Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஐ.எஸ்.ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்த தொழிலதிபர்: ஆப்கானிடம் விவரம் கேட்கிறது இந்தியா

Posted:

புதுடில்லி: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், இந்தியர்களை சேர்த்த தொழிலதிபர் குறித்த விவரங்களை வழங்குமாறு, ஆப்கானிஸ்தானிடம் இந்தியா கோரி உள்ளது. இந்தியாவில், உலர் பழங்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் அந்த தொழிலதிபர், மும்பை அருகே கல்யாண் பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை, மூளைச் சலவை செய்து, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர்த்துள்ளார்.அந்த நான்கு பொறியியல் மாணவர்களும், கடந்த ஆண்டு, மே 23ம் தேதி, 22 பேருடன், புனிதப் பயணமாக ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள், ஈராக் - சிரியா எல்லையில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் ...

1,250 பள்ளிகளில் திறந்தவெளி, மரத்தடி, கூடார வகுப்புகள்: வகுப்பறை, கழிப்பறை, ஆய்வக வசதி இல்லை

Posted:

கடந்த ஆறு ஆண்டுகளாக, தரம் உயர்த்தப்பட்ட, 1,250 உயர்நிலைப் பள்ளிகளில், வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் கழிப்பறைகள் கட்ட நிதியின்றி, மாணவ, மாணவியர் திறந்தவெளியில் பாடம் படித்து வருகின்றனர். தமிழகத்தில், ஆண்டுதோறும், பட்ஜெட்டின் போது பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இப்படி, கடந்த ஆறு ஆண்டுகளில், தரம் உயர்த்தப்பட்ட, 1,250 பள்ளிகள், பெயரளவில் உயர்நிலைப் பள்ளிகளாக செயல்படுவதால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும், போதுமான வகுப்பறைகள் உள்ளன. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான ...

234 கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து?அரசுக்கு அறநிலைய துறை பரிந்துரை

Posted:

ஸ்ரீரங்கம், மதுரை, பழநி உட்பட, 234 கோவில்களில், சிறப்பு கட்டண தரிசன முறையை, தமிழக அரசு விரைவில் ரத்து செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும், 38 ஆயிரம் கோவில்கள், அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ளன. இதில், 4,000 கோவில்கள் அதிக வருவாய் உடையவை. இவற்றில், 234 கோவில்களில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் இருந்து, 5 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை, சிறப்பு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2013ம் ஆண்டு...:
சுவாமியை தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த, 2013ல், பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ...

அரசியல் பணிக்கு விஜயகாந்த் 'கத்தரி': வெளிநாட்டில் ஒரு மாதம் முகாம்

Posted:

கத்தரி வெயில் இன்று துவங்க உள்ள நிலையில், நேரடி அரசியல் பணிகளுக்கு, தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு, ஒரு மாதம் வெளிநாடுகளில் தங்க, விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.சமீபத்தில், மேகதாது அணை தொடர்பாக, எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன், விஜயகாந்த் டில்லி சென்றார். அங்கு, பிரதமரை சந்தித்து, இதுதொடர்பாக மனு கொடுத்தார். அதற்கு முன், மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன், பிரதமரை தனியாக சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, தன்னை அறிவிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார். ஆனால், 'இதுகுறித்து,பா.ஜ., தேசிய தலைவர் ...

சிறு தொழிலை காப்பாற்றுங்க! கருணாநிதி கோரிக்கை

Posted:

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:தி.மு.க., ஆட்சியில் சிறு, குறுந்தொழிலில் தொடர்ந்து வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், சிறு, குறுந்தொழில் முன்னேற்றத்தில் எவ்வித அக்கறையும் காட்டப்படவில்லை; தொடர்ந்து மின் வெட்டுப் பிரச்னையும் உள்ளது.

வேலை இழப்பு:
இதனால், தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் பணிபுரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரத்தைத் தேடி, அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துஉள்ளனர். இந்நிலையில், மத்தியில் ...

விவகாரமாகிறது லஞ்ச ஊழல் தடுப்பு மசோதா

Posted:

புதுடில்லி: லஞ்ச ஊழல் தடுப்பு மசோதாவில் செய்யப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக, அரசு அதிகார வர்க்கத்திற்கும், சட்ட வல்லுனர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.முந்தைய மன்மோகன் சிங் அரசு, லஞ்ச ஊழல் தடுப்பு திருத்த மசோதாவை, 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது.இதில், மோடி அரசு, ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளது.இதற்கு, மத்திய அமைச்சரவை குழு, கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஒப்புதல் அளித்தது.இந்த மசோதாவில், அரசு ஊழியர்கள் எடுக்கும் முடிவு சார்ந்த குற்றங்கள் குறித்து விசாரிக்க, லோக்பால் அல்லது லோக் ஆயுக்தா அமைப்புகளின் ஒப்புதலை ...

ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படாது: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மீண்டும் உறுதி

Posted:

புதுடில்லி: ''ரயில்வே துறையை, தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை,'' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மீண்டும் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்; ரயில்வே துறையில் மாற்றம் ஏற்படுவதை விரும்பாதவர்கள் தான்,இதுபோன்ற புரளியை கிளப்புவதாகவும், அவர் சாடியுள்ளார்.ரயில்வே துறை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பயணிகள் போக்குவரத்து மற்றும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு போன்ற பணிகளுக்கு ஆகும் செலவு அதிகரிப்பதால், அவற்றை ஈடு செய்ய முடியாத அளவுக்கு, ரயில்வே துறை பிரச்னையை எதிர்நோக்கி உள்ளது.கடந்த 2011 - 12ல் மட்டும், ரயில்வே, 23,643 கோடி ரூபாய் ...

ஏழைகளுக்கான காப்பீடு திட்டம்: வரும் 9ல் துவக்கி வைக்கிறார் மோடி

Posted:

புதுடில்லி: ஏழை மக்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம், 9ல், துவக்கி வைக்கவுள்ளார். மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின், ஏழை மக்களும் எளிதாக வங்கி சேவையை பெறும் வகையில், 'ஜன்தன் யோஜனா' என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, நாட்டு மக்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையிலான, ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டத்தை இம்மாதம், 9ல், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் துவக்கி வைக்கவுள்ளார். மற்ற மத்திய அமைச்சர்கள், ...

உற்பத்தியாளர்களிடம் பாலை வாங்க ஆவின் நிர்வாகம் மறுப்பு: நாள் ஒன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் வீணாகும் அவலம்

Posted:

தமிழகத்தில், தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதல் விலையை குறைத்ததால், பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிறுவனத்துக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். அத்துடன் பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. ஆனால், பால் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் ஆவின் நிர்வாகம், உற்பத்தியாளர்களிடம் பாலை கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றன. இதனால், தினசரி, 5 லட்சம் லிட்டர் பால் வீணாகிறது.தமிழகத்தில், வடகிழக்கு மழை பொய்த்து, வறட்சி நிலவியதால், பால் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க, பால் உற்பத்தியில் தீவிரம் காட்டினர். ஆவின் ...

தப்பினார் பஞ்சாப் முதல்வர்: முடிவுக்கு வந்தது சிறுமி விவகாரம்

Posted:

மோகா: பஞ்சாபில், ஓடும் பேருந்திலிருந்து நடத்துனர் மற்றும் அவரின் நண்பர்களால் துாக்கி வீசப்பட்டதில், சிறுமி பலியான விவகாரம் தொடர்பாக, முறையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் தந்தை, நேற்று போராட்டத்தை கைவிட்டார். தவிர, அரசின் சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளவும் சம்மதம்தெரிவித்துள்ளார்.

சில்மிஷம்:
பஞ்சாப் மாநிலம், மோகாவில், பேருந்தில் சென்று கொண்டிருந்த, சிறுமி மற்றும் அவரது தாயிடம், பேருந்தின் நடத்துனர் மற்றும் அவரது நண்பர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். ஆசைக்கு இணங்க ...

அதிகாரிகள் 'சஸ்பெண்ட்': மாநில அரசுகளுக்கு கிடுக்கிப்பிடி

Posted:

புதுடில்லி:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யும் விவகாரத்தில், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி, அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த, 48 மணி நேரத்திற்குள், அதுகுறித்த விவரத்தை, மத்திய அரசின் குழுவுக்கு, மாநில அரசு தெரியப்படுத்த வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர், காவல் துறை உயரதிகாரி மற்றும் முக்கிய துறைகளின் செயலர்களாக பொறுப்பேற்கும் இந்த அதிகாரிகள், அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கு ஆளாவதாகவும், நேர்மையான முறையில் பணியாற்றும் அதிகாரிகள், அரசியல்வாதிகளால் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™