ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ?
- குதிகால் வலி ஏற்படுவது ஏன்?
- 'கிச்சன் கில்லர்கள்’! கேன் வாட்டர் முதல் பால் பவுடர் வரை
- ஹால்திராமின் உணவுப் பண்டங்கள் ஆபத்தானவை – அமெரிக்கா!
- மரம் வைத்தவன்!
- பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்
- ருத்ராட்சம் – சில அறியப்படா தகவல்கள்…
- விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்!
- எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
- உலோகக் குடிநீர்
- ஸ்ரீவி.,அருகே காய்த்து குலுங்கும் ருத்ராட்சம்!
- முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல – விடுகதைகள்
- பெண்களுக்கு தேவையான 10
- வாழ்விடம் இழந்த அகதிகள்
- ---ஏர்டெல் நிறுவனர்--கடும் தவம்
- மனிதா மனிதத்தை இழந்தாயடா..
- மனைவிக்குப் பயப்படாதவர்
- மனிதரும் தெய்வமாகலாம்!
- நுரையீரல்ல நுரை கம்மியா இருக்கு…!!
- நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடம்
- ஒரு நொடி போதும் மறக்க…!
- கோபம் கொல்வாய்!
- அறிமுகம்
- இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
- கவிதை
- திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
- ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்!
- நினைவுகள்
- மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
- வரலாற்றில் இன்று - ஜூன்
- தேடல்..!
- புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!
- இன்னும் விடியவில்லை
- வாடாமல்லி…!! [ கவிதை ]
- காலமறிந்து செயல்படு!
- பாசப்பிடிப்பு
- [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
- சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம்
- காய்கறிகளில் பூச்சிமருந்தா?
- சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா
- Joomla பாடம் தமிழில்வேண்டும்
| எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Posted: 14 Jun 2015 01:40 PM PDT சென்னை, பால வித்யா மந்திர் பள்ளியின் அதிகக் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஒரு வாரமாக நடத்திய போராட்டம், தலைநகரின் பெரும் பரபரப்பு. இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரச்னை தற்காலிக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக, அராஜகமாக, கட்டணக் கொள்ளைகள் வரைமுறை இன்றித் தொடர்கின்றன. நீதிபதி சிங்காரவேலர் தலைமையிலான அரசின் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு, மாநிலம் முழுவதும் உள்ள ... |
| Posted: 14 Jun 2015 01:34 PM PDT தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் 'சுள்' ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது; மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்! ஆனால், இந்தச் சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி ... |
| 'கிச்சன் கில்லர்கள்’! கேன் வாட்டர் முதல் பால் பவுடர் வரை Posted: 14 Jun 2015 01:28 PM PDT மேகி நூடுல்ஸில் நச்சு கலந்திருக்கிறது... அதற்குத் தடை. ஆதரிக்கவேண்டிய ஆரோக்கிய நடவடிக்கைதான். ஆனால், நூடுல்ஸில் மட்டும்தான் நச்சு இருக்கிறதா? உங்கள் சமையலறைக்குச் சென்று பார்வையை ஓடவிடுங்கள். உடலுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய ஒரு டஜன் உணவுகளைக் கணக்கிட முடியும். உங்கள் குழந்தையின் ஸ்நாக்ஸ் டப்பாவைத் திறந்து பாருங்கள். 'குழந்தை நல்லா சாப்பிடுறா' என நீங்கள் அடிக்கடி கொடுக்கும் சாக்லேட்டும் பிஸ்கட்டும் கேடு தரும் உணவுப் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும். மேகிக்கு போகி கொண்டாடுவதைப்போல, நாம் விலக்கி ... |
| ஹால்திராமின் உணவுப் பண்டங்கள் ஆபத்தானவை – அமெரிக்கா! Posted: 14 Jun 2015 01:21 PM PDT இந்திய நிறுவனமான ஹால்திராமின் உணவுப் பண்டங்களில் அதிக அளவிலான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் இவற்றில் பாக்டீரியா கிருமித் தொற்றும் அதிகம் இருப்பதால் இவை சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கண்காணிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 1937-ம் ஆண்டு முதல் இந்தியாவில் உணவு மற்றும் தின்பண்டங்கள் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் ஹால்திராம் நிறுவனம், மற்ற நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய 'மெக் டொனால்ட்' (McDonald), 'டாமினோஸ்' (Domino) போன்ற நிறுவனங்களையே வீழ்த்தி இங்கு ... |
| Posted: 14 Jun 2015 01:13 PM PDT திருப்பூரில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு சென்றிருந்தார் ராமையா. நாதஸ்வர ஓசை, மந்திர கோஷங்கள், சளசளவென்ற பேச்சு சத்தம் இவற்றுக்கிடையே திருமணம் முடிந்தது. காலில் விழுந்த ஜோடியின் தலையில், அட்சதையை தூவி, ஆசி வழங்கி, மொய் அளித்து, விருந்து உண்ட பின், வெற்றிலையை எடுத்து, பதமாக காம்பை கிள்ளி சுண்ணாம்பு தடவி, பாக்குடன் வாயில் வைத்து மென்றபடி மெல்ல திருமண ஹாலுக்கு வந்தார். காலையில், அழகாக வரிசையாகப் போடப்பட்டிருந்த இருக்கைகள், உறவும், நட்பும் கூடி பேச வசதியாக மாற்றிப் போட்டு அமர்ந்ததால், ஆங்காங்கே ... |
| பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Posted: 14 Jun 2015 01:03 PM PDT கற்றாழையில் பல வகைகள் இருக்கின்றன. அவை: சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கற்றாழைக்கு 'குமரி' என்ற இன்னொரு பெயரும் உண்டு. அதற்கு இளம் பெண் என்று பொருள். இதனை முறையாக பயன்படுத்தினால் பெண்களுக்கு இளமையும், ஆரோக்கியமும், அழகும் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பத்தடை தொடர்புடைய பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் மருந்துகள் கற்றாழையில் தயாராகிறது. வேறு பல மருந்துகளும் ... |
| ருத்ராட்சம் – சில அறியப்படா தகவல்கள்… Posted: 14 Jun 2015 12:57 PM PDT ருத்ராட்சம் என்பது ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் (Elaeocarpus ganitrus) என்ற பெயருள்ள மரத்தின் விதை. இவ்விதை ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியமானதாக உள்ளது. இங்கு வெவ்வேறு வகையான ருத்ராக்ஷ மணிகளும் அவைகளின் பயன்களையும், பஞ்சமுகி ஏகமுகி போன்றவற்றை பற்றியும் சத்குருவின் பகிர்வு… சத்குரு: இமாலய பகுதியை சேர்ந்த ஒருசில உயர்ந்த மலைப் பகுதிகளில் வளரும் குறிப்பிட்ட மரங்களின் விதைதான் ருத்ராட்சம். துரதிர்ஷ்டவசமாக இந்த மரங்களை இரயில்வே தண்டவாளங்களில் முன்பு பயன்படுத்தி வந்தார்கள். இதனாலேயே இந்தியாவில் ... |
| விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Posted: 14 Jun 2015 12:51 PM PDT உங்களை பற்றிய விமர்சனங்களுக்கு பயப்படவேண்டாம். ஏன்என்றால் விமர்சனங்கள் உங்களை வலிமையாக்கும். விவேகமாக்கும். உங்களை நோக்கி வரும் விமர்சனங்கள் உங்களை மன உளைச்சலுக்குள்ளாக்கினாலும் மற்றவர்கள் பார்வையில் நீங்கள் மிக முக்கியமான நபராக மாறிவிட்டீர்கள் என்பதை குறிப்பிடுகிறது. விமர்சனம் என்பது விமர்சிப்பவரின் இயலாமையை காட்டுகிறது. அவரால் முடியாததை நீங்கள் செய்து முடிக்கும் போது நீங்கள் விமர்சனத்துக்குள்ளாகிறீர்கள். எப்போதுமே பிரபலமானவர்கள் அநாவசியமாக அடுத்தவர்களை விமர்சிப்பதில்லை. அதற்கெல்லாம் அவர் ... |
| எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன் Posted: 14 Jun 2015 12:50 PM PDT இலக்கியம் என்ற மகத்தான நதிதான் மனித மனங்கள் வெறுப்பாலும் வன்முறையாலும் உருவாக்கும் தடையரண்களை உடைத்து வாழ்வின் மகத்தான பிரவாகத்தை எங்கெங்கும் கொண்டு செல்கிறது. மாபெரும் இலக்கியப் படைப்புகள் உலகம் முழுவதும் தமது வெளிச்சத்தை, காலத்தையும் இடத்தையும் தாண்டி எங்கும் பரவச் செய்துகொண்டிருக்கிறது.அந்த நதியி்ன் தண்ணிரைக் கையளவு எடுத்து, அந்த வெளிச்சத்தின் பிராகசத்தை ஒரு சுடரளவு ஏற்றிப் பகிர்ந்துகொள்ளும் முயற்சிதான் இந்தக் கட்டுரைகள். எஸ்ராமகிருஷ்ணன் டால்ஸ்டாய் துவங்கி தாகூர் வரை தனக்கு விருப்பமான ... |
| Posted: 14 Jun 2015 12:49 PM PDT உலோகங்களை தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடிப்பது உடலுக்கு நல்லது. மிகவும் சுத்தமான உலோகங்களாகப் பயன்படுத்த வேண்டும். நான்கு டம்ளர் தண்ணீருக்கு 60கிராம் உலோகம் பயன்படுத்த வேண்டும். அந்த நான்கு குவளை நீர் ஒரு குவளையாக வரும் வரை காய்ச்ச வேண்டும். உலோகங்களை தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் ஏற்படும் பயன்கள். தாமிரம்: நரம்பு மண்டலம் தொடர்பான அனைத்து வியாதிகள், உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலி, தொழுநோய். வெள்ளி: செரிமானம் தொடர்புடைய மற்றும் சிறுநீரகம் தொடர்புடைய அனைத்து வியாதிகளுக்கும்! தங்கம்: ... |
| ஸ்ரீவி.,அருகே காய்த்து குலுங்கும் ருத்ராட்சம்! Posted: 14 Jun 2015 12:37 PM PDT ஸ்ரீவி.,அருகே காய்த்து குலுங்கும் ருத்ராட்சம்! ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலை கலங்காப்பேரி புதூரில் அமைந்துள்ளது தாய் முகாம்பிகை கோயில்.இக்கோயில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இக்கோயிலில் தோஷங்கள் தீர்க்கும் மரங்களான வன்னி மரம்,காசி வில்வம், மகா வில்வம்,வெள்ளை எருக்கள் மரம் மற்றும் ருத்ராட்சம் போன்ற மரங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள ருத்ராட்ச மரம் ஆண்டில் மூன்று மாதங்கள் பூத்து,ஆறு மாதங்கள் வரை காய்த்து குலுங்குகிறது. .இதில் ... |
| முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல – விடுகதைகள் Posted: 14 Jun 2015 12:21 PM PDT 1.செடியில் முளைக்காத இலை நரம்பு இல்லாத இலை அம்மா கொடுத்த இலை அழுத்தினால் நொறுங்கி விடும் வாயில் போட்டால் கரையும். அது என்ன? - 2.உடல் மீது ஓடு உண்டு; ஆமை அல்ல முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல உள்ளமோ வெள்ளை; வெண்ணை அல்ல நல்லதற்கும் கெட்டதற்கு நாயகனாம். அது என்ன? - 3.ஆடிக்காற்றில் உதிரும் பழம் ஓடிச் சிறுவர் பொறுக்கும் பழம் கொழுகொழு என்ற கரும்பழம் அது என்ன? - 4.ஆயிரம் ஆயிரம் முடிச்சும் உண்டு ஆயிரம் ஆயிரம் ஓட்டையும் உண்டு. அது என்ன? - 5.மண்ணாய் இருந்தவன் பம்பரத்தில் சுழன்றவன் நெருப்பினில் ... |
| Posted: 14 Jun 2015 12:17 PM PDT 1. வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் தானே செய்வதால், தனக்கு தனியாக உடற்பயிற்சி எதுவும் தேவையில்லை என்று பெரும்பாலான குடும்பத்தலைவிகள் கருதுகிறார்கள். அது தவறு. ஏன்என்றால் அவர்கள் அனேகமான வேலைகளை நின்றபடிதான் செய்கிறார்கள். நின்று வேலை செய்யும்போது உடலில் உள்ள எல்லா தசைகளும் இயங்குவதில்லை. உடல் முழுவதும் உள்ள தசைகளும், எலும்புகளும் இயங்கும் விதத்தில் முறையான உடற்பயிற்சியை அவர்கள் செய்தே ஆகவேண்டும். நடை, ஜாகிங், நீச்சல் போன்றவைகளில் எது பிடிக்கிறதோ அதை அவர்கள் அவ்வப்போது செய்யவேண்டும். 2. ... |
| Posted: 14 Jun 2015 10:40 AM PDT சிட்டுக் குருவி போல்சுதந்திரமாய். வாழ்ந்து வந்த எம் தமிழ் இனம்-இன்று சிதர்உண்டு சிதையுண்டு சுதந்திரக் காற்றினை ஓரளவு சுவாசித்து வாழ்ந்த எம்மினம் இன்று வாழ்விடம் இழந்த அனாதைகள் ஆகிவிட்டார்கள். வாழ வேண்டுமென்று -பிறந்த எம் வாலிபர்கள்-என்ன பிழை செய்தார்கள். செய்யாத தப்புக்கு சில ஆண்டு சிறைவாசம். அந்த கொடுமையின் வேதனையை பாருங்கப்பா? சிறைவாசம் வாடும் பிள்ளையை-பார்க்க. ஈன்றெடுத்த தாயானவள்-கையில் பணம் இல்லாமல். பிச்சை எடுத்து பார்க்கப் புறப்படுகின்றாள் பெற்ற பாசம் சும்மா விடுமா??? தமிழ் ... |
| ---ஏர்டெல் நிறுவனர்--கடும் தவம் Posted: 14 Jun 2015 10:39 AM PDT ஏர்டெல் நிறுவனர்--கடும் தவம்[b][/b] ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம்புரிந்தார், அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள் அந்த 10முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர்'அந்தபட்டம் கைக்கு வரவேண்டும், அந்தபெண்வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார். வரத்தின் மீது நம்பிக்கை வந்தது 7வது வரமாகதன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர்சிறைக்கு செல்ல வேண்டினார். ... |
| Posted: 14 Jun 2015 10:39 AM PDT சிறகடித்து பறக்கும் வெண்புறாவே. உன் சிறகுடைந்து கிடக்குது. வெண்புறாவே. மாலை நேரம் வந்ததனால் உன் மனையை தேடி சென்றாய் வெண்புறாவே வெண்மையின் தூய்மையில். கயவஞ்சகர்கள் காம வலைக்குள் சிக்குண்டுதுடியாய் துடித்தாய் வெண்புறாவே. கால்(க்)கட்டு கை(க்)கட்டு போட்டு உயிர் இருக்க உயிர் இருக்க ரணம் ரணமாய். வெள்ளை சிறகை உடைத்தான் வெண்புறாவே. வேதனையால் எப்படி துடி துடித்திருப்பாய் வெண்புறாவே. தாயின் வயிற்றில் முறை தப்பி பிறந்த மூதேவி நாய் பயல்கள் முன்னுக்கு பின்னாக நின்று. காமப்பசி தீர்த்த ... |
| Posted: 14 Jun 2015 10:39 AM PDT ஒருமுறை அக்பருக்கும் அவருடைய அமைச்சர் பீர்பாலுக்கும் ஒரு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. - "மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது; மனைவியின் சொல்படிதான் கேட்பார்கள்" என்று பீர்பால் கூறினார். - அக்பருக்கு கடுமையான கோபம். "அதெப்படி இவ்வாறு பொதுமைப்படுத்தி இப்படிக் கூறலாம்? நிச்சயம் பல ஆண்கள் தத்தம் மனைவியருக்குப் பயப்படாதவர்களாகவும் மனைவி சொற்படி கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்" என்றார். - அவர்கள் இருவருக்குமிடையிலான வாக்குவாதம் அதிகமானது. - இந்நகரில் மனைவிக்குப் பயப்படாத கணவனைக் காட்டுவதாகச் ... |
| Posted: 14 Jun 2015 10:35 AM PDT ஜூன் 14, ஆனி பிரம்மோற்சவம் ஆரம்பம் - - குறுநில மன்னன் ஒருவன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, நாட்டு மக்களின் நிலத்தைப் பறித்தான். அதனால், நியாயம் கேட்டு பேரரசரிடம் சென்றனர் மக்கள். - அவர், குறுநில மன்னிடம் விசாரித்த போது, 'அது தன் நிலமே…' என வாதாடினான் மன்னன். பேரரசரும் அதை நம்பி விட்டார். திக்கற்றவருக்கு தெய்வமே துணை என, அவ்வூரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, 'உண்மையை வெளிக் கொண்டு வர உன்னைத் தவிர வேறு கதியில்லை…' என்று மனமுருகி வேண்டினர் மக்கள். - மக்களின் வேண்டுதலுக்கு ... |
| நுரையீரல்ல நுரை கம்மியா இருக்கு…!! Posted: 14 Jun 2015 10:33 AM PDT ![]() |
| நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடம் Posted: 14 Jun 2015 10:32 AM PDT - நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடமும், சென்னைக்கு நான்காவது இடமும் கிடைத்துள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தி, கடைசி இடத்தில் உள்ளது. - எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான, எல்.ஜி., 'மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஆய்வு' என்ற ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இதில், நாட்டில் உள்ள, 16 முக்கிய நகரங்களை தேர்வு செய்து, அந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா என்ற ஆய்வை நடத்தியது. - ஒவ்வொரு நகரத்திலும், 150 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ... |
| Posted: 14 Jun 2015 10:31 AM PDT - - |
| Posted: 14 Jun 2015 10:27 AM PDT கொத்திக் குதறியுன் குணத்தைக் கொன்று கதறக் கதறவுன் கண்ணியம் சிதைத்து உதற முடியாக் கறையுன்னில் தந்து சிதறடித்துக் கலைத்துன் நிம்மதி உன்னைச் சீண்டிய குற்றம் மறைத்து உன்னை மட்டுமே சுட்டிக் காட்டி குற்றவாளியாய்க் கூண்டில் ஏற்றும் கூவிச் சொல்லியும் கேட்பாரிலருன் நியாயம் செத்து நீ ஊமையாவாய்! ஆதலால் நீ கோபம் கொல்வாய்! -தமிழினியன் பிரபாகரன்- |
| Posted: 14 Jun 2015 10:27 AM PDT பெயர்: வேல்முருகன் சொந்த ஊர்: குரும்பூர் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: வலைதேடலில் பொழுதுபோக்கு: பொழுத எப்படி போக்கலாம் அப்படினு யோசிச்சே பொழுது போயிருது தொழில்: துணை இஞ்சினியர் (D .C .W ) மேலும் என்னைப் பற்றி: பெருசா ஒன்னும் இல்லங்க |
| இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. Posted: 14 Jun 2015 10:27 AM PDT வணக்கம்.... எனக்கு இந்த திரைப்படங்களின் பாடல்கள் கிடைக்குமா.. ..நான் உங்கள் ரசிகன் ,,புதிழ சரித்திரம்.. ..அந்த வீட்டில் ஒருகோவில்.. ..தங்கச்சி.. அத்துடன் குருபானி கிந்தி,,பாடல்கள் ஒருகாலத்தில் தமிழில் அதே இச்சசமைப்போடு வெளிஜாகி இருந்தது அந்த பாடல்கள் கிடைக்க வாழ்ப்பு இருக்குமா.. இங்கு உள்ள நண்பர்கள் ஜாரிடமாவது இருக்கிந்தால் தந்து உதவுங்கள்.. |
| Posted: 14 Jun 2015 10:26 AM PDT விடை தெரியா சில கேள்விகளுக்கு பதில்....... மேலும் சில கேள்விகளே! |
| திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டிய மந்திரம் Posted: 14 Jun 2015 10:24 AM PDT ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே - பொருள் : பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப் பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ ... |
| ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்! Posted: 14 Jun 2015 10:21 AM PDT முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக், இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களை டைம்லைனில் ஜிப்களை பகிர்ந்து கொள்ளலாம். இணைய உலகில் வீடியோ பகிர்வு பிரபலமாக இருப்பது போலவே உருவ எழுத்துக்களான இமோஜி மற்றும் அசையும் சித்திரங்களான ஜிப்கள் பிரபலமாக இருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் பின்னணி நிலையாக இருக்க, அதன் குறிப்பிட்ட பகுதி மற்றும் அசையும் வகையில் அனிமேஷனாக இருப்பது ஜிப் சித்திரங்களாக ... |
| Posted: 14 Jun 2015 10:19 AM PDT உன்னைப் பற்றி எழுதுவதற்கு நான் என்றைக்கும் வார்த்தைகளை தேடியதே இல்லை கண்மூடி அமர்ந்து "உனக்காக" என்று எழுத தொடங்கும் போதே கவிதை ஆரம்பமாகி முடிந்தும் விடுகிறது ஒரு மெல்லிசை நம்மை கண்மூட வைத்து அதனோடே கூட்டிச் செல்வது போல் உன்னைப் பற்றிய நினைவுகள் கை நிறைய வசந்த காலத்துடன் எப்போது போனாலும் எனை அள்ளித் தழுவுகின்றன சொல்லப் போனால் நிஜத்தை விட கற்பனை கனவாயினும் கலைத்துவமாகவே தோன்றுகிறது நாள் பொழுதும் உனையே பேசுவது எனைப் பொருத்தமட்டில் சர்க்கரை பாகில் ... |
| மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- Posted: 14 Jun 2015 10:14 AM PDT மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி! மூலிகை ... |
| Posted: 14 Jun 2015 10:07 AM PDT ![]() |
| Posted: 14 Jun 2015 09:49 AM PDT – கை வளையல்களில் புதுவித டிசைன்களை தேடினாள்! பல மணித்துளிகளாய்..! – நெற்றிப்பொட்டு பளிச்சென இருக்க அலசினாள் சில நாழிகைகளாய்! – காதணியும் கழுத்தணியும் அணிந்து பார்த்து வாங்கினாள் அரை நாட்களாய்! – புது ரக சேலையை தேர்வு செய்ய கடைகளில் தேடினாள், நாள் முழுக்க.. – காலம் பூரா வாழப்போகும் ஆண் மகனை மட்டும் பார்த்த நொடியில் தேர்ந்தெடுத்தாள் காதல் என்ற பெயரில்! – ————————- மல்லிகா ராம் நன்றி- வாரமலர் – பெண்கள் மலர் |
| புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Posted: 14 Jun 2015 09:44 AM PDT - - நடிகைகளில், ராய்லட்சுமி கொஞ்சம் தைரியமானவர். எங்காவது பெண்களுக்கான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றால், அதில் கலந்து கொண்டு, தன் திறமையை வெளிப்படுத்துவார். -அவ்வகையில், சமீபத்தில், தாய்லாந்து சுற்றுப்பயணம் சென்ற போது, அங்குள்ள விலங்குகள் சரணாலயத்தில் உள்ள ஒரு புலிக்குட்டியை, தன் மடியில் அமர்த்தி புட்டிப்பால் கொடுத்துள்ளார். - இதையடுத்து, 'புலிக்கு பால் ஊட்ட வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கிறது…' என்று தெரிவித்து, டுவிட்டரில் அப்புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். - மலை ... |
| Posted: 14 Jun 2015 08:37 AM PDT இரவு முழுதும் தன் வீரியம் மறைத்து ஒதுங்கி நின்ற ஆதவன் மறைந்து விட்டான் என்றே ஆர்ப்பரிக்கும் தவளைகள் கூச்சல் குறையத் தொடங்கும் அதி காலை நேரம்.. எழுகின்ற ஆதவனின் கிரணங்கள் பட்டை பட்டையாய் வானத்தில் கோடு போட்டு நிலமகளின் மீது போர்த்தும் தங்க சரிகை பட்டுச் சேலை பகல் பொழுது நுழைந்த பின்பு .. இரவும் பகலும் இரண்டும் ஒன்றாக தோன்றுகின்ற ..இளங்கவிஞன் காதல் வென்றான் புரண்டு படுத்தான்.. கனவில் வந்த காதலியின் கை பிடித்தபடி .. இன்னும் .. அவனுக்கு மட்டும்.. விடியவில்லை! |
| Posted: 14 Jun 2015 08:35 AM PDT - - * பொருத்தமானப் பெயர். வாழ்க்கையில் வாடுவதில்லை வாடாமல்லிப் பூக்கள் – —————————– – * தாய்ப் பால் ஒன்று மட்டுமே விலையேற்ற முடியாதச் சக்தி மிகுந்தப்பால். – —————————- – * ஐஸ் கட்டிப் போன்றது காதல். அது எப்பொழுதும் உருகிக் கொணடே இருக்கும். இனிமையாய் சுவைக்கும். – ——————————– ந.க.துறைவன் |
| Posted: 14 Jun 2015 08:34 AM PDT - காலம் கடிவாளமில்லாத குதிரை நாம் நினைத்தால் அதற்கு கடிவாளமிட்டு அடக்க முடியும்! – காலத்தை கண்ணாடியாக்கி தன் முகத்தைப் பார்ப்பவனால் மட்டுமே துன்பக்கடலிலிருந்து கரைசேர முடிகிறது! – காலத்தை பயன்படுத்துவோரால் மட்டுமே மகத்தான காரியங்களை சாதிக்க முடிகிறது! – காலம் யானை தான்… அதையடக்கும் அங்குசம் நம்மிடமே உள்ளது! – தன்னை மதியாதவரை காலம் மிதித்துவிட்டுப் போகிறது! அதன் அருமையை உணர்ந்து செயல்படும் போது வெற்றிகள் தேடிவருகிறது! – நம் லட்சியப் பயணத்தை காலத்தோடு கைகோர்த்து தொடங்கினால் ... |
| Posted: 14 Jun 2015 08:34 AM PDT - - கிட்ட இருந்தால் முட்டப்பகை! எட்ட இருந்தால் கிட்டும் சுனை! நட்ட நடு வீதியில் நாம் தனியே போகையில் கிட்ட வரும் விபத்தை தட்டி விடும் கைகள் எட்ட வரும் உறவா! உதரம் கட்டி வரும் உறவா! - 'கிட்ட இருந்து கொண்டு முட்டிமோதும் நிலையைவிட எட்ட இருந்து கொண்டு சமயம் கிட்டு கின்ற போதெல்லாம் ஒட்டி உறவாடுவதில் ஓர் நிறைந்த சுகம் உண்டு' என்று எட்ட வந்த புலம்பெயர் வாழ்வது கூறுகிறதே! - "பட்டம் பதவிகள் பெற்ற ... |
| [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Posted: 14 Jun 2015 08:31 AM PDT அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை 1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha 2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas மிக்க நன்றி. |
| சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Posted: 14 Jun 2015 08:29 AM PDT ஐக்கிய நாட்டு சபையில் பிரதமர் மோடி முன்மொழிந்து, 177 நாடுகள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சர்வதேச யோகா தினத்தை வருகிற 21–ந் தேதி சிறப்பாக கடைபிடிக்க மத்திய அரசாங்கம் ஜரூராக ஏற்பாடுகளை செய்துவருகிறது. இன்றும் தினமும் யோகா, பிரணாயம் மற்றும் ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதுதான் பிரதமர் மோடியின் சுறுசுறுப்பான வாழ்க்கையின் ரகசியமாகும். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே, ''யோகாவும், ஆயுர்வேதமும் பண்டையகால இந்திய கலாசாரம் மனித குலத்துக்கு தந்த பரிசுகளாகும். யோகாவுக்கும் ஆயுஷ் என்று சொல்லப்படும் ... |
| Posted: 14 Jun 2015 08:29 AM PDT 'உரலுக்கு ஒருபக்கம் இடி, ஆனால் மத்தளத்துக்கு இருபக்கமும் இடி' என்பார்கள். அதுபோல, துயரத்தைத்தான் விவசாயிகள் இப்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே விவசாயத்தில் உரிய வருமானம் கிடைக்காமல் வாடும் விவசாயிகளுக்கு, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 88 சதவீதம்தான் பெய்யும் என்ற அச்சநிலையும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில்தான் பெய்யும் என்றாலும், அண்டை மாநிலங்களில் பெய்யும் மழையால்தான் தமிழ்நாட்டில் ஓடும் சில ஆறுகளுக்கு தண்ணீர் கிடைக்கும். இந்த கவலையோடு, ... |
| சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Posted: 14 Jun 2015 08:19 AM PDT சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா? |
| Posted: 14 Jun 2015 08:12 AM PDT ஜூம்லா பாடநூல் தமிழ் வேண்டும் சிவா அண்ணா ஏற்கனவே தந்தார் வேறுவேண்டும் அல்லது ஆங்கிலத்தில் முழுமையான பதிப்பாக இருக்கவேண்டும் pdf வடிவில்தருக |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

