Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அசாமில் மீண்டும் ஒரு அரிய வகை ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வேட்டையர்களால் சுட்டு கொலை

Posted: 29 Jun 2015 10:47 PM PDT

மிக குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அரிய வகை ஒற்றை கொம்பு காண்டாமிருகம் ஒன்று அசாமில் வேட்டையர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளது. அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் காவலர்கள் ரோந்து சென்ற போது ஒற்றை கொம்பு காண்டாமிருகம் ஒன்று கொல்லப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. அதன் உடலில் பல இடங்களில் குண்டு துளைத்த தடங்கள்

எந்திர கோளாறினால் வயலில் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்: வேடிக்கை பார்க்க திரண்ட கிராமம்

Posted: 29 Jun 2015 10:46 PM PDT

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஐ.என். 484 ஹெலிகாப்டர் வானத்தில் பறந்து சென்றது. நடுவானில் சென்ற போது திடீர் என ஹெலிகாப்டரில் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் ராமச்சந்திராபுரத்தில் உள்ள விவசாய நிலத்தில் தரை இறங்கியது. பாதுகாப்பாக தரையிரங்கியதால் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திருவனந்தபுரத்தில் மழை: மாணவர் உள்பட 3 பேர் பலி

Posted: 29 Jun 2015 10:06 PM PDT

கேரளாவில் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று மழை சற்று ஓய்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் மழைக்கு மாணவர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். நெடுமங்காடு பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவர் முகமது (வயது 15).

அருவிக்கரை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: காங்கிரஸ் வேட்பாளர் சபரிநாதன் வெற்றிமுகம்

Posted: 29 Jun 2015 10:05 PM PDT

கேரள மாநில சபாநாயகராக இருந்த காங்கிரஸ் கட்சியின் கார்த்திகேயன் திடீரென மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு கடந்த 27–ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 85 ஆயிரத்து 216. இதில்

லலித் மோடி விவகாரம்: பாராளுமன்றம் நோக்கி ஆம் ஆத்மி பேரணி

Posted: 29 Jun 2015 09:28 PM PDT

நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே ஆகியோர் உதவியதாக புகார் எழுந்துள்ளது. இதைப்போல மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி மீது போலி டிகிரி குற்றச்சாட்டும், மராட்டிய மாநில மந்திரி பங்கஜா முண்டே மீது ஊழல் குற்றச்சாட்டும் கூறப்பட்டு உள்ளன.

ராஜஸ்தானில் அரசு அரண்மனை விவகாரம்: காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு -பா.ஜனதா மறுப்பு

Posted: 29 Jun 2015 08:38 PM PDT

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே மீது காங்கிரஸ் அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமான தோல்பூர்

நாடாளுமன்ற மேலவை ஜூலை 21-ந் தேதி கூடுகிறது

Posted: 29 Jun 2015 08:28 PM PDT

டெல்லி மேல்சபை ஜூலை 21-ந் தேதி கூடுகிறது. இது குறித்து மேல்சபை செயலாளர் நேற்று கூறுகையில், டெல்லி மேல்சபையின் மழைக்கால கூட்டத்தொடரை கூட்ட ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜூலை 21-ந் தேதி மேல்சபை கூடுகிறது. ஆகஸ்டு 13-ந் தேதி கூட்டத்தொடர்

மத்திய போலீஸ் படையினருக்கு தினமும் கட்டாய யோகா பயிற்சி: மத்திய அரசு உத்தரவு

Posted: 29 Jun 2015 08:26 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா. சபை பொது மாநாட்டில் பேசும்போது சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது.

பள்ளி இயக்குனர் கொல்லப்பட்ட சம்பவம்: பீகாரில் பொதுமக்கள் வன்முறை

Posted: 29 Jun 2015 08:17 PM PDT

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் ல்சா நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த 2 மாணவர்கள் கால்வாயில் மர்மமான முறையில் நேற்று முன்தினம் இறந்து கிடந்தனர். இது பற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்கள் பள்ளியை சூறையாடினர். மேலும் பள்ளி இயக்குனர் தேவேந்திர பிரசாத்தை அடித்து கொன்றனர்.

திகார் சிறையில் சுரங்கப்பாதை அமைத்து 2 கைதிகள் தப்பி ஓட்டம்: விசாரணைக்கு கவர்னர் உத்தரவு

Posted: 29 Jun 2015 07:31 PM PDT

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிறையாக டெல்லி சாணக்கியபுரி பகுதியில் அமைந்த திகார் சிறை உள்ளது. இந்த சிறையை பலத்த பாதுகாப்புக்கு உதாரணமாக சொல்வார்கள். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதால் இங்கிருந்து யாரும் அவ்வளவு எளிதில் தப்பிச் செல்ல முடியாது என்றும் கூறுவதுண்டு.

மத்திய அரசு வேலையில் சேர மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடம் சலுகை: புதிய அறிவிப்பு

Posted: 29 Jun 2015 07:16 PM PDT

மத்திய அரசு வேலையில் (ஏ மற்றும் பி குரூப்) சேருவதற்கான வயது வரம்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இப்போது 5 வருடங்கள் சலுகை அளிக்கப்படுகிறது. அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் 10 வருடங்களும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 8 வருடங்களும் சலுகை அளிக்கப்படுகிறது. சி மற்றும் டி குரூப்பில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யும்போது 10 வருடம்

ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கான அடையாள அட்டையில் நாயின் படம்: மாணவரிடம் விசாரணை

Posted: 29 Jun 2015 03:44 PM PDT

மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவரின் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கான அடையாள அட்டையில், நாயின் புகைப்படம் இருந்தது குறித்து அம்மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மிட்னாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதான சவும்யதீப் மஹாதோ என்ற மாணவர், இந்த ஆண்டு நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வில்

மும்பை மின்சார ரெயில் விபத்து: 3 ஊழியர்கள் பணி இடை நீக்கம்

Posted: 29 Jun 2015 03:05 PM PDT

மும்பை மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள பயந்தர் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை விரைவு மின்சார ரெயில் ஒன்று சர்ச்கேட் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரெயிலை மோட்டார்மேன் எல்.என். திவாரி ஓட்டினார்.

மேகியைத் தொடர்ந்து இந்திய சந்தையிலிருந்து வெளியேறும் டாப் ரமன் நூடுல்ஸ்

Posted: 29 Jun 2015 02:28 PM PDT

டாப் ரமன் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை இந்திய சந்தையிலிருந்து வெளியேற்றுவது குறித்து மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) அறிவுருத்தியதையடுத்து இந்தோ நிசின் புட்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பான டாப் ரமன் இன்ஸ்டண்ட் நூடுல்சை திரும்ப பெறுவதாக உத்தரவிட்டுள்ளது.

உணவு கலப்பட வழக்கில் தேடப்பட்டு வந்த விவசாயி, 42 ஆண்டுகளுக்கு பிறகு கைது

Posted: 29 Jun 2015 12:54 PM PDT

உப்பள்ளி தாலுகா பெலகளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 60). விவசாயி. இவர் கடந்த 1973-ம் ஆண்டு உணவு பொருட்கள் விற்பனை செய்யும்போது, அதில் கலப்படம் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நாராயணன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டதால் முசாபர்நகரில் பதட்டம்

Posted: 29 Jun 2015 12:36 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரில் உள்ள புமாத்யா கிராமத்தில் வாலிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. நேற்று, மிரான்பூர் பகுதியைச் சேர்ந்த சத்பிர்(25) என்ற வாலிபரை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 4 வாலிபர்கள் தங்கள் மோட்டார் பைக்குகளில்

பெங்களூரு மாநகராட்சி தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு

Posted: 29 Jun 2015 12:29 PM PDT

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது. பெங்களூரு மாநகராட்சிக்கு ஆகஸ்டு 5-ந் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் கர்நாடக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையம்

கண்ணூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானை

Posted: 29 Jun 2015 11:03 AM PDT

கண்ணூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை நீடித்து வருகிறது. குறிப்பாக

குஜராத் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி 13 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று சிக்கினான்

Posted: 29 Jun 2015 09:30 AM PDT

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக கோத்ராவின் பல பகுதிகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பஸ்சுக்குள் குண்டு வெடிப்பு, ஸ்கூட்டர் குண்டு வெடிப்புகள், பைக் குண்டு வெடிப்பு என ஆங்காங்கே வரிசையாக குண்டுகள் வெடித்ததில் பலர் பலியாகினர். இந்த சம்பவங்களின் பின்னணியில்

அமர்நாத் ஆலயத்தில் ஜூலை 2-ம்தேதி ராஜ்நாத் சிங் வழிபாடு

Posted: 29 Jun 2015 09:15 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத்துடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் முதல் தேதி ஸ்ரீநகருக்கு வருகை தரவுள்ளார். சமீபத்தில் சோபோர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீஸ், ராணுவம் மற்றும் துணை ராணுவப்படை உயரதிகாரிகளின்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™