Tamil News | Online Tamil News |
- பிளஸ் 2வில் அரசு பள்ளிகளின் வீழ்ச்சி தொடர்கிறது: தனியார் பள்ளிகளை விட 6 சதவீதம் குறைவு: மாவட்ட அளவிலும் ரேங்க் இல்லாத பரிதாபம்
- அடி மேல் அடி: பங்குச் சந்தை வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி: கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் சரிவு
- பிரச்னை உண்டு; குண்டு பாயவில்லை!
- பழிவாங்கும் அரசியல்: ராகுல்; அப்படி இல்லை: ராஜ்நாத் சிங்
- இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் சிறார்களை விசாரிக்க உதவும் மசோதாவுக்கு ஒப்புதல்
- மாவோயிஸ்ட்களின் 'அட்டாக் பிளான்' அம்பலம்! காட்டிக்கொடுத்த மின்னணு ஆவணங்கள்: முதற்கட்ட விசாரணையில் 'திடுக்' தகவல்
- முல்லை பெரியாறு அணையில் ஆய்வு பணி: தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
- காங்., அலுவலகத்தில் கனிமொழி: கூட்டணிக்கு அச்சாரமா?
- ஒரு வாரத்தில் மதுரை லஞ்ச அதிகாரிகள் பட்டியல்: பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தீவிரம்
| Posted: தமிழகத்தில், நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளின் மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்து வருவது தெரியவந்து உள்ளது. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்து உள்ளது. மாவட்ட அளவில்கூட அரசு பள்ளி களின் மாணவர்கள் ரேங்க் பெறவில்லை என்பது பெற்றோரை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் முதல் இடத்தை வழக்கம் போல் மாணவியரே பிடித்தனர். திருப்பூர் பவித்ரா மற்றும் கோவை நிவேதா ஆகியோர் 1,192 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றனர். கடந்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஸ்ரீவித்யா ... |
| அடி மேல் அடி: பங்குச் சந்தை வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி: கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் சரிவு Posted: புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு செயல்பாடுகள், மேலை நாடுகள், பொருளாதார வல்லுனர்கள் ஆகியோரின் பராட்டுக்களை பெற்றுள்ளன. அதே சமயம், மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதற்கு உள்ள தடைகளால், இந்திய பங்குச் சந்தையிலிருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக, இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதற்கு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களின் பாதகமான போக்கை காரணமாக கூறலாம். சர்வதேச அளவில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக சரிவைக் கண்டு வந்த கச்சா எண்ணெய் விலை, மீண்டும் ... |
| பிரச்னை உண்டு; குண்டு பாயவில்லை! Posted: புதுடில்லி: ''சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லைப் பிரச்னை இருந்த போதிலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இரு நாடுகளும் முதிர்ச்சியாகச் செயல்பட்டு, இருதரப்பு வர்த்தகம், முதலீடு போன்றவற்றை மேற்கொண்டே வருகிறோம். என் சுற்றுப் பயணத்தால், அந்த உறவு மேலும் வளரும்,'' என, பிரதமர் மோடி கூறினார். கடந்த ஆண்டு ஆகஸ்டில், இந்தியா வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியை சீனா வருமாறு அழைப்பு விடுத்தார். அதன் படி, பிரதமர் மோடி, இம்மாதம் 14ல், மூன்று நாள் பயணமாக சீனா செல்கிறார். சீனாவின் பாரம்பரிய நகரமும், அதிபரின் சொந்த மாகாணமுமான, ஜியானில், பிரதமர் மோடியை ஜி ஜின்பிங் ... |
| பழிவாங்கும் அரசியல்: ராகுல்; அப்படி இல்லை: ராஜ்நாத் சிங் Posted: புதுடில்லி: லோக்சபாவில் நேற்று ராகுல் பேசியதாவது: அமேதி தொகுதியில், உணவு பூங்கா அமைக்க, முந்தைய மன்மோகன் சிங் அரசு முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், லோக்சபா தேர்தல் வந்தது. அந்த தேர்தலில், அமேதி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 52 நிமிடங்கள் பேசினார். அவரின் பேச்சை கேட்டு நான் அசந்து விட்டேன். 'எந்த காரணத்தைக் கொண்டும் பழிவாங்கும் அரசியல் நடத்த மாட்டேன்; வளர்ச்சி அரசியல் தான் என்னுடையது' என, அவர் பேசினார். ஆனால், சமீபத்தில் எனக்கு கிடைத்த தகவலின் படி, அந்த திட்டம் முடக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். இது, அப்பட்டமான, அரசியல் ... |
| இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் சிறார்களை விசாரிக்க உதவும் மசோதாவுக்கு ஒப்புதல் Posted: புதுடில்லி: பதினாறு முதல், 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், கொடுமையான குற்றங்கள் புரிந்தால், அவர்களை, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் விசாரிக்க வகை செய்யும் மசோதாவுக்கு, லோக்சபாவில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. கொடூரமான...: இந்திய தண்டனை சட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்கள், அதற்கு குறைவானவர்கள் சிறியவர்கள் என, பிரிக்கப்பட்டு உள்ளது. அதனால், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் போது, அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், 18 வயதுக்கு குறைவானவர்கள் சிறார்கள் என்ற ... |
| Posted: கோவை: தமிழக - கேரள எல்லை வனப்பகுதிகளில், மாவோயிஸ்ட்கள் ஆயுதப்பயிற்சி முகாம் நடத்தியது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கோவையில் கைதான நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட, 'மெமரி கார்டில்', இருக்கும் விவரங்கள், மொபைல்போன் தொடர்புகள், போலீசாருக்கு மேலும் பல உபயோகமான தகவல்களை அளித்துள்ளன. இதன்மூலம், தமிழகத்தில் அதிரடி சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் தொடரும் வாய்ப்புள்ளது. தமிழக - கேரளா எல்லையிலுள்ள, வனத்துறை அலுவலகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களான, கே.எப்.சி., - மெக்டொனால்டு உணவகங்கள் மீது, சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், ... |
| முல்லை பெரியாறு அணையில் ஆய்வு பணி: தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு Posted: புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணை அருகே, புதிய அணை கட்டுவதற்காக, ஆய்வு என்ற பெயரில் பூமிக்கடியில் துளை போட்டு, 'சாம்பிள்' எடுக்கும் பணியில், கேரள அரசு இறங்கியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் தவிர்க்க, பெரியாறு அணை அருகே, புதிய அணை கட்டப்போவதாக, கேரள அரசு அறிவித்தது. 2007ல், 25 கோடி ரூபாய் ஒதுக்கி, புதிய அணைக்கான ஆய்வு பணியையும் துவக்கியது. அணையில் இருந்து, 500 அடிக்கு கீழ் பகுதியில், வல்லக்கடவு செல்லும் பாதையில், 15 இடங்களில் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் துளையிட்டு மண் ... |
| காங்., அலுவலகத்தில் கனிமொழி: கூட்டணிக்கு அச்சாரமா? Posted: தமிழக காங்., தலைவர் இளங்கோவன் தலைமையில், சத்தியமூர்த்தி பவனில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கலந்து கொள்கிறார். மேலும், கம்யூ., தலைவர்களும் அழைக்கப்பட்டு உள்ளதால், புதிய கூட்டணிக்கான துவக்கமாக, இந்நிகழ்ச்சி அமையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய முரசு வாசகர் வட்டம் சார்பில், எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு, காங்., செய்தித் தொடர்பாளர் கோபண்ணா ஏற்பாடு செய்துள்ளார். இந்நிகழ்ச்சி, 9ம் தேதி, காங்., தலைமை அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது. தமிழக காங்., தலைவர் இளங்கோவன் தலைமையில் நடக்கும் ... |
| ஒரு வாரத்தில் மதுரை லஞ்ச அதிகாரிகள் பட்டியல்: பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தீவிரம் Posted: மதுரை: சென்னையை அடுத்து பணிகள் ஒதுக்கீடு செய்ய, லஞ்சம் பெறும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பட்டியலை ஒரு வாரத்தில் வெளியிட மதுரை பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம் தீவிரமாக உள்ளது. இதையடுத்து மாநகராட்சி, மின் வாரியம், வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தாட்கோ உள்ளிட்ட ஒப்பந்ததாரர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் லஞ்ச அதிகாரிகளின் பட்டியலை விரைவில் வெளியிட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பொதுப்பணித்துறையில் கட்டடங்கள் மற்றும் நீர்வளத்துறை என இரு பிரிவுகள் உண்டு. ஒப்பந்ததாரர்களுக்கான பணி ஒதுக்கீடை 'கமிஷன்' அடிப்படையில் பேசி முடிப்பது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 08,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |