Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆந்திரா, தெலுங்கானாவில் 2,000 பேர் பலி:கோரதாண்டவமாடுகிறது கோடை வெயில்

Posted:

ஐதராபாத்:ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், வெயிலின் கோரதாண்டவம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த இரு மாநிலங்களில் மட்டும், வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்து உள்ளது. கோடை காலம் துவங்கியதில் இருந்து, நாடு முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. அதிலும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவிலும், வட மாநிலமான உ.பி., மற்றும் ஒடிசாவிலும், கருணையே காட்டாமல் சூரிய பகவான்சுட்டெரிக்கிறார்.

சித்துாரில்...:
ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த இரு ...

அருணா ஷான்பாக் கொலையாளி: உ.பி.,யில் வசிப்பது கண்டுபிடிப்பு

Posted:

காசியாபாத்:மும்பையில், செவிலியர் அருணா ஷான்பாக்கை பாலியல் பலாத்காரம் செய்து, கொல்ல முயன்ற சோகன்லால் பர்தா வால்மீகி, உத்தர பிரதேச மாநில கிராமம் ஒன்றில், கூலி வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது. மும்பை கே.இ.எம்., மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிந்த அருணா ஷான்பாக், 1973ல், அதே மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்த வால்மீகியால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதில், சுய நினைவை இழந்தார். 42 ஆண்டுகள் மருத்துவமனையில் உணர்வின்றி கிடந்த அவர், இரு வாரங்களுக்கு முன் மரணம் அடைந்தார். அருணா வழக்கில், திருட்டு, தாக்குதலுக்கு மட்டும் ஏழு ஆண்டுகள் ...

3வது முறை: நில எடுப்புக்கு மத்திய அரசு அவசர சட்டம்: வாழ்வா - சாவா பிரச்னை இல்லை என்கிறார் மோடி

Posted:

புதுடில்லி: நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, மீண்டும் அவசர சட்டமாக அமல்படுத்தும்படி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம், நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம், மூன்றாவது முறையாக அமல்படுத்தப்பட உள்ளது. அதேநேரத்தில், நிலம் கையகப்படுத்துதல் மசோதா, தனக்கு வாழ்வா - சாவா பிரச்னை இல்லை என்றும், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், 2013ம் ஆண்டில், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில், குறைபாடுகள் இருப்பதாக, காங்கிரஸ் ஆளும் ...

சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தினமலர் இணையதளத்திற்கு விருது

Posted:

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தினமலர் இணையதளத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தின் நான்காம் தூணில் உண்மை உரைகல் கொண்டு கணினிச் சாரம் கட்டிய முன்னோடி உலகத் தமிழர் கரமெல்லாம் டிஜிட்டல் மொழியில் பேசிய முதல் தமிழ் நாளிதழ் தினமலர் என்ற வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.தினமலர் சார்பாக பாலசுப்ரமணியம் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தினமலர் இணையதளம், பல்வேறு தொழில் நுட்பங்களை உள்ளடக்கி இன்று தமிழ் செய்தி இணையதளங்களில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 1998ம் ஆண்டு, வௌ்ளோட்டமாக ...

'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டம் விரைவில் அமல்: பிரதமர் மோடி உறுதி

Posted:

புதுடில்லி: ''முன்னாள் ராணுவத்தினரின் நீண்ட கால கோரிக்கையான, 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' என்ற திட்டத்தை, மத்திய அரசு கண்டிப்பாக நிறைவேற்றும்; சந்தேகம் வேண்டாம்,'' என, பிரதமர் மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.

கோரிக்கை:
கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது, 'வாஜ்பாய், 2004ல், பிரதமராகியிருந்தால், முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதிய கோரிக்கையே எழுந்திருக்காது; அது முன்னதாகவே நிறைவேற்றப்பட்டு இருக்கும்' என, மோடி தெரிவித்திருந்தார். அவ்வாறு சொன்ன மோடி, பிரதமர் பதவியேற்று ஓராண்டு ஆகியும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் உள்ளதற்கு, ...

சிகரெட் பிடிக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: மோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை

Posted:

புதுடில்லி: நம் நாட்டில், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புகையிலைக்கு அடிமையாகும் பெண்களுக்கு, பல்வேறு உடல் நல பாதிப்பு உள்ளிட்ட, பல மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.சிகரெட், பான்பராக், சூயிங்கம் உள்ளிட்ட புகையிலை கலந்த பொருட்களை பயன்படுத்துவதால், நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக, பல ஆய்வுகள் உறுதி செய்து உள்ளன. புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர ...

ரயில்களில் முதல் வகுப்பு கட்டணம் நாளை முதல் உயர்வு: தத்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் பாதி பணம்

Posted:

புதுடில்லி: புது சேவை வரி விதிப்பு, நாளை முதல் அமலுக்கு வருவதால், ரயில்களில் முதல் வகுப்பு, 'ஏசி' வகுப்பு மற்றும் சரக்கு கட்டணங்கள், 0.5 சதவீதம் உயர்கின்றன. அதேநேரத்தில், தத்கல் ஒதுக்கீட்டில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்தால், டிக்கெட் கட்டணத்தில் பாதியை திரும்பத் தருவது குறித்தும், ரயில்வே துறை பரிசீலித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட பொதுபட்ஜெட்டில், சேவை வரி அளவு உயர்த்தப்பட்டது. இந்த வரி உயர்வு, ஜூன், 1ம் தேதி முதல், அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

0.5 சதவீதம்:
இதன்படி, ரயில்களில் முதல் வகுப்பு, ...

ஜெ., வழக்கில் மேல்முறையீடு: ஓரிரு நாளில் முடிவு

Posted:

பெங்களூரு: ''ஜெயலலிதா வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக, ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும்,'' என, கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித்தார். நேற்று, அவர், நிருபர்களிடம் கூறியதாவது:ஜெயலலிதா விடுதலைதொடர்பான தீர்ப்பில், சில சந்தேகங்கள் குறித்து, அட்வகேட் ஜெனரலிடம்விளக்கம் கேட்டிருந்தோம். அவரும், அதற்கு பதிலளித்து, எங்களுக்கு, அறிக்கை அனுப்பியுள்ளார்.சட்டப்படி, உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்ய, 90 நாட்கள், கால அவகாசம் உள்ளன. கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, 20 நாட்களே ஆகின்றன. சட்டத்துறையும், தீர்ப்பு ...

'இலங்கையில் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை': கருணாநிதி

Posted:

சென்னை: 'இலங்கையில் ஆட்சி மாறியும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதி குறையவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஆய்வு:
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த, 'ஆக்லேண்ட்' என்ற, தனியார் நிறுவனம், 'இலங்கையில் போருக்கு பிந்தைய நிலையில், நீதிக்குப் போராடும் நிலை' என்ற தலைப்பில், ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.இதில், தமிழர்கள் வாழும் பகுதியில், ராணுவத்தின் ஆக்கிரமிப்பு நீடித்து வருகிறது. ஆறு தமிழர்களுக்கு, ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில், 1.60 லட்சம் ராணுவ வீரர்கள், அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர் ...

ஜெ.,வை எதிர்க்க எதிர்க்கட்சிகள் தயக்கம் : அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சி

Posted:

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து களம் இறங்க, எதிர்க்கட்சிகள் தயங்குவது, அ.தி.மு.க.,வினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், ஆளுங்கட்சியாக உள்ள, அ.தி.மு.க., அசைக்க முடியாத கட்சியாக உள்ளது. 2014 லோக்சபா தேர்தலில், அனைத்து கட்சிகளுக்கும் முன், 'தனித்து போட்டி' என, ஜெயலலிதா அறிவித்தார்.மற்ற கட்சிகள், யாருடன் கூட்டணி சேரலாம் என, முடிவு செய்வதற்குள், ஜெயலலிதா முதல்கட்ட பிரசாரத்தை முடித்தார்.அவரது வேகத்துக்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 37 தொகுதிகளை, அ.தி.மு.க., கைப்பற்றியது.அதேபோல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த ...

ஆங்கிலவழி பள்ளிகளை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவால் சிக்கல்: தொடக்க கல்வி இயக்குனரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் தவிப்பு

Posted:

அரசு பள்ளிகளில், ஏற்கனவே துவக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி, தட்டு தடுமாறி தவிக்கிறது. வரும் கல்வியாண்டில், ஆங்கிலவழிக் கல்வி வழங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்குனரின் உத்தரவு, ஆசிரியர்களை தவிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது. ஆங்கிலவழிக் கல்வி நடத்தும், பிரைமரி, நர்சரிகளுக்கு செல்லும் குழந்தைகளை கவரும் வகையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆங்கிலவழிக் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™