Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெ., முதல்வரான பின்பும் சிறு, குறு விவசாயிகள் தவிப்பு: பால் கொள்முதல் செய்ய ஆவின் மறுப்பு : தலையிடுவாரா முதல்வர்?

Posted:

ஜெயலலிதா ஐந்தாவது முறையாக மீண்டும் முதல்வராகியுள்ள சூழ்நிலையில், ஆவின் நிறுவனத்தின் குளறுபடி நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் சிறு, குறு விவசாயிகள், பெரும் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர். ஓரிரு மாடுகள் வைத்து பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை முழுமையாக கொள்முதல் செய்ய, ஆவின் நிர்வாகம் மறுப்பதே இதற்கு காரணம். இந்த பிரச்னையில், முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என்பதே, உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பு. கடந்த சட்டசபை தேர்தலின் போது, முதல்வர் ஜெயலலிதா புரட்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்தார். கிராமங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் ...

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் தேதி அறிவிப்பு

Posted:

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள, சென்னை, ஆர்.கே.நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) சட்டசபைத் தொகுதிக்கு, அடுத்த மாதம், 27ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.இத்தொகுதியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, களமிறங்க உள்ளதால், மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதி:
சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு செப்., 27ம் தேதி, ஜெயலலிதா, முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். இதனால், காலியான ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, கடந்த பிப்ரவரியில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது; ...

மத்திய அரசுடன் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் போர்க்கொடி: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கண்டனம்

Posted:

புதுடில்லி: 'டில்லி மாநிலத்தில், மூத்த அதிகாரிகள் நியமனம், இடமாறுதல் போன்ற உத்தரவுகளை பிறப்பிக்க, துணை நிலை கவர்னருக்கு தான் அதிகாரம் உண்டு; முதல்வருக்கு கிடையாது' என, சில நாட்களுக்கு முன் மத்திய அரசு, அறிக்கையிட்டதை கண்டித்து, டில்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கையே ஆம் ஆத்மி கொண்டுள்ளது தெரிய வருகிறது.டில்லி யூனியன் பிரதேசத்தில், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு, 2013 சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ...

இறுதியில் நீதி விண்ணுயர எழுந்து நிற்கும்: கருணாநிதி

Posted:

சென்னை: 'நீதியின் ராஜபாட்டையில், எத்தனை தடை கற்களை குவித்தாலும், படிக்கற்களாக மாற்றி, இறுதியில் நீதி விண்ணுயர எழுந்து நிற்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஜெயலலிதா, சென்னை மாநகரில் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை பற்றி, சட்ட விதிமுறைகளை பற்றி, சிறிதும் கவலைப்படாமல், கொண்டு வந்து குவிக்கப்பட்ட கட்சிக்காரர்களின் கொண்டாட்டங்களுக்கிடையே, மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.சட்டசபைக்கான பொது தேர்தல் நடைபெற்று, தற்போது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா என்றால் கிடையாது.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு ...

மன்மோகன் சிங் மிரட்டினார்: 'மாஜி' புத்தகத்தில் 'திடுக்'

Posted:

புதுடில்லி: '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங் உட்பட சிலர் மிரட்டியதாகவும், அவர்களின் மிரட்டலுக்கு பயந்திருந்தால், தானும் இந்த வழக்கில் சிக்கி, ஜெயிலில் அடைபட்டிருக்கக் கூடும் என, 'டிராய்' எனப்படும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் கூறியுள்ளார்.இவர் எழுதியுள்ள புத்தகத்தில், தான் மிரட்டப்பட்ட விதம், அதுகுறித்து, மன்மோகனிடம் புகார் கூறியது, மன்மோகனும் மிரட்டியது என, பல தகவல்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.மேலும், இந்த முறைகேட்டில், 'டாடா' நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாடா, பா.ஜ.,வைச் சேர்ந்த ...

பொருளாதாரம் சீரானது: பிரதமர் மோடி பெருமிதம்

Posted:

புதுடில்லி: 'தடம் புரண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை, என் தலைமையிலான அரசு, மீண்டும் சீரான பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேம்படுத்தப்பட்டு உள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில், மத்திய அரசின் சாதனைகள் குறித்து, பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது: பொருளாதார வளர்ச்சி வீதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக, இந்தியா மாறி உள்ளது. பணவீக்கம் ...

போபர்ஸ் பீரங்கி ஊழல் நிரூபிக்கப்படவில்லையாம்!

Posted:

புதுடில்லி: ''போபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் நடைபெற்றதாக, இந்திய நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படவில்லை,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்னும் சில நாட்களில் சுவீடன் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதை முன்னிட்டு, சுவீடன் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், ஊடகங்களால் பெரிதாக்கப்பட்டதே தவிர, உண்மையிலேயே ஊழல் நடைபெற்றதாக, இந்திய நீதிமன்றங்கள் எதிலும் நிரூபிக்கப்படவில்லை.போபர்ஸ் பீரங்கி கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டதற்கு பின், நான் ...

கறுப்பு பணம் பதுக்கிய பெண்கள் யார்? பட்டியல் வெளியீடு

Posted:

பெர்ன்: தொழிலதிபர் யாஷ் பிர்லா, டில்லியைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ரித்திகா சர்மா என, சுவிட்சர்லாந்து நாட்டில், கறுப்பு பணம் பதுக்கிய, மேலும் ஐந்து இந்தியர்களின் பெயர் மற்றும் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. நேற்று முன்தினம் இரு இந்திய பெண்களின், விவரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது, மேலும், ஐந்து பேரின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. விசாரணை: சுவிட்சர்லாந்து உட்பட, பல நாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் பலர் தங்களின் கறுப்பு பணத்தை பதுக்கி உள்ளனர். இப்படி கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் ஒன்று முன்னர் கசிந்தது. ...

பேச்சு அதிகம்; உண்மை அப்படியில்லை: மோடி ஆட்சி பற்றி அமெரிக்க பத்திரிகைகள் கருத்து

Posted:

நியூயார்க்: 'ஓராண்டை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல சாதாரண திட்டங்களை ஊதி பெரிதாக்கி காட்டி, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல காட்டுகிறது. ஆனால், உண்மையில் நிலைமை அப்படியில்லை' என, அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.'வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' என்ற பத்திரிகையின் தலைப்பு, 'எதிர்பார்ப்புகள் முடிவடைந்துவிட்டன; சவால்கள் அதிகரித்துள்ளன' என, தெரிவித்துள்ளது. அந்த செய்தியில், 'இந்தியாவில் உற்பத்தி' என்பதை உரக்க கோஷமிட்டாலும், உண்மை நிலவரம், கலவரமாகவே உள்ளது; ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. மாறாக, தொடர்ந்து, ஐந்து மாதங்களாக ...

விவசாயிகள் சேனல் மோடி துவக்கினார்

Posted:

புதுடில்லி: புதுடில்லியில் உள்ள, அறிவியல் கழகத்தில், தூர்தர்ஷனின், 24 மணி நேர விவசாயிகள் சேனலை (கிசான் சேனல்), பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார்.துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்றால், முதலில் கிராமங்கள் முன்னேற வேண்டும். கிராமங்கள் முன்னேற வேண்டுமானால், விவசாயிகள் முன்னேற வேண்டும். இத்தனை தொலைக்காட்சி சேனல்கள் இருக்கிறதே, மீண்டும் புதிதாக ஒரு சேனல் துவங்குவது ஏன் என்று மக்கள் யோசிக்கின்றனர். விவசாயிகளை நேரடியாக தொடர்பு கொள்வதற்காக இந்த சேனல் துவக்கப்பட்டுள்ளது. நாட்டின் ...

குஜ்ஜார் இனத்தவரின் போராட்டத்தால் ரயில்வேக்கு தினம் ரூ.15 கோடி நஷ்டம்

Posted:

மும்பை: 'கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குஜ்ஜார் இனத்தவர், கடந்த சில நாட்களாக, ரயில் மறியல் உட்பட, பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில், அவர்கள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தால், சரக்கு ரயில்கள், மற்றும் பயணிகள் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டு வருகின்றன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பயணிகளும் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர். 'குஜ்ஜார்களின் இந்தப் போராட்டத்தால், மேற்கு ரயில்வேக்கு, நாள் ...

'காப்பீட்டு பிரீமியம் தொகையை சொந்த பணத்தில் கட்டுவேன்'

Posted:

அமேதி : ''அமேதி லோக்சபா தொகுதியைச் சேர்ந்த, 25 ஆயிரம் பெண்களின், காப்பீட்டு திட்டத்திற்கான பிரீமியம் தொகையை, என் சொந்தப் பணத்தில் இருந்து செலுத்துவேன்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது அமேதி லோக்சபா தொகுதி. இங்கு தான், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஓராண்டை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில், இந்தத் தொகுதியில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: பிரதமர் மோடி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™