Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மூக்குக் கண்ணாடி பராமரிப்பு!

Posted: 26 May 2015 03:52 PM PDT

< மூக்குக் கண்ணாடிகளை உபயோகப்படுத்தாத நேரங்களில் அதன் உறையில் போட்டு வைத்திருக்க வேண்டும். அது முடியாவிடில் கண்ணாடி பாகம் மேசை மீது படாதவாறு வைக்க வேண்டும். < மூக்குக் கண்ணாடியை கழற்றும் போது இரண்டு கைகளாலும் கண்ணாடியின் விளிம்பில் இணையும் (த்ர்ண்ய்ற்) இடத்தில் பிடித்து கழற்ற வேண்டும். ஒருகையால் கழற்றும்போது கண்ணாடி பிரேம்கள் வளைந்து போகவும் உடைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. < மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உபயோகப்படுத்து முன் ஒவ்வொரு முறையும் மென்மையான துணியால் ...

யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !!

Posted: 26 May 2015 12:54 PM PDT

பெயர்: M.Jagadeesan
சொந்த ஊர்: துறையூர்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நண்பர்கள் மூலமாக
பொழுதுபோக்கு: கணினியில் மேய்வது
தொழில்: பணி ஓய்வு
மேலும் என்னைப் பற்றி:
இனிய மனைவி ; இரண்டு பிள்ளைகள்
...இருப்பது போதும் என்கிற மனம்

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - நந்த கோபாலனோடு நான் .....

Posted: 26 May 2015 12:49 PM PDT

முன்பு வந்த நாட்டியப்பாடல்கள் முலம் நாம் பல புராணக்கதைகள், நாயன்மார்கள் கதைகள் என பலதும் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்படிப்பட்ட சில பாடல்கள் இந்த திரி இல் போடுகிறேன் பார்த்து மகிழுங்கள் முதலில்............ குலதெய்வம் படத்தில் குமாரி கமலா ஆடும் " தாயே யசோதா உந்தன்" பாடல்

இன்றைய 'பிச்சைக்காரன்'.....வீடியோ ! - சிரிக்க மட்டும் !

Posted: 26 May 2015 12:37 PM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Posted: 26 May 2015 10:41 AM PDT

1. செலவைத் திட்டமிடுங்கள்! பட்ஜெட் போட நினைத்தாலே முதலில் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு இந்த மாதத்துக்கு, இந்த விஷயத்துக்கு இவ்வளவுதான் செலவு என்று எழுதிவிடுகிறோம். ஆனால், மாதக் கடைசியில் பட்ஜெட் போட்ட பேப்பரை எடுத்து அதன்படிதான் நாம் செய்திருக்கிறோமா என்று பார்த்தால், இரண்டும் வேறுவேறு மாதிரி இருக்கும். இப்படி பட்ஜெட் போடுவது ஒன்று, செலவு செய்வது வேறு ஒன்று என்று இருந்தால், நீங்கள் போடும் பட்ஜெட் எதிர்பார்த்த பலனைத் தராது. பட்ஜெட் போடும்முன் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக ...

தோற்றாலும் எழுவோம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 26 May 2015 10:37 AM PDT

தோற்றாலும் எழுவோம் ! கவிஞர் இரா .இரவி ! தோல்விக்குத் துவண்டு விடும் சராசரியல்ல தோல்விக்குப் பின்னும் முயன்று வெல்வோம் ! ஆயிரம் முறை முயன்று வென்றிட்ட அற்புத எடிசன் வரலாறு அறிந்தவர்கள் நாங்கள் ! பதினேழு முறை முயன்று வென்றிட்ட பண்டைய கசினிமுகமது கதை படித்தவர்கள் நாங்கள் ! ஒரே ஒரு முறை முயன்று தோற்றதும் ஓடி விடும் கோழைகள் அல்ல நாங்கள் ! வீரத்தை இந்த உலகிற்கு கற்பிதா ஆசான் வீரத்தின் அடையாளமாக விளங்குபவர் நாங்கள் ! இந்தமுறை தோற்றாலும் அடுத்தமுறை வெல்வோம் ! எல்லாமுறையும் ...

முறுக்கு மீசை

Posted: 26 May 2015 10:35 AM PDT

உலகம் பெரும் பயங்கரவாதி போல் இப்போது தெரிகிறது! அங்கும் அழிவு இங்கும் அழிவு எங்குமே பெரும் பயம்தான்! சும்மா இருந்தாற் போல் வானத்து மழை குண்டுகள் போல் பொழிகிறது பூமி! வாயைத் திறந்து பூகம்பம் என்று சொல்லி உயிர்களை விழுங்குகிறது! என்ன நிலைமை எங்கு வாழ்வது உயிரின் பெறுமதி ஒரு சதம் கூட இல்லை! பறவைகள் எண்ணிக்கொண்டு பறக்கின்றன ஒரு நாளின் இறப்புக்களை மட்டும்! நாய்களின் மூக்குக்கும் நல்ல நாற்றம் நாளும் பொழுதும்! பகலும் இரவுமாய், உலகம் ஒரு முறுக்கு மீசை போல் தெரிகிறது!

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!

Posted: 26 May 2015 10:33 AM PDT

தும்பிகளாய்…!!
*
உனக்குமொரு
எல்லையிருக்கிறது
எனக்குமொரு
எல்லையிருக்கிறது
நாம் எப்பொழுது
எல்லைக் கடந்து
அன்பில் இணைந்து
காதல் தும்பிகளாய்
வாழப் போகிறோம்…!!
*

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 26 May 2015 08:31 AM PDT

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி ! தமிங்கிலப் பேச்சிற்கு முடிவு கட்டுவோம் ! தமிழோடு ஆங்கிலக் கலப்பின்றிப் பேசிடுவோம் ! ஆரம்பக்கல்வியை தமிழில் மட்டும் வழங்குவோம் ! அதன் பின் மற்ற மொழிகள் எதுவும் படிக்கட்டும் ! அப்பா அம்மா என்றழைப்பதைக் கட்டாமாக்கிடுவோம் ! டாடி மம்மி என்றால் தண்டத்தொகை வாங்கிடுவோம் ! குழந்தைகளுக்கு பெயர்களை நல்ல தமிழில் சூட்டுவோம் ! குழந்தைகளுக்கு சிந்திக்க தமிழைப் பயிற்றுவிப்போம் ! ஊடகங்களின் தமிழ்க் கொலையைத் தடுத்திடுவோம் ! உரிமைகளைத் தமிழ் ...

பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

Posted: 26 May 2015 08:26 AM PDT

பூண்டி மகான். வடஆற்காடு மாவட்டத்தில் போளுர் தாலுகாவில் உள்ளது பூண்டி என்னும் சிறிய கிராமம். அங்கு வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தியவர் பூண்டிமகான் ஆவார். எப்போதும் கையில் ஓர் அழுக்குத் துணி மூட்டை உடலையே சட்டை பண்ணாத அவர் அணிந்திருந்ததோ சட்டைக்குமேல் பற்பல சட்டைகள். இப்படி ஒரு மகான் வாழ்ந்தார். அருளுருவில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும். அவர்தான் பூண்டி மகான் என்றும், ஆற்று சுவாமிகள் என்றும் அடியவர்களால் பக்தியோடு அழைக்கப்படும் சித்த புருஷர். இன்றும் அவரை ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 26 May 2015 08:07 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

செவி வழி செய்திகள்: ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்?

Posted: 26 May 2015 07:47 AM PDT

ஆந்திராவில் சிறுவன் ஒருவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவன் தன் மனைவி மற்றும் குழந்தையின் பெயரை சொல்லி அவர்களை உடனடியாக பார்க்க வேண்டும் என்று தொந்தரவு செய்துள்ளான். இவன் எதோ உளறுகிறான் என்று வீட்டில் உள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லையாம். திரும்ப திரும்ப தன்னுடைய மனைவியை பார்க்கவேண்டும் என்றும் அவர் பெயர் மற்றும் ஊர், முகவரி போன்ற விவரங்களையும்  சொல்லி இருக்கிறான்.  விசாரித்த போது அப்படி ஒரு ஊர் உள்ளதை தெரிந்து கொண்ட அவன் பெற்றோர் அவனை அழைத்து சென்றுள்ளனர். அவன் அந்த பெண்ணை ...

ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்

Posted: 26 May 2015 07:41 AM PDT


-
ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணர்
குறித்து விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

முழுமையான உணவாகும் பச்சைப் பயறு !

Posted: 26 May 2015 07:32 AM PDT

முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! தோலுடன் இருக்கும்போது 'பச்சைப் பயறு' என்று சொல்வதை, தோல் நீக்கி பருப்பாக்கும் போது 'பாசிப் பருப்பு' என்று கூறுகிறோம். மற்ற பயறு வகைகளுடன் ஒப்பிடும்போது, இதில் எல்லா முக்கிய சத்துகளும் இருப்பதோடு, விரைந்து வேகும் தன்மையும் உள்ளது. சுலபமாக முளைகட்டவும் இயலும். இதை முழுப் பயறாகவே பருப்பாக, சாம்பாராக, சாலட், சுண்டலாகவும் பயன்படுத்தலாம். வட இந்தியர் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளும் டாலுக்கு இதையே உபயோகிக்கிறார்கள். இந்தப் பயறில் முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. ...

உணவு - உடலும் மனமும் சார்ந்தது !

Posted: 26 May 2015 07:27 AM PDT

ஆஹார சுத்தெள ஸத்வ சுத்தி'' - "ஒருவனது ஆஹாரமானது தூய்மையானதாக இருந்தால் அவனது ஸத்வம் (உடலும் உள்ளமும்) தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. உணவு சமைப்பவரின் மனநிலையும், உணர்வுகளும் உணவைப் பாதிக்கும். அசுத்தமான பழக்க வழங்கங்களையும் அசுத்தமான தீய உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் மனநிலை கொண்டோரால், தயாரிக்கப்பட்ட உணவை உண்ணும் பக்தர்கள், சமைப்பவரின் மனநிலையால் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களது பாவகரமான கர்மாக்களில் (தீவினைகள்) பங்கெடுத்துக் கொள்ள நேரிடும்' என்கிறார் சுவாமி பிரபுபாதா. ...

கொழுப்பு படிதல் உடலும் உணவும்

Posted: 26 May 2015 07:22 AM PDT

குழந்தை கருவில் வளரும்போது, சுமார் ஆறு மாதத்துக்குப் பிறகு, குழந்தையின் உடலில் 'கொழுப்பு செல்கள்' உருவாக ஆரம்பிக்கிறது. அதன்பின், பருவம் அடையும் வயதில்தான், அதாவது 'பாலின ஹார்மோன்கள்' ( Sex Hormones) உடலில் சுரக்க ஆரம்பிக்கும் நேரத்தில்தான் மறுபடியும் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாகிறது. இந்த பாலின ஹார்மோனின் தூண்டுதலினால்தான், ஆண்-பெண் உடல் அமைப்புக்கு ஏற்ப உடலில் கொழுப்பு படிகிறது. சுமார் 15 வயதிற்கு மேல் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாவதில்லை. ஏற்கனவே உருவான செல்கள் அப்படியேதான் இருக்கும். ...

ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் !

Posted: 26 May 2015 07:13 AM PDT

'வாழையடி வாழையாக' வாழும்படி வாழ்த்துகிறோம். வாழையின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமக்குப் பயன்படுவதை அறிவோம். வாழையின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பை கி.மு. 600 ஆண்டு புத்த மத ஏடுகளில் காணலாம். மாமன்னர் அலெக்சாண்டர் கி.மு. 327ல் இந்தியாவில் வாழைப்பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகள் உள்ளன. கி.பி. 200ம் ஆண்டில் சீனாவில் ஒழுங்குபடுத்திய வாழை சாகுபடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ''வாழையை ஏழைகளின் எனர்ஜி உணவு என்றே சொல்லலாம். இந்தியா போன்ற ...

என்னைப் பற்றி

Posted: 26 May 2015 07:08 AM PDT

பெயர்:                                 முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ) சொந்த ஊர்:                             பள்ள மோர்க்குளம், இராமநாதபுரம் (மாவட்டம்) ஆண்/பெண்:                          ஆண் ஈகரையை அறிந்த விதம்:  கூகுள் தேடல் வழி பொழுதுபோக்கு:                   நூல் வாசித்தல், எழுதுதல் தொழில்:                                தமிழ் – உதவிப் பேராசிரியர், இந்துசுதான் கலை & அறிவியல் கல்லூரி                                                  கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா. மேலும் என்னைப் பற்றி: ...

மணப்பெண்ணுக்கான நகைகள் தயாரிப்பு!

Posted: 26 May 2015 06:39 AM PDT

தங்க நகைகளே தோற்று போகும்படியான குந்தன் நகைகள், ஆன்டிக் நகைகள், டெம்பிள் நகைகள் எனப் பல வகையான பேஷன் நகைகள் தற்போது வந்துவிட்டன, இருந்தாலும் திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு அணிவிக்கும் "பிரைடல்' நகைகளுக்கு தனி மவுசுதான். காரணம், எத்தனை தங்க நகை அணிந்திருந்தாலும், ஒரு நாள் கூத்துக்கு மணப்பெண்கள் இந்தவகை பேஷனான "பிரைடல் செட்' நகைகளையே விரும்புகிறார்கள், அதனால் என்ன விலையானாலும் திருமணநாளுக்கு முன்கூட்டியே இந்த நகைகளை தேடிச் சென்று நல்ல டிசைனாக பார்த்து வாடகைக்குப் பதிவுச் செய்வது ஒரு சம்பிரதாயமாகவே ...

கவிதை!

Posted: 26 May 2015 06:23 AM PDT

கனவு கண்டு காத்திருப்பதை விட ,
காலம் உணர்ந்து செயல் பட்டால்
கீழ்வானம் சிவக்கும் முன்
கின்னசிலும் இடம் பெறலாம் - நமக்கு
கேட்ட வரமும் கிடைத்திடலாம் !!!
களையான முகத்தில் கற்பனைகள்
வளர்த்து காட்சிகளை மெய்யாக்குங்கள்
வாழ்வில் இடையூரான நிகழ்வுகளை
எடுத்தெரியுங்கள் ...முன்னேற்றம்
நாம் நடக்கும் பாதையில் இல்லை ...
நம் பாதத்தில் இருக்கிறது !!!

இரவில் நன்றாக தூங்க 5 வழிகள்!

Posted: 26 May 2015 06:18 AM PDT

ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் இன்றிமையாத ஒன்றாகும். பசிருசி அறியாது, நித்திரை சுகமறியாது என்று சொல்வார்கள். நிலத்தில் கடுமையான உழைக்கும் விவசாயி, கட்டிட தொழில் உள்பட அமைப்புச் சாரா தொழில் பிரிவில் பணியாற்றுவோருக்கு உழைப்பின் நிமித்தமாக இரவில் நல்ல தூக்கம் வரும். ஆனால் ஏசி அறையில் அமர்ந்து ஹாயாக பணியாற்றுவோர், வேலையில்லாமல் ஊர்சுற்றுவோர், சமூக பணி என்ற பெயரில் அரசியல் நடத்துவோர் உள்பட உடலுக்கு வேலை கொடுக்காமல், நெற்றியில் துளி வியர்வையும் சிந்தாமல் உள்ளவர்களுக்கு தூக்கம் என்பது எட்டா கனியாகவே ...

கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்

Posted: 26 May 2015 03:29 AM PDT

[b]கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்[/b] லண்டன்: பிரிட்டனில் நடந்த, வாகன பதிவு எண் ஏல விற்பனையில், தனக்கு பிடித்தமான பதிவு எண்ணை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். பிரிட்டனின் லச்செஸ்டர்பீல்டு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில், மூன்று தினங்களாக, வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான வாகன பதிவு எண்களின் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பங்கேற்ற, லண்டனில் வசிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தொழிலதிபர், 2.5 கோடி ரூபாய் கொடுத்து, ஒரு ...

AMARAN'S {POESY...!!

Posted: 25 May 2015 11:25 PM PDT

காதல் பார்வைகள். கவிதாவெளி அமரன். * 1. So happy to the eye The pure white pen Of you whom I dearly love. [ Tr] R.H. Blyth. கண்ணுக்கு குளிர்ச்சி பெண்ணே! நின்வெண்மை விற்று கண்ணே, என் காதல். பூஸன் * 2. Having .slept, the cat gets up And with great yawns Goes outlove-matting. * தூக்கம் முகந்ததுமே ஆச்சு, கொட்டாவி, பூனை கூடணும், வெளியோட்டம!. இஸ்ஸா – [ மொ.பெ.அமரன் ] * நன்றி பொதிகை மின்னல் – மே-2015. ந.க.துறைவன்.

பூர்வ ஜன்மத்து பந்தம் : சிறுகதை !

Posted: 25 May 2015 11:04 PM PDT

மோகன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவன். நடுத்தர வர்க்கத்தினன். நாணயமானவன். ஒரு சராசரி குடும்பத்தின் அத்தியாவசிய வசதிகளைச் செய்துகொண்டவன். ஆனால், அவனுக்கு ஒரு குறை. அது ஒரு குழந்தை இல்லாததுதான். திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றன. அவன் நாற்பதை எட்டிவிட்டான்; மனைவிக்கும் முப்பத்தெட்டு வயதாகிவிட்டது. இனியும் குழந்தை பிறக்குமா என்பதில் இருவருக்குமே சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. மருத்துவப் பரிசோதனைகள் இருவருமே குழந்தை பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்கள்தான் என்று அறுதியிட்டுச் சொல்லிவிட்டன. ஆனாலும், கரு ...

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

Posted: 25 May 2015 08:23 PM PDT

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™