மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கேரளாவில் அருவிக்கரை தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது
- டிஜிட்டல் இந்தியா தூதராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்?
- ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைப்பு: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு
- சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தையின் சிகிச்சைக்காக, பிறந்த 4 நாட்களில் குழந்தை விற்பனை
- ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுத்த எம்.எல்.ஏ.வின் பதவி பறிப்பு? பழி வாங்குவதாக தெலுங்குதேசம் கண்டனம்
- பீகார் மாநில போலீஸ்காரர்களை வாடகைக்கு கூப்பிடும் கெஜ்ரிவால்: டெல்லியில் ஊழலை ஒழிக்க புதிய நடவடிக்கை
- மத்திய பிரதேசத்தில் மதிய உணவில் முட்டையை சேர்க்க முதல்–மந்திரி எதிர்ப்பு
- ஜீன்ஸ்- டி சர்ட் அணிந்துக்கொண்டு வேலைக்கு வரலாம்: இன்போசிஸ் சி.இ.ஓ. அதிரடி உத்தரவு
- ராகுல் மீண்டும் பாத யாத்திரை: ஒடிசாவில் 5–ந்தேதி தொடங்குகிறார்
- நீதிபதி குன்காவுக்கு பதவி உயர்வு: கர்நாடகா ஐகோர்ட்டு பொது பதிவாளர் ஆனார்
- சென்னை ஐ.ஐ.டி.க்கு தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் மீண்டும் நோட்டீசு
- மேகி நூடுல்சிஸ் விளம்பரத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? மத்திய அரசு அதிகாரி பதில்
- ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
- சேவை வரி உயர்வு அமலுக்கு வந்தது: செல்போன், விமான பயணம், சுற்றுலா கட்டணம் அதிகரிப்பு
- இந்தியாவில் இந்த ஆண்டு வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 338 ஆக உயர்வு
- இந்தியாவில் உள்ள 30 சதவீத டிரைவிங் லைசன்ஸ்கள் போலியானது: நிதின் கட்காரி
- இந்தியாவின் மதிப்பை உயர்த்தவே வெளிநாடுகளுக்கு பயணம்: பிரதமர் மோடி பேட்டி
- உ.பி-ஐ அடுத்து அனைத்து மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சோதிக்க மத்திய அரசு உத்தரவு
- அதிகாரத்தை இழந்த ஏமாற்றத்தில் அரசை தாக்கி பேசுகிறார் ராகுல் காந்தி: கட்காரி பேட்டி
- கடும் வெயிலுக்கு 2.4 கோடி கோழிகள் சாவு: இந்தியாவில் இறைச்சி விலை கிடுகிடு உயர்வு
| கேரளாவில் அருவிக்கரை தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது Posted: 01 Jun 2015 11:51 PM PDT திருவனந்தபுரம் மாவட்டம் அருவிக்கரை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கார்த்திகேயன் கேரள சட்டசபை சபாநாயகராக பணியாற்றியவர். இந்த தேர்தலில் அவரது மகன் சபரிநாதனை காங்கிரஸ் வேட்பாளராக |
| டிஜிட்டல் இந்தியா தூதராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்? Posted: 01 Jun 2015 11:47 PM PDT டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அதன் விளம்பர தூதராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நியமிக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தெரியவந்துள்ளது. பிரதமர் மோடியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, இந்தியாவை நவீன தொழில் நுட்பங்களை முழுமையாக பயன்படுத்தி பயன் |
| ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைப்பு: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு Posted: 01 Jun 2015 11:20 PM PDT குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் இன்று அறிவித்தார். கடந்த 4 மாதத்தில் 3வது முறையாக வட்டி விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கியின் இம்முடிவு பலருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்துள்ளது. |
| சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தையின் சிகிச்சைக்காக, பிறந்த 4 நாட்களில் குழந்தை விற்பனை Posted: 01 Jun 2015 11:00 PM PDT சத்தீஸ்கர் மாநிலம் பாலாங்கிர் நகரைச் சேர்ந்தவர் பேத பியாசாதாஸ் இவரது மனைவி ஹிமாத்ரி. தாஸ் சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். அவரது 2 கால்களிலும் புண் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மாவட்ட அரசு மருத்துவ |
| ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுத்த எம்.எல்.ஏ.வின் பதவி பறிப்பு? பழி வாங்குவதாக தெலுங்குதேசம் கண்டனம் Posted: 01 Jun 2015 10:54 PM PDT தெலுங்கானா சட்ட மேல்சபையில் காலியாக இருந்த 6 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் 5 இடங்களில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி போட்டியிட்டது. 6–வது இடத்தை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், தெலுங்கு தேசமும் வேட்பாளரை நிறுத்தின. |
| பீகார் மாநில போலீஸ்காரர்களை வாடகைக்கு கூப்பிடும் கெஜ்ரிவால்: டெல்லியில் ஊழலை ஒழிக்க புதிய நடவடிக்கை Posted: 01 Jun 2015 10:50 PM PDT டெல்லியில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் முதல் நடவடிக்கையாக ஊழலை ஒழிக்க புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அந்த அமைப்புக்கு தினமும் ஏராளமானவர்கள் போன் செய்து புகார் கூறினார்கள். இதனால் டெல்லியில் ஊழல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் டெல்லி கவர்னர் நஜீப் ஜங்குக்கும், முதல்–மந்திரி கெஜ்ரிவாலுக்கும் இடையே அதிகாரிகளை நியமனம் செய்யும் அதிகாரம் |
| மத்திய பிரதேசத்தில் மதிய உணவில் முட்டையை சேர்க்க முதல்–மந்திரி எதிர்ப்பு Posted: 01 Jun 2015 10:48 PM PDT மத்திய பிரதேச மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக்காக முட்டையை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அலிராஜ்பூர், |
| ஜீன்ஸ்- டி சர்ட் அணிந்துக்கொண்டு வேலைக்கு வரலாம்: இன்போசிஸ் சி.இ.ஓ. அதிரடி உத்தரவு Posted: 01 Jun 2015 10:45 PM PDT மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கள் ஊழியர்கள் இனி கேஷ்வல் உடையில் வேலைக்கு வரலாம் என தெரிவித்துள்ளது. உலக அளவில் மிக முக்கியமான மென்பொருள் நிறுவனமாக விளங்கும், இன்போசிஸ் நிறுவனத்தில் சுமார் 1.7 லட்சம் ஊழியர்கள் வேலை |
| ராகுல் மீண்டும் பாத யாத்திரை: ஒடிசாவில் 5–ந்தேதி தொடங்குகிறார் Posted: 01 Jun 2015 10:03 PM PDT காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மாநிலம் வாரியாக பாத யாத்திரை நடத்தி வருகிறார். நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் விவசாயிகளை திரட்டுவதற்காக அவர் இந்த பாத யாத்திரையை நடத்துகிறார். |
| நீதிபதி குன்காவுக்கு பதவி உயர்வு: கர்நாடகா ஐகோர்ட்டு பொது பதிவாளர் ஆனார் Posted: 01 Jun 2015 09:26 PM PDT பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதியாக பணி புரிந்தவர் மைக்கேல்டி குன்கா. இவர், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 |
| சென்னை ஐ.ஐ.டி.க்கு தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் மீண்டும் நோட்டீசு Posted: 01 Jun 2015 08:55 PM PDT சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்ததாக கூறி அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. |
| Posted: 01 Jun 2015 08:49 PM PDT பிரபல நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிமான ரசாயனம் கலந்து இருப்பதை உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டு பிடித்தனர். அந்த மாநிலத்தில் பரபங்கி என்ற இடத்தில் உள்ள ஈசி டே ஸ்டோர் என்ற |
| Posted: 01 Jun 2015 05:14 PM PDT பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில், சோனியா காந்தி கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் ஆதி திராவிடர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ராஜஸ்தான் |
| சேவை வரி உயர்வு அமலுக்கு வந்தது: செல்போன், விமான பயணம், சுற்றுலா கட்டணம் அதிகரிப்பு Posted: 01 Jun 2015 04:59 PM PDT மத்தியிலும், மாநிலங்களிலும் ஒரே சீரான வரி முறையை கையாளும் விதமாக சேவை வரி விதிப்பில் மாற்றத்தை கொண்டு வரும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி அறிவித்து இருந்தார். அதன்படி குறிப்பிட்ட சில சேவைகளைத் தவிர பல்வேறு முக்கிய துறைகளில் சேவை வரியை 12.36 சதவீதத்தில் இருந்து(கல்வி வரி உள்பட) |
| இந்தியாவில் இந்த ஆண்டு வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 338 ஆக உயர்வு Posted: 01 Jun 2015 03:39 PM PDT இந்த ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல வட மாநிலங்களிலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெயிலின் கொடுமைக்கு பலர் பலியாகி வருகின்றனர். இதுவரை இந்தியாவில் வெயிலின் கொடுமைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,338 ஆக உயர்ந்துள்ளது. |
| இந்தியாவில் உள்ள 30 சதவீத டிரைவிங் லைசன்ஸ்கள் போலியானது: நிதின் கட்காரி Posted: 01 Jun 2015 01:35 PM PDT இந்தியாவில் உபயோகத்தில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இன்று ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுகுறித்து கூறுகையில் " தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள 25-30 சதவீத ஓட்டுனர் |
| இந்தியாவின் மதிப்பை உயர்த்தவே வெளிநாடுகளுக்கு பயணம்: பிரதமர் மோடி பேட்டி Posted: 01 Jun 2015 12:40 PM PDT காங்கிரஸ் ஆட்சி சீர்குலைத்த இந்தியாவின் மதிப்பை உயர்த்தவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். மோடி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி அவர் செய்தியாளர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். |
| உ.பி-ஐ அடுத்து அனைத்து மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சோதிக்க மத்திய அரசு உத்தரவு Posted: 01 Jun 2015 10:38 AM PDT மேகி நூடுல்சில் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனக்கலப்பு இருப்பதாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து பல்வேறு மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சோதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன், உத்தரப்பிரசே மாநிலத்தைச் சேர்ந்த உணவு |
| அதிகாரத்தை இழந்த ஏமாற்றத்தில் அரசை தாக்கி பேசுகிறார் ராகுல் காந்தி: கட்காரி பேட்டி Posted: 01 Jun 2015 10:27 AM PDT காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி அதிகாரத்தை இழந்த ஏமாற்றத்தின் காரணமாக மத்திய அரசை தாக்கி பேசி வருகிறார் என்று மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி இன்று கூறியுள்ளார். விவசாயிகளின் விவகாரங்களை ராகுல் காந்தி எழுப்பி வருவது குறித்து |
| கடும் வெயிலுக்கு 2.4 கோடி கோழிகள் சாவு: இந்தியாவில் இறைச்சி விலை கிடுகிடு உயர்வு Posted: 01 Jun 2015 09:04 AM PDT இந்தியாவில் இந்த ஆண்டின் கோடைக்காலத்தில் வெப்பம் தாங்க முடியாமல் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் சுமார் இரண்டரை கோடி கோழிகளும் அதிக வெப்பத்தால் இறந்துள்ளன. இதன் விளைவாக, கோழி இறைச்சியின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |