Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Posted: 03 May 2015 10:56 AM PDT

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)


இனியவனின் திருக்குறள்-சென்ரியூ

எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -

சுவாரஸ்யமான சில குறிப்புகள்:) - கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்!

Posted: 03 May 2015 10:44 AM PDT

பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும். அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும். இட்லிக்கு ...

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - சத்துமாவு பாசிப்பருப்பு அடை!

Posted: 03 May 2015 10:43 AM PDT

தோழி சசிகலாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய் சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், ...

பசலைக்கீரை

Posted: 03 May 2015 10:42 AM PDT

பசலைக்கீரை - குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது.

நீரைப் பெருக்கும். பால் சுரக்கும்.

வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும். இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது.

வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை.

அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.

புலாவ் , பருப்பு போட்டு கூட்டு செய்யலாம். பாலக் பனீர் ரொம்ப பிரசிதம்.

என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)

Posted: 03 May 2015 10:42 AM PDT

நான் என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'PDF' களை இங்கு பகிர்கிறேன்............ ..............நீங்கள் இவற்றை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். பிள்ளை பெற்றவர்களுக்கான பத்திய  சமையல் ! DOWNLOAD

நொண்டிச் சிந்து – வ.ஐ.ச.ஜெயபாலன்

Posted: 03 May 2015 10:34 AM PDT

- ஒரு திருநங்கையின் காதல் கவிதைபோல என் மரபணுக்களில் இருந்து எழுகிறது ஒரு பாடல் பாணனாய்த் திரிகிறபோதெல்லாம் என் பாதங்களின் அசைவுக்குச் சுழல்கிறதே உலகம் என்னதாய். கிடைத்த கள்ளும் கூழும் சந்தித்த தோழ தோழியருமாய் குந்திய மர நிழல்களில் எல்லாம் சூழுதே சுவர்க்கம் காதலும் வீரமுமாய். வாழ்வு தருணங்களின் விலையல்ல தருணங்கள்தான் என்பதை மறக்கிற பொழுதுகளில் புயலில் அறுந்த பட்டமாகிறேன். காலமும் இடமும் மயங்க. தருணங்களின் சந்தையான உலகிலோ தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு இங்கு பல ...

இரண்டு அடி கொடுத்தால்தான் திருந்துவாய்!

Posted: 03 May 2015 10:32 AM PDT

- – இரண்டு அடி கொடுத்தால்தான் திருந்துவாய்! வாங்கிக்கொள் வள்ளுவனிடம். – ———————- – கல்லூரி மணிக்கூண்டு பழைய மாணவன் விசாரிக்கும் மணியோசை. – ———————- ஒரு மரத்தை வெட்டுபவன் மழையைக் கொலை செய்கிறான் – ——————– – 'இந்தியா டுடே'யில் தமிழச்சி மார்புகள்! கண்ணீரால் போர்த்தினேன். – ———————— – கண்ணில் ஓவியம் காதில் இசை மழைப் பாட்டு – —————————– – இரண்டு ஊதுபத்தி புகையின் அசைவில் நீ… நான் – —————————– அறிவுமதி –

வெண்சுருட்டுப் புகைக்குள் திணறும் மல்லிகை மணம்….!

Posted: 03 May 2015 10:31 AM PDT

– ஒரே தலையணை வெண்சுருட்டுப் புகைக்குள் திணறும் மல்லிகை மணம். – —————————– – ஊருக்கு ஊர் வட்டிக்கடை பொது இடங்களில் தண்ணீர்த் தொட்டி காறித்துப்புகிறான் கணைக்கால் இரும்பொறை. – ————————– – குருட்டுப் பாடகன் தொடர்வண்டி சக்கரத்தில் நசுங்கியது புல்லாங்குழல். – ————————– – அன்று அதனை அடித்தாள் இன்று அதுவாகி வெடித்தாள் தாய் வழிச் சமூகம். – ————————— – எங்கு தூங்குகிறதோ என் கால்சட்டை காலத்தின் குத்துப்படாத பம்பரம். – ————————–— அறிவுமதி

வெண்சுருட்டுப் புகைக்குள் திணறும் மல்லிகை மணம்….!

Posted: 03 May 2015 10:30 AM PDT

– ஒரே தலையணை வெண்சுருட்டுப் புகைக்குள் திணறும் மல்லிகை மணம். – —————————– – ஊருக்கு ஊர் வட்டிக்கடை பொது இடங்களில் தண்ணீர்த் தொட்டி காறித்துப்புகிறான் கணைக்கால் இரும்பொறை. – ————————– – குருட்டுப் பாடகன் தொடர்வண்டி சக்கரத்தில் நசுங்கியது புல்லாங்குழல். – ————————– – அன்று அதனை அடித்தாள் இன்று அதுவாகி வெடித்தாள் தாய் வழிச் சமூகம். – ————————— – எங்கு தூங்குகிறதோ என் கால்சட்டை காலத்தின் குத்துப்படாத பம்பரம். – ————————–— அறிவுமதி

கருவேலங் காட்டிற்குள் வண்ணத்துப் பூச்சி!

Posted: 03 May 2015 10:28 AM PDT

– வாழ்க்கை என்னடா வாழ்க்கை கருவேலங் காட்டிற்குள் வண்ணத்துப் பூச்சி! – ———————- – எவன் நிலம்! எவன் நாடு! இலவச மனைப் பட்டா! – ——————— – நந்தனைக் கொன்றதே சரி குலதெய்வம் மறந்த குற்றவாளி. – ———————– – நொறுக்குவான் பண்ணையாரை எல்லாக் கோபங்களோடும் சுடுகாட்டில். – ———————– – தேவர் படித்துறை பறையர் படித்துறை அலைகள் மீறின சாதி! – ————————- – பறையர் சுடுகாடு படையாட்சி சுடுகாடு தலைமுழுக ஒரே ஆறு. – ——————— —அறிவுமதி

கருவேலங் காட்டிற்குள் வண்ணத்துப் பூச்சி!

Posted: 03 May 2015 10:28 AM PDT

– வாழ்க்கை என்னடா வாழ்க்கை கருவேலங் காட்டிற்குள் வண்ணத்துப் பூச்சி! – ———————- – எவன் நிலம்! எவன் நாடு! இலவச மனைப் பட்டா! – ——————— – நந்தனைக் கொன்றதே சரி குலதெய்வம் மறந்த குற்றவாளி. – ———————– – நொறுக்குவான் பண்ணையாரை எல்லாக் கோபங்களோடும் சுடுகாட்டில். – ———————– – தேவர் படித்துறை பறையர் படித்துறை அலைகள் மீறின சாதி! – ————————- – பறையர் சுடுகாடு படையாட்சி சுடுகாடு தலைமுழுக ஒரே ஆறு. – ——————— —அறிவுமதி

மழையில் வருகிறது மண் மணம். –

Posted: 03 May 2015 10:25 AM PDT

- அகதி முகாம் மழையில் வருகிறது மண் மணம். – —————— அவசரக் காற்று முதல் மழை புளியம் பூக்கள். – ——————– – மழைவிட்ட நேரம் தேங்கிய நீரில் முகம் பார்த்தது தெருவிளக்கு. – ——————— – விற்பனையில் வண்ணத்துப் பூச்சி துடிக்கிறது பூச்செடி. – ——————– – தாய்க்காகக் காத்திருக்கிறேன் மரத்தில் சாய்ந்தபடி. – ——————— – இறந்த வீரன் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது பாதி எழுதிய மடல். – ————————– — அறிவுமதி

வயதுக்கேற்ற வாழ்க்கை

Posted: 03 May 2015 09:29 AM PDT

- பத்தில் ஆனந்தம் புத்தகம் பயில்வது இருபதில் ஆனந்தம் காதலில் விழுவது முப்பதில் ஆனந்தம் கல்யாணம் ஆவது - நாற்பதில் ஆனந்தம் நன்மை தீமை உணர்வது ஐம்பதில் ஆனந்தம் அனுபவங்கள் சேர்வது அறுபதில் ஆனந்தம் வலி பழகிப் போவது - எழுபதில் ஆனந்தம் எதிரியின்றி வாழ்வது எண்பதில் ஆனந்தம் எண்ணங்கள் ஓய்வது தொன்னூறில் ஆனந்தம் தெய்வம் போல ஆவது நூறில் ஆனந்தம் நன்றி சொல்லிப் போவது - ============= மரபின் மைந்தன் முத்தையா -

துவையல்கள் -மாங்காய் இஞ்சி துவையல்!

Posted: 03 May 2015 07:33 AM PDT

நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் புன்னகை

லினக்ஸ் tutorial videos

Posted: 03 May 2015 05:53 AM PDT

வணக்கம் ,    இது என்னுடைய யூ-டியூப் சேனல் முகவரி https://www.youtube.com/channel/UCjWzilq7QJAmNpH8mstQVJg/ இதில் லினக்ஸ் இயங்குதளம் குறித்தான காணோளிகளை  வெளியிடுகிறேன் தேவைப்படுவோர் பார்த்து பயன் அடையுங்கள். உங்களின் லினக்ஸ் இயங்குதளம் தொடர்பான சந்தேகங்களை எனது இமெயில் முகவரிக்கு அனுப்பலாம், thesmartraja@gmail.com                                                                                           நன்றி

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) மசாலா பருப்பு உருண்டை குழம்பு!

Posted: 03 May 2015 05:33 AM PDT

இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம். புரிந்து கொண்டதற்கும் ...

சுமை !

Posted: 03 May 2015 05:20 AM PDT

குடையும் ஒரு சுமைதான்
மழை இல்லாத போது !


கொடையும் ஒரு சுமைதான்
யாசகன் இல்லாத போது !


படையும் ஒரு சுமைதான்
பகைவன் இல்லாத போது !


விடையும் ஒரு சுமைதான்
வினாக்கள் இல்லாத போது !

குடைக் கம்பியில் உன் கைரேகை…!

Posted: 03 May 2015 05:12 AM PDT

- – விடிந்துவிடு இரவே விழித்திருக்கிறான் கூர்க்கா. – —————————- – வாழ்த்து அட்டை முகவரியில் வருடினேன் எழுதிய கையை. – —————————- – எப்படிப் பாதுகாக்க குடைக் கம்பியில் உன் கைரேகை. – ———————— – தொட்ட நினைவு புரட்டிய பக்கத்தில் கூந்தல் முடி. – ———————– – பாவம் தூண்டில்காரன் தக்கையின் மீது தும்பி. – ——————— – மரக்கிளையில் குழந்தை வரப்பில் பண்ணையார் பயிரில் சிந்துகிறது பால். – ——————— —அறிவுமதி

சொம்புக்குப் பதிலா டம்ளரை வெச்சுக்கிட்டு தீர்ப்பு சொல்றாரே…ஏன்?

Posted: 03 May 2015 05:06 AM PDT

நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ நகை கொள்ளை

Posted: 03 May 2015 05:04 AM PDT

- நடிகை ஜெயசித்ரா வீட்டில் மர்ம நபர்களால் 25 கிலோ வெள்ளி நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. - தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜெயசித்ரா ஆகும். இவர் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் வீட்டில் தற்போது வசித்து வருகிறார். - ஜெயசித்ரா கோவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக 25 கிலோ வெள்ளி நகைகளை தனது நுங்கம்பாக்கம் வீட்டில் வைத்திருந்தார். இந்நிலையில் யாரோ மர்ம நபர்கள் இந்த வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். - உடனே இதுகுறித்து காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மீண்டும் நடிக்க வரும் மீனாட்சி சேஷாத்ரி...?

Posted: 03 May 2015 01:48 AM PDT

- தமிழில் டூயட் படத்தில் நடித்த மீனாட்சி சேஷாத்ரியை - நினைவிருக்கிறதா? இந்திப்பட ரசிகர்களுக்கு இதுபோல் படத்தின் பெயர் சொல்லி மீனாட்சியை அறிமுகப்படுத்தும் அவசியமில்லை. அந்தளவுக்கு அவர் பிரபலம். - மார்க்கெட் உச்சத்தில் இருந்தநேரம் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார் மீனாட்சி. அவர் தற்போது கணவர், குழந்தைகளுடன் டெக்சாஸில் வசித்து வருகிறார். திருமணமானது முதலே அங்குதான் வாசம். இந்நிலையில், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக செய்தி. ராஜ்குமார் சந்தோஷியின் ...

மஞ்சுவாரியரை மகிழ வைத்த மம்முட்டி!

Posted: 03 May 2015 01:36 AM PDT

மஞ்சுவாரியரை மகிழ வைத்த மம்முட்டி! – மலையாளத்தில், ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை அடுத்து, மம்முட்டியுடன் இணைந்து, என்னும் எப்பொழுதும் என்ற படத்தில் நடித்துள்ளார் மஞ்சுவாரியார். இப்படத்தில், மிக மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள மஞ்சுவாரியார், நடனத்தில் ஷோபனாவையே மிஞ்சும் அளவுக்கு ஆடியிருக்கிறார். அதனால், 'மஞ்சுவாரியாரின் இரண்டாவது ரவுண்டு மிகப் பெரிய அளவில் இருக்கும்…' என்ற கருத்து கூறியிருக்கும் மம்முட்டி, 'இப்படத்தில் அவரது நடிப்புக்கு தேசிய விருதுகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் ...

நாவலாசிரியர் ரூத் ரென்டல் மரணம்

Posted: 03 May 2015 01:28 AM PDT

- – லண்டன் : பிரபல ஆங்கில கிரைம் நாவலாசிரியர் ரூத் ரென்டல் சனிக்கிழமை காலை லண்டனில் காலமானார். அவருக்கு வயது 85. ஜனவரியில் அவருக்கு பக்கவாத நோய் தாக்கியதாகவும் அதன் பின் ஓய்வில் இருந்த அவர், சனிக்கிழமை காலமாகி விட்டதாக, அவரது நாவல்களை வெளியிடும் பென்குயின் ரேன்டம் ஹவுஸ் நிறுவனம் தெரிவித்தது. பிரிட்டனில் எஸ்சக்ஸ் என்ற இடத்தில் பிறந்த ரூத், 60 க்கும் மேற்பட்ட கிரைம் நாவல்களை எழுதியிருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளாக அவர், நாவல் வாசிப்பவர்களிடையே பிரபலமாக இருந்து வந்தார். இவரது ...

சொல் வியாபாரம்!

Posted: 03 May 2015 01:26 AM PDT

- – சொன்ன சொல்லை சத்தியமாக பாவிக்கின்றனர் சத்தியவான்கள்! சொல்லும் சொற்களில் அசிங்க அர்த்தங்களைச் சேர்த்து துச்சமாய் பார்க்க வைக்கின்றனர் அயோக்கியர்கள்! யோசித்து யோசித்து சொற்களை அலங்காரமாய் அடுக்குகின்றனர் அரசியல்வாதிகள்! சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை என்றால் உயிரையும் விடுகின்றனர் கவரிமான் இனத்தினர்! சொற்களுக்கு இடைப்பட்ட இடைவெளிகளில் புதிய அர்த்தங்களை கற்பித்து கொள்கின்றனர் முட்டாள்கள்! அர்த்தமற்ற சொற்களையே எப்போதும் பேசுகின்றனர் அஞ்ஞானிகள்! வழிகாட்டும் ...

ரஜினியுடன் நடிக்க கமல் மறுப்பு!

Posted: 03 May 2015 01:23 AM PDT

- 16 வயதினிலே, மூன்று முடிச்சு மற்றும் நினைத்தாலே இனிக்கும் என, பல படங்களில் கமல் மற்றும் ரஜினி இணைந்து நடித்தனர். அதன்பின், எந்தப்படத்திலும் இணையாத அவர்களை, மீண்டும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார் இயக்குனர் ஷங்கர். ஆனால், அப்படத்தில் ரஜினியை கதாநாயகனாகவும், கமலை வில்லனாகவும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு, யோசித்து பதில் கூறுவதாக கூறிய கமல், பின், 'அது இப்போதைய சூழ்நிலையில் சாத்தியப் படாது…' என்று மறுத்து விட்டார். அதனால், அப்படத்தில் வேறு நடிகரை, ...

How to create permanent alias in linux (customizing the long commands)

Posted: 03 May 2015 12:51 AM PDT


Are you tired with typing long commands in terminal, you can shrink that long commands into fewer letters , watch this video

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ்நாட்டில் தாவரங்கள் (111)

Posted: 03 May 2015 12:17 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

கார்த்திக்ராஜாவின் இசை நிகழ்ச்சி!

Posted: 03 May 2015 12:14 AM PDT

- இதுவரை வெளிநாடுகளில், பிரமாண்ட இசைக் கச்சேரிகளை நடத்தி வந்த கார்த்திக்ராஜா, கடந்த ஆண்டு, தன் தந்தை இளையராஜாவுக்கு மரியாதை செய்யும் வகையில், அவரது பாடல்களை மட்டும் பாடி, ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியை மதுரையில் நடத்தினார். அதைத் தொடர்ந்து, கோவையில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ள கார்த்திக்ராஜா, தற்போது, அதற்கான முதல்கட்ட வேலையாக பாடல்களுக்கான ரிகர்சலில் ஈடுபட்டுள்ளார். – ———————————- — சி.பொ.,

போலீஸ் வேடத்தில் நதியா!

Posted: 02 May 2015 11:13 PM PDT

- - – திருமணத்துக்குப்பின் செலக்டீவான படங்களில் மட்டுமே நடித்து வரும் நதியா, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி மற்றும் சண்ட படங்களுக்குப்பின், மலையாளத்தில் தான் அதிகமாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது தமிழில் இனியா நடித்து வரும், இனி வரும் நாட்கள் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். காட்டுக்குள் மாயமான பெண்களை கண்டு பிடிப்பதற்கான வேடத்தில் நடித்திருக்கும் நதியா, முதன்முறையாக இப்படத்தில் சண்டை காட்சிகளிலும் நடித்திருக்கிறார். காலம் அல்லாத காலத்தில் காய்த்ததாம் ...

ஹிருத்திக் ரோஷனை இயக்கும் முருகதாஸ்!

Posted: 02 May 2015 10:55 PM PDT

- தமிழில் வெளியான, மவுனகுரு என்ற படத்தை, தற்போது இந்தியில், அகிரா என்ற பெயரில், ரீ – மேக் செய்து வருகிறார், ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை அடுத்து, ஹிருத்திக் ரோஷனை வைத்து, இந்தியில் ஒரு பிரமாண்ட படம் இயக்குகிறார் முருகதாஸ். அப்படத்தில் நடிக்க, பல இந்தி நடிகைகள் போட்டி போட்ட போதும், அவர்களை தவிர்த்து, ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளார். ஆக, சமீபகாலமாக தமிழ், தெலுங்கு என்று கூடுதல் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், ஹிருத்திக் ரோஷனின், மெகா படத்தில் ஒப்பந்தமாகி, பாலிவுட் நடிகைகளுக்கு, ...

ஒரு புதிய அழைப்பு

Posted: 02 May 2015 10:37 PM PDT

வயல்களுக்குச் செல்லுங்கள் அல்லது ஆலைகளுக்கு! ஊர்வலங்களால், கோஷங்களால் ஆர்ப்பாடங்களால், பிரச்சாரங்களால் மட்டும் எந்த நாடும் உருப்பட்டதில்லை மேடைகளைத் தகர்த்தெறியுங்கள் வயல்களுக்கோ ஆலைகளுக்கோ செல்லுங்கள்! – உடல் மூட ஆடைகள் வயிற்றுக்குச் சோறு மேடைகள் நெய்வதில்லை கோஷங்கள் விளைப்பதில்லை நாட்டு கௌரவம் நடுத்தெருவில்! இதுவே தருணம் பணிபுரிய வாய் கிழியப் பேசுவதால் புதைந்த வரலாற்றைத் தோண்டுவதால் மட்டும் எந்த நாடும் உருப்பட்டதில்லை மேடைகளைத் தகர்த்தெறியுங்கள் வயல்களுக்கோ ஆலைகளுக்கோ செல்லுங்கள்! – இந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™