Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


லக்வி விடுதலை குறித்து விரைவில் விவாதம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுதி

Posted: 03 May 2015 01:24 PM PDT

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கான சதித் திட்டம் தீட்டிய ஜகியுர் ரஹ்மான் லக்வி விடுவிக்கப்பட்டது தொடர்பாக, இந்தியா தெரிவித்த கவலை குறித்து தனது அடுத்த கூட்டத்தில் விவாதிப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுதியளித்துள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகளை முன்கூட்டியே தொடங்கத் திட்டம்

Posted: 03 May 2015 01:23 PM PDT

பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான தயாரிப்பு வகுப்புகள் (பிரிட்ஜ் கோர்ஸ்) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸூடன் அணி சேரத் தயார்

Posted: 03 May 2015 01:22 PM PDT

நாடாளுமன்றத்தில் காங்கிரஸூடன் அணிசேர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

ரயில்வே துறை தனியார்மயமாகாது: சுரேஷ் பிரபு

Posted: 03 May 2015 01:21 PM PDT

ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

சிறு, குறுந் தொழில் முன்னேற்றம்: புதிய கொள்கை தேவை

Posted: 03 May 2015 01:21 PM PDT

சிறு, குறுந் தொழில் முன்னேற்றத்துக்காக புதிய கொள்கையை மத்திய அரசு வகுக்க முன்வரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.

நிலம் கையக சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்?

Posted: 03 May 2015 01:20 PM PDT

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையக சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான காரணத்தை தமிழக அரசியல் கட்சிகள் விளக்கியுள்ளன.

இலங்கையில் தமிழர் தலைவர்களுடன் ஜான் கெர்ரி சந்திப்பு

Posted: 03 May 2015 01:18 PM PDT

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆர்.சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தலைவர்களை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: இதுவரை 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்

Posted: 03 May 2015 01:17 PM PDT

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுக்கு இதுவரை 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மீட்புப் பணியில் சீன எல்லைப் பாதுகாப்புப் படை

Posted: 03 May 2015 01:01 PM PDT

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக சீன எல்லைப் பாதுகாப்புப் படை நேபாளம் சென்றுள்ளது.

வயல்களில் தஞ்சமடையும் மக்கள்

Posted: 03 May 2015 01:00 PM PDT

நிலநடுக்கத்தையொட்டி ஏற்படும் பின்அதிர்வுகளில் இருந்து தப்பிப்பதற்காக, நேபாள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஆற்றங்கரை ஓரங்களிலும், வயல்வெளிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

105 வயது முதியவர் மீட்பு

Posted: 03 May 2015 01:00 PM PDT

நேபாளத்தில் நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கடந்த 8 நாள்களாக உயிருக்குப் போராடிய 105 வயது முதியவரை மீட்புப் படையினர் சனிக்கிழமை பத்திரமாக மீட்டனர்.

பழைமையான புத்தர் கோயில் சேதம்

Posted: 03 May 2015 12:59 PM PDT

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், உலகின் மிகத் தொன்மையானவற்றில் ஒன்றான "சுயம்புநாத்' புத்தர் கோயில் சேதமடைந்தது.

நேபாள மறுவாழ்வுப் பணிகளில் தன்னார்வ அமைப்புகள் ஈடுபட வேண்டும்

Posted: 03 May 2015 12:58 PM PDT

நேபாள நிலநடுக்க நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் தன்னார்வ அமைப்புகள் (என்.ஜி.ஓ.க்கள்) ஈடுபடவேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை கேட்டுக் கொண்டார்.

ஓடும் பேருந்தில் பாலியல் கொடுமை: சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய தந்தை ஒப்புதல்

Posted: 03 May 2015 12:57 PM PDT

பஞ்சாபில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, ஓடும் பேருந்தில் இருந்து தள்ளி விடப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யவும், தகனம் செய்யவும் அவரது தந்தை ஞாயிற்றுக்கிழமை ஒப்புக் கொண்டார்.

அமெரிக்காவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை

Posted: 03 May 2015 12:57 PM PDT

அமெரிக்காவின் தெற்கு கரோலினா நகரில், எரிவாயு நிலையம் நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலகம் ஸ்ரீநகருக்கு மாற்றம்

Posted: 03 May 2015 12:56 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மரபு ரீதியாக கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின்படி, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் மே 5-ஆம் தேதி முதல் ஸ்ரீநகரில் இருந்து இயங்கவுள்ளன.

ஆய்வாளரை சுட்டுக் கொன்ற உதவி ஆய்வாளர் தற்கொலை

Posted: 03 May 2015 12:55 PM PDT

மும்பையிலுள்ள வகோலா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சுட்டதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காவல் துறை ஆய்வாளர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இலக்கியச் சங்கமம்

Posted: 03 May 2015 12:46 PM PDT

சமூக சிந்தனை உயிர்ப்பியக்கம் நடத்தும் 10 ஆவது ஆண்டு நிறைவு விழா. பங்கேற்பு: அமுதன் அடிகள், ம.செல்வராசு, வீ.ந.சோமசுந்தரம், கோ.கலியமூர்த்தி, இளங்குமரன்; ஹோட்டல் செவேனா, மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி; 5.5.15 மாலை 5.30.

51 அட்சர சக்தி பீடங்கள்

Posted: 03 May 2015 12:45 PM PDT

51 அட்சர சக்தி பீடங்கள் - ஜபல்பூர் ஏ. நாகராஜ சர்மா; பக்.710; ரூ.400; வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810.

காந்தியைக் கொன்றவர்கள்

Posted: 03 May 2015 12:44 PM PDT

காந்தியைக் கொன்றவர்கள் - மனோகர் மல்கோங்கர்; தமிழில்: க.பூர்ணசந்திரன்; பக். 332; ரூ.300; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-2; )04259-226012.

யாதுமாகி

Posted: 03 May 2015 12:43 PM PDT

யாதுமாகி- எம்.ஏ.சுசீலா; பக்.208; ரூ.180; வம்சி புக்ஸ், திருவண்ணாமலை; )04175-251468.

கயல் பருகிய கடல்

Posted: 03 May 2015 12:43 PM PDT

கயல் பருகிய கடல் - மாலன்; பக்.208; ரூ.130; கவிதா பதிப்பகம், சென்னை - 17; )044 - 2436 4243.

இந்தியா 1948

Posted: 03 May 2015 12:43 PM PDT

இந்தியா 1948 - அசோகமித்திரன்; பக்.144; ரூ.120; நற்றிணைப் பதிப்பகம், சென்னை-5; )044-2848 2818.

வரப்பெற்றோம்

Posted: 03 May 2015 12:42 PM PDT

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - கிளமெண்ட் ஈஸ்வர்; பக்.224; ரூ.110; சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை-78 )044-65383000

ஐ.எஸ். தாக்குதல்: இராக்கில் 19 பேர் பலி

Posted: 03 May 2015 12:25 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் இராக்கில் நடத்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 19 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் இருவர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.

எண்ணங்களை கண்டறியும் கண்ணாடி!

Posted: 03 May 2015 12:25 PM PDT

ஒருவரது எண்ண ஓட்டங்களைக் கண்டறியும் மூக்குக் கண்ணாடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தான் நிலைப்பாடு: சவூதி அதிருப்தி

Posted: 03 May 2015 12:24 PM PDT

யேமனில் வான்வழித் தாக்குதலை நிகழ்த்தி வரும் தங்களது தலைமையிலான கூட்டுப் படையில் சேர விரும்பவில்லை என்ற பாகிஸ்தான் நிலைப்பாடு குறித்து சவூதி அரேபியா அதிருப்தி தெரிவித்தது.

தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகளை யேமனில் வீசுகிறது சவூதி

Posted: 03 May 2015 12:23 PM PDT

தடை செய்யப்பட்ட "கிளஸ்டர்' வகை கொத்து வெடிகுண்டுகளை சவூதி விமானப் படை யேமனில் வீசி வருவதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

ஆப்கன் பேருந்து விபத்தில் 18 பேர் பலி

Posted: 03 May 2015 12:23 PM PDT

ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து 18 பேர் பலியாகினர்.

ஓடும் பேருந்தில் தீ: 11 பேர் கருகி சாவு

Posted: 03 May 2015 12:22 PM PDT

பாகிஸ்தானில் ஓடும் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 3 குழந்தைகள் உள்பட 13 பேர் கருகி உயிரிழந்தனர்.

வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நிலம் சீரமைப்பு பணி

Posted: 03 May 2015 12:21 PM PDT

தேனி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

பழனி-கொடைக்கானல் மலைச் சாலை சீரமைக்கப்படுமா?

Posted: 03 May 2015 12:21 PM PDT

பழனி-கொடைக்கானல் சாலையில், மழை காலத்தின்போது சேதமடைந்த பகுதிகளை இன்னும் சீரமைக்காததால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மண் ஆய்வு, மண்மாதிரி சேகரிப்பு முகாம்

Posted: 03 May 2015 12:21 PM PDT

பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் மண் ஆய்வு மற்றும் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது.

பழனி பெரிய நாயகியம்மன் கோயில் வெள்ளித்தேரோட்டம்

Posted: 03 May 2015 12:20 PM PDT

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் சித்ராபௌர்ணமியை முன்னிட்டு வெள்ளித்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மலைச்சாலையில் விற்கப்படும் மருத்துவ குணமுள்ள பழ வகைகள்

Posted: 03 May 2015 12:20 PM PDT

கொடைக்கானலில் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே விளையும் மருத்துவ குணமுள்ள பழ வகைகள் பெருமாள் மலைப்பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

திண்டுக்கல்

Posted: 03 May 2015 12:19 PM PDT

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Posted: 03 May 2015 12:13 PM PDT

சாத்தூரில் 148 ஆண்டுகளை கடந்தும் முழு அளவில் போக்குவரத்துக்குப் பயன்பட்டுவரும் வைப்பாற்றுப் பாலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விலையில்லா பொருள்கள் வழங்கல்

Posted: 03 May 2015 12:13 PM PDT

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி கிராமத்தில் விலையில்லா பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்விரோதத்தில் ஒருவர் கொலை

Posted: 03 May 2015 12:12 PM PDT

ராஜபாளையம் அருகே முன்விரோத மோதலில் உருக்கட்டையால் அடிக்கப்பட்டவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

விவசாயியைக் கடத்தி காசோலைகளில் கையெழுத்து: தலைமை ஆசிரியை உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

Posted: 03 May 2015 12:12 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியைக் காரில் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி, வெற்றுக் காசோலைகளில் கையொப்பம் பெற்ற வழக்கில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை, அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் உள்ளிட்ட 5 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வழக்குப்

எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

Posted: 03 May 2015 12:12 PM PDT

விருதுநகர் எஸ்.சி, எஸ்.டி மாணவ, மாணவிகள் உயர் கல்வி கற்பதற்கான அரசாணைகள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் மே 13 முதல் ஜமாபந்தி

Posted: 03 May 2015 12:12 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் ஜமாபந்தி நிகழ்ச்சி மே 13 தொடங்கி, 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

நூலகர், காப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

Posted: 03 May 2015 12:11 PM PDT

விருதுநகர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் ஆகிய பணியிடத்திற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தம் அதிகாரிகளுக்கு சாதகமானதா?

Posted: 03 May 2015 12:11 PM PDT

மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்த ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சீனப் பட்டாசுகளை தடுத்து நிறுத்தக் கோரி அமைச்சரிடம் மனு

Posted: 03 May 2015 12:11 PM PDT

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சீனப் பட்டாசுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமனை புதுதில்லியில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

நேபாள நிவாரணப் பணிக்கு ஒரு நாள் ஊதியம் அளிக்க முடிவு

Posted: 03 May 2015 12:11 PM PDT

நேபாள நாட்டில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கத்தில் உள்ள பணியாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.

மானிய விலை உரங்களை விவசாயம் அல்லாத உபயோகத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

Posted: 03 May 2015 12:11 PM PDT

மானிய உரங்களை விவசாயத்திற்கு அல்லாமல் மற்ற உபயோகத்தற்கு கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கருவூல திருட்டு வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Posted: 03 May 2015 12:10 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் கருவூலத்தில் திருடிய நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, டி.கல்லுப்பட்டி, டி.வெங்கடாசலபுரத்தைச்

நிலம் கையகச் சட்டத்தை திருத்துவது தவறான முடிவு: ஜெய்ராம் ரமேஷ்

Posted: 03 May 2015 12:10 PM PDT

"குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் அச்சத்தைப் போக்குவதற்காக, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது, அரசின் தவறான கொள்கை முடிவாகும்'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

Posted: 03 May 2015 12:10 PM PDT

ராஜபாளையம் அருகே அடுத்தவர் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்றவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சிவகாசி

Posted: 03 May 2015 12:09 PM PDT

லஞ்சம் வாங்கியதாக உதவி ஆய்வாளர் கைது

Posted: 03 May 2015 12:09 PM PDT

ஒடிஸா மாநிலத்தில், லஞ்சம் வாங்கியதாக காவல் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

"அன்னபாக்யா' திட்டம்: கர்நாடக அரசு மீது மஜக தாக்கு

Posted: 03 May 2015 12:09 PM PDT

கர்நாடகத்தில் "அன்னபாக்யா' திட்டம் மக்களை சோம்பேறிகளாக்குகிறது என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி சாடினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பாலேஷ்வர் ராம் மறைவு

Posted: 03 May 2015 12:08 PM PDT

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பாலேஷ்வர் ராம் (87) காலமானார்.

"காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துங்கள்': திரைத் துறையினருக்கு முஃப்தி அழைப்பு

Posted: 03 May 2015 12:08 PM PDT

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திரைப்படத் துறையினர் முன்வர வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீது வேண்டுகோள் விடுத்தார்.

காஷ்மீர் துணை முதல்வருடன் பண்டிட் சமூகத்தினர் சந்திப்பு

Posted: 03 May 2015 12:07 PM PDT

ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங்கை பண்டிட் சமூகப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்கள்.

சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 4 சிறார்கள் தப்பியோட்டம்

Posted: 03 May 2015 12:06 PM PDT

பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 4 சிறார்கள் ஞாயிற்றுக்கிழமை தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

சாலை விபத்தில் மணமக்கள் உள்பட 10 பேர் பலி

Posted: 03 May 2015 12:06 PM PDT

ஜார்கண்டில் லாரியுடன் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் மணமக்கள் உள்பட 10 பேர் பலியாகினர்.

துப்பாக்கி தவறுதலாக வெடித்து ரயில்வே தலைமைக் காவலர் பலி

Posted: 03 May 2015 12:05 PM PDT

ஆந்திர மாநிலத்தில், கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் டி.முசலய்யா (47) பலியானார்.

4,832 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல்

Posted: 03 May 2015 12:05 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் 4,832 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்களை மக்களவை உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் சனிக்கிழமை வழங்கினார்.

லேப் டெக்னீசியன், ஓட்டுநர் காலி பணியிடத்துக்கு மே 12 இல் பதிவு மூப்பு பட்டியலை சரி பார்க்க வாய்ப்பு

Posted: 03 May 2015 12:05 PM PDT

லேப் டெக்னீசியன் மற்றும் ஓட்டுநர் காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதனை அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் மே 12 ஆம் தேதி சரி பார்த்துக் கொள்ளலாம் என மருத்துவ பணியாள

கும்பாபிஷேக விழாவில் 5 பெண்களிடம் நகை பறிப்பு

Posted: 03 May 2015 12:05 PM PDT

சிங்கம்புணரியில் கோயில் கும்பாபிஷேக விழாவில் 5 பெண்களிடம் இருந்து 22 பவுன் சங்கிலிகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

உ.பி. பேரவை இடைத் தேர்தல்: சமாஜவாதி வெற்றி

Posted: 03 May 2015 12:04 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரேந்தா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜவாதிக் கட்சி வெற்றி பெற்றது.

கேட்டரிங் கல்லூரியில் தொழிலாளர் தின விழா

Posted: 03 May 2015 12:04 PM PDT

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் தொழிலாளர் தின விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் தாளாளர் சையது வரவேற்றுப் பேசினார். பட்டிமன்ற நடுவர் சாத்தை மு.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டி கருத்தரங்கம்

Posted: 03 May 2015 12:04 PM PDT

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சி.சி.எப். சி பேடு தொண்டு நிறுவனத்தின் சார்பில் பிளஸ் 2 மாணவ- மாணவிகளுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

மே தின விடுமுறை அளிக்காத 28 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Posted: 03 May 2015 12:04 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் மே தின விடுமுறை அளிக்காத 28 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர் நல ஆய்வாளர் இர.துரை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் 140 கொத்தடிமைகள் மீட்பு

Posted: 03 May 2015 12:04 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில், கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் பணியாற்றி வந்த பெண்கள், சிறார்கள் உள்பட 140 பேரை அரசு அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனர்.

கிராம சபைக் கூட்டம்

Posted: 03 May 2015 12:04 PM PDT

கீழக்கரை அருகே ஏர்வாடி ஊராட்சி சடைமுனியன்வலசை கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்ட அமைச்சரை நீக்க தில்லி அரசு முடிவு?

Posted: 03 May 2015 12:03 PM PDT

போலிச் சான்றிதழ் புகாரில் சிக்கியுள்ள தில்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி நீக்கம் செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரத்தில் கோடை கால பயிற்சி முகாம்

Posted: 03 May 2015 12:03 PM PDT

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி முகாமை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் ச

படிப்பறிவில்லாத மணமகன்: திருமணத்தை நிறுத்திய பெண்

Posted: 03 May 2015 12:03 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மணமகன் கல்வியறிவு பெறாதவர் என்று கூறி, திருமணத்தை நிறுத்தினார் ஒரு பெண்.

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெறலாம்'

Posted: 03 May 2015 12:03 PM PDT

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் மாணவர்கள் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியினை பெற முடியும் என காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவர் கலியமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

சிவகங்கை மாவட்ட தனிப்பிரிவு போலீஸார் இடமாற்றம் எப்போது?

Posted: 03 May 2015 12:03 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸார் எப்போது இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மற்ற போலீஸாரிடையே எழுந்துள்ளது.

திருக்கோஷ்டியூரில் தேரோட்டம்

Posted: 03 May 2015 12:02 PM PDT

திருக்கோஷ்டியூர் செüமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

உறவினர் உள்பட 5 பேர் கைது: 33 பவுன் நகைகள் பறிமுதல்

Posted: 03 May 2015 12:02 PM PDT

திருப்பத்தூர் அருகே தம்பதியரை கொலை செய்த வழக்கில் உறவினர் உள்ளிட்ட 5 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்து, 33 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

அரசு தொழிற்பயிற்சிப் பள்ளியில் முதலுதவி பயிற்சி வகுப்பு

Posted: 03 May 2015 12:02 PM PDT

 ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் முதலுதவிப் பயிற்சி வகுப்பு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

கோடை மழையால் பண்ணைக் குட்டைகளில் பெருகிய தண்ணீர்

Posted: 03 May 2015 12:01 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டைகளில் கோடை மழையால்

178 அரசுப் பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள்ஆ.நங்கையார் மணி

Posted: 03 May 2015 12:01 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 178 அரசுப் பள்ளிகளில், 20க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

காட்டு யானைகள் தாக்கியதில் விவசாயி சாவு

Posted: 03 May 2015 12:01 PM PDT

கொடைக்கானல் அருகே சனிக்கிழமை காட்டு யானைகள் தாக்கியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பரமக்குடி

Posted: 03 May 2015 12:00 PM PDT

பெண்ணைக் கடத்தி பலாத்காரம்: 8 பேர் வேலூர் சிறையில் அடைப்பு

Posted: 03 May 2015 12:00 PM PDT

ராணிப்பேட்டை அருகே இளம்பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான கல்வி வேண்டும்

Posted: 03 May 2015 12:00 PM PDT

இன்றைய நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை அளிக்கும் வகையில் பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும் என்று திரைப்பட

மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் சாவு

Posted: 03 May 2015 12:00 PM PDT

ஆம்பூர் அருகே பேர்ணாம்பட்டு ஒன்றியம், பாலூர் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை இறந்தன. இதனால், சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

மது போதையில் பைக்கில் சென்ற எஸ்.ஐ.: ஆட்டோ மீது மோதியதில் ஓட்டுநர் காயம்

Posted: 03 May 2015 12:00 PM PDT

ஆம்பூர் அருகே மது போதையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தார்.

100-ஆவது மின்மாற்றி இயக்கம்

Posted: 03 May 2015 11:55 AM PDT

குடியாத்தம் நகருக்கு 287 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், 100-ஆவது மின் மாற்றி பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

20 ஓவர் கிரிக்கெட் போட்டி:சென்னை அணிக்கு கோப்பை

Posted: 03 May 2015 11:55 AM PDT

அரக்கோணத்தில் நடைபெற்ற 3 மாவட்டங்களுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், சென்னை மாஸ் கிரிக்கெட் கிளப் அணி கோப்பையை வென்றது.

நகைக் கடை உரிமையாளர் தற்கொலை

Posted: 03 May 2015 11:55 AM PDT

காட்பாடியில் தூக்கிட்டு நகைக் கடை உரிமையாளர் சனிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிக் கல்வியை மேம்படுத்த தீவிர நடவடிக்கை தேவை

Posted: 03 May 2015 11:55 AM PDT

பள்ளிக் கல்வியை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

நேபாள பூகம்பம்:ஆம்பூரில் மோட்ச தீபம்

Posted: 03 May 2015 11:55 AM PDT

நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஆம்பூரில் மோட்ச தீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

தன்வந்திரி பீடத்தில் 468 சித்தர்கள் யாகம்

Posted: 03 May 2015 11:55 AM PDT

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சித்திரை பௌர்ணமியில் சப்த ரிஷி பூஜையுடன் 468 சித்தர்கள் ஞாயிற்றுக்கிழமை யாகம் நடத்தினர்.

8 பேருந்து நிலையங்களில் இருந்து 1,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Posted: 03 May 2015 11:55 AM PDT

திருவண்ணாமலை சித்திரை பௌர்ணமி திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த 8 தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து 1,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் 3,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

8 வட்டங்களில் இன்று ஜமாபந்தி தொடக்கம்

Posted: 03 May 2015 11:55 AM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் ஜமாபந்தி திங்கள்கிழமை (மே 4) தொடங்குகிறது.

மாற்றுத்திறனாளிகள், மகளிருக்கு ரூ.4 கோடி கடன் அளிப்பு

Posted: 03 May 2015 11:55 AM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் 200 ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள், நலிவடைந்தோர், மகளிர் குழுக்களுக்கு ரூ.4 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

"கல்வியுடன் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்'

Posted: 03 May 2015 11:55 AM PDT

கல்வியுடன், உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்று பள்ளி மாணவ-மாணவியருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையா அறிவுரை வழங்கினார்.

56 கிராமங்களைச் சேர்ந்த 2,800 பேருக்கு கறவை மாடுகள்

Posted: 03 May 2015 11:55 AM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 56 கிராமங்களைச் சேர்ந்த 2,800 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

திறக்கப்படுமா புதிய பூங்காக்கள்?

Posted: 03 May 2015 11:55 AM PDT

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் அம்பத்தூர் மண்டலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காக்கள் திறக்கப்படாமலேயே உள்ளன. இதனால், பொதுமக்கள் பூங்காக்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

கருங்கல் அருகே குளம் தூர்வாரும் பணி: இளைஞர்கள் ஆர்வம்

Posted: 03 May 2015 11:54 AM PDT

கருங்கல் அருகே தூர்ந்துபோன புலிமரத்தான்குறிச்சி குளத்தை தூர்வாரும் பணியில் அப்பகுதி இளைஞர்கள் கடந்த ஒருவாரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவட்டாறில் அரசுப் பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதல்

Posted: 03 May 2015 11:54 AM PDT

திருவட்டாறு அருகே அரசுப் பேருந்து திடீரென பழுதாகி தாறுமாறாக ஓடியதில், முன்னால் சென்ற மற்றொருப் பேருந்தில் மோதி விபத்து நேரிட்டது. இதில் பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.

குமரியில் பேரிடர் மீட்பு முதலுதவிப் பயிற்சி முகாம்

Posted: 03 May 2015 11:54 AM PDT

குமரி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் முதலுதவிப் புத்தாக்கப் பயிற்சி இரண்டு நாள் முகாம் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நாகர்கோவில் அருகே பைக் மோதி தொழிலாளி சாவு

Posted: 03 May 2015 11:54 AM PDT

நாகர்கோவில் அருகே பைக் மோதிய விபத்தில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™