Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ராஜபாளையம் அருகே போலி மருத்துவர் கைது

Posted: 15 Jun 2015 01:27 PM PDT

ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேருபவனம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வி

Posted: 15 Jun 2015 01:26 PM PDT

ராஜபாளையம் நேருபவனத்துக்கு காங்கிரஸ், த.மா.கா இருவரும் சொந்தம் கொண்டாடுவதால் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

காளியம்மன்கோயில் திருவிழா கொடியேற்றம்

Posted: 15 Jun 2015 01:25 PM PDT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கல்லுமடம் கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பேரிடர்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

Posted: 15 Jun 2015 01:24 PM PDT

பேரிடர்கள் எந்த வகையில் வந்தாலும் அதை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

செல்லிடப்பேசியில் ஆபாசமாக பேசிய 3 இளைஞர்கள் கைது

Posted: 15 Jun 2015 01:24 PM PDT

விருதுநகரில் திருமணமான இளம்பெண்ணின் செல்லிடப்பேசியில் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்ததாக ஐ.டி.ஐ, மாணவர் உள்பட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

வெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

Posted: 15 Jun 2015 01:23 PM PDT

தற்போது சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைப்பதால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகிரி பகுதி விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்வதில்   அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

ராஜபாளையம் பகுதியில் ஜூன் 16 மின் தடை

Posted: 15 Jun 2015 01:20 PM PDT

ராஜபாளையம் மின்கோட்டம் ராஜபாளையம், முடங்கியார், நல்லமநாயக்கன்பட்டி,ஆலங்குளம் உப மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. 

விதிமீறி வாகனம் ஓட்டிய 91 பேர் மீது வழக்கு

Posted: 15 Jun 2015 01:13 PM PDT

சிவகாசி காவல் கோட்டத்தில் விதியை மீறி வாகனம் ஓட்டிய 91 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகாசி பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

Posted: 15 Jun 2015 01:13 PM PDT

சிவகாசி பள்ளியில் திங்கள்கிழமை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கம்யூ. கட்சியினர் தர்னா

Posted: 15 Jun 2015 01:12 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான்கு இடங்களில் திங்கள்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் சாவு

Posted: 15 Jun 2015 01:11 PM PDT

விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர்.

தீக்காயமடைந்த இளம்பெண் சாவு

Posted: 15 Jun 2015 01:11 PM PDT

சிவகாசியில் தீக்காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பயனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

வரதட்சணை புகார்: 2 பேர் கைது

Posted: 15 Jun 2015 01:10 PM PDT

ராஜபாளையத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

பெண் தற்கொலை

Posted: 15 Jun 2015 01:10 PM PDT

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை நல்லூர்பட்டி மேட்டுப்பட்டியயைச் சேர்ந்தவர் கருப்புச்சாமி. தேமுதிக பிரமுகர். இவருடைய மனைவி சுமதி (38). இவர்ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விஷவிதையை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்றவர் கைது

Posted: 15 Jun 2015 01:09 PM PDT

பழனியருகே பள்ளிக்கூடம் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.    பழனியை அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் பழனி தாலுகா போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராமன்(61) என்பவர் பாப்பம்பட்டி துவக்கப்பள்ளி அருகே கஞ்சா விற்றது தெரியவந்தது.  இதையடுத்து போலீஸார் ராமனை கைது செய்து அவரிடம் இருந்து ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விபத்தில்லா பயணத்துக்கு...

Posted: 15 Jun 2015 01:08 PM PDT

தமிழகத்தில் ஜூலை 1 முதல் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகன விபத்துகளில் ஏற்படும்

சமையல் செய்யும்போது தீப்பற்றி இளைஞர் சாவு

Posted: 15 Jun 2015 01:07 PM PDT

பழனியை அடுத்த சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்(21).  கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் கார்த்திக் சமையல் செய்வதற்காக அடுப்பைப் பற்ற வைத்த போது எதிர்பாரா விதமாக உடையில் தீப்பற்றி பலத்த தீக்காயமடைந்தார்.  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.10 கோடியில் செவிலியர் பயிற்சி பள்ளி அமையும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

Posted: 15 Jun 2015 01:07 PM PDT

ரூ.10 கோடி செலவில் கட்டப்பட உள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளிக்கான இடத்தினை, பொதுப்பணித்துறை(கட்டட அழகுக்கலை) நிபுணர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

புகையிலை எனும் போதை

Posted: 15 Jun 2015 01:06 PM PDT

புகையிலையைப் பயன்படுத்துவதால் உலகெங்கிலும் மரணமடைபவர்கள் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் எனும் அதிர்ச்சித் தகவல்

32 ரசாயனப் பொருள்கள் விற்பனைக்கு தடை

Posted: 15 Jun 2015 01:06 PM PDT

பூச்சிக்கொல்லி மருந்துக் கடைகளில் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள 32 வகையான ரசாயனப் பொருள்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆண்டிபட்டி பகுதியில் விதைப்புக்கு தயாராகும் விவசாயிகள்

Posted: 15 Jun 2015 01:05 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில் நாற்றங்கால் உற்பத்தி செய்வதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

தாமதித்தால் விபரீதம்!

Posted: 15 Jun 2015 01:05 PM PDT

கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு 2015-ஐ ரத்து செய்த உச்சநீதிமன்றம்,

எரிவாயு கசிந்து தீ விபத்து: உணவக தொழிலாளி காயம்

Posted: 15 Jun 2015 01:04 PM PDT

நத்தம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). உணவக தொழிலாளி. இவர், வீட்டிலிருந்த ஏர் ஸ்டவ்வை பயன்படுத்துவதற்காக திங்கள்கிழமை காலை முயற்சித்துள்ளார்.

ஆய்வக உதவியாளர் தேர்வு விடைகளை வெளியிட கோரிக்கை

Posted: 15 Jun 2015 01:04 PM PDT

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான விடைகளை இணையதளத்தில் வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதி வேகத்தில் சென்று விபத்து ஏற்படுத்தும் தனியார் பேருந்துகள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

Posted: 15 Jun 2015 01:03 PM PDT

உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு

Posted: 15 Jun 2015 01:01 PM PDT

நீரில் மூழ்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதை அடுத்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

வாக்காளரின் விவரங்கள் ஆதார் அட்டையுடன் சரி பார்க்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

Posted: 15 Jun 2015 01:00 PM PDT

வாக்காளரின் விவரங்களை, ஆதார் அட்டையுடன் சரி பார்க்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

தொழில் பாதுகாப்பு கோரி தெரு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jun 2015 12:59 PM PDT

தேனியில் திங்கள்கிழமை ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் தெரு வியாபாரிகளுக்கு தொழில் பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

விவசாயியை வழிமறித்து தாக்கியதாக 2 பேர் கைது

Posted: 15 Jun 2015 12:58 PM PDT

தேனி அருகே திங்கள்கிழமை பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பிரச்னையில், விவசாயியை வழிமறித்து தாக்கியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மாமியாரை தாக்கிய மருமகனுக்கு வலைவீச்சு

Posted: 15 Jun 2015 12:58 PM PDT

வருசநாடு அருகே மயிலாடும்பாறையைச் சேர்ந்தவர் சுருளி (55). இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சீனியம்மாள் மகள் ராஜேஸ்வரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாராம்.

அகில இந்திய கைப்பந்து போட்டி : சென்னை ஐஓபி அணி சாம்பியன்

Posted: 15 Jun 2015 12:57 PM PDT

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய மின்னொளி கைப்பந்து போட்டியில், ஆண்கள் பிரிவில்

செல்லிடப்பேசியில் பெண்ணுக்கு தொந்தரவு: இளைஞர் கைது

Posted: 15 Jun 2015 12:57 PM PDT

வத்தலகுண்டு அருகே கணவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகளுக்கு செல்லிடப்பேசியில் கடந்த சில நாள்களுக்கு முன் வந்த அழைப்பில்  எதிர்முனையில் பேசிய இளைஞர் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் பேசுவது குறுஞ்செய்தி அனுப்புவது என தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

தேனியில் ஜூன் 17 மின் தடை

Posted: 15 Jun 2015 12:56 PM PDT

கோபா அமெரிக்கா கால்பந்து: கடைசி நேரத்தில் பிரேசில் வெற்றி

Posted: 15 Jun 2015 12:56 PM PDT

கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் கடைசி நிமிட கோலில் பெரு அணியை வென்றது பிரேசில்.

கனரா வங்கி சார்பில் தொழில் பயிற்சி முகாம்

Posted: 15 Jun 2015 12:55 PM PDT

கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில், பேப்பர் கப் மற்றும் கோப்பு தயாரிப்புக்கான இலவச தொழில் பயிற்சி முகாம் ஜூன் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

அவதூறு வழக்கில் தேமுதிக பேச்சாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 15 Jun 2015 12:55 PM PDT

போடியில் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், தேமுதிக பேச்சாளர் வளர்பிறை சோழன் திங்கள்கிழமை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

புரோ கபடி லீக்: தில்லி அணியின் பயிற்சியாளராக ஹன்னப்பா நியமனம்

Posted: 15 Jun 2015 12:55 PM PDT

அடுத்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள புரோ கபடி லீக் போட்டிக்கு தில்லி தபங் அணியின் பயிற்சியாளராக

மறு ஆய்வு முறையை அமல்படுத்த வீரர்களுடன் ஆலோசனை: விராட் கோலி

Posted: 15 Jun 2015 12:54 PM PDT

நடுவர்கள் முடிவு குறித்து மறு ஆய்வு செய்யும் (டிஆர்எஸ்) முறையை அமல்படுத்துவதற்கு வீரர்களுடன் ஆலோசனை

குறைதீர் கூட்டத்தில் மாணவர்களுக்கு பரிசு

Posted: 15 Jun 2015 12:54 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் ந.வெங்கடாசலம் பரிசுகள் வழங்கினார்.

துப்புரவுப் பணியாளர் காலிப்பணியிடங்களால் திண்டுக்கல் மாநகராட்சியில் சுகாதார சீர்கேடு

Posted: 15 Jun 2015 12:53 PM PDT

துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடங்கள் மற்றும் 4 தொட்டித் தூக்கும் லாரிகள் ஒரே நேரத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதால், கடந்த 7 நாள்களாக திண்டுக்கல் நகரின் தேங்கியுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: இந்தியா - குவாம் இன்று மோதல்

Posted: 15 Jun 2015 12:53 PM PDT

உலகக் கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து ஆட்டத்தில் குவாம் அணியை செவ்வாய்க்கிழமை எதிர்கொள்கிறது இந்தியா.

டெஸ்ட் போட்டி தரவரிசை: முரளி விஜய், ஷிகர் தவண் முன்னேற்றம்

Posted: 15 Jun 2015 12:49 PM PDT

வங்கதேசத்துடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவண் ஆகியோர்

"எதிரணிக்கு ஆரம்பத்திலிருந்தே நெருக்கடி கொடுக்க வேண்டும்'

Posted: 15 Jun 2015 12:47 PM PDT

எதிரணிக்கு ஆரம்பத்திலிருந்தே நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால் வேன் ஆஷ்

பங்குச் சந்தையில் 161 புள்ளிகள் உயர்வு

Posted: 15 Jun 2015 12:33 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 161 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டது.

வாசனைப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பு

Posted: 15 Jun 2015 12:32 PM PDT

சர்வதேச சந்தைகளில் இந்திய வாசனைப் பொருள்களுக்கான வரவேற்பு அதிகரித்ததைத் தொடர்ந்து,

ஆர்-காம், சிஸ்டெமா இணைப்பு குறித்துப் பேச்சுவார்த்தை

Posted: 15 Jun 2015 12:31 PM PDT

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்), நிறுவனத்துடன், இந்தியாவில் செயல்படும் ரஷிய

பணவீக்க விகிதம் (-)2.36 சதவீதமாகக் குறைந்தது

Posted: 15 Jun 2015 12:30 PM PDT

மே மாதத்தில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் பூஜ்ய நிலைக்கும் கீழே (-)2.36 சதவீதமாகக் குறைந்தது என்று

கூட்டுப் போர் ஒத்திகையைக் கைவிட்டால் தென் கொரியாவுடன் அமைதிப் பேச்சு: வட கொரியா நிபந்தனை

Posted: 15 Jun 2015 12:29 PM PDT

அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடுவதைக் கைவிட்டால், தென் கொரியாவுடன் அமைதிப்

22 பேருடன் மலேசிய எண்ணெய்க் கப்பல் மாயம்

Posted: 15 Jun 2015 12:29 PM PDT

மலேசிய நாட்டு எண்ணெய்க் கப்பல் 22 பணியாளர்களுடன் நடுக்கடலில் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சவூதி: இந்த ஆண்டின் 100-ஆவது மரண தண்டனை நிறைவேற்றம்

Posted: 15 Jun 2015 12:28 PM PDT

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் தலைகள் துண்டிக்கப்பட்டு, அந்தத் தண்டனை திங்கள்கிழமை

ஐ.எஸ்.ஸுக்காக 17 வயது பிரிட்டன் இளைஞர் தற்கொலைத் தாக்குதல்

Posted: 15 Jun 2015 12:26 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்காக, பிரிட்டனைச் சேர்ந்த 17 வயது இளைஞர் இராக்கில் தற்கொலைத் தாக்குதலில்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: ஜெப் புஷ் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 15 Jun 2015 12:25 PM PDT

குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜெப் புஷ்

அமெரிக்கத் தாக்குதல்: லிபியாவில் முக்கிய பயங்கரவாதத் தலைவர் சாவு

Posted: 15 Jun 2015 12:23 PM PDT

லிபியாவில் அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் முக்கியப் பயங்கரவாதத் தலைவர் முக்தார் பெல்முக்தார்

"அமெரிக்கவாழ் இந்தியர்கள் தாய்நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்'

Posted: 15 Jun 2015 12:21 PM PDT

அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் தாய்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதோடு,

அமைதிப் பேச்சுக்கு இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கமாட்டோம்: பாகிஸ்தான்

Posted: 15 Jun 2015 12:21 PM PDT

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

யோகாவை விளம்பரப்படுத்துவது ஏன்? நிதீஷ் குமார் கேள்வி

Posted: 15 Jun 2015 12:20 PM PDT

"சர்வதேச யோகா தினத்தை பாஜக விளம்பரப்படுத்துவது ஏன்?' என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தரையிறங்கியபோது விமான டயர் வெடித்தது: 170 பயணிகள் உயிர் தப்பினர்

Posted: 15 Jun 2015 12:18 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் திங்கள்கிழமை

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 15 Jun 2015 12:17 PM PDT

முன்னாள் ராணுவத்தினருக்கான "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை மத்திய அரசு உடனடியாக

காஷ்மீர்: முன்னாள் தீவிரவாதி சுட்டுக் கொலை; ஒரே வாரத்தில் 4ஆவது தாக்குதல் சம்பவம்

Posted: 15 Jun 2015 12:16 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், சோபோரில், முன்னாள் தீவிரவாதி ஒருவர் திங்கள்கிழமை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆறுமுகனேரி

Posted: 15 Jun 2015 12:15 PM PDT

நாகர்கோவில்

Posted: 15 Jun 2015 12:14 PM PDT

இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல்

Posted: 15 Jun 2015 12:14 PM PDT

ஆறுமுகனேரி மடத்துவிளை சந்தனசம நடுநிலைப் பள்ளிக்கு, கல்விக்கு உதவுவோம் குழு சார்பில் இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

உ.பி.: மேலும் ஒரு செய்தியாளர் மீது தாக்குதல்

Posted: 15 Jun 2015 12:13 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட் பகுதியில் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் தாக்கப்பட்டார்.

18இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 15 Jun 2015 12:13 PM PDT

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 18) நடைபெறுகிறது.

காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை: கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

Posted: 15 Jun 2015 12:12 PM PDT

கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கான காலம் அவகாசம் மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக

திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 15 Jun 2015 12:12 PM PDT

ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர் கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் நடைபெற்றது.

ஹரியாணாவில் யோகா தினம் கடைப்பிடிக்கப்படும்: முதல்வர் கட்டார் அறிவிப்பு

Posted: 15 Jun 2015 12:11 PM PDT

சர்வதேச யோகா தினம் ஹரியாணா மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படும் என அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

மாநிலத்தில் முதலிடம்: பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு

Posted: 15 Jun 2015 12:11 PM PDT

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பாடப்பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு முப்பெரும் விழா

Posted: 15 Jun 2015 12:09 PM PDT

கோவில்பட்டியில் மத்திய, மாநில எஸ்.சி. மற்றும் எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வெகுஜன மக்கள் கூட்டமைப்பு ஆகியன சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

அபாய நிலையில் பொருள் பாதுகாப்பறை: அகற்றக் கோரிக்கை

Posted: 15 Jun 2015 12:09 PM PDT

இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள திருச்செந்தூர் கோயில் பொருள்கள் பாதுகாப்பறையை அகற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கோவில்பட்டியில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு

Posted: 15 Jun 2015 12:08 PM PDT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் திறப்பு விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.

நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் ரத்தானாலும் "கொலீஜியம்' முறை அமல் ஆகாது: மத்திய அரசு

Posted: 15 Jun 2015 12:08 PM PDT

நீதிபதிகள் நியமன தேசிய ஆணையச் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தாலும் கூட, "கொலீஜியம்' முறையை மீண்டும் அமல்படுத்த

பழங்குடியினர் நலத் திட்டங்களை அதிகரிக்க வேண்டும்: மோடி

Posted: 15 Jun 2015 12:07 PM PDT

பழங்குடியினர் நலனுக்கான திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

தூத்துக்குடியில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jun 2015 12:07 PM PDT

தெரு வியாபாரிகள் வாழ்வாதாரம் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, தூத்துக்குடியில் ஏஐடியூசி அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ரோமிங் கட்டணம் ரத்து

Posted: 15 Jun 2015 12:06 PM PDT

நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு இலவச ரோமிங் சலுகை திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் நாளைமுதல் கூடுதல் பேருந்து நிலையம் செயல்படும்

Posted: 15 Jun 2015 12:06 PM PDT

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளதையடுத்து, புதன்கிழமைமுதல் (ஜூன் 17) நகரப் பேருந்துகள் ராமசாமி தாஸ் பூங்கா பின்பகுதியிலிருந்தும், பிற பேருந்துகள் அனைத்தும் புறவழிச் சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.இ. சேர்க்கை: 1.54 லட்சம் பேருக்கு சமவாய்ப்பு எண் வெளியீடு

Posted: 15 Jun 2015 12:03 PM PDT

பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 238 பேருக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) திங்கள்கிழமை

தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி புதிய தமிழகம் கட்சியினர் மருத்துவமனை முற்றுகை

Posted: 15 Jun 2015 12:03 PM PDT

திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். முதன்மயர் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

சிறப்பு முகாம் சிறையில் மோதல்: இருவர் மீது வழக்கு

Posted: 15 Jun 2015 12:02 PM PDT

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோததிó ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

கிணறு தோண்ட விண்ணப்பிக்க கட்டணம் ரூ.5000-த்திலிருந்து ரூ.100 ஆக குறைப்பு

Posted: 15 Jun 2015 12:02 PM PDT

திருச்சி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கிணறுகள் தோண்டுவதற்கு விண்ணப்பிக்க செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.5000-த்திலிருந்து ரூ.100 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஐஎன்டியுசி சங்க நிர்வாகி மீது தாக்குதல்

Posted: 15 Jun 2015 12:02 PM PDT

திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஐஎன்டியுசி சங்க நிர்வாகியை தாக்கிய சிஐடியு சங்க நிர்வாகிகள் 2 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனர்.

திருச்சி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 15 Jun 2015 12:02 PM PDT

பட்டா வழங்கக் கோரி திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த 1.60 கிலோ தங்கம் பறிமுதல்

Posted: 15 Jun 2015 12:01 PM PDT

திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 1.60 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும்: விஜயகாந்த்

Posted: 15 Jun 2015 12:01 PM PDT

களத்தூர் பாலாற்றுப் படுகையில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால், தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.

உளுந்து பயிருக்கு இழப்பீடு கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 15 Jun 2015 12:01 PM PDT

உளுந்து பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

ஆட்சியரிடம் எம்.எல்.ஏ.க்கள் மனு

Posted: 15 Jun 2015 12:00 PM PDT

களத்தூர் கிராமத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள் மனோகரன், பாபு முருகவேல் ஆகியோர் ஆட்சியரைச் சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனர்.

பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி: தமிழகத்தில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்  

Posted: 15 Jun 2015 12:00 PM PDT

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மாதத்துக்குள் உரிய அனுமதிகளை

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் டிஎஸ்பி

Posted: 15 Jun 2015 12:00 PM PDT

செம்மரக் கடத்தல் வழக்கில் வேலூர் கலால் டிஎஸ்பியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு திங்கள்கிழமை ஏற்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு போலீஸ் காவலி

பைக்-வேன் மோதல்: மதபோதகர் உள்ளிட்ட 3 பேர் காயம்

Posted: 15 Jun 2015 12:00 PM PDT

சாத்தான்குளம் அருகே பைக் மீது வேன் மோதியதில் மதபோதகர் உள்ளிட்ட 3பேர் பலத்தகாயமடைந்தனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது

Posted: 15 Jun 2015 12:00 PM PDT

வேலூர் மாவட்டத்தில் அரிசி, மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

களத்தூர் மக்களை விடுவிக்கக் கோரி 19-இல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

Posted: 15 Jun 2015 11:59 AM PDT

களத்தூர் மக்களை விடுதலை செய்யக்கோரி 19-இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

நிலநடுக்கப் பாதிப்பு: நேபாளத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் ரூ.11 லட்சம் நிதியுதவி

Posted: 15 Jun 2015 11:59 AM PDT

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில்,

அரசுப் பேருந்து- பைக் மோதல்: தொழிலாளி காயம்

Posted: 15 Jun 2015 11:59 AM PDT

ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.

லாரி மீது கார் மோதியதில் முன்னாள் எம்பியின் பேரன் சாவு

Posted: 15 Jun 2015 11:59 AM PDT

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் வேலூர் முன்னாள் எம்பி சண்முகத்தின் பேரன் இறந்தார். சண்முகத்தின் மகன், மருமகள் பலத்த காயமடைந்தனர்.

இரு தரப்பினரிடையே மோதல்: 5 பேர் கைது

Posted: 15 Jun 2015 11:58 AM PDT

ஆம்பூர் அருகே இரு தரப்பினருக்கிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் 2 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிஎம்சியில் அதிநவீன "சிடி' ஸ்கேன் திறப்பு

Posted: 15 Jun 2015 11:58 AM PDT

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அதிநவீன சிடி ஸ்கேன் மையத்தை அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி மெர்சி நங்கே திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jun 2015 11:58 AM PDT

வேலூரில் இந்து முன்னணி நிர்வாகிகளை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக கூறி காவல் துறையைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில் கார் ஓட்டுநர் குத்திக் கொலை

Posted: 15 Jun 2015 11:58 AM PDT

தூத்துக்குடி உப்பளத்தில் திங்கள்கிழமை கார் ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.

பூட்டுத்தாக்கு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம்

Posted: 15 Jun 2015 11:58 AM PDT

வேலூரை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியரிடம் பூட்டுத்தாக்கு பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

பேர்ணாம்பட்டு வட்டம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 15 Jun 2015 11:57 AM PDT

பேர்ணாம்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்க வேண்டும் என பேர்ணாம்பட்டு நுகர்வோர் நலன் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™