ஈகரை தமிழ் களஞ்சியம் |
- E-Tweets
- நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன்
- ஊழலுக்குக் கடிவாளம்!
- கோடை காலப் பராமரிப்பு
- ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
- அரசு அலுவலர்களும், அ.தி.மு.க. அரசும்! : கலைஞர் கடிதம்
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- கார்ப்பரேட் சாமியார்கள் - குகன்
- ஆலோசனை கூறுங்கள் -டயட்
- மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
- பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும் ஆண் மகனே...!!
- சிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி?
- உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –
- தண்டமாகப் போன தண்டகன்!
- அறிமுகம்
- மொக்க ஜோக்ஸ்!
- சுலபமான முறையில் இனிப்புகள் ! - ஷோகன் ஹல்வா !
- பாட்டி காலத்து சூப்பர் டயட்!
- மூளைக்குணவு
- நாக்கு
- தீபாவளி பலகாரங்கள் !
- உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!---
- உங்கள் வீட்டின் மதிப்பு என்ன?- உதவுகிறது பத்திரப்பதிவுத் துறை இணையதளம்
- சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
- கணிதப் புதிர்
- சிவ லிங்கத்தை பற்றிய...
- இதற்கு என்ன விடை?
- விலைமாது விடுத்த கோரிக்கை..!
- மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5
- பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??
- யதார்த்தம்!
- அம்மா...
- சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள்
- காதல் என்ற போதையிலே.
- நாட்டு நடப்பு - தொடர் பதிவு
- சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன்
- –முனைப்பு
| Posted: 05 May 2015 12:43 PM PDT முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
|
| நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Posted: 05 May 2015 12:01 PM PDT எப்பேர்ப்பட்ட மனிதரையும் தன் கலகல பேச்சால், குபீரென சிரிக்கவைப்பதில் வல்லவர் கு.ஞானசம்பந்தன். இலக்கியவாதி, பேராசிரியர், நடிகர் என இந்த பல கலை வித்தகர் கடைப்பிடிக்கும் ஆரோக்கிய வாழ்வுக்கான ரகசியங்கள் இங்கே... வரும் முன் காப்போம் 'கடன் இல்லாதவன் லட்சாதிபதி! நோய் இல்லாதவன் கோடீஸ்வரன்னு!' ஒரு சொலவடை உண்டு. பொதுவாக, ஐம்பது வயது வரைதான், உடல் நாம் சொல்வதைக் கேட்கும். அதன்பிறகு, உடல் சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடை இருந்தால், எந்த நோயும் அண்டாது. "உடல் எடையைக் குறைக்க ... |
| Posted: 05 May 2015 11:58 AM PDT நரேந்திர மோடி அரசின் பாராட்டுக்குரிய அம்சம் என்னவென்றால், முந்தைய மன்மோகன் சிங் அரசால் முன்மொழியப்பட்ட சில நல்ல திட்டங்களையும், சட்டங்களையும் கௌரவம் பார்க்காமல் நிறைவேற்ற முற்பட்டிருப்பதுதான். அந்த வரிசையில் ஊழல் தடுப்புச் சட்டம்-1988 திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்திருப்பது, நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமையும். சட்டத் திட்டங்களில் தெளிவு இல்லாமல் இருப்பதுதான் பல விதிமுறை மீறல்களுக்கும், தவறுகளுக்கும் காரணமாக அமைகிறது. ஊழலை கொடுங்குற்றமாக ... |
| Posted: 05 May 2015 11:56 AM PDT கோடையை எதிர்கொள்வோம் 100 டிகிரிக்கும் மேலே கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல், ஆரோக்கியமானவர்களே தடுமாறும்போது, குழந்தைகளும் முதியவர்களும் எப்படி வெப்பத்தின் உக்கிரத்தைத் தாங்குவார்கள்? வெயிலின் கடுமை, குழந்தைகளையும் முதியவர்களையும் தாக்காத அளவுக்கு, அவர்களைப் பாதுகாக்க வேண்டும். உடை, தண்ணீர், உணவு என்று எல்லா விஷயங்களிலுமே, வழக்கத்தைவிடக் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வது, கோடை நோய்களிலிருந்து குழந்தைகளையும் முதியவர்களையும் பாதுகாக்க உதவும். கோடை காலத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான ... |
| ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Posted: 05 May 2015 11:37 AM PDT ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு தேதி - தொடரும் சஸ்பென்ஸ் - ஏகிறும் டென்சன் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு தேதி தள்ளிக் கொண்டே செல்வதால், தமிழக அமைச்சர்களும், அதிமுகவினரும் கடும் டென்சனில் உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீிதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, குற்றவாளிகள் தரப்புக்கு 4 வருட ... |
| அரசு அலுவலர்களும், அ.தி.மு.க. அரசும்! : கலைஞர் கடிதம் Posted: 05 May 2015 11:31 AM PDT திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதம்: ''அரசு அலுவலர்கள் என்றாலும், ஆசிரியர்கள் என்றாலும், அ.தி.மு.க. ஆட்சியினருக்கு எப்படிப்பட்ட "அலர்ஜி" என்பது, இந்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு அல்ல; இதற்கு முன்பு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 1991 முதல் 1996ஆம் ஆண்டுகளிலும் சரி; 2001 முதல் 2006ஆம் ஆண்டுகளிலும் எந்த அளவுக்குக் கடுமையாக நடந்து கொண்டார்கள் என்பதை நான் புதிதாக நினைவுபடுத்த வேண்டியதில்லை. அரசு அலுவலர்கள் ஜனநாயக ரீதியாக அமைதியாக அறப்போராட்டம் நடத்துவதையே ஒடுக்குவதற்காக அ.தி.மு.க. ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 05 May 2015 11:17 AM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| கார்ப்பரேட் சாமியார்கள் - குகன் Posted: 05 May 2015 10:53 AM PDT இந்தியாவில் கார்ப்பரேட் சாமியார்கள்இ பெருமுதலாளிகள்இ அதிகாரவர்க்கத்தினர் ஆகிய மூவரும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் மற்றும் சமூக பீடங்களின் உயர்மட்டங்களில் இருப்பவர்கள் ஏன் சாமியார்கள் காலில் விழுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது கடினமானதல்ல. நவீன குருமார்கள் இன்று சர்வதேச அளவிலான தரகர்களாக மாறிவிட்டனர். பல்வேறு நிழல் நடவடிக்கைகளில் அவர்களுக்கு இருக்கும் தொடர்புகள் அவ்வப்போது வெளிவந்து பிறகு மறைந்துவிடுகின்றன.. அதிகார வர்க்கம் இவர்களை ஏன் நம்புகிறது ? என்ன செய்கிறார்கள் ... |
| Posted: 05 May 2015 10:45 AM PDT ஈகரை உறவுகள் அனைவர்க்கும் வணக்கம் , கணினியில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் எனது உடல் அளவுக்கு அதிகமாக எடை கூடி விட்டது எனக்கு உணவு டயட் மற்றும் உடல் எடை குறைப்பு டயட் பற்றி தெளிவாக யாரவது எடுத்து கூறுங்களேன் |
| மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி Posted: 05 May 2015 09:42 AM PDT பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு. விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை ... |
| பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும் ஆண் மகனே...!! Posted: 05 May 2015 08:04 AM PDT பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும் ஆண் மகனே...!!! எங்களை உரசுவதற்கு முன் கொஞ்சம் யோசி...! நீயும் ஒரு பெண்ணுக்கு சகோதரனாய், தந்தையாய் மகனாய் , நிச்சயம் இருந்திருப்பதை....! உன் சகோதரியையும் , உன் தாயையும் உன் மனைவியையும் நிச்சயம் ஒருவன் உரசி இருப்பதை...! நீ உரசும் போது எங்கள் மனம் அடையும் வேதனையை புரிந்து கொள்ள உன்னவர்களிடம் கேட்டு பார்...!!! அவர்களை ஒருவன் உரசும் போது அவர்கள் அடைந்த வேதனையை கண்ணீருடன் கூறுவார்கள்...! அப்போதாவது தெரியட்டும் எங்களின் வேதனை...! நீ சீண்டும் ... |
| சிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி? Posted: 05 May 2015 08:01 AM PDT தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. `உடலின் துப்புரவுத் தொழிலாளி' என்று அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றிலும் சிறுநீரகக் கற்கள் உருவாவது வாடிக்கை. பிற பருவ காலங்களுடன் ஒப்பிடும்போது கோடைக் காலத்தில் இவற்றின் தொல்லைகள் அதிகம். கொஞ்சம் மனது வைத்து நம் உணவுமுறையை சரி செய்துகொண்டால், இந்தத் தொல்லைகளைக் குறைத்துக் கொள்ளவும் முடியும். சிறுநீரகக் ... |
| உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Posted: 05 May 2015 07:56 AM PDT - உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் டிப்ஸ்) ஆனா சீரியஸா பாலோ பண்ணுங்க .. ஒரு நாள் உணவு! காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப். பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர். அரை மணி நேர நடைப்பயிற்சி. வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப். (சர்க்கரை சேர்க்காமல்) புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட் போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட். (100 கிராம்) 10 மணிக்கு மோர் 11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ் 12 மணிக்கு இளநீர் மதியம் ஒரு மணிக்கு ... |
| Posted: 05 May 2015 07:36 AM PDT 'சுதந்திரம் என் பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்...' என்றார் லோகமான்ய பாலகங்காதர திலகர். ஆனால், தற்போது, 'தவறு செய்வது என் பிறப்புரிமை; அதைச் செய்தே தீருவேன்...' என்ற எண்ணமும், செயல்பாடுகளும் மக்களிடம் அதிகரித்து வருகின்றன. இத்தகைய எண்ணங்களும், செயல்பாடுகளும் எத்தகைய அழிவைத் தரும் என்பதை விளக்கும் கதை இது: விந்தியம் மற்றும் சைலம் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியை ஆண்டு வந்தான் தண்டகன் எனும் அரசன். அப்பகுதிக்கு, மதுமந்தம் என்று பெயர். தண்டகன் தர்ம வழியில் ஆட்சி நடத்தினாலும், அரச பதவியும், ... |
| Posted: 05 May 2015 06:27 AM PDT பெயர்: ரெத்தினவெலன் ச சொந்த ஊர்:மேலாயக்குடி ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:தேடல் பொழுதுபோக்கு:படித்தல்,வரலாற்று தேடல்கள் & etc |
| Posted: 05 May 2015 05:21 AM PDT ![]() |
| சுலபமான முறையில் இனிப்புகள் ! - ஷோகன் ஹல்வா ! Posted: 05 May 2015 05:18 AM PDT இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம். முதலில் திரட்டுப்பால் . பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும். தேவையானவை: வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர் சர்க்கரை 200 கிராம் செய்முறை: அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் . பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம். நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு ... |
| Posted: 05 May 2015 05:16 AM PDT அக்னி நட்சத்திர வெயிலைக் கண்டு எல்லோரும் அலறுவதற்கு காரணம்கோடை கையோடு கொண்டு வரும் விதவிதமான வியாதிகள்தான். தலைவலி, வயிற்றுப்போக்க, வாந்தி, அடிவயிற்றில் வலியுடன் சீதபேதி, ரத்தப்போக்கு, அதிகமான களைப்பு, அம்மை,அதிகப்படியான வியர்வை, படபடப்பு, மயக்கம் இவற்றில் ஏதாவது ஒருநோய் வந்தாலும், நம்மை பாடாய்ப்படுத்திவிடும். இதிலிருந்து தப்பிக்க வெயில் காலத்தில் நம் உணவுப் பழக்கவழக்கங்களைசீர்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதிக காரம், மசாலா நிரம்பிய பொருட்கள் வறுத்த-பொரித்த உணவுப்பொருட்கள் இவற்றை அறவே ... |
| Posted: 05 May 2015 05:10 AM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 05 May 2015 05:00 AM PDT நாக்குக்கும் கற்பு உண்டு மௌனம்..... - வேலன். |
| Posted: 05 May 2015 04:51 AM PDT தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும். |
| உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!--- Posted: 05 May 2015 03:08 AM PDT வெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது! வியர்வை, தாகம், அசதி என எதிர்வரும் நாட்களில் வெயில் விளையாட்டு 'சூடு பிடிக்க'த் துவங்கிவிடும். வெயிலின் உக்கிரத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? ''நிறைவாக நீர் அருந்தினாலே போதும்!'' என்கிறார்கள் அனைத்துத் தரப்பு மருத்துவர்களும். பாரம்பரிய சித்த மருத்துவரான கே.பி.சுப்ரமணியன் இயற்கையான முறையில் தண்ணீரை உடலுக்குள் இயக்கும் 'ஏ.சி'-யாக மாற்றும் பக்குவத்தைச் சொல்லித் தருகிறார். ''வெயில் காலத்தில் உடலின் நீர் அளவு குறைவதால்தான் ... |
| உங்கள் வீட்டின் மதிப்பு என்ன?- உதவுகிறது பத்திரப்பதிவுத் துறை இணையதளம் Posted: 05 May 2015 03:05 AM PDT புதிய வீட்டையோ அல்லது பழைய வீட்டையோ வாங்கப் போகிறீர்களா? ஒரு பகுதியில் வீடுகள் என்ன விலையில் விற்கப்படுகின்றன என்பதில் குழப்பமாக உள்ளதா? கவலையை விடுங்கள். இதற்கும் அரசின் பத்திரப்பதிவுத் துறை இணையதளம் உதவுகிறது. ஒரு இடத்துக்கான சந்தை வழிகாட்டி மதிப்பையும்கூடப் பத்திரப்பதிவு இணையதளத்தில் பார்க்க வழி உள்ளது. பலரும் மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பை மட்டும் பார்த்துவிட்டு இருந்துவிடுவார்கள். வீடுகளுக்கும்கூடச் சந்தை வழிகாட்டி மதிப்பைப் பார்க்க வழி உள்ளது. இதற்கான சுட்டியைச் சொடுக்கி, ... |
| சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) Posted: 05 May 2015 02:06 AM PDT உங்களுக்கு தெரிந்த சிறுவயதில் பாடிய பாடல்களை பதியுங்கள். ![]() |
| Posted: 05 May 2015 01:42 AM PDT ஐந்து 9 களை பயன்படுத்தி 10 யை எழுத முடியுமா? |
| Posted: 05 May 2015 01:20 AM PDT சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு. {இரண்டு நிமிடம் ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்} சிவலிங்கங்களைப் பற்றிய டாக்டர் "விளாதி மீரின்" என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் ... |
| Posted: 05 May 2015 12:53 AM PDT ஒரு புத்தகத்தில் இந்தப் புதிர் காணப்பட்டது. நானும் பலவழிகளிலும் என்னுடைய மண்டையை உடைத்துப் பார்த்து விட்டேன், விடை தெரியவில்லை. எனவே, யாம் பெற்ற அனுபவம் மற்றவரும் படட்டும் என நினைத்து இங்கு பதிவேற்றுகிறேன். கண்டுபிடியுங்கள். இரண்டு தீக்குச்சிகளை மாற்றியமைப்பதன் ஊடாக இந்த சமன்பாட்டை சரிசெய்யலாம். எப்படி? |
| Posted: 05 May 2015 12:53 AM PDT விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதிப் பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்தபோதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்பவிட்டதில்லை. பத்திரிக்கையாளர்களே! விபச்சாரிகள் கைது என்றுதானே விற்பனையாகிறது.. விலங்கிடப்பட்ட ஆண்களின் விபரம் ... |
| மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5 Posted: 05 May 2015 12:08 AM PDT உலக சுகாதார மைய அறிக்கை படி உலகில் 23.50 கோடிக்கும் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 3 கோடி பேர் உள்ளனர். 2016ல் இது 50 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் மயமாதல், தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. உலகளவில் பாதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள். விழிப்புணர்வு குறைவாக இருப்பதே ஆஸ்துமா அதிகரிப்பதற்கு காரணம். நுரையீரலில் ஏற்படும் அலர்ஜியால், சுவாசப்பாதை சுருங்கி மூச்சுவிட சிரமம் ஏற்படுகிறது. இது பொதுவான உடல்நலப் ... |
| பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? Posted: 05 May 2015 12:00 AM PDT கிராமத்தில் திருவிழாவின் போது நடைபெறும் விளையாட்டு போட்டிகளின் பெயர்கள் வேண்டும். புதுமையான விளையாட்டுகள் இருந்தால் சொல்லுங்கள்..!! எங்கள் ஊரில் நடைபெற போகும் திருவிழாவில் குழந்தைகளை மகிழ்விப்பது போல புதுமை விளையாட்டுகள் இருந்தால் சொல்லுங்கள் ஈகரை நண்பர்களே...!! (1.ம்யூசிகல் சேர் 2.பானை உடைத்தல் 3.பலூன் ஊதுதல் 4.லக்கி கார்னர் இதுபோல எதாவது சொல்லுங்கள் ..plsssssssss |
| Posted: 04 May 2015 11:54 PM PDT அன்று இரவு டின்னரை அமர்க்களப்படுத்தி விட்டாள் சாரதா. ராதா, ராகவ், குழந்தைகள் என்று ஒவ்வொருவருக்கும் பிடித்ததையெல்லாம் பார்த்துப் பார்த்து செய்திருந்தாள். - "நா வேணா கேட்டரிங் ஏதாவது ஏற்பாடு பண்ணிடறேனே சாரதா, எதுக்கு கஷ்டப்படறே...' என்று கூட சொல்லிப் பார்த்தான் கோபி. - "சும்மா இருங்க. இந்த ஃபேர்வெல் பார்ட்டிய என் கைப்பட செஞ்சாத்தான் எனக்குத் திருப்தியாயிருக்கும். இப்போ விட்டா அப்புறம் எப்போ செய்யப் போறேன்? அதோட, அவங்க ஒவ்வொருத்தருக்கும் என்ன பிடிக்கும்னு எனக்குத்தான் நல்லா ... |
| Posted: 04 May 2015 11:38 PM PDT அம்மா... நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன். கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன். இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது. அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் ... |
| சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Posted: 04 May 2015 11:11 PM PDT சிவரமணி – ஈழத்து பெண் கவிஞர். - தற்கொலை செய்து இறக்கும்முன் அவள் செய்த செயல்: தன் கைவசமிருந்த தன்னுடைய அத்தனை கவிதைகளையும் நெருப்பில் இட்டு எரித்து விட்டுச் சென்றிருக்கிறாள். அந்த நெருப்போடு அவள் கவிதைகளும் உணர்வுகளும் சேர்ந்து அழிந்து போயின. தன் இறுதிக்கடிதத்தில் தன் நண்பர்கள் யாரிடமாவது அவளுடைய கவிதைகள் மிச்சமிருந்தால் அவற்றையெல்லாம் அழித்து விடும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தாள். அத்தனை பேரையும் உறைய வைத்து விட்டு உலகத்தை விட்டு சென்ற சிவரமணியின் கவிதைகளில் இலங்கையின் ... |
| Posted: 04 May 2015 11:03 PM PDT காதல் என்ற போதையிலே. பாதை தவறி போனவரே. காதலன் என நம்பி காமுகனிடம் சிக்கியவரே. கலவி என்ற சுகம் கண்டு கற்ப்பிழந்து போனவரே. கொண்டவன் கை கழுவ கலங்கி இதயம் வெடித்தவரே. கற்பு என்பது சொல் அல்ல காலத்திற்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள காமம் என்ற ஒரு சொல்லில் உலகம் அது இயங்கவதில்லை. தெரிந்தே நீங்கள் செய்யும் தவறுக்கு. தண்டனை பச்சிளம் குழந்தைக்கு. தொப்புள் கொடி அறுத்த உடனே சேயுடனான பந்தத்தையும் அறுத்தீரோ. எச்சில் இலைகளுடன் எதிர்க்காலம் புரியாமல் கண் சிமிட்டி சிரிக்குதடி ... |
| Posted: 04 May 2015 10:51 PM PDT ''2016ல் தமிழகத்தில் நாங்கள் தான் முதல்வர்; அப்படி இல்லாவிட்டால் நாங்கள் கை காட்டுபவர் தான் முதல்வர்'' - >தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், |
| சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன் Posted: 04 May 2015 10:15 PM PDT http://www.mediafire.com/download/32lvofa6lb4vtgv/Sangara+Madathin+Unmai+Varalaru.pdf என்றும் அன்புடன் செல்லா |
| Posted: 04 May 2015 10:09 PM PDT பேய்களால் சிதைக்கப்படும் பிரேதத்தைப் போன்று சிதைக்கப்பட்டேன் - ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம் இரத்தம் தீண்டிய கரங்களால் அசுத்தப்படுத்தப்பட்டன. - என்னை மேகத்திற்குள்ளும் மண்ணிற்குள்ளும் மறைக்க எண்ணிய வேளையில் வெளிச்சம் போட்டுப் பார்த்தனர். - அவர்களின் குரோதம் நிறைந்த பார்வையும் வஞ்சகம் நிறைந்த சிரிப்பும் என்னைச் சுட்டெரித்தன. - எனது ஆசைகள் இலட்சியங்கள் சிதைக்கப்பட்டன. அவர்களின் மனம் மகிழ்ச்சி கொண்டது. அவர்களின் பேரின்பம் என் கண்ணீரில்தான் இருக்கமுடியும். ஆனால் என் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
