Tamil News | Online Tamil News |
- பா.ம.க., அன்புமணி கடிதத்திற்கு தி.மு.க., பதிலடி:வரிக்கு வரி கிடுக்கிப்பிடி கேள்வி
- இதர பிற்படுத்தப்பட்டோரின் 'கிரீமி லேயர்' உச்சவரம்பை உயர்த்த பரிந்துரை: ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.10.50 லட்சமாக ஆக்க தேசிய கமிஷன் விருப்பம்
- தாவூத் மறைவிடம்: மத்திய அரசு குழப்பம்
- 'சிறுநீர் ஊற்றினால் பயிர்கள் செழிக்கும்': கட்காரி
- 'கறுப்பு பணம் பதுக்கியவர் விவரம் சுவிட்சர்லாந்து அரசு தரவில்லை'
- தாக்குதலுக்கு மாவோயிஸ்ட்கள் சதி: துப்பாக்கி முனையில் கோவையில் சுற்றிவளைப்பு
- 'அரசு ஊழியர்கள் தற்கொலை சோகம் தொடர்கிறது'
- 'அம்மா உணவக அரிசிக்கு பணம் கொடுங்க': துணிச்சலாக கடிதம் எழுதிய அதிகாரி இடமாற்றம்
- வாழைக்கு விலை கிடைக்காததால் விவசாயி தற்கொலை: தமிழக முதல்வர் தொகுதியில் வேதனை
- நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதா ராஜ்யசபாவில் இன்று தாக்கலாகிறது
| பா.ம.க., அன்புமணி கடிதத்திற்கு தி.மு.க., பதிலடி:வரிக்கு வரி கிடுக்கிப்பிடி கேள்வி Posted: தமிழகத்தின் அவலங்களை பட்டியலிட்டு முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு பகிரங்க கடிதம் எழுதியிருந்த தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, 'நோய்வாய் பட்டிருக்கும் தமிழகத்தை டாக்டர் என்ற முறையில் நான் குணப்படுத்துவேன்' என, நேற்று முன்தினம் பதிலளித்திருந்தார் பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி.அதற்கு தி.மு.க., சார்பில் கட்சியின் முன்னாள் எம்.பி.,யான தாமரைச்செல்வன் பதிலடி கொடுத்திருக்கிறார். அன்புமணியின் விமர்சனத்துக்கு வரிக்கு வரி கேள்வி எழுப்பி தாமரைச்செல்வன் விடுத்திருக்கும் அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி ... |
| Posted: புதுடில்லி: 'ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், 'கிரீமி லேயர்' உச்சவரம்பை, தற்போதைய, ஆறு லட்சம் ரூபாயில் இருந்து, 10.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, பிற்படுத்தப்பட்டோருக்கான தேசியக் கமிஷன், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை, பிரதமர் மோடி தலைமையிலான அரசால் ஏற்றுக் கொள்ளப்படுமானால், கோடிக்கணக்கான, ஓ.பி.சி., பிரிவினருக்கு, மத்திய அரசு வேலை மற்றும் கல்வியில், கூடுதல் இடஒதுக்கீடு கிடைக்கும்.தமிழகத்தில், 181 பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை உள்ளடக்கி, மத்திய அரசின், இதர ... |
| தாவூத் மறைவிடம்: மத்திய அரசு குழப்பம் Posted: புதுடில்லி: மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பதுங்கி இருக்கும் இடம் தொடர்பாக, மத்திய அரசு தரப்பில் நேற்று குழப்பமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், ஏற்கனவே சரண் அடைய முன்வந்ததாகவும், மத்திய அரசும், மகாராஷ்டிரா மாநில அரசும், அவரை கைது செய்ய முயற்சிக்கவில்லை என்றும், கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், லோக் சபாவில் இந்த விவகாரத்தை சில உறுப்பினர்கள் நேற்று எழுப்பினர். இதற்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் சவுத்ரி பதில் அளித்ததாவது: ... |
| 'சிறுநீர் ஊற்றினால் பயிர்கள் செழிக்கும்': கட்காரி Posted: புதுடில்லி: ''சிறுநீரை பயிர்களுக்கு பாய்ச்சினால், செழிப்பாக வளரும் பயிர்கள், அமோக விளைச்சலையும் கொடுக்கின்றன; இது, சொல்றதுக்கு அசிங்கமாக இருக்கலாம்; ஆனால், பலன் தரக்கூடியது,'' என, மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதின் கட்காரி கூறினார்.பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றில், நிதின் கட்காரி பேசியதாவது: நாட்டில் பல இடங்களில் வறட்சி, தண்ணீர் இல்லை என்கின்றனர்; தண்ணீரின்றி, பயிர்கள் நாசமாகிப் போனதாக பலரும் கூறுகின்றனர். அவர்களுக்கு, நான் ஒரு யோசனை சொல்வேன். தண்ணீர் இல்லை என்றால் என்ன, சிறுநீரை பயன்படுத்திப் பாருங்கள்; நான் இதை விளையாட்டாக சொல்லவில்லை; ... |
| 'கறுப்பு பணம் பதுக்கியவர் விவரம் சுவிட்சர்லாந்து அரசு தரவில்லை' Posted: புதுடில்லி: ''கறுப்பு பணம் பதுக்கியவர்கள் குறித்த விவரங்கள் எதையும், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் நாடுகள் தரவில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். ராஜ்யசபாவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: கறுப்பு பணம் பதுக்கியவர்கள் குறித்த விவரங்கள் எதையும், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் நாடுகள் தரவில்லை. இருந்தாலும், இந்தியாவுடன் வரி ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளிடம், சில குறிப்பிட்ட நபர்கள் பற்றிய விவரங்கள் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தால், அவை ... |
| தாக்குதலுக்கு மாவோயிஸ்ட்கள் சதி: துப்பாக்கி முனையில் கோவையில் சுற்றிவளைப்பு Posted: கோவை: நான்கு மாநிலங்களில் தாக்குதல் நடத்த, மாநில தலைமை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய, தென்மாநில மாவோயிஸ்ட் தலைவன் உட்பட ஐந்து பேர், கோவையில் பிடிபட்டது எப்படி, என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆந்திர மாநில வனப்பகுதியில், சில நாட்களுக்கு முன் மிசாலு ராஜூ ரெட்டி என்ற மாவோயிஸ்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கோவை, கருமத்தம்பட்டியில் தென்மாநில மாவோயிஸ்ட் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடப்பது தெரிந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஆந்திர போலீசார் எட்டு பேர், மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருடன் கோவை வந்தனர். கோவை மாவட்ட ... |
| 'அரசு ஊழியர்கள் தற்கொலை சோகம் தொடர்கிறது' Posted: சென்னை: 'அரசு ஊழியர்களின் தற்கொலை செய்து கொள்வது, சோக நிகழ்வாக தொடருகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அரசு அலுவலர்களின் தற்கொலை, முத்துக்குமாரசாமியுடன் முடிந்துவிடவில்லை. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், சண்முகவேல் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருச்சி அரசு மருத்துவமனை, ஆர்.எம்.ஓ., தற்கொலை முயற்சி செய்தார். அம்பாசமுத்திரம் தாசில்தாராக பணியாற்றிய தியாகராஜன், திருநெல்வேலி மாநகராட்சியில் பணியாற்றிய பொறியாளர் ராஜேந்திரன், தற்கொலை செய்து கொண்டனர். சென்னை தங்கசாலை ரேஷன் கடை ஊழியர் இளங்கோவன், ... |
| 'அம்மா உணவக அரிசிக்கு பணம் கொடுங்க': துணிச்சலாக கடிதம் எழுதிய அதிகாரி இடமாற்றம் Posted: 'அம்மா உணவக' அரிசிக்கு, சந்தை விலையில், பணம் வழங்கக் கோரி, சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதிய, வாணிப கழக அதிகாரியை திடீரென இடமாற்றம் செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு சார்பில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட, 10 மாநகராட்சிகளில், 'அம்மா உணவகம்' செயல்பட்டு வருகிறது. |
| வாழைக்கு விலை கிடைக்காததால் விவசாயி தற்கொலை: தமிழக முதல்வர் தொகுதியில் வேதனை Posted: தேனி: தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தொகுதியில் வாழைக்கு விலை கிடைக்காததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.தேனி மாவட்டம், போடி தொகுதிக்குட்பட்டது உப்புக்கோட்டை கிராமம். இங்கு வடக்கு தெருவில் வசித்தவர் விவசாயி அழகுவேல்,47. இவருக்கு மனைவி ஜோதி 43, மகள் மேகலா 20, மகன்கள் அருண்,19, ஜீவன்,17, உள்ளனர். அழகுவேல் ஒன்றரை ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து சொட்டு நீர்பாசன முறையில் திசுவாழை சாகுபடி செய்தார். குத்தகை தொகை, சாகுபடி என ரூ.3 லட்சம் வரை செலவு செய்தார். ஆயிரம் வாழையில் தார் போட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது. ஆனால் விலை இல்லாததால் வியாபாரிகள் ... |
| நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதா ராஜ்யசபாவில் இன்று தாக்கலாகிறது Posted: புதுடில்லி: வங்கதேசத்துடனான, நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வங்கதேசம் உடனான நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதாவுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், இதுதொடர்பான மசோதா, இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதா, அரசியல் சட்டத்திருத்த மசோதா என்பதால், பார்லிமென்டில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை; அத்துடன், மாநில சட்டசபைகளும் இதற்கு ஒப்புதல் அளிக்க ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 06,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |