Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Posted: 27 May 2015 03:19 PM PDT

மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சி மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மியான்மர் ...

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Posted: 27 May 2015 03:13 PM PDT

நம் தளத்தின் சமையல் அரசி கிருஷ்ணாம்மா, தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் அடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார்கள். தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பயனடையுங்கள்! மறவாமல் தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!   இங்குள்ள சுட்டிகளின் ஏதாவது ஒன்றை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! http://goo.gl/RBNbnk http://eegarai.org/apps/Kitchen4All.apk http://eegarai.com/apps/Kitchen4All.apk http://goo.gl/mKFgVO குறிப்பு: இன்று 23.5.2015 முதல் ...

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Posted: 27 May 2015 02:28 PM PDT

ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள். இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும். இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். ...

ஈச்சங்குலை...!!

Posted: 27 May 2015 02:00 PM PDT

இயல்பு…!!
*
பறவையின் இயல்பு
உயரப் பறத்தல்.
*
எந்தவொன்றிற்கும் இருக்கிறது
கால இடைளெி.
*
தனி,பொது,ரகசியமென
மூன்றாலானது வாழ்க்கை.
*

பிட்டுக் கன்னம்.

Posted: 27 May 2015 01:49 PM PDT

கறந்த பாலை சுண்டக் காய்ச்சி
......கரும்புப் பாகும் தேனும் பருப்பும்
சிறந்த பாதாம் பருப்பை அத்துடன்
......சிறுக நறுக்கி மெல்லச் சேர்த்து
திறந்த ரோஜா மலரின் இதழை
......திருகிப் போட்டுக் கலக்கிக் குடித்தால்
பிறக்கும் இன்பம் எல்லாம் மங்கையின்
......பிட்டுக் கன்னம் தொடுவதற் கீடோ?

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)

Posted: 27 May 2015 01:43 PM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!

Posted: 27 May 2015 01:40 PM PDT

பாரம்பரிய விதைகளே இனி விவசாயிகளின் ஆயுதம். இதை உணர்ந்து பல இடங்களில் பாரம்பரிய விதைகள் குறித்து கண்காட்சியும், விழாக்களும் நடந்து வருகின்றன. இதன் ஒரு அங்கமாக சென்னை, தி.நகரில் பாரம்பரிய விதை திருவிழா நடைபெற்றது. விழாவில், மரபணு மாற்று விதைகள் பற்றியும், அதன் தீமைகள் பற்றியும் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நாட்டு ரக நெல் விதைகள் அனைத்தும் புகைப்படங்களாகவும், மாதிரிகளாகவும் வைக்கப்பட்டு இருந்தன. கூட்டரங்குக்கு நுழையும் இடத்தில் 30க்கும் மேற்பட்ட மூலிகைகள் வைக்கப்பட்டு இருந்தன. பால் ...

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!

Posted: 27 May 2015 01:30 PM PDT

டாப் டென் பணக்காரர்கள் லிஸ்ட்டுகளையே பார்த்து பழகிப் போன கண்களுக்கு ஒரு சேஞ்சுக்காக இந்தியாவின் டாப்-5 பணக்கார பிச்சைக்கரர்கள் லிஸ்ட் இது... பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின். தற்போது 49 வயதாகும் ஜெயினுக்கு மும்பை பரேல் பகுதியில் 2 பிளாட்டுகள் சொந்தமாக இருக்கிறது.ஒரு பிளாட்டின் மதிப்பு 70 லட்ச ரூபாய். அதோடு சொந்தமாக ஜுஸ் கடையை வாடகைக்கு விட்டு அதில் இருந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயை வாடகையாக சம்பாதிக்கிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 2 ...

தமிழ் 3d கணினி விளையாட்டு

Posted: 27 May 2015 12:45 PM PDT

இதோ தமிழ் 3d கணினி விளையாட்டு அதிக தீவிர முயற்சியின் பலனாக இந்தவிலையாட்டை பூரணமாக மெருகேற்றுமுன்னர் உங்கள் பார்வைக்கு தருகிறேன் தெரியாத ஆபத்தைதேடி ! 325 MB download இதை கணினியில் unrar செய்யும்போது (7z) 1000 MB (1GB) இடம் தேவைப்டும் download http://www.mediafire.com/downl…/jupg47qh9q4dpqp/TamilGame.7z இது ஒரு first person shooting game வகையைச் சார்ந்ததாகும். ஆனால் அட்வென்சர் வகையாகவும் விளையாட்டுக்களை உருவாக்கமுடியும் இரண்டையும் கலந்து இதை செய்ய முயற்சித்துள்ளேன். இது முழுமையான விளையாட்டாக ...

உலகின் சக்தி வாய்ந்த 6 இந்தியப் பெண்கள்!

Posted: 27 May 2015 12:35 PM PDT

ஒவ்வொரு வருடமும் 'போர்ப்ஸ்' ஆங்கில பத்திரிக்கை வெளியிடும் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இந்த வருடம் 6 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், வங்கித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பல துறை சார்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். 'போர்ப்ஸ்' வெளியிட்டுள்ள உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அளவில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ...

'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து!

Posted: 27 May 2015 12:32 PM PDT

நியூயார்க்: மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், " மோடியிடம் பேச்சுதான் அதிகம் செயலில் ஒன்றுமில்லை!" என்று கடுமையாக விமர்சித்துள்ளன. ஓராண்டை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல சாதாரண திட்டங்களை ஊதி பெரிதாக்கி காட்டி, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல காட்டுகிறது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை என்றும் அந்த பத்திரிகைகள் விமர்சித்துள்ளன. அமெரிக்காவின் பிரபல 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை, "எதிர்பார்ப்புகள் முடிவடைந்துவிட்டன ஆனால் ...

சல்மானுக்கு வலிய ட்வீட்டிய சில்வஸ்டர் ஸ்டாலோன்!

Posted: 27 May 2015 12:30 PM PDT

சேர்ந்து நடிக்கலாம்: சல்மானுக்கு வலிய ட்வீட்டிய சில்வஸ்டர் ஸ்டாலோன்! டிரங்க் அண்ட் டிரைவ் கேஸில் மீண்டு வந்த உற்சாகம் தவிர்த்து, மேலும் ஓர் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் பாலிவுட் நடிகர் சல்மான்கான். உற்சாகத்துக்குக் காரணம் - ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன். ''உங்களுடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை. உங்கள் சமீபத்திய 'டபாங்' படம் என்னை மிகவும் கவர்ந்தது. நாம் இருவரும் இணைந்து விரைவில் ஓர் ஆக்‌ஷன் படம் பண்ண வேண்டும்'' என்று ட்விட்டர் மூலம் தனது ஆசையைத் தெரிவித்திருக்கிறார் ...

என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)

Posted: 27 May 2015 11:22 AM PDT

நான் என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'PDF' களை இங்கு பகிர்கிறேன்............ ..............நீங்கள் இவற்றை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.   பிள்ளை பெற்றவர்களுக்கான பத்திய  சமையல் ! DOWNLOAD

கடத்தலில் மங்காத தங்கம்: இந்த ஆண்டு 'டாப்' : ரூ.1000 கோடியை தாண்டியது1

Posted: 27 May 2015 10:58 AM PDT

புதுடில்லி : இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. 2014-15 நிதியாண்டில் மட்டும் ரூ.1000 கோடி மதிப்பிலான சுமார் 3500 கிலோ தங்கம் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வரப்படும் தங்கத்தின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் இது ஒரேஅடியாக அதிகரித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 2012-2013ம் நிதியாண்டில் சுங்கவரி அதிகாரிகள், ...

தமிழ் சினிமாவில் பாரதியார் பாடல்கள் ...........

Posted: 27 May 2015 10:41 AM PDT

ஷோபனாவுக்காக இந்த திரி .....ஒரு அருமையான பாடலுடன் ஆரம்பிக்கிறேன்...நீங்களும் பங்கு கொள்ளுங்கள் உறவுகளே

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

Posted: 27 May 2015 10:33 AM PDT

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் என்ன அருமை இந்த இரு பாடல்களும் , பானுமதி இன் குரலும் இனிமை யேசுதாஸ் குரலும் கொள்ளை இனிமை இரண்டையும் ரசியுங்கள், இது போல வேறு பாடல்கள் இருக்கா? இருந்தால் பகிருங்கள்

வாழைப்பழ பஃர்பி....!!

Posted: 27 May 2015 09:58 AM PDT

* என்னென்ன தேவை? வாழைப்பழம் – 2 கப் தேங்காய்த் துருவல் – 1கப் சிட்ரிக்ஆசிட் – கால் டீஸ்பூன் சர்க்கரை – ஒன்றரை கப் நெய் அல்லது வெண்ணெய் – கால் கப் வெனிலா எசென்ஸ் – 2 துளிகள் எப்படி செய்வது? அடி கனமான வாணலில் வாழைக் கூழுடன் தேங்காய்த் துருவல், சிட்ரி்க் ஆசிட், சர்க்கரை, நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும், மிதமான சூட்டில் சீராகக் கிளறிக் கொண்டே இருக்கவும். வாணலில் ஒட்டாமல் வருமபோது இறக்கிவைத்து, வெனிலா எசென்ஸ் சேர்த்துக" கிளறவும். நெய் தடவிய தட்டில் ஊற்றி, ஆறியதும் துண்டுகளாக ...

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Posted: 27 May 2015 09:54 AM PDT

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........இந்த திரி ...... இதில் நாம் எதேல்லாம் முக்கியமாய் குடித்தனம் வைக்க தேவைப்படும், 2 -3 பேர் மட்டுமே இருக்கும் குடும்பங்களுக்கான திட்டமிடல் (பட்ஜெட்), எப்படி மளிகை வாங்குவது, எப்படி அதை பாதுகாப்பது? , மாக்சிமம் பிரிட்ஜை எப்படி உபயோகிப்பது, மைகிரோவ் வேவ் ஓவனை எப்படி உபயோகிப்பது?என்பது போன்ற பலவற்றை பார்க்கலாம். . . எப்போதும் போல உங்களின் பின்னுட்டங்களும், விமரிசனங்களும் கருத்துகளும் இங்கு இடம் பெறட்டும் நண்பர்களே ...

FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)

Posted: 27 May 2015 09:52 AM PDT

FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் இந்த திரி இல் பொதுவாக எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்விகும் பதில்களும் இடம் பெறும்....நீங்களும் கேட்கலாம் பதில் சொல்லலாம் நண்பர்களே ! அதாவது, கண்ணில் தண்ணீர் வராமல் சின்ன வெங்காயம் தோல் உரிப்பது எப்படி?..... அப்பெண்ணை - அதாவது சுட்ட எண்ணை, அதாவது வறுத்து விட்டு மீதியாகும் எண்ணையை, மறுபடி உபயகப்படுத்துவது? எப்படி சுலபமாக சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப்பது ? கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்குவது ? இதை பற்றிக் ...

என்னை பற்றி...

Posted: 27 May 2015 09:35 AM PDT

My name is suresh from trichy.Im working at a automobile company...

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

Posted: 27 May 2015 09:21 AM PDT

ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகளில் சாமான்கள் வாங்குவது போல் நோட்டமிட்டு, அங்குள்ள பொருட்களை நைசாக திருடிச் செல்லும் காட்சிகள் இணையதளத்தில் பார்த்திருக்கிறோம். தற்போது ஒரு டெலிவிஷன் பெட்டியையே கில்லாடி பெண்கள் திருடிச் செல்லும் சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையம் அருகே ஒரு பர்னிச்சர் கடை உள்ளது. நேற்று மதியம் இந்த கடைக்கு 3 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் சாமான் வாங்க வந்தனர். மதியம் நேரம் என்பதால், கடையில் இருந்த ஊழியர்கள் சாப்பிட சென்று விட்டனர். ஒரே ஒரு இளம்பெண் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(374)

Posted: 27 May 2015 08:21 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

மகாகவி பாரதி பாடல்கள்...

Posted: 27 May 2015 06:59 AM PDT

[
காக்கைச் சிறகினிலே நந்தலாலா...


This posting includes an audio/video/photo media file: Download Now

வேலை வாய்ப்பு - திருச்சியில் (Office Account/Admin/Assistence)

Posted: 27 May 2015 06:44 AM PDT

நண்பர்களே, எனது அலுவலகத்தில் (திருச்சி) ஒரு வேலை காலியாக உள்ளது, உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் எனக்கு சொல்லுங்கள். வேலை பற்றிய தகவல்   Office Account/Admin, Interested candidate can apply to akrantiautomation@gmail.com திறமையான ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் யாருக்காவது உதவ காத்திருக்கிறோம்... .

ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Posted: 27 May 2015 06:04 AM PDT

ஜெயலலிதா விடுதலையானதை அடுத்து தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 5000 பேருடன் மொட்டை போட்டு கரூர் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி ஏந்தி சாமி தரிசம் செய்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற நாள் முதல் அவரது விடுதலைக்காக அதிமுகவினர் கோவில் கோவிலாகச் சென்று வேண்டிக்கொண்டனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை ஆனார். அவர் மீண்டும் முதல்வராகக் கடந்த 23-ஆம் தேதி பதவியேற்றார். இதையடுத்துப் பல்வேறு ...

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!

Posted: 26 May 2015 10:26 PM PDT

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே....நிறைய தேடிட்டேன் .............எனக்கு கிடைக்கலை ;(

மனிதா மனிதத்தை இழந்தாயடா..

Posted: 26 May 2015 08:33 PM PDT

சிறகடித்து பறக்கும் வெண்புறாவே. உன் சிறகுடைந்து கிடக்குது. வெண்புறாவே. மாலை நேரம் வந்ததனால் உன் மனையை தேடி சென்றாய் வெண்புறாவே வெண்மையின் தூய்மையில். கயவஞ்சகர்கள் காம வலைக்குள் சிக்குண்டுதுடியாய் துடித்தாய் வெண்புறாவே. கால்(க்)கட்டு கை(க்)கட்டு போட்டு உயிர் இருக்க உயிர் இருக்க ரணம் ரணமாய். வெள்ளை சிறகை உடைத்தான் வெண்புறாவே. வேதனையால் எப்படி துடி துடித்திருப்பாய் வெண்புறாவே. தாயின் வயிற்றில் முறை தப்பி பிறந்த மூதேவி நாய் பயல்கள் முன்னுக்கு பின்னாக நின்று. காமப்பசி தீர்த்த ...

பாமரர் தேவாரம்

Posted: 26 May 2015 07:16 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™