ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் கிடைக்குமா
- உத்தமவில்லன் - திரைவிமர்சனம்
- பறவை சொன்ன கதைக் காடு
- சத்துணவில் பதநீர்
- பிரதமர் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் 12 ரூபாய்க்கு ரூ.2 லட்சம் கவரேஜ்!
- மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (1112)
- உறவு - சிறுகதை
- திருமண நாள்
- மனோதிடம் -சிறுகதை
- Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
- ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்
- திட்டிவிட்டு சமாதானப்படுத்துவது போல இருக்கிறது
- நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?
- எமனின் மனைவியின் பெயர் ஐயோ….!
- ஆயிரத்தில் இருவர் - சுஜாதா (தெளிவான மின்னூல்)
- ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் photo வுடன்
- வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
- ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி
- விதி - சுஜாதா
- ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்: மே 7- 1861
- பார்வையாளர் நேரத்தில்…
- தப்பித்தால் தப்பில்லை - சுஜாதா
- வைரங்கள் - சுஜாதா
- தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
- சிவகார்த்திகேயனுக்கு சமந்தா நோ சொல்லக் காரணம் என்ன?
- நடிகர் விதார்த்துக்கு திருமணம்
- காற்றின் விளையாட்டு
- விழிப்புக்கு முன் நீயிடும் முத்தம்
- குழந்தமை
- நிரம்புகிறது வீராணம் ஏரி
- 4 பயங்கரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.120 கோடி பரிசு
- நாட்டு நடப்பு - தொடர் பதிவு
| நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் கிடைக்குமா Posted: 07 May 2015 02:27 PM PDT நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் கிடைக்குமா |
| Posted: 07 May 2015 01:26 PM PDT நடிகர் : கமல் நடிகை : பூஜா குமார் இயக்குனர் : ரமேஷ் அரவிந்த் இசை : ஜிப்ரான் ஓளிப்பதிவு : ஷாம்தத் கமலஹாசன் ஒரு மிகப்பெரிய நடிகர். இவர் தனது மனைவி ஊர்வசி, மகன் மற்றும் மாமனார் விஸ்வநாத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கமலுக்கும் அவரது குடும்ப டாக்டரான ஆண்ட்ரியாவுக்கும் நெருக்கமான உறவு இருந்து வருகிறது. இந்நிலையில், கமல் நடித்து முடித்த ஒரு படத்துக்கு படக்குழுவினர் ஒரு பெரிய ஓட்டலில் பார்ட்டி நடத்துகின்றனர். இதில் கமலின் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர். அப்போது, அந்த பார்ட்டிக்கு ... |
| Posted: 07 May 2015 01:05 PM PDT ஊரு தாண்டி பெரிய காடு. சூரிய வெளிச்சம்கூடக் கொஞ்சமாத்தான் காட்டுக்குள்ள நுழையும். நிலா வெளிச்சம் மாதிரிதான் பகல் இருக்கும். இரவைப் பத்திச் சொல்லவே வேண்டாம். அடர்ந்த காடு அப்படித்தானே இருக்கும்? மனிதர்கள் யாரும் அந்தக் காட்டுக்குள் போனதில்ல. மனிதர்கள் போகாத காட்டுல மரங்களும் விலங்குகளும் நிம்மதியா இருந்துச்சுங்க. பெரிய பெரிய மரங்க. எவ்வளவு பெருசு தெரியுமா? வகுப்புல இருக்கிற எல்லாரும் கைகளக் கோத்துக்கிட்டுக் கட்டிப் பிடிச்சாலும் மீதி இடம் இருக்கும். அவ்வளவு பெருசு. மரங்களுக்கு நடுவுல உடம்ப ... |
| Posted: 07 May 2015 12:59 PM PDT பெருந்தலைவர் காமராஜர் 1956–ல் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்து குழந்தைகளுக்கும் 1982–ல் கொண்டுவந்த சத்துணவு திட்டம்தான், இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் தமிழ்நாடு பக்கம் திரும்பிப்பார்க்க வைத்து பின்பற்ற வைத்தது. இந்த திட்டம் மாணவர்கள் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பசி, வறுமை காரணமாக பள்ளிக்கூடத்துக்கு செல்லாத நிலை தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்கியது. அடுத்துவந்த முதல்–அமைச்சர்களான கருணாநிதி, ... |
| பிரதமர் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் 12 ரூபாய்க்கு ரூ.2 லட்சம் கவரேஜ்! Posted: 07 May 2015 09:08 AM PDT பிரதமர் நரேந்திர மோடி மே 9 ஆம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கி வைக்கப் போகிறார். இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்று விவரிக்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினி. யார் ... |
| மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Posted: 07 May 2015 08:34 AM PDT மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சி மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மியான்மர் ... |
| தமிழ்நாட்டில் தாவரங்கள் (1112) Posted: 07 May 2015 08:07 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 07 May 2015 07:57 AM PDT அம்மாவை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து வீட்டுக்கும், வாசலுக்குமாக நடையாய் நடந்தாள் அமுதா. கணவன் கலையரசன் வருகைக்காகத்தான் இத்தனை எதிர்பார்ப்பு. வழக்கமாக ஆறுமணிக்கெல்லாம் வந்துவிடுபவன் இன்னும் வராதது அமுதாவுக்கு தவிப்பை அதிகமாக்கியது. கவலையோடு கதவில் சாய்ந்தாள். சிறிது நேரத்துக்கு பின் வாசலில் அரவம் கேட்கவே கவனத்தை கலைத்தாள். கலைய ரசனுடன் அவனுடைய தம்பியும் வந்திருந்தான். இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு, டிபன் தயார் செய்து முடிப்பதற்குள் இரவு எட்டு மணியாகிவிட்டது. அவன் தம்பி சாப்பிட்டுவிட்டு ... |
| Posted: 07 May 2015 07:29 AM PDT குளிகை நேரத்தில் திருமணம் செய்யலாமா விபரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும். |
| Posted: 07 May 2015 07:24 AM PDT அன்று அந்த சிறுவனை அழைத்து கொண்டு.. அவனது தந்தை ஒரு காட்டிற்குள் அழைத்து சென்றார்..!! அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன் வைத்தார்.. " மகனே இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது.. அதில் நீ வெற்றி பெற்றால் பெரியவனாகி விடுவாய்.. இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்த காட்டிலேயே இருக்க வேண்டும்..!! உன் கண்கள் கட்டப்படும்.. ஆனாலும் நீ பயப்பட கூடாது..!! வீட்டிற்கு ஓடி வந்து விடவும் கூடாது.. என்றார்..!! சிறுவனும் ஆர்வத்தோடு சவாலை சந்திக்க தயாரானான்..!! அவனது கண்களை தந்தை துணியால் இறுகக் ... |
| Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :) Posted: 07 May 2015 06:54 AM PDT இந்த திரி இல் நாம் Ready Made Mix கள் பற்றி பார்க்கலாம். இவைகள் நமக்கும் நம் குழந்தைகள் அல்லது நம் கணவர் சமைக்கும்போதும் ரொம்பவும் கை கொடுக்கும். சமையலை சுலபமாக்கும். நாம் ஊரில் இல்லாத போதும் , ஊருக்கு சென்று தனியே இருக்கும் நம் குழந்தைகளுக்கும் உதவும். |
| ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள் Posted: 07 May 2015 05:45 AM PDT நவகிரகங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் ராகு மற்றும் கேது இவர்களுக்கு சொந்தமான வீடு இல்லை . 1 ) தன்னுடன் இணைத்து இருக்கும் ( ஒரு பாகை ) கிரகங்களின் தன்மைகள் 2 ) தன்னை பார்க்கும் கிரகங்களின் தன்மைகள் 3 ) தானிருக்கும் நட்சத்திராதிபதியின் தன்மைகள் 4 ) தான் இருக்கும் ராசி அதிபதியின் தன்மைகள் ஆகியவைகளைப் பொறுத்தே இவர்கள் பலன் அளிப்பார்கள் என்பது பொதுவிதி . கூடவே மற்று விதியும் இவர்களுக்கு பொருந்தும் என சொல்லப்படுகிறது . அதாவது 5 ) தாங்கள் எந்தெந்த கிரகங்களுக்கு நட்சத்திராதிபதியாக ... |
| திட்டிவிட்டு சமாதானப்படுத்துவது போல இருக்கிறது Posted: 07 May 2015 04:33 AM PDT திட்டிவிட்டு சமாதானப்படுத்துவது போல இருக்கிறது வெயில் கால தினங்களில் மாலை நேர மழை - senthil-win - ------------------------------- - வேறு வழியே இல்லாத இக்கட்டான தருணத்தில் மனதுக்குப் பிடிக்காத வேலையைச் செய்து கொண்டிருப்பவர்களால்தான் ராகுலின் விடுமுறையை புரிந்து கொள்ள முடியும்! - Ravikumar MGR - --------------------------------------- - குழந்தைகளுக்கு socks போட்டு விடும்போது நம் தலையில் கை வைத்து நிற்கையில் ஏதோ நம்மை bless பண்றமாதிரி ஓர் உணர்வு! - Mynaah - ----------------------------------- - இன்னுமா ... |
| நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ? Posted: 07 May 2015 04:24 AM PDT செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து.மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம்.நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல்,தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும்.தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும்.இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது. பதிக்கும் முறை மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் ... |
| Posted: 07 May 2015 04:06 AM PDT ** டிராபிக் ராமசாமி, வரதட்சணை வாங்க மறுத்ததால் அவரது தந்தை கல்யாணத்தை புறக்கணித்தாராம். கோபித்துக்கொண்ட அப்பா, காசி யாத்திரைக்கு கிளம்பிவிட்டாரா? *** அமராவதியை ஆந்திராவின் தலைநகராக சந்திரபாபு நாயுடு அறிவிப்பு. இந்திராவுக்கு ஒரு அமராவதி. சந்திராவுக்கும் ஒரு அமராவதியா? *** விமானச் சக்கரத்தில் மறைந்து இரண்டு மணி நேரம் பறந்து வாலிபர் கைது. பப்ளிசிட்டிக்காக இப்படியா பறப்பதா? *** சீன எழுத்தாளர் ஸாங் யியி, கோடிகள் செலவழித்து ஷேக்ஸ்பியரைப்போல் உருவத்தை மாற்றிக்கொண்டார். As ... |
| ஆயிரத்தில் இருவர் - சுஜாதா (தெளிவான மின்னூல்) Posted: 07 May 2015 02:36 AM PDT சமையலறை தீ விபத்தில் இறந்துபோன தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கணேஷ் வஸந்திடம் உதவி கேட்டுவருகிறார் ஒரு பெரியவர். அவரது ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை மீது வழக்கு தொடரவேண்டுகிறார். கணேஷ் அந்த வழக்கை எடுத்துக்கொள்ள முனையும்போது இடையில் ஏராள வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. இது சாதாரண வரதட்சணை விவகார வழக்கு இல்லை என்று கணேஷ் வஸந்த் யூகிக்கும்போது மாமனாரும் மாப்பிள்ளையும் அவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளிக்கிறார்கள். http://www.mediafire.com/download/d4bhm277rsi2gsr/Aayirathil+Iruvar.pdf என்றும் ... |
| ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் photo வுடன் Posted: 07 May 2015 01:07 AM PDT இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது :)22 & 23 அதாவது Aug. 22 & 23 - திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை. இந்த திரி இல் அன்று செய்யவேண்டிய பக்ஷணங்களின் செய்முறைகளை பார்ப்போம் |
| வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! Posted: 06 May 2015 10:55 PM PDT ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும். |
| ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Posted: 06 May 2015 10:37 PM PDT ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ... |
| Posted: 06 May 2015 09:04 PM PDT http://www.mediafire.com/download/lrrrnbecr4shmio/Vithi.pdf என்றும் அன்புடன் செல்லா |
| ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்: மே 7- 1861 Posted: 06 May 2015 09:02 PM PDT இரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கன மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். ... |
| Posted: 06 May 2015 09:01 PM PDT – பழம் கொண்டு போக வேண்டாம் இனிப்பு சேராமலிருக்கும் – இப்படித்தான் ஏ ப்ளாக்குல ஒருத்தருக்கு என்று பயமுறுத்த வேண்டாம் – இன்ஷூரன்ஸ் இருக்குல்ல என்று மகிழச் சொல்ல வேண்டாம் – ஆஸ்பத்திரி வாசனையே அலர்ஜியென்று அலுத்துக்கொள்ள வேண்டாம் – ஆண்டவன் புண்ணியத்தில் தனக்கெதுவுமே வந்ததில்லையென்று வலி கூட்ட வேண்டாம் – அந்த நாள்ல வளைச்சுப்ப் போட்டிருப்பானென்று நில மதிப்பு ஆராய வேண்டாம் – ஸ்கேன் என்னாச்சு என்று ரிப்போர்ட்டைத் தேட வேண்டாம் – எல்லாம் கேட்டுக் கொண்டு பணம் புரட்டி புரியாத ... |
| தப்பித்தால் தப்பில்லை - சுஜாதா Posted: 06 May 2015 08:44 PM PDT 'தப்பித்தால் தப்பில்லை', 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான். ஒரு குற்றம் இழைத்துவிட்டு அதிலிருந்து தப்பிவிட்டால், செய்தது குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா? http://www.mediafire.com/download/cfeadyv0h1y38r2/Thapithaal+Thappillai.படப் என்றும் அன்புடன் செல்லா. |
| Posted: 06 May 2015 08:43 PM PDT கல்கியில் தொடராக வந்த 'வைரங்கள்' சுஜாதாவின் முக்கியமான நாவல்களின் ஒன்று. ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல் தட்டுப்படுகிறது. மெல்லிய வெளிச்சம் ஓடும் கல். விலையுயர்ந்த வைரக்கல். அது கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும்போது ராலிமுக்கு கிராமம் சட்டென்று சூழல் மாறிப் போகிறது. அங்கே எளிமையாக டீக்கடை நடத்தி வரும் ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அமைதி சிதறடிக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் ஓர் அநாதைச் சிறுவனின் உயிர் கேள்விக்குறியாகிறது. http://www.mediafire.com/download/1v638b594j1a6us/Vairangal.pdf என்றும் ... |
| Posted: 06 May 2015 07:47 PM PDT தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ... |
| சிவகார்த்திகேயனுக்கு சமந்தா நோ சொல்லக் காரணம் என்ன? Posted: 06 May 2015 07:22 PM PDT - சிவகார்த்திகேயன் தனது நணபரும் மேனேஜருமான ஆர்.டி.ராஜாவுடன் இணைந்து புதிய படக்கம்பெனி துவங்கி, அதில் தானே ஹீரோவாக நடிக்க திட்டமிட்டுள்ளார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. அந்தப் படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பாக்யராஜ் பாரதி என்பவர் இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு சமந்தா ஜோடியாக நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க சமந்தா நோ சொல்லிவிட்டாராம். அதற்குக் காரணம், இப்போது சமந்தா தொடர்ந்து 4 படங்களில் நடித்து ... |
| நடிகர் விதார்த்துக்கு திருமணம் Posted: 06 May 2015 06:53 PM PDT - மைனா படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விதார்த்துக்கு வருகிற ஜூன் 11-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. – மணப்பெண்ணின் பெயர், காயத்ரி தேவி. திருப்பதியில் திருமணம். ஜூன் 17 அன்று சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. -தினமணி |
| Posted: 06 May 2015 06:38 PM PDT -- பொருட்காட்சி பார்த்து முடித்து வீடேகும் கூட்டத்தில் இரு சக்கர வாகனத்தின் முன்னமர்ந்த குழந்தையின் தொப்பியைக் கொய்து நடுச்சாலையில் வீசி அப்பாவிடம் வசவும் அம்மாவிடம் அடியும் வாங்கிக் கொடுத்து விட்டு அடுத்து வரும் வாகனத்தில் வேறொரு குழந்தையின் பலூனைப் பறிக்க விரையும் நகரத்துப் புழுதிக் காற்றின் சிறுபிள்ளை விளையாட்டு..! – ———————- எஸ்.பாபு நன்றி–விகடன் |
| விழிப்புக்கு முன் நீயிடும் முத்தம் Posted: 06 May 2015 06:29 PM PDT - நித்தமும் நீயிடும் முத்தத்தில் புலருதடி என் பொழுது – நீ வடிவமைக்கும் என் பொழுகளின் கடைசி நிமிடங்களில் இருக்கிறது நான் உனக்கிடும் முத்தங்கள் – நீ விரும்பும் இடத்தில் தொடரும் என் முத்தம் நீ தொடங்குமிடம் வரும் முன்பே தீர்ந்து போகிறது – உன் முத்தத்தைத் தூண்டி விடும் அந்தக் கடைசி முத்தத்திற்கு காதிருந்த நீ என் நெற்றிப்பொட்டின் நடுவில் இடுகின்றாய் ஒரு குளிர் முத்தம் – விழிப்புக்கு முன் நீயிடும் இந்த முத்தத்தை ஒரு நாள் உறக்கத்திற்கு முன் பெறுவேனடி என் தோழி – —————————- செல்வசாமியான் நன்றி ... |
| Posted: 06 May 2015 06:26 PM PDT - கரகச் சொம்பில் உட்கார்ந்திருக்கும் கிளி எப்போது இரை தின்னும் என்கிறது குழந்தை கையில் தின்பண்டங்களை வைத்துக் கொண்டு..! – —————————————– பூர்ணா நன்றி – விகடன் |
| Posted: 06 May 2015 06:11 PM PDT - கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால், சென்னை நகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்தது. இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: – சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கும் நோக்கத்துடன் புதிய வீராணம் திட்டம் அரசு நிதியுதவியுடன் கடந்த 2004-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி முதல் சென்னை நகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. – வீராணம் ... |
| 4 பயங்கரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.120 கோடி பரிசு Posted: 06 May 2015 04:48 PM PDT என்னது...படத்தை வெளியிடக்கூடாதுன்னு படத்தோட தயாரிப்பாளரே போராட்டம் நடத்துகிறார்..? - பின்னே, வேற யாருமே நடத்திலியே...! - கோ.வி.கோவன் - ------------------------------- - வாஷிங்டன்: ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த, நான்கு தலைவர்கள் குறித்து துப்பு கொடுப்போருக்கு, 120 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என, அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. கடந்த, 3ம் தேதி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், கார்லண்டு நகரில், முகமது நபியின் உருவத்தை கேலிச் சித்திரமாக வரையும் போட்டி நடைபெற்றது. அமெரிக்க ... |
| Posted: 06 May 2015 04:46 PM PDT ''2016ல் தமிழகத்தில் நாங்கள் தான் முதல்வர்; அப்படி இல்லாவிட்டால் நாங்கள் கை காட்டுபவர் தான் முதல்வர்'' - >தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது :)22 & 23 அதாவது Aug. 22 & 23 - திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை. இந்த திரி இல் அன்று செய்யவேண்டிய பக்ஷணங்களின் செய்முறைகளை பார்ப்போம்