Tamil News | Online Tamil News |
- 'செக்' மோசடியால் பாதிக்கப்பட்ட 18 லட்சம் பேருக்கு ஆதரவாக அவசர சட்டம்:ஓராண்டில் 14 முறை தாக்கல் செய்து மத்திய அரசு 'சாதனை'
- உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துகிறார்: சோம்நாத் பார்தி மீது மனைவி புகார்
- மோடியின் வங்கதேச பேச்சு: பாகிஸ்தான் கடும் பாய்ச்சல்
- அன்னிய மண்ணில் இந்திய வீரர்கள் அதிரடி தாக்குதல்:100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?
- எப்.ஐ.ஆர்., போட மறுத்த போலீசார்:சாக்கடையில் புரட்டியெடுத்த பொதுமக்கள்
- 2 மணி நேரமே தத்கல் டிக்கெட் : ரத்து செய்தால் 50 சதவீத கட்டணம் வாபஸ்
- கலை கல்லூரிகளில் பி.காம்., சீட்டிற்கு கடும் கிராக்கி அதிகரிப்பு: பிளஸ் 1ல் காமர்ஸ் பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம்
- தயாநிதி குடும்ப நிறுவன சொத்துக்கள் முடக்கம்:எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
- தமிழக அரசு மீதான ஊழல் புகார்கள்: விசாரிக்க கவர்னர் பரிந்துரை
- கூட்டணியில் மரியாதை இல்லை : பா.ஜ., தலைவர்களிடம் குமுறிய விஜயகாந்த்
- "குடிமகன்'கள் கார் ஓட்டுவதைத் தடுக்க அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பம்
| Posted: புதுடில்லி:காசோலை மோசடி விவகாரத்தில், கடந்த ஆண்டு, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு மாற்றாகவும், அந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட, 18 லட்சம் பேருக்கு ஆதரவாகவும், மத்திய அரசு நேற்று, அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்தது. அதன்படி, பெறப்பட்ட காசோலை எந்த நகரில் பணமாக்கப்பட்டதோ, அந்தஇடத்திலிருந்து, மோசடி நபர்கள் மீது வழக்கு தொடர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.இதற்கான அவசர சட்டம் பிறப்பிப்பது உட்பட, பல முக்கிய முடிவுகள் நேற்று எடுக்கப்பட்டன.வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், பிறருக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்காக, வங்கி காசோலைகள் வழங்குவது ... |
| உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துகிறார்: சோம்நாத் பார்தி மீது மனைவி புகார் Posted: புதுடில்லி:டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்ட அமைச்சராக இருந்த ஜித்தேந்திர சிங் தோமர், கல்வி தகுதி தொடர்பாக போலி சான்றிதழ் அளித்ததாக எழுந்த புகாரை அடுத்து, கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்ட அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான சோம்நாத் பார்திக்கும், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரின் மனைவி லீபிகா, டில்லி பெண்கள் நல ஆணையத்தில், பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது:கடந்த நான்கு ஆண்டு ... |
| மோடியின் வங்கதேச பேச்சு: பாகிஸ்தான் கடும் பாய்ச்சல் Posted: இஸ்லாமாபாத்:''வங்கதேச சுற்றுப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியது, வெறுப்பை பரப்புவதாகவும், பாக்., - வங்கதேசம் இடையேயான உறவுகளை சீர்குலைப்பதாகவும் உள்ளது,'' என, பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு பிரிவு ஆலோசகர் சத்ராஜ் ஆசிஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பாகிஸ் தான் பார்லிமென்டில் அவர் பேசியதாவது: வங்கதேசத்திற்கு சமீபத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட, இந்திய பிரதமர் மோடி, 'இந்தியா வில், பயங்கரவாத செயல்கள் அதிகரிக்க பாகிஸ்தான் துணைபுரிகிறது. தொடர்ந்து தங்கள் நாட்டில் குழப்பம் ஏற்படுத்தி வருகிறது' என, தெரிவித்துள்ளார். மோடியின் பேச்சு ... |
| Posted: வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், இம்மாதம் 4ல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மீது, உள்நாட்டு, பிரிவினைவாத தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 18 வீரர்கள் பலியாயினர்.தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், மணிப்பூரிலிருந்து தப்பி, அண்டை நாடான மியான்மரில் பதுங்கியிருந்த தகவல், ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் கிடைத்தது.ராணுவத்தினரை வேட்டையாடிய தீவிரவாதிகளை கொன்று குவிக்க, ராணுவத்தின் கமாண்டோ படை பிரிவினருக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான திட்டமிடல், 5ம் தேதியே துவங்கியது. வழக்கமாக, பிரதமர் மோடியுடன் ... |
| எப்.ஐ.ஆர்., போட மறுத்த போலீசார்:சாக்கடையில் புரட்டியெடுத்த பொதுமக்கள் Posted: புவனேஸ்வர்:இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்த போலீசாரை, ஒடிசாவைச் சேர்நத மக்கள், அடித்து, துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புவனேஸ்வரில் லட்சுமி சாகர் என்ற பகுதி உள்ளது.குடிசைப் பகுதியான இங்கு வசிக்கும் சந்தோஷ் சேனா என்பவர், இதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதனால், அந்த பெண் கர்ப்பமானார்.இதையடுத்து, சந்தோஷ் சேனா மீது வழக்கு பதிவு செய்யும்படி, அந்த பெண்ணின் உறவினர்கள் ... |
| 2 மணி நேரமே தத்கல் டிக்கெட் : ரத்து செய்தால் 50 சதவீத கட்டணம் வாபஸ் Posted: புதுடில்லி: ரயிலில் பயணம் செய்ய, கூடுதல் கட்டணத்தில் டிக்கெட் பெறும், 'தத்கல்' முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை, 10:00 மணிக்கு மேல், டிக்கெட் இருக்கும் வரை, எவ்வளவு நேரமும் பெற முடியும் என்ற நிலை, தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.*தினமும், காலை, 10:00 - 11:00 மணி வரை, 'ஏசி' வசதி டிக்கெட்டுகளும், 11:00 - 12:00 மணி வரை, இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளும், தத்கல் முறையில் பெறமுடியும்.*உறுதி செய்யப் பட்ட தத்கல் டிக்கெட் பெற்ற பிறகு, அதை ரத்து செய்தால், இதுவரை பணம் திருப்பிக் கொடுப்பதில்லை. அதில் மாற்றம் செய்யப்பட்டு, இனிமேல், 50 சதவீத கட்டண பணம் திருப்பிக் ... |
| Posted: தமிழக கல்லுாரிகளில், புதிய கல்வியாண்டில், பி.காம்., மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்புக்கான இடங்கள், முன்கூட்டியே நிரம்பி விட்டன. வரலாறு, புவியியல் படிப்புகளுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. அதேபோல், பிளஸ் 1 வகுப்பில், காமர்ஸ் பிரிவில் சேர, மாணவர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவ படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இவற்றில் சேர முடியாதவர்களால், இயற்பியல், கணிதம், வேதியியல் பட்டப்படிப்பில் சேர, கலை, அறிவியல் கல்லுாரிகளில் போட்டி இருக்கும்.ஆனால், இந்த ஆண்டு, பிளஸ் 2 பொது தேர்வில், ... |
| தயாநிதி குடும்ப நிறுவன சொத்துக்கள் முடக்கம்:எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி Posted: சென்னை:சன் நெட்ஒர்க் நிறுவனம் மற்றும் கல் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் 742 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்தியாவில் இயங்கி வந்த தனக்கு சொந்தமான 'ஏர்செல்' நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவை சேர்ந்த 'மேக்சிஸ்' நிறுவனத்துக்கு விற்க மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி நெருக்கடி கொடுத்ததாக ெவளிநாட்டில் வசிக்கும் இந்திய தொழில் அதிபர் சிவசங்கரன் புகார் அளித்தார்.இந்தப் புகாரை சி.பி.ஐ. விசாரித்தது. ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்கப் ... |
| தமிழக அரசு மீதான ஊழல் புகார்கள்: விசாரிக்க கவர்னர் பரிந்துரை Posted: தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில் ஊழல் நடந்துள்ளதாகவும், அவற்றை விசாரிக்க வலியுறுத்தியும், காங்கிரஸ் மற்றும் பா.ம.க., சார்பில் அளிக்கப்பட்ட மனுக்களை, கவர்னர் ரோசய்யா, விசாரணைக்காக, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.தமிழகத்தில், மின் துறை, உயர் கல்வித் துறை, ஆவின், நெடுஞ்சாலைத் துறை, கனிம வளத்துறை உட்பட, 25 துறைகளில் ஊழல் நடந்திருப்பதாக, தமிழக காங்கிரஸ் கட்சி, குற்றஞ்சாட்டியது.இது தொடர்பான ஆதாரங்களை தொகுத்து, கடந்த மாதம், பேரணியாகச் சென்று, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கவர்னர் ரோசய்யாவிடம் வழங்கினார்.பின், நிருபர்களிடம் பேசும்போது, ... |
| கூட்டணியில் மரியாதை இல்லை : பா.ஜ., தலைவர்களிடம் குமுறிய விஜயகாந்த் Posted: ''தே.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு, சரியான மரியாதை இல்லை; அதனால், கூட்டணியில் தொடர்வது குறித்து யோசிக்க வேண்டியுள்ளது,'' என, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தமிழக பா.ஜ., தலைவர்களிடம் கூறிய தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு, தமிழகத்தில் சரியான கூட்டணி அமையவில்லை. அதேநேரம், தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., - காங்., உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி அமைக்க முயற்சித்தன. ஆனால், 'ஊழல் இயக்கங்களுடன் கூட்டணி சேர மாட்டேன்' எனக் கூறி, பா.ஜ., கூட்டணியை தேர்வு செய்தார், விஜயகாந்த்; கூட்டணியில், 14 தொகுதிகளும் ... |
| "குடிமகன்'கள் கார் ஓட்டுவதைத் தடுக்க அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பம் Posted: வாஷிங்டன்: குடிபோதையால் ஏற்படும் கார் விபத்துக்களை தடுக்க, அமெரிக்க நாட்டின் நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. தற்போது உலகெங்கும் குடிபோதையால் ஏற்படும் வாகன விபத்துகள் அதிகரித்து விட்டன. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தாங்கள் அழிவது மட்டும் இல்லாமல், அப்பாவி மக்கள் <உயிருக்கும் உலை வைத்து விடுகின்றனர். அமெரிக்காவின் நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (என்.எச்.டி.எஸ்.ஏ), அந்நாட்டில் குடிபோதையால் ஏற்படும் கார் விபத்து உயிரிழப்புகளைத் தவிர்க்க புதிய தொழில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 11,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |