Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'புலி' பற்றி வதந்தி பரப்பும் பூனைகள்...

Posted:

விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஃபேன்டஸி கலந்த சரித்திரப் படமான 'புலி' படம் பற்றி கடந்த இரு நாட்களாக தேவையில்லாத வதந்தியை சில பூனைகள் பரப்பி வருகின்றன. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் இந்த வதந்தி அதிகமாகவே பரவி வருகிறது.

'புலி' படத்தின் கதையா, ...

விஜய் நடிக்கும் படத்தின் பெயர் மூன்று முகம்?

Posted:

சில வருடங்களுக்கு முன் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விஜய் நடித்த படம் சச்சின். மகேந்திரனின் மகன் ஜான் இயக்கத்தில் விஜய் ஜெனிலியா நடித்த சச்சின் படத்தில் கல்லூரி மாணவராக நடித்தார் விஜய். எதற்கு இந்த ப்ளாஷ்பேக்? காரணமிருக்கிறது. மீண்டும் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் தற்போது நடிக்கும் புதிய படத்திலும் ...

ஒரு தோழன் ஒரு தோழிக்கு கை கொடுத்த மதுரை அன்பு!

Posted:

கடந்த வாரம் ஏழு படங்கள் வருவதாக சொல்லப்பட்டது. மிருகம் ஆதியின் நடிப்பில், ஆதியின் அண்ணன் இயக்கியிருக்கும் யாகவாராயினும் நா காக்க, கருணாஸ் கதாநாயகனாக நடித்து, ரஜனீஷ் இயக்கியுள்ள- லொடுக்கு பாண்டி, விமல், புன்னகைப்பூ கீதா ஜோடியாக நடித்துள்ள காவல், விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடித்துள்ள இன்று நேற்று நாளை, பெ.மோகன் இயக்கத்தில் ...

உப்புக்கருவாடு படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்!

Posted:

அழகர்சாமியின் குதிரை தொடங்கி கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, கயல் என ஏராளமான படங்களைத் தயாரித்தவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி. மதன். முன்னணி தயாரிப்பாளரான இவர், தனுஷ் தயாரித்த வேலையில்லா பட்டதாரி, காக்கிசட்டை ஆகிய படங்களை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்டார். இரண்டு படங்களுமே ...

மாரி டிரெய்லரைவிட வாலு டிரெய்லருக்கு வரவேற்பு குறைவு!

Posted:

தனுஷ் நடித்த மாரி படமும், சிம்பு நடித்த வாலு படமும் ஜூலை 17 அன்று ரிலீஸ் ஆவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
தனுஷ், சிம்பு இருவரும் நண்பர்கள் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், ஒருவரையொருவர் மிஞ்ச வேண்டும் என்ற தொழில்போட்டியும் வேகமும் இருவருக்குமே உண்டு. தற்போது இருவர் நடித்த படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் தன்னுடைய படம் ...

நைட்ஷோவாக மாறிய மலையாள ஷட்டர்

Posted:

படத்தொகுப்பாளர்கள் இயக்குநராவது புதிய விஷயமில்லை. கடந்த காலங்களில் பல படத்தொகுப்பாளர்கள் இயக்குநர்களாகி இருக்கிறார்கள். எடிட்டர் பி.லெனின் நாக்அவுட், ஊருக்கு 100பேர் போன்ற படங்களுக்காக தேசிய விருதுகளையே வென்றுள்ளார். இந்த வரிசையில், தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி எடிட்டர்களில் ஒருவரான ஆண்டனியும் சேருகிறார். இயக்குனர் ...

தபாங் 3 படம் 2017ல் ரிலீஸ்

Posted:

சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் தபாங் 3 படம், 2017ம் ஆண்டின் ஈத் பண்டிகையின் போது ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 2013ம் ஆண்டின் ஈத் பண்டிகையின்போது, ஷாரூக் கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் வெளியானது. 2014ம் ஆண்டின் ஈத் பண்டிகையின்போது, சல்மான் கானின் கிக் படம் வெளியானது. சல்மான் கானி்ன் நடிப்பில் உருவாகியுள்ள படங்களான, ...

ஜஜ்பா டிரைலர் ஆகஸ்டில் ரிலீஸ்

Posted:

ஐஸ்வர்யா ராய் பச்சன் நீண்டநாட்கள் கழித்து நடித்திருக்கும் படம் ஜஜ்பா. இந்த படத்தின் டிரைலர், ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியை, படத்தின் இயக்குநர் சஞ்சய் குப்தா உறுதி செய்துள்ளார். கொரிய படம் செவன் டேய்ஸ் படத்தின் ரீமேக்கிற்கு பிறகு, ஐஸ்வர்யா ராய் பச்சன், இப்படத்தில் நடித்துள்ளது ...

ரெமோவை நம்பும் பூஷன்குமார்

Posted:

ஏபிசிடி 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து, மேலும் 2 படங்களில், டைரக்டர் ரெமோ டி சோஷா உடன் இணைந்து பணியாற்ற தயாரிப்பாளர் பூஷன்குமார் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இவ்விரு படங்களின் கதைகள், இதுவரை தயாராகவில்லை என்று ரெமோ தரப்பி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ...

அதிபயங்கரமான திகில் காட்சிகள் கொண்ட மந்த்ரா 2

Posted:

ஜோதிலக்ஷ்மி படத்தில் விலைமாதுவாக நடித்திருந்த நடிகை சார்மிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அப்படத்தின் வெற்றி சார்மிக்கு புதிய புத்துணர்ச்சியை தந்துள்ளதாக சார்மியின் நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர். ஜோதிலக்ஷ்மி படத்தில் விலைமாதுவாக அசத்திய சார்மி அடுத்து மந்த்ரா 2 படத்தில் பேயாக மிரட்ட வருகின்றார். பல ஆண்டுகளுக்கு ...

மறைந்த நடிகருக்கு தனது விருதை அர்ப்பணித்த அல்லு அர்ஜுன்

Posted:

ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் 62வது பிலிம் பேர் விருது நிகழ்ச்சியில் டோலிவுட்டின் சிறந்த நடிகருக்கான விருதை அவர் நடித்த ரேஸ் குர்ரம் படத்திற்காக வென்றுள்ளார். இப்படத்தில் நடித்த நடிகை ஸ்ருதிஹசனும் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இப்படத்தை இயக்கியிருந்தார். விருதை வாங்கிய அல்லு அர்ஜுன் ...

பொங்கலுக்கு திரைக்கு வரும் பிரமோற்சவம்

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் பிரமோற்சவம் படத்தை 2016 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பிவிபி நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் பாபு இப்படத்தை தயாரிக்கின்றார். இசையமைப்பாளர் மிக்கி ஜெ மேயர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ...

தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்கிறார் அல்போன்ஸ் புத்தரன்..!

Posted:

நேரம் படம் தமிழிலும் மலையாளத்திலும் ஹிட்டானதுபோது, அந்தப்படத்தை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்தரனின் நண்பர்கள் அதுதான் ஹிட் கொடுத்தாச்சே.. கல்யாணம் பண்ணிக்கொள் என அவரை வற்புறுத்தினார்கள். ஆனால் இரண்டு படங்களாவது பெயர் சொல்லும்படியான ஹிட்டுகளாக கொடுத்துவிட்டுத்தான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தார் 31 வயதை தொட்டுவிட்ட ...

சுரேஷ்கோபிக்கு ஆதரவாக குரல் கொடுக்க தயங்கும் 'அம்மா'..!

Posted:

இங்கே ராதாரவி, சரத்குமார் ஆகியோர் விஷாலை எப்படி பார்க்கிறார்களோ, அந்தவிதமாகத்தான் மலையாள நடிகர்சங்கத்தை (AMMA) சேர்ந்த பலரும் ஆக்சன் கிங் சுரேஷ்கோபியை பார்க்கிறார்களோ என்றுதான் நடக்கும் நிகழ்வுகள் யூகிக்க வைக்கின்றன. சமீபத்தில் புதிதாக மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களே அந்த பட்டியலில் கூட ...

'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படப்பிடிப்பு நிறைவு

Posted:

'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜேஷ், ஆர்யா, சந்தானம் மீண்டும் கூட்டணி சேர்ந்த 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் ஆர்யா ஜோடியாக தமன்னா முதன்முறையாக நடித்துள்ளார். சமீபத்தில் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்த சந்தானம், இயக்குனர் ...

சமந்தா, ஸ்ருதிஹாசன் இடையே கடும் போட்டி

Posted:

தமிழில் இப்போதைக்கு சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோரிடையேதான் கடும் போட்டி நிலவுவதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். இவர்கள் இருவரும்தான் அடுத்தடுத்த புதுப் படங்களைப் பிடிப்பதில் மிகவும் வேகமாக இருக்கிறார்களாம். சமந்தா தற்போது, விக்ரம் ஜோடியாக 'பத்து எண்ணுறதுக்குள்ளே', சூர்யா ஜோடியாக '24', தனுஷ் ஜோடியாக 'விஐபி 2' மற்றும் 'வட ...

மீண்டும் ஆரம்பமாகும் 'கிட்னா'

Posted:

'நிமிர்ந்து நில்' படத்திற்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் ஆரம்பமான படம் 'கிட்னா'. அவரே படத்தின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்ஷிகா நடிக்க இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஆரம்பமாகி சில நாட்கள் நடைபெற்றது. அதன் பின் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சமுத்திரக்கனியும் ஒரு நடிகராக பல படங்களில் நடித்து ...

பாபநாசம் 'இன்ச்'கணக்கில் வித்தியாசம் பார்த்த எழுத்தாளர்கள்

Posted:

கமல்ஹாசன், கௌதமி நடித்து இந்த வாரம் வெளிவர உள்ள படம் 'பாபநாசம்'. மலையாளத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தை தமிழில் மலையாளப் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இயக்கியுள்ளார். தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வேறு இயக்குனர்கள்தான் இயக்கினார்கள். இதுவே 'பாபநாசம்' படத்திற்கான ஒரு முக்கியமான விஷயமாக ...

சிக்கலில் விக்ரம் படங்கள்

Posted:

விக்ரம் தற்போது 'கோலி சோடா' விஜய் மில்டன் இயக்கத்தில் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையடுத்து 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'மர்ம மனிதன்' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இப்போது இந்த புதிய படம் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இந்தப் படத்தை ...

மீண்டும் முகநூலுக்குத் திரும்பும் சிவகுமார்

Posted:

தீரன் சின்னமலை பற்றி தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிவகுமார் எழுதிய கருத்துக்களுக்கு கடும் விமர்சனங்களும், சில சாதீய மோதல்களும் எழுந்ததைத் தொடர்ந்து முகநூலை விட்டு விலகுவதாக நடிகர் சிவகுமார் அறிவித்தார். ஆனால், அவரது விலகல் அறிவிப்புக்கு பலர் ஆதரவு தெரிவிக்கவில்லை. அவருடைய முகநூல் பக்கத்திலேயே மீண்டும் வர வேண்டும், பல ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™