Tamil News | Online Tamil News |
- நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த அ.தி.மு.க., அரசு பெருமிதம்: தேர்தலுக்கு முன் புது திட்டங்களை அறிவிக்க முடிவு
- கொள்ளை அடித்தவர்களுக்கு மோசமான நாட்கள் இவை...: மதுரா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
- விடுதலையை எதிர்த்து அப்பீல்: அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசிக்க முடிவு
- தமிழக அமைச்சரவையில் ஓ.பி.எஸ்.,சுக்கு இரண்டாமிடம்
- 'எனக்கு உடல் நிலை சரியில்லை': கருணாநிதி உருக்கமான பேச்சு
- 'அந்தோணி தப்பிக்க முடியாது'
- 'மெக்மாஹன் எல்லைக்கோடு சட்டவிரோதம்': இந்தியா மீது சீனா பாய்ச்சல்
- டில்லியில் உள்ள அரசு பங்களாக்களில் வசிக்கும் வி.ஐ.பி.,க்களுக்கு கிடுக்கிப்பிடி
- கெஜ்ரிவால் மகளுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையா?
- நகைக்கடன் இன்சூரன்ஸ் திட்டத்தில் வங்கிகளால் ஏமாற்றப்படும் விவசாயிகள்
- 2 இந்திய பெண்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு
| Posted: நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள, அ.தி.மு.க., அரசு, தேர்தலுக்கு முன், மக்களை கவரும் வகையில், புதிய திட்டங்களை அறிவிக்க முடிவு செய்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா, நாளை, சில திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. ஜெயலலிதா, நான்காவது முறை முதல்வரானார்.ஆட்சி பொறுப்பேற்றதும், தேர்தல் வாக்குறுதிப்படி,* இலவச கால்நடை வழங்கும் திட்டம்.* தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.* இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம்.* மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ... |
| கொள்ளை அடித்தவர்களுக்கு மோசமான நாட்கள் இவை...: மதுரா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு Posted: மதுரா: ''ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து நாடு விடுபட்டுள்ளது. தங்களின், 60 ஆண்டுகால ஆட்சியில், நாட்டை கொள்ளை அடித்தவர்கள், தற்போது மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக எப்போதும், என் அரசு செயல்படும். அவர்களின் மேம்பாட்டை உறுதி செய்யும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவி யேற்று, நேற்றுடன் ஓராண்டு நிறைவு அடைந்தது. இதை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள பா.ஜ., கட்சி, நேற்று முதல், இம்மாத இறுதி வரை, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. 200க்கும் ... |
| விடுதலையை எதிர்த்து அப்பீல்: அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசிக்க முடிவு Posted: பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வது குறித்து, கர்நாடகா அமைச்சரவை எந்த முடிவும் எடுக்கவில்லை; 'அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமாரிடம் மீண்டும் ஆலோசனை பெற்று, அதன் பின், முடிவு செய்யலாம்' என, முடிவு செய்யப்பட்டுள்ளது.நான்கு பேர் :சொத்து குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய, நான்கு பேரையும், மே, 11ம் தேதி, கர்நாடகா உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுதலை தொடர்பான தீர்ப்பில், கணக்கு சரியாக கையாளவில்லை என, சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ... |
| தமிழக அமைச்சரவையில் ஓ.பி.எஸ்.,சுக்கு இரண்டாமிடம் Posted: சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அமைச்சரவையில் இரண்டாம் இடம் வழங்கப்பட்டு உள்ளது.ஜெயலலிதா தலைமையில், 28 அமைச்சர்கள் பதவியேற்று உள்ளனர். அமைச்சரவையில், முதல்வர் ஜெயலலிதா, முதலிடத்திற்கு வந்துள்ளார்.எனவே, முதலிடத்தில் இருந்த பன்னீர்செல்வம், இரண்டாம் இடத்திற்கும், இரண்டாம் இடத்தில் இருந்த, நத்தம் விஸ்வநாதன், மூன்றாம் இடத்திற்கும் சென்றுள்ளனர்.அதேபோல், ஒவ்வொரு அமைச்சர்களும், ஒரு இடம் பின் தள்ளப்பட்டு உள்ளனர். அதேநேரம், அமைச்சர் செந்தூர் பாண்டியன் நீக்கப்பட்டதால், 19ம் இடத்தில் இருந்த ... |
| 'எனக்கு உடல் நிலை சரியில்லை': கருணாநிதி உருக்கமான பேச்சு Posted: ''எனக்கும், அன்பழகனுக்கும் உடல் நிலை சரியில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்த, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது: என் உடல் நிலையும், அன்பழகனின் உடல் நிலையும் சரியாக இல்லாத சூழ்நிலை.அன்பழகன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்காக, அவருடைய கவலைகளில் நானும் பங்கேற்கிறேன். இந்த சூழ்நிலையில் அனைவரும், ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அப்படி செயல்படுவதற்கு, நீங்கள் ஒவ்வொரு நாளும் உறுதி மேற்கொண்டு, ஒத்துழைப்பு நல்க வேண்டும்.மதுரையில் நடைபெற்ற மக்கள் திரளை, 'டிவி' வாயிலாக பார்க்க ... |
| Posted: புதுடில்லி: ''ராணுவத் துறையில், ஒரு முட்டுக்கட்டை நிலைமை உருவாக காரணமாக இருந்தவர், முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணி. அவர், தன் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது,'' என, தற்போதைய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், குற்றம் சாட்டியுள்ளார். முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியில், ராணுவ அமைச்சராக இருந்தவர், ஏ.கே.அந்தோணி. இவர் சமீபத்தில், நிருபர்களிடம் பேசுகையில், 'பிரான்ஸ் நாட்டிடமிருந்து, ரபேல் போர் விமானங்கள் வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக, நிதி அமைச்சகம் மற்றும் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் கவுன்சிலுடன் கலந்தாலோசிக்கப்பட ... |
| 'மெக்மாஹன் எல்லைக்கோடு சட்டவிரோதம்': இந்தியா மீது சீனா பாய்ச்சல் Posted: பீஜிங்: ''மெக்மாஹன் வரையறை செய்த, இந்தியா - சீனா எல்லைக்கோடு சட்ட விரோதமானது; இதுகுறித்து, இந்தியாவுடன் தோழமையுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காண சீனா விரும்புகிறது,'' என, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூ சுன்யிங் தெரிவித்துள்ளார்.தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜீத் தோவல், ''மியான்மர் வரை உள்ள மெக்மாஹன் கோட்டை ஏற்றுக் கொள்ளும் சீனா, அதன் தொடர்ச்சியை ஏற்க மறுப்பது வியப்பளிக்கிறது,'' என, அண்மையில் தெரிவித்திருந்தார்.இதற்கு பதில் அளிக்கும் வகையில், ஹூ சுன்யிங் மேலும் கூறியதாவது:இந்தியா - சீனா எல்லையின் கிழக்கு பகுதி குறித்த, தன் தெளிவான ... |
| டில்லியில் உள்ள அரசு பங்களாக்களில் வசிக்கும் வி.ஐ.பி.,க்களுக்கு கிடுக்கிப்பிடி Posted: புதுடில்லி: 'டில்லியில் உள்ள அரசு பங்களாக்களில் வசிக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பதவி காலம் முடிந்ததும், பங்களாவில் இருந்து வெளியேற வேண்டும். வாடகை செலுத்தி விட்டு, தொடர்ந்து அந்த பங்களாவிலேயே வசிக்க முடியாது,'' என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், வெங்கையா நாயுடு கூறினார். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வெங்கையா நாயுடு கூறியதாவது: டில்லியில் எம்.பி.,க்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அரசு சார்பில் பங்களாக்கள், வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. பதவி காலம் முடிந்ததும், இவர்கள் ... |
| கெஜ்ரிவால் மகளுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையா? Posted: புதுடில்லி: போக்குவரத்து அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா; டில்லி ஐ.ஐ.டி.,யில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில், ஓட்டுனர் பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) பெறுவதற்காக, மண்டல போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்ற ஹர்ஷிதா, அதற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் இல்லை என்றும், அதற்காக பணம் பெற்றுக் கொள்ளும்படியும் கூறியுள்ளார். ஆனால், பணம் தராமலேயே அவரது வேலை முடிந்துவிட்டது. ... |
| நகைக்கடன் இன்சூரன்ஸ் திட்டத்தில் வங்கிகளால் ஏமாற்றப்படும் விவசாயிகள் Posted: தேனி: தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெறும் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கப்படுவது இல்லை. இத்திட்டத்தில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.மாநிலம் முழுவதும் தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களில் ஆண்டு தோறும் ரூ.16 ஆயிரம் முதல் 18 ஆயிரம் கோடிக்கு நகைக்கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கிகளில் நகைக்கடன் பெறும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 மட்டும் இன்சூரன்ஸ் பிரிமியம் பிடிக்கப்படுகிறது. பிரிமியம் செலுத்திய விவசாயிகள் அடுத்த ஓராண்டுக்குள் விபத்தில் படுகாயம் அடைந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும். ... |
| 2 இந்திய பெண்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு Posted: பெர்னே: சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பெண்கள் இருவர் பெயரை, சுவிட்சர்லாந்து நாட்டு வரித்துறை நேற்று வெளியிட்டுள்ளது.ஸ்நேகா லதா சஹானி மற்றும் சங்கீதா சஹானி என்ற இருவரின் பெயரையும், அவர்கள் பிறந்த தேதியையும் குறிப்பிட்டுள்ள சுவிஸ் நிர்வாகம், 'இந்த தகவல் குறித்து, சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால், 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளது.இதுபோல, சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள பிரிட்டன், ஸ்பெயின், ரஷ்யா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என, 40 பேரின் பெயர், விவரங்களையும், சுவிட்சர்லாந்து ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 26,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |