Tamil News | Online Tamil News |
- காஸ் மானியம் வேண்டாம் என்ற அரசின் திட்டத்துக்கு வரவேற்பு:தமிழகத்தில் 21,000 பேர் தாமாக முன்வந்து வழிகாட்டினர்
- மன்மோகன் அரசை ஆட்டிப்படைத்தார் சோனியா: பிீரதமர் மோடி தாக்கு
- மீனவர்களின் உரிமையை பறிக்க மத்திய அரசு முயற்சி: ராகுல்
- நான் தவறே செய்ததில்லை: மன்மோகன் சிங் உறுதி
- உஸ்... அப்பா... தாங்கலே: வெயிலின் கொடுமைக்கு 1,242 பேர் பலி: அதிக பாதிப்பு ஆந்திரா, தெலுங்கானா தான்
- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியில்லை: கருணாநிதி அறிவிப்பு
- ஆர்.கே.நகர் தொகுதியில்ஜெ., போட்டியின்றி தேர்வு?
- பால் உற்பத்தியாளர்கள் பிரச்னை: அரசு செய்யப்போவது என்ன?
- 'டியர் மிஸ்டர் மோடி... நலம் நலமறிய ஆவல்...!': பிரதமருக்கு இனி இப்படி கடிதம் எழுதலாம்
- எங்களுடன் விளையாடுவது நல்லதல்ல!
- சுவீடன் பத்திரிகைக்கு மத்திய அரசு கண்டனம்
| Posted: தமிழகத்தில், 'சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம்' என, 21,300 பேர், தாமாக முன் வந்து, எண்ணெய் நிறுவனங்களிடம், விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், மானியத்தை விட்டுக் கொடுக்க, லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் மவுனம் காத்து வருகின்றனர். தமிழகத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.52 கோடி, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மத்திய அரசு, கடந்த ஜன., மாதம், மாற்றி அமைக்கப்பட்ட காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை அறிமுகம் செய்தது. ... |
| மன்மோகன் அரசை ஆட்டிப்படைத்தார் சோனியா: பிீரதமர் மோடி தாக்கு Posted: புதுடில்லி : ''முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது இருந்தது போல இல்லாமல், இப்போது பிரதமர் அலுவலகம், எந்த வித நெருக்கு தலுக்கும் ஆளாகாமல், அனைத்து அமைச்சர்களின் கருத்தை கேட்டு, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது. ''அரசியல் சட்ட அங்கீகாரம் இல்லாதவர்களின் தலையீடு முன்னர் இருந்தது போன்ற நிலைமை இப்போது இல்லை,'' என, மறைமுகமாக சோனியா, ராகுல் தலையீட்டை, பிரதமர் மோடி சாடினார். |
| மீனவர்களின் உரிமையை பறிக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் Posted: திருச்சூர் : ''விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்தது போல், மீனவர்களிடம் இருந்து கடலில் மீன் பிடிக்கும் உரிமையை பறிக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் பேசினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், கேரள மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.நேற்று, மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான திருச்சூர் மாவட்டம் சாவக்காட்டுக்கு சென்ற ராகுல், அங்கு, மீனவர்களை சந்தித்து, அவர்களின் குறைகளைகேட்டறிந்தார்.மீனவர்களிடையே அவர் பேசியதாவது:நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறித்து ... |
| நான் தவறே செய்ததில்லை: மன்மோகன் சிங் உறுதி Posted: புதுடில்லி: ''பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்தி, என்னையோ அல்லது என் குடும்பத்தையோ வளப்படுத்திக் கொள்ள நான் எப்போதுமே முயன்றதில்லை. ஆனால், என்னைப் பற்றியும், என் தலைமையிலான முந்தைய அரசைப் பற்றியும், மோசமாக சித்தரிப்பதையே, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு வழக்கமாக கொண்டுள்ளது,'' என, முன்னாள் பிரதமர், காங்கிரசைச் சேர்ந்த, மன்மோகன் சிங் கூறியுள்ளார். |
| உஸ்... அப்பா... தாங்கலே: வெயிலின் கொடுமைக்கு 1,242 பேர் பலி: அதிக பாதிப்பு ஆந்திரா, தெலுங்கானா தான் Posted: ஐதராபாத்: நாடு முழுவதும் கோடை வெயில் உக்கிர தாண்டவம் ஆடுகிறது. குறிப்பாக, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உ.பி.,யில் வெயிலின் கொடூரம் மிகவும் அதிகமாக உள்ளது. இதுவரை, 1,242 பேர் வெயிலுக்கு பலியாகியுள்ளனர்; ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டும், 1,192 பேர் இறந்துள்ளனர்.இன்னும் சில நாட்களுக்கு இது போன்றே வெயில் தாக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டிய தொழில் செய்வோர் பீதியடைந்துள்ளனர்.வழக்கத்திற்கு மாறாக, இந்த ஆண்டு கோடை வெயில் கொடூரமாகவே இருந்துள்ளது. நாடு முழுவதும், 10 - 12 மணி நேரம் கடுமையான வெயில் அடித்ததால், ... |
| ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியில்லை: கருணாநிதி அறிவிப்பு Posted: சென்னை : 'ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. போட்டியிடாது' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். அவரது அறிக்கை:ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஜூன், 27ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கான காரியங்களை நிறைவேற்றுவதற்கு, நாடகம் ஒன்றை நடத்துவதை போல, ஆட்சி மிக வேகமாக இயங்குவதாக காட்டி கொள்ள முனைகின்றனர். 'கின்னஸ்' புத்தகத்தில், இடம்பெறும் அளவுக்கு, 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், கடந்த ஆண்டு, செப்டம்பர் 27ம் தேதி, நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து, சிறையிலே ... |
| ஆர்.கே.நகர் தொகுதியில்ஜெ., போட்டியின்றி தேர்வு? Posted: சென்னை : சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா, போட்டியின்றி தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க.,வினரிடம் ஏற்பட்டு உள்ளது.ஆர்.கே.நகர் தொகுதியில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., போட்டியிடவில்லை என, அறிவித்து விட்டது. ஸ்ரீரங்கத்தை விட, அதிக ஓட்டு வித்தியாசத்தில், ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்க, அ.தி.மு.க.,வினர் தயாராக உள்ளனர். இதனால், மாற்று கட்சியினர் களமிறங்க தயங்குகின்றனர். இப்படி, அரசியல் கட்சிகள் ஒதுங்கினால், பெயரளவுக்கு போட்டியிடுவோரை, வாபஸ் வாங்க வைத்துவிடலாம். இதன்மூலம், ஜெயலலிதாவை ... |
| பால் உற்பத்தியாளர்கள் பிரச்னை: அரசு செய்யப்போவது என்ன? Posted: பால் கொள்முதலை, ஆவின் நிறுவனம் நிறுத்தி விட்டதால், பால் உற்பத்தியாளர்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இப்பிரச்னை குறித்து, விரைவில் தீர்வு காண, அரசு முயற்சி செய்வதாக, ஆவின் அதிகாரிகள் கூறினர்.இதுகுறித்து, ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், தினமும், 1.87 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடக்கிறது. தனியாரிடம் உள்ள கறவை மாடுகளாலும், அரசு கொடுத்துள்ள இலவச கறவை மாடுகளாலும், இந்த உற்பத்தி எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை, 23.22 லட்சம் லிட்டர் பாலை, ஆவின் நிறுவனம், தினமும் கொள்முதல் செய்து வந்தது. தற்போது தினமும், 29.50 லட்சம் ... |
| 'டியர் மிஸ்டர் மோடி... நலம் நலமறிய ஆவல்...!': பிரதமருக்கு இனி இப்படி கடிதம் எழுதலாம் Posted: பிரதமர் அலுவலகத்தின் இணையதள பக்கம், புதுமையாகவும், எளிய வடிவிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடிக்கு, யார் வேண்டுமானாலும், நேரடியாக இ - மெயில் மூலம், கடிதம் அனுப்ப முடியும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அலாதி ஆர்வம்: குஜராத் முதல்வராக இருந்த போதே, தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில், மோடிக்கு அலாதி ஆர்வம் இருந்தது. அவர், பிரதமர் பொறுப்பை ஏற்ற பின், பிரதமர் அலுவலகத்தின் முகத்தையே மாற்றியமைத்தார். மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி, நண்பர்களுக்கு வாழ்த்துகள், கலந்து கொள்ளும் கூட்டங்கள், விருந்தினர்கள் சந்திப்பு என, தன் ... |
| எங்களுடன் விளையாடுவது நல்லதல்ல! Posted: ஜம்மு: ''இந்தியாவுடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்வது பாகிஸ்தானுக்கு நல்லது,'' என, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜ்நாத் சிங் கூறினார். சரியான பாடம்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு நகரில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: நம் நாட்டின் பெருமை, மாண்பு, ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் செயல்களை யார் செய்தாலும், அவர்கள் எத்தகையவர்களாக இருந்தாலும், அவர்களை சும்மா விடக் கூடாது. அத்தகையவர்களுக்கு சரியான பாடம் கற்பித்தே ஆக வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகள் ... |
| சுவீடன் பத்திரிகைக்கு மத்திய அரசு கண்டனம் Posted: புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 'போபர்ஸ்' குறித்து, வாய் தவறி சொன்னதை, பத்திரிகை நெறிமுறையை மீறி வெளியிட்டதாகக் கூறி, சுவீடன் பத்திரிகைக்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. சுவீடனைச் சேர்ந்த டி.என்., என்ற, 'டேகன்ஸ் நையட்டா' பத்திரிகைக்கு, பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில், 'போபர்ஸ் பீரங்கி ஊழல், ஊழலே அல்ல; அது, ஊழல் என, எந்த இந்திய நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படவில்லை; ஊடகங்களில் தான் அது பேசப்பட்டது' என்று தெரிவித்து இருந்தார். போபர்ஸ் ஊழல் காரண மாக, 1989 பொதுத் தேர்தலில், பிரதமர் ராஜிவ் காந்தி தோல்வி அடைந்த நிலையில், பிரணாப் அளித்த பேட்டி, இந்திய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 28,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |