Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜெயலலிதா வெற்றி!

Posted:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் 1,51,215 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ தனித்துப் போட்டி: நாளை காலை 10.30க்கு முடிவை வெளியிடுகிறார்!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையான்றை ஆற்றவுள்ளார். 


Read more ...

பொது பல சேனா நாகபாம்புச் சின்னத்தில் போட்டி!

Posted:

பொது பல சேனா அமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கட்சியான பொது பல பெரமுன என்கிற பெயரில் நாகபாம்புச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிகின்றது. 


Read more ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 11வது சுற்றில் ஒரு இலட்சம் வாக்குகள் பெற்று ஜெயலலிதா முன்னிலை!

Posted:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 11வது சுற்று முடிவில் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் 1,09,653 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரன் 6,750 வாக்குகள் பெற்றுள்ளார். டிராபிக் ராமசாமி 2,492 வாக்குகள் பெற்று 3வது இடம் பிடித்துள்ளார். 


Read more ...

நாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பேன்; பதவிகளுக்காக போட்டியிட மாட்டேன்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கான உச்சபட்ச உதவிகளைப் புரிவேன். ஆனால், பதவிகளுக்காக ஆசைப்படவோ, போட்டியிடவோ மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்தவுக்கு வேட்புமனுவும் இல்லை; தேசியப்பட்டிலிலும் இடமில்லை: மைத்திரி மீண்டும் திட்டவட்டம்!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 


Read more ...

காபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களே செயற்படுவர்: விஜயதாச ராஜபக்ஷ

Posted:

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பொதுத்தேர்தல் இடம்பெற்று முடியும் வரை காபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே செயற்பட முடியும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இடமளியோம்: அநுரகுமார திசாநாயக்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இடமளியோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

உலகில் மிகவும் சர்ச்சைக்குரிய 8 உணவு வகைகள் எவை?

Posted:

இந்தியாவில் மேகி நிறுவனத்தின் நூடில்ஸில் அதிக இரசாயனம் கலந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப் பட்டு அது நாடு முழுதும் தடை செய்யப் பட்டிருப்பது அண்மைய செய்தி. ஆனால் உலகின் பல பாகங்களில் இதே போன்ற சர்ச்சைக்குரிய அதே நேரம் பிரபலமான உணவு வகைகள் பல இருந்து வருகின்றன. இவற்றில் சில தடை செய்யப் பட்டும் சில இன்னமும் நடைமுறையில் உண்ணப் பட்டும் வருகின்றன. அது போன்ற 8 உணவு வகைகளின் விபரம் கீழே:

1. உணவு - கசு மர்சு (Casu Marzu)
  நாடு - இத்தாலி

உண்மையில் இது சற்றுக் காலம் சென்ற (அழுகிய) சீஸ் வகையாகும். இந்த உணவுக்குள்ளே பல ஆயிரக் கணக்கான உயிருள்ள புழுக்கள் இருக்கும் என்றும் இது உண்பவரின் கண்களைக் கூடச் சென்றடையக் கூடும் என எச்சரிக்கப் படுகின்றது. மேலும் இதற்குள் இறந்து போன புழுக்கள் இருந்தால் இந்த கசு மர்சு விஷமுள்ளதாக மாறும் வாய்ப்பும் உள்ளது.

2. உணவு - ஃபுகு மீன் அல்லது புஃபெர்ஃபிஷ்
   நாடு - ஜப்பான்

இந்த மீன் மிகச் சுவையானது என்ற போதும் நன்கு பயிற்றுவிக்கப் பட்ட சமையல்காரரால் இது ஆக்கப் பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்தே இதை உண்ண வேண்டும். ஏனெனில் இந்த மீனின் ஈரல் மற்றும் சில பாகங்களில் காணப்படும் டெட்ரோடொடொக்ஸின் என்ற பதார்த்தம் நச்சுத் தன்மை வாய்ந்தது என்பதால் குறித்த பாகங்கள் கவனமாக நீக்கப் பட்ட பின் இது சமைக்கப் பட வேண்டும் என்பது மட்டுமல்லாது சமைத்த பின் சுவையும் பரிசோதிக்கப் பட்ட பின்னரே பரிமாறப் படுவதும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

3. உணவு - இகுஷுகுரி
   நாடு - ஜப்பான்

இந்த மீனானது இரவு உணவுக்காக உண்ணப் படும் வேளையில் அது மிகவும் புதிய மீன் என்பதை நிரூபிக்கப் பெரும்பாலும் அது உயிருடன் துடித்துக் கொண்டு இருக்கும் போதே உண்ணப் படுவதால் இது மிகவும் சர்ச்சைக்குரிய உணவாகக் கருதப் படுகின்றது.

4. உணவு - யின்யங் மீன்
   நாடு - தைவான்

இந்த மீனும் மிகவும் புதிதாகப் பரிமாறப்படுகின்றது என்பது நிரூபிக்கப் படுவதற்காக சில விநாடிகளே சூடு காட்டப் பட்டு அது உயிருடன் பரிமாறப்படுகின்றது. இதனால் தாய்வான், அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இந்த வகை உணவைத் தடை செய்துள்ளன.

5. உணவு - டுருங்கென் ஷ்ரிம்ப்
   நாடு - சீனா

இந்த ஷ்ரிம்ப் மீனானது மிக உறுதியான அல்கொஹோலில் அமிழ்த்தப் பட்டு உண்பதற்கு இலகுவாகப் பரிமாறப்படுகின்றது. ஆனால் சமைக்கப் படாத ஷெல் ஃபிஷ் ஆனது pargonimiasis என்ற மிகத் தீவிரமான சுகாதாரக் கேட்டுக்கு உடனே இட்டுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

6. உணவு - ஒர்ட்டோலன்
   நாடு - பிரான்ஸ்

பிரான்ஸில் இது தற்போது தடை செய்யப் பட்ட உணவாகும். ஏனைனில் மிகவும் அருகி வரும் இந்த சிறிய பறவை சட்ட விரோதமாக வேட்டையாடப் பட்டு துன்புறுத்தப் பட்டு (குருடாக்கப் பட்டு) பிராண்டி வகை அல்கோஹோலில் அமிழ்த்தப் பட்டு பின்னர் ரோஸ்ட் செய்யப் பட்டு உணவுக்காகப் பரிமாறப் பட்டு வந்த ஒன்றாகும்.

7. உணவு - பழம் உண்ணும் வௌவால் சூப்
   நாடு - குவாம், அமெரிக்கா

இவ்வகை வௌவால்கள் நன்கு சுத்தப் படுத்தப் படாது இந்த சூப் தயாரிக்கப் படுவதால் இது மனிதர்களிடையே நரம்பியல் தொடர்பான வியாதிகளை எற்படுத்தக் கூடும் என்பதுடன் rabies என்ற வெறி நோயையும் ஏற்படுத்தக் கூடியது ஆகும்.

8. உணவு - சன்னக்ஜி (உயிருள்ள ஆக்டோபஸ்)
   நாடு - தென்கொரியா



இந்த ஆக்டோபஸ் பிடிக்கப் பட்டு கழுவப்பட்டு பின்னர் அவை வெட்டப் பட்டு துடித்துக் கொண்டிருக்கும் போதே பரிமாறப் படுகின்றது. இவை முறையாக மென்று உண்ணப் படா விட்டால் நமது உணவுக் குழாயை அடைத்து மூச்சுத் திணறலையும் ஏன் உயிராபத்தையுமே ஏற்படுத்தும் ஆபத்து உடையவை ஆகும்.

நன்றி:தகவல் Times of India


Read more ...

சத்தியம்!

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளரது ஆர்ப்பாட்டப் பேரணி ஒடுக்கப் பட்டது!

Posted:

துருக்கித் தலைநகர் இஸ்தான்புல்லில் ஞாயிற்றுக்கிழமை அமைதியாக நடைபெற்ற ஓரினச் சேர்க்கையாளருக்கு ஆதரவான பேரணியில் அதிபர் எர்டோகனுக்கு எதிரான கோஷங்கள் எழுந்ததால் இப்பேரணியில் பங்கேற்ற ஆயிரக் கணக்கான மக்கள் மீது போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் ரப்பர் துப்பாக்கிகளால் சுட்டும் பெப்பர் ஸ்பிரே இனைப் பிரயோகித்தும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் அவர்களைக் களைத்துள்ளனர்.


Read more ...

நிதி நிர்வாகம் சிதையாமல் தடுப்பதற்காக வங்கிகளைத் தற்காலிகமாக மூடியது கிறீஸ்!

Posted:

சமீப காலமாக வெளிநாட்டுக் கடன் பிரச்சினைகள் காரணமாக கிறீஸ் இன் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்றிருந்ததுடன் நிதிப் பிரச்சினையால் அது சிக்கித் தவித்து வந்தது.


Read more ...

ISS இற்கு செல்லவிருந்த நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்துச் சிதறியது!

Posted:

ஞாயிற்றுக்கிழமை காலை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கெனவரல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பூமியைச் சுற்றி வரும் ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செலுத்தப் பட்ட ஆளில்லா Space X Falcon 9 என்ற ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு 3 நிமிடங்களுக்குள் விண்ணில் வெடித்துச் சிதறியுள்ளது.


Read more ...

உலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 114வது இடம், இந்தியாவுக்கு 143வது இடம்!

Posted:

அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் பொருளாதார மற்றும் சமாதானத்துக்கான நிறுவகத்தின் 2015ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 114வது இடத்திலும், இந்தியா 143வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. 


Read more ...

மீண்டும் தீபிகா படுகோன்

Posted:

அதென்னவோ தெரியவில்லை... தீபிகா படுகோனை தமிழில் நடிக்க வைக்க யார் யாரோ முயன்றும் முடியவில்லை. ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார்.


Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : உத்தரம்

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : பூரம்

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : மகம்

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் :ஆயில்யம்

Posted:

 

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™