஞ்சி மறுப்பு Posted: பாட்னா: எனது கட்சியை பா.ஜ.வில் ஐக்கியமாக்கும் திட்டமில்லை என பீகார் முன்னள் முதல்வர் ஜிதின்ராம் மாஞ்சி தெரிவித்தார்.பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதீஷ்குமார் உள்ளார்.இக்கட்சியின் முன்னாள் முதல்வராக இருந்த ஜிதின்ராம் மாஞ்சி, அக்கட்சியில் இருந்து விலகி இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா என்ற கட்சியை துவக்கியுள்ளார்.என்.டி.ஏ.கூட்டணியில் மாஞ்சிபீகார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. பரம எதிரிகளாக இருந்த நிதீ்ஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலுவின்ராஷ்ட்ரீய ஜனதா தளமும் கூட்டாக தேர்தலை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 15,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |