Tamil News | Online Tamil News |
- பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் ஊழல் விவகாரம் அம்பலம்: ஒப்பந்ததாரர் சங்க அறிவிப்பால் போலீஸ் டென்ஷன்
- வெளிப்படையான நிர்வாகம் இல்லை: லோக்சபாவில் சோனியா பாய்ச்சல்
- பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறை: போதையில் கார் ஓட்டி ஒருவர் பலியான வழக்கில் தீர்ப்பு
- நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தத்தில் உண்மை நிலை என்ன? 13 சட்டங்களுக்கு காங்கிரஸ் அளித்த விலக்கு ரத்து
- கப்பல் விட சொல்கிறார் அ.தி.மு.க., - எம்.பி.,: தமிழக அரசின் கொள்கை முடிவு கூடாது என்கிறது
- கிரீமி லேயர் உச்சவரம்பு பரிந்துரையை ஏற்க கருணாநிதி கோரிக்கை
- சமச்சீர்க்கல்வியை முறையாக அமல்படுத்துவதில் தோல்வி: சி.பி.எஸ்.இ.,க்கு படையெடுக்கும் மெட்ரிக் பள்ளிகள்
- சிறிசேன காலில் விழுந்த ராஜபக் ஷே: வழக்கிலிருந்து தப்ப உதவி கோரினார்
- மாவோயிஸ்ட் ஆயுதப்படையில் 50 பேர்: தமிழக எல்லையில் முகாம்கள் அம்பலம்
- சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரம்: லோக்சபா ஓகே; ராஜ்யசபாவில் இன்று பலப்பரீட்சை
| பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் ஊழல் விவகாரம் அம்பலம்: ஒப்பந்ததாரர் சங்க அறிவிப்பால் போலீஸ் டென்ஷன் Posted: பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரியின் நடவடிக்கையால், அந்த துறையில் கமிஷன் அதிகரிப்பு பிரச்னை அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக, ஒப்பந்ததாரர் சங்கம் சார்பில் சென்னையில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரால், போலீசார் டென்ஷன் அடைந்தனர். பல இடங்களில் வைக்கப்பட்ட பேனர்களை தேடித் தேடி அகற்றினர்.பொதுப்பணித்துறையில், கட்டடங்கள் மற்றும் நீர்வளத்துறை என, இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன. *நீர்வளத்துறையின், நான்கு மண்டலங்கள் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலை பராமரிப்பு மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. *கட்டடங்கள் பிரிவு, மூன்று ... |
| வெளிப்படையான நிர்வாகம் இல்லை: லோக்சபாவில் சோனியா பாய்ச்சல் Posted: புதுடில்லி: ''தலைமை தகவல் கமிஷனர், மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனர், லோக்பால் போன்ற அமைப்புகளின் தலைமை பொறுப்புகள், தொடர்ந்து காலியாக உள்ளன. இதன்மூலம், வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க, பிரதமர் மோடி அரசு மறுக்கிறது; இதை அனுமதிக்க முடியாது,'' என, காங்., தலைவர் சோனியா, லோக்சபாவில் நேற்று காரசாரமாக பேசினார். |
| பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறை: போதையில் கார் ஓட்டி ஒருவர் பலியான வழக்கில் தீர்ப்பு Posted: மும்பை: மது குடித்து கார் ஓட்டி, ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்த வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, மும்பை கோர்ட், ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான், 49. 'மைனே பியார் கியா, தபாங்' உட்பட ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார்.இவர், 2002ல், மும்பை பாந்த்ரா பகுதியில் மது குடித்து காரை ஓட்டிச் சென்றார். அப்போது, நடைபாதையில் தூங்கி கிடந்தவர்கள் மீது, இவரின் கார் மோதியது. இதில், நூருல்லா முகமது ஷரீப் என்பவர் இறந்தார். மேலும், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.இது தொடர்பாக மும்பை போலீசார், சல்மான் ... |
| Posted: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அமலாக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், அதில், மோடி அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களின் உண்மையான பின்னணி குறித்த, பல தகவல்களை மத்திய நிலம் மற்றும் புவி அறிவியியல் துறை வெளியிட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும்போது, பாதிக்கப்படும் மக்களுக்கு, உரிய இழப்பீடு கிடைக்க உறுதி செய்வதாகக் கூறி நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தது.இந்த மசோதாவுக்கு, 2013 செப்டம்பரில் ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து, இச்சட்டம், 2014 ஜனவரி, 1ம் ... |
| கப்பல் விட சொல்கிறார் அ.தி.மு.க., - எம்.பி.,: தமிழக அரசின் கொள்கை முடிவு கூடாது என்கிறது Posted: தமிழக அரசின் அறிவிப்புகள், முடிவுகள் பற்றி, எதையும் அறிந்து கொள்ளாமல், தங்களது ஆட்சியின் முடிவுகளுக்கு எதிராகவே, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கேள்வி கேட்பதால், பார்லிமென்ட்டில், மத்திய அரசுக்கு, பெரும் தர்ம சங்கடம் ஏற்பட்டு உள்ளது.நேற்று, கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., - எம்.பி.,யான அன்வர் ராஜா, தங்களது அரசாங்கத்தின் கொள்கை முடிவை எதிர்த்து, இருமுறை ஒரே கேள்வியைக் கேட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார்."இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே, பயணிகள் கப்பல் போக்கு வரத்தை, மீண்டும் துவக்காதது ஏன்," என்றார்.அதற்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அளித்த ... |
| கிரீமி லேயர் உச்சவரம்பு பரிந்துரையை ஏற்க கருணாநிதி கோரிக்கை Posted: சென்னை: 'கிரீமி லேயர் உச்சவரம்பை உயர்த்த, தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் பரிந்துரையை, மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய கமிஷன், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், கிரீ மிலேயர் உச்ச வரம்பை, தற்போதுள்ள ஆறு லட்சம் ரூபாய் என்பதிலிருந்து, பத்தரை லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, மத்திய அரசுக்கு வரவேற்கத்தக்க பரிந்துரை ஒன்றை செய்துஉள்ளது. இந்தப் பரிந்துரையை, மத்திய பா.ஜ., அரசு ஏற்றுக் கொண்டால், இதர ... |
| சமச்சீர்க்கல்வியை முறையாக அமல்படுத்துவதில் தோல்வி: சி.பி.எஸ்.இ.,க்கு படையெடுக்கும் மெட்ரிக் பள்ளிகள் Posted: சமச்சீர்க்கல்வியை தமிழக அரசு முறையாக அமல்படுத்தத் தவறியதால், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கீட்டின் படி, 8,000 தனியார் பள்ளிகள் இருந்தன. இதில், 4,800 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், 3,500 மெட்ரிக், 41 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், 159 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அடங்கும்.தற்போது பெரும்பாலான மெட்ரிக் மற்றும் பிரைமரி பள்ளிகள், மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இதனால், 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ... |
| சிறிசேன காலில் விழுந்த ராஜபக் ஷே: வழக்கிலிருந்து தப்ப உதவி கோரினார் Posted: யாழ்ப்பாணம்: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை, முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக் ஷே சந்தித்துப் பேசினார். பேச்சின் போது, தன் குடும்பத்தினர் மீது போடப்படும் வழக்குகளிலிருந்து காப்பாற்றுமாறு ராஜபக் ஷே, சிறிசேனவின் காலில் விழுந்து கெஞ்சியதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.இலங்கை, பார்லிமென்ட் வளாகத்தில் அமைந்துள்ள, அதிபர் செயலகத்தில், நேற்று சிறிசேன, ராஜபக் ஷே ஆகியோர் சந்தித்தனர். இரண்டு மணி நேரம், இருவரும் பேசினர்.இருவருக்கும் இடையில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:இலங்கையில் ஆட்சியில் இருந்த ... |
| மாவோயிஸ்ட் ஆயுதப்படையில் 50 பேர்: தமிழக எல்லையில் முகாம்கள் அம்பலம் Posted: கோவை: தமிழக - கேரள எல்லை வனப்பகுதிகளில், அரசியல் பிரசார முகாமை துவக்கியுள்ள மாவோயிஸ்ட்கள், 50 உறுப்பினர்களை கொண்ட ஆயுதப் படையையும் நிறுவியிருக்கலாம் என்ற தகவல், போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ளது. தற்போது பிடிபட்டுள்ள ஐந்து பேரையும், 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து, கோவை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். திண்டுக்கல், உளவு பிரிவு போலீசாரும், இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளனர். தமிழக - கேரளா எல்லையிலுள்ள, வனத்துறை அலுவலகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களான, கே.எப்.சி., மெக்டொனால்டு உணவகங்கள் மீது, சமீபத்தில் நடத்தப்பட்ட ... |
| சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரம்: லோக்சபா ஓகே; ராஜ்யசபாவில் இன்று பலப்பரீட்சை Posted: புதுடில்லி: ஒன்பதாண்டுகளாக முடங்கிக் கிடக்கும், சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. சர்ச்சைக்குரிய அந்த மசோதா, லோக்சபாவில் நேற்று நடைபெற்ற ஓட்டெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கு பலம் குறைவாக உள்ள ராஜ்யசபாவில், இன்று அந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.நிச்சயம் கடும் பலப்பரீட்சையை அங்கு அந்த மசோதா சந்திக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மறைமுக வரிகளாக உள்ள, கலால் வரி, சேவை வரி, மாநிலங்களின், 'வாட்' எனப்படும் மதிப்பு கூடுதல் வரி, நுழைவு வரி போன்ற பல வரிகளை ஒன்றிணைத்து, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 07,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |