Tamil News | Online Tamil News |
- தமிழகத்தில் உள்ள போலி மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்:அரசு உதவி பெற தனியார் பள்ளிகளின் குட்டு அம்பலம்
- வங்கிகள் வட்டி வீதத்தை குறைக்கும் என நம்பிக்கை: கடன்களுக்கான மாத தவணையும் குறையும்
- போலி சான்றிதழ் கொடுத்த விவகாரத்தில் கைதான தோமருக்கு 'கல்தா': கெஜ்ரிவால் முடிவு
- டில்லி நகராட்சி சுகாதார பணியாளர்கள் போராட்டம்: குப்பையால் நாறுது டில்லி
- அச்சுறுத்தல் தொடர்வதால் மணிப்பூரை விட்டு வெளியேறுகிறார் மேரிகோம்
- தீர்ப்பை சீக்கிரம் சொல்லுங்க! ஏங்கும் 6.3 லட்சம் மாணவர்கள்
- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 23ம் தேதி ஜெ., பிரசாரம்
- டி.எஸ்.பி., நெஞ்சுவலி நாடகம்: சிறை அதிகாரிகள் கண்டிப்பு
- "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் முடங்கிப்போனது அரசு நிர்வாகம்': ஸ்டாலின் பேச்சு
- 'மேகி' நூடுல்ஸ் கிடைக்குமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு
| Posted: தனியார்களும், தொண்டு நிறுவனங்களும் நிர்வகிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சரிக்கட்டவும், அரசின் உதவி திட்டங்களை தொடர்ந்து பெறவும், 2 லட்சம் போலி மாணவர்களை கணக்கு காட்டியிருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களின் முழு விவரங்கள் அடங்கிய இ.எம்.ஐ.எஸ்., எனப்படும் கல்வி மேலாண்மை மற்றும் தகவல் திட்டம் மூலம் இந்த முறைகேடு அம்பலமாகி உள்ளது.தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு 14 வகை இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவை முறையாக சென்றடைகிறதா, ... |
| வங்கிகள் வட்டி வீதத்தை குறைக்கும் என நம்பிக்கை: கடன்களுக்கான மாத தவணையும் குறையும் Posted: புதுடில்லி: ''பொதுத் துறை வங்கிகள், விரைவில் மிகப் பெரிய அளவில் கடன்களுக்கான வட்டியை குறைப்பதாக உறுதி அளித்துள்ளன,'' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். வங்கிகள் வட்டியை குறைக்கும்போது, வாகனம், வீட்டுக் கடன் போன்ற கடன்களுக்கான, மாதாந்திர தவணைத் தொகையான, இ.எம்.ஐ., சற்று குறையும். இது, வங்கி கடன்தாரர்களுக்கு நிம்மதியை தரும்.டில்லியில், பொதுத் துறை வங்கி தலைவர்களுடன், வங்கிகளின் நிதி ஆதாரம், வராக் கடன் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதித்த, அருண் ஜெட்லி, பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரிசர்வ் வங்கி, 'ரெப்போ ரேட்' எனப்படும், ... |
| போலி சான்றிதழ் கொடுத்த விவகாரத்தில் கைதான தோமருக்கு 'கல்தா': கெஜ்ரிவால் முடிவு Posted: புதுடில்லி: சட்டம் படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்த விவகாரத்தில், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, டில்லி யூனியன் பிரதேச முன்னாள் சட்ட அமைச்சர் தோமரை, 49, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்க, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.அரசியலில் நீதி, நேர்மை, வெளிப்படைத்தன்மை வேண்டும் என போராடி வரும் கெஜ்ரிவால், அதற்கு மாறாக விளங்கும் தோமரை பொறுத்துக் கொள்ள மாட்டார்; விரைவில், அவரை கட்சியிலிருந்து வெளியேற்றி உத்தரவிடுவார் என, டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதற்கிடையே, டில்லி முதல்வராக தொடர, அரவிந்த் ... |
| டில்லி நகராட்சி சுகாதார பணியாளர்கள் போராட்டம்: குப்பையால் நாறுது டில்லி Posted: புதுடில்லி: கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படாததால் இம்மாத துவக்கத்திலிருந்து, குப்பைகளை அள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, டில்லி நகராட்சி சுகாதார பணியாளர்களால், நகரங்கள் குப்பை மேடுகளாக மாறி வருகின்றன.இந்த விவகாரத்தில், நேற்று அதிரடியாக தலையிட்ட, டில்லி உயர் நீதிமன்றம், 'சுகாதார பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, உடனே வழங்க வேண்டும்; அதற்காக, 500 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும்' என, துணைநிலை கவர்னர் நஜிப் ஜங்கிற்கு உத்தரவிட்டது.அதையடுத்து, நேற்றே, 500 கோடி ரூபாயை வழங்க, கவர்னர் நஜிப் ஜங் உத்தரவிட்டார். 'சுகாதார ... |
| அச்சுறுத்தல் தொடர்வதால் மணிப்பூரை விட்டு வெளியேறுகிறார் மேரிகோம் Posted: பெங்களூரு:மணிப்பூரில், உள்நாட்டு தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் தொடர்வதால், சொந்த மாநிலத்தை விட்டு குடும்பத்துடன் வெளியேற, பிரபல குத்துச்சண்டை வீராங்கனை, மேரிகோம், 33, முடிவு செய்துள்ளார்.ஒலிம்பிக்கில், குத்துச்சண்டை போட்டியில், வெண்கல பதக்கம் பெற்ற மேரிகோம், மணிப்பூரைச் சேர்ந்தவர். குத்துச்சண்டை போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற மேரிகோம், மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில், கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 4ம் தேதி, மணிப்பூரில் கமாண்டோ ராணுவத்தினர் மீது உள்நாட்டு தீவிரவாதிகள் ... |
| தீர்ப்பை சீக்கிரம் சொல்லுங்க! ஏங்கும் 6.3 லட்சம் மாணவர்கள் Posted: புதுடில்லி : மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில், நடைபெற்ற முறைகேடு வழக்கை, விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட், நேற்று மீண்டும் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இதனால், தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருந்த, 6.3 லட்சம் மாணவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். |
| ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 23ம் தேதி ஜெ., பிரசாரம் Posted: சென்னை : ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், வரும், 23ம் தேதி, ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா, வரும், 23ம் தேதி, வேனில் அமர்ந்தபடி, மூன்று அல்லது ஐந்து இடங்களில் பிரசாரம் செய்வார். எந்தெந்த இடங்கள் என்பது, பின்னர் தெரிய வரும். பிரசார தேதி, கடைசி நேரத்தில் மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். |
| டி.எஸ்.பி., நெஞ்சுவலி நாடகம்: சிறை அதிகாரிகள் கண்டிப்பு Posted: வேலுார் : செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைதாகி, வேலுார் சிறையில் உள்ள டி.எஸ்.பி., தங்கவேலு, நேற்று காலை, 'நெஞ்சு வலிக்கிறது' என கூறியதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், டாக்டர் பரிசோதனைக்குப் பின், 'அப்படி எதுவும் இல்லை' என, தெரிய வந்தது.வேலுார் மாவட்டம், மாதனுார் அடுத்த, பாலுாரை சேர்ந்த, பா.ம.க., பிரமுகர் சின்னபையன், செம்மரக்கட்டை கடத்தல் மற்றும் முன்விரோதம் காரணமாக, கடந்த மாதம், 27ம் தேதி கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக, வேலுார் மாவட்ட கலால் போலீஸ் டி.எஸ்.பி., தங்கவேலு, கைது செய்யப்பட்டு, வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், நேற்று ... |
| "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் முடங்கிப்போனது அரசு நிர்வாகம்': ஸ்டாலின் பேச்சு Posted: திருச்சி : ""ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக, அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டுள்ளதால், அரசு நிர்வாகம் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.திருச்சி மாநகர் மாவட்ட, தி.மு.க., செயலாளர் அன்பழகன் மகள் திருமண விழாவில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழக முதல்வராக ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக பொறுப்பேற்றதை, அ.தி.மு.க.,வினர் பெருமை பேசுகின்றனர். முறையாக ஐந்து முறை முதல்வரான கருணாநிதிக்கு தான், அந்த பெருமை சேரும். ஜெயலலிதா, மூன்று முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். இரண்டு முறை தண்டனை பெற்று, பதவி ... |
| 'மேகி' நூடுல்ஸ் கிடைக்குமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு Posted: மும்பை : மேகி நுாடுல்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மும்பை ஐகோர்ட் மறுத்து விட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த, 'நெஸ்லே' நிறுவனம் தயாரித்த மேகி நுாடுல்ஸ் என்ற உணவுப் பொருளில், காரீயம், ரசாயன உப்பு போன்ற ரசாயன பொருட்கள் கலப்பு அதிகம் இருப்பதாக, சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்விலும், 'உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் உள்ளது' என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மேகி நுாடுல்ஸ் நிறுவனத்தின் ஒன்பது வகையான நுாடுல்ஸ் உணவுப் பொருட் களின் விற்பனைக்கும், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 13,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |