ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வணக்கம்
- தமிழ்நேசன் அவர்களுக்கு உங்கள் ப்ளோக்கை மிஸ் பண்ணுகிறேன்
- ப்ளஸ் டூ ரிசல்ட் என்ன ஆகுமோன்னு கவலையா இருக்கு...!
- துபாய் கடற்கரைபகுதியில் சோலார் சக்தியில் இயங்கும் இலவச இண்டெர்நெட் நிலையங்கள்!
- மினசோட்டாவில் வாழையிலையில் மாபெரும் தமிழர் உணவுத் திருவிழா!
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- நெஞ்சில் மின்னிய கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- கொட்டாங்குச்சி ஓடுகளிலும் கலைவண்ணம் காட்டும் இளைஞர்!
- ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!
- மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்!
- இனிப்பு சிற்றுண்டிகள் - பாதாம் பூரி
- துவையல்கள் - பருப்பு துவையல் 2
- ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - கர்நாடகா தக்காளி ரசம் !
- 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
- நான் ரசித்தவை - மிமீஸ்
- வணக்கம் நண்பர்களே..
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- அமெரிக்காவில் 'மதுரை வீரன்'!
- திற்பரப்பு அருவியில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
- பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு
- ஓவியர் கோபுலுவு--மறைவு
- பிரிட்டனில் நாளை தேர்தல் :அனல் பறக்கும் பிரச்சாரம்
- ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
- தோசை வகைகள் - கேழ்வரகு உளுந்து அவல் தோசை '+ Photo
- மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது
- பிரிட்டிஷ் குட்டி இளவரசியின் மதிப்பு 80 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பீடு
- அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு
| Posted: 06 May 2015 12:30 PM PDT வணக்கம் நண்பர்களே... இணையத்தில் தமிழ் மின்நூல்கள் தேடும் போது இந்த தளம் கிடைத்தது. உடனே உறுப்பினர் ஆகிவிட்டேன். நன்றி..!! |
| தமிழ்நேசன் அவர்களுக்கு உங்கள் ப்ளோக்கை மிஸ் பண்ணுகிறேன் Posted: 06 May 2015 12:12 PM PDT ஐயா தமிழ்நேசன் அவர்களே உங்கள் பிளாக் இப்போது ஜிமெயில் முகவரி கேட்கிறது . நான் உங்கள் அழைப்பு பெற்று சேர்த்தவன். என்னக்கு அனுமதி மறுக்கிறது. உங்கள் பதிவை நோக்காமல் படிக்காமல் இருக்க முடியவில்லை |
| ப்ளஸ் டூ ரிசல்ட் என்ன ஆகுமோன்னு கவலையா இருக்கு...! Posted: 06 May 2015 10:18 AM PDT - - ப்ளஸ் டூ ரிசல்ட் என்ன ஆகுமோன்னு கவலையா இருக்கு...! - யாரு பரீட்சை எழுதி இருக்கா? - லட்சுமிமேனன்..! - எஸ்.மோகன் - ------------------------------- தொடரும்.... |
| துபாய் கடற்கரைபகுதியில் சோலார் சக்தியில் இயங்கும் இலவச இண்டெர்நெட் நிலையங்கள்! Posted: 06 May 2015 10:10 AM PDT துபாய் கடற்கரையோரம் முதல்முறையாக இலவச வயர்லெஸ் இண்டெர் நெட் வசதி துபாய் முனிசிபாலிட்டி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பனைமரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள 6 மீட்டர் உயரமுள்ள இந்த ஸ்மார்ட் பாம் நிலையங்களில் 53 மீட்டர் சுற்றளவில் 50 பயனாளிகளுக்கு உபயோகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினகரன் |
| மினசோட்டாவில் வாழையிலையில் மாபெரும் தமிழர் உணவுத் திருவிழா! Posted: 06 May 2015 10:08 AM PDT மாபெரும் தமிழர் உணவுத்திருவிழாவினை கடந்த எப்ரல் 12ம் நாள் மினசோட்டா தமிழ்ச் சங்கமும், மினசோட்டா தமிழ்ப் பள்ளியும் இணைந்து வெகுச் சிறப்பாக நடத்தியது. தயாரிக்கப்பட்ட 26 தமிழக உணவு வகைகள் அனைத்தும் மதிய வேளையில் ஹாப்கின்ஸ் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. அறுசுவை உணவுகள் தன்னார்வலர்களால் தயாரிக்கப் பட்டிருந்தது. தமிழர் விருந்தோம்பும் முறைப்படி உணவைப் பரிமாற வாழையிலையும் சுத்தம் செய்து கொண்டு வரப்பட்டிருந்தது. இளையராசாவின் இன்னிசைப் பாடல்கள் ஒலிக்க இனிதே உணவுத் திருவிழா ஆரம்பமாகியது! குழந்தைகளுக்கும், ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 06 May 2015 10:06 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| நெஞ்சில் மின்னிய கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர் Posted: 06 May 2015 10:01 AM PDT நெஞ்சில் பளிச்சிட்டு நான் பாட நினைத்த கீதம் இன்றுவரை வெளியில் வராமலே ஒளிந்து கொண்டுள்ளது! - எனது இசைக் கருவியின் நாண் கம்பிகளை நான் முறுக்கியும், தளர்த்தியும் நாட்கள்தான் கழிந்தன! - அந்த கீதம் வெளிவரும் வேளை மெய்யாக வரவில்லை இன்னும்! - சொற்களை செம்மையாகக் கோர்க்க முடியவில்லை! - வேட்கை மீறிக் கீதம் வெளிவரத் துடிக்கும் வேதனையே வாட்டும் என் நெஞ்சை! - பூரண மாகக் கீதம் பூத்து விரிய வில்லைச் சீராக இன்னும்! - அருகில் பெருமூச்சு விடுகிறது காற்று மட்டும்! - அவனது ... |
| கொட்டாங்குச்சி ஓடுகளிலும் கலைவண்ணம் காட்டும் இளைஞர்! Posted: 06 May 2015 09:58 AM PDT தேவையற்றது என நாம் வீசியெறியும் கொட்டாங்குச்சியில் அழகான- கலைநயமிக்க ஆபரணங்களைச் செய்து வருகிறார் ஆனந்த பெருமாள் (34). மதுரை மாவட்டம் பொன்னகரத்தில் பிறந்த இவர், பிபிஏ படித்துவிட்டு வங்கியில் பணியாற்றி வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் இயற்கை ஆய்வாளர் கோ. நம்மாழ்வாரை சந்தித்த அந்த நிமிடமே, தனது வாழ்வின் நோக்கமாக இயற்கை சார்ந்த செயல்பாடுகளில் தீவிரமாக இறங்க வைத்தது என்கிறார் ஆனந்தபெருமாள். "இயற்கையோட இணைந்து வாழணும். கிராமங்களில் கிடைக் கிற இயற்கை சார்ந்த பொருட் களைக் கொண்டே, கிராம மக்க ளுக்கு ... |
| ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Posted: 06 May 2015 09:57 AM PDT துக்கம் தாங்க முடியாத பெண்களுக்கு ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை ! குடும்பப் பிரச்சனை, காதல் தோல்வி, உறவினர் பிரிவு, பெற்றோர் மறைவு, வேலை அழுத்தத்தினால் ஏற்படும் வெறுப்பு உள்ளிட்ட பல்வேறு மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு.., குறிப்பாக, பெண்களுக்கு மனம்விட்டு அழுவதற்கென்றே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மிட்சுயி கார்டன் யோட்சுயா ஓட்டல் தனி அறைகளை வாடகைக்கு விடுகின்றது. இந்த அறைகளை முன்பதிவு செய்துவிட்டு தனியாக வரும் சில பெண்கள் மூடிய கதவுக்குள் தனிமையில் ... |
| மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்! Posted: 06 May 2015 09:51 AM PDT உத்தரப் பிரதேசத்தில் மாப்பிள்ளை மதுப்பழக்கம் உள்ளவர் என அறிந்ததும் அவரை மணக்க மறுத்த மணப்பெண் அவரிடம் திருமண செலவு ரூபாய் 3.30 லட்சம் வசூல் செய்தார். அத்துடன், அத்திருமணத்துக்கு வந்திருந்த வேறு ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். திரைப்படப் பாணியில் நடந்த இந்தச் சம்பவம் நடந்தது. உ.பி.யின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜோன்பூரின் திரிலோச்சன் மஹாதேவ் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது சொந்த பந்தங்களுடன் வாரணாசியில் கப்சேத்தியில் உள்ள மாதிஹியா எனும் கிராமத்து பெண்ணுடன் மணம் புரிய கடந்த ... |
| இனிப்பு சிற்றுண்டிகள் - பாதாம் பூரி Posted: 06 May 2015 08:09 AM PDT மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் |
| துவையல்கள் - பருப்பு துவையல் 2 Posted: 06 May 2015 07:35 AM PDT நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் |
| ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - கர்நாடகா தக்காளி ரசம் ! Posted: 06 May 2015 07:30 AM PDT ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம். இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும். |
| 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Posted: 06 May 2015 07:12 AM PDT மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான், 2002ம் ஆண்டு செப்.,28ம் தேதி, போதையில் காரை அதிவேகமாக ஓட்டி, பந்த்ரா, அமெரிக்கன் பேக்கரி முன்பு சாலையோரத்தில் இருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் பலியானார், நான்கு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு மும்பை கோர்ட்டில் கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. - போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. - சல்மான் ... |
| Posted: 06 May 2015 06:24 AM PDT வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மிமீஸ் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மிமீஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மிமீஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட் |
| Posted: 06 May 2015 04:22 AM PDT பெயர்: ஆதி வேணு சொந்த ஊர்: நாகர்கோயில் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: நண்பர் கூறினார் பொழுதுபோக்கு: கணினி தொழில்: இல்லை மேலும் என்னைப் பற்றி: என்னை பற்றி சொல்ல எதுவும் இல்லை.. |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 06 May 2015 04:20 AM PDT தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| Posted: 06 May 2015 03:46 AM PDT ஒரு சனிக்கிழமை காலை. வழக்கம்போல் நான் எழுந்து சேப்பல் சர்வீசுக்கு செல்ல காரை ஸ்டார்ட் செய்தேன். கொஞ்ச நாளாக காலியாக இருந்த பக்கத்து வீட்டில் வீட்டில், சாமான்கள் யூ ஹாலில் (U-Haul) இறங்கிக் கொண்டிருந்தது. புதிதாக ஒரு குடும்பம் வருகிறது என்று தெரிந்தது. எந்த நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்களோ என்ற எண்ணத்தோடு அருகில் சென்றேன். பழுப்புநிற டோயாட்டா கேம்ரியில், மெல்லிய மீசை வைத்த ஒருவர் புகை விட்டுக் கொண்டு இருந்தார். நான் அருகில் சென்றதும் புகையை கையால் விரட்டியபடி புன்னகைக்க முயன்றார். காரில் ... |
| திற்பரப்பு அருவியில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு Posted: 06 May 2015 03:39 AM PDT திற்பரப்பு அருவியில் கோடையிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையில் ஆறுகளில் அதிகளவில் வெள்ளம் பாய்கிறது. இதனால் திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் கொட்டுகிறது. தற்போது கோடை விடுமுறையாதலாலும், அருவியில் அதிக வெள்ளம் கொட்டுவதாலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாகனங்களை நிறுத்துவதற்கு கூட இடம் இல்லாத வகையில், அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் ... |
| பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு Posted: 06 May 2015 03:13 AM PDT 8¾ லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது. எதிர்பார்ப்பு உயர்கல்வியில் சேர்வதற்கு பிளஸ்–2 மதிப்பெண் அவசியம் தேவை. அந்த மதிப்பெண் அதிகமாக இருந்தால் உயர்கல்வியில் சேர்வது எளிது. குறைந்த மதிப்பெண் என்றால் சற்று சிரமப்பட்டுதான் சேரவேண்டும். மிகக்குறைந்த மதிப்பெண் என்றால் உயர்கல்வியில் சேர்ந்து படிப்பது சிரமம். அதனால் பிளஸ்–2 தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை அனைத்து மாணவ–மாணவிகளும், பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள். மேலும் பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை ... |
| Posted: 06 May 2015 02:16 AM PDT ஓவியர் கோபுலுவு மறைவு சென்னை: 91 வயதில் மரணமடைந்த பிரபல ஓவியர் கோபுலுவுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார். பத்திரிகை உலகின் ஜாம்பவான் ஓவியர்களுள் ஒருவர் கோபுலு. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 91 வயதான கோபுலு நேற்று மாலை சென்னையில் காலமானார். அந்த காலத்தில் விகடனில் வந்த தில்லானா மோகனாம்பாள் , வாஷிங்கடனில் திருமணம் போன்ற பெரும் தொடர்களுக்கு மனோரஞ்சகமான படங்கள் வரைந்த தங்க கைகள். ரமணியன் |
| பிரிட்டனில் நாளை தேர்தல் :அனல் பறக்கும் பிரச்சாரம் Posted: 06 May 2015 01:30 AM PDT லண்டன் : பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நாளை நடக்க இருக்கிறது. பிரச்சாரத்திற்கான கடைசி தேதி இன்று என்பதால், அங்கு அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது. மூன்று முக்கிய கட்சிகள் தேர்தல் களத்தி்ல் இருக்கின்றன. இப்போது ஆளும் கட்சியாக இருக்கும் கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி ஆகிய மூன்று கட்சி தலைவர்களும் கடைசி கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கன்சர்வேடிங் கட்சி சார்பாக இப்போதைய பிரதமர் டேவிட் கேமரோன், லேபர் கட்சி ... |
| ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! Posted: 05 May 2015 11:27 PM PDT "ஓட்ஸ்" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என அனைத்து தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். நாம் அதையே ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த திரி ஓட்ஸ் ஊத்தப்பம் : இது ஊத்தப்பம் வார்த்ததும் இது வார்த்ததுக்கு அப்புறம் இன்று ( 7-06-2013 எங்களின் காலை உணவு இது தான் ) |
| தோசை வகைகள் - கேழ்வரகு உளுந்து அவல் தோசை '+ Photo Posted: 05 May 2015 10:43 PM PDT தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம். வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் ... |
| மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது Posted: 05 May 2015 09:04 PM PDT கடலூர் வெள்ளிக் கடற்கரையில் மே-20 முதல் 24-ம் தேதி வரை 5 நாட்கள் கோடைவிழா நடைபெறும் என்று ஆட்சியர் தெரிவித்தார். கடலூரில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடைபெறும். கடந்தாண்டு தேர்தலை முன்னிட்டு இவ்விழா நடத்தப்படாததால் நடப்பாண்டில் கோடை விழாவை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனையடுத்து, கோடை விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. இதுதொடர்பாக கோடைவிழா நடத்தப்படும் கடலூர் தேவனாம்பட்டினத்திலுள்ள வெள்ளிக்கடற்கரையில் உள்ள மேடை, வண்டி ... |
| பிரிட்டிஷ் குட்டி இளவரசியின் மதிப்பு 80 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பீடு Posted: 05 May 2015 08:11 PM PDT - – பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதிக்கு இம்மாதம் 2ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இத்தம்பதியின் முதல் குழந்தையான குட்டி இளவரசர் ஜார்ஜ் 2013ம் ஆண்டு பிறந்தார். தற்போது குட்டி இளவரசி பிறந்துள்ளதையடுத்து அங்கு அந்தக் குழந்தையின் படம் பொறித்த தேநீர் கோப்பைகள், டி-ஷர்ட்டுகள், கைக்குட்டைகள் போன்ற பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.700 கோடிக்கு வணிகம் நடைபெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் அந்தக் குழந்தை தனது 10 வயதை அடைவதற்கு முன்பு சுமார் ... |
| அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு Posted: 05 May 2015 08:08 PM PDT - அமெரிக்காவில், சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரப் போட்டியிடையே ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த நாட்டின் டெக்ஸாஸ் மாகாணம், கார்லண்ட் நகரில் முகமது நபியின் உருவத்தை கேலிச் சித்திரமாக வரையும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. - கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய இந்தப் போட்டியை "அமெரிக்க சுதந்திரப் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பு நடத்தியது. - அந்த நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடத்துக்கு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |