Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உண்மை எது? பொய் எது? கர்ப்ப கால நம்பிக்கைகள்

Posted: 25 May 2015 12:19 PM PDT

கர்ப்ப காலத்தில், வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை, தொடர்ந்து வாந்தி வந்தால், குழந்தைக்குத் தலை முடி அதிகமாக இருக்கும் என்று பல்வேறு நம்பிக்கைகள் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளன. இந்த நம்பிக்கைகளில் எந்த அளவுக்கு உண்மை? வயிறு பெரிதானால் பெண்குழந்தை? வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை என்றும், சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் கூறுவார்கள். வயிறு பெரிதாக தெரிவதற்கு, உடல் பருமன், குழந்தையின் எடை, அதன் அளவு, பனிக்குட நீரின் அளவு என, பல காரணங்கள் உள்ளன. கருவின் சருமத்தைப் பாதுகாக்கும் ...

கடன்

Posted: 25 May 2015 12:19 PM PDT

கடன் வாங்கினால்தான்
கழிக்க முடிகிறதாம்
காலத்தை

கடன் வாங்குவது தவறெனில்
முதல் குற்றம்
கணக்கு வாத்தியாருடையதே

சுயத்தில் நின்று
நொடிதோறும் அவதியுறும்
நட்சத்திரம் பார்க்கிலும்

கடன் வாங்கி
அலங்கரித்துக் கொள்ளும்
நிலவே பேசப்படுகிறது

ஆயின்
நட்சத்திரத்திற்கென
என்றுமில்லை
அமாவாசை.

தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்!

Posted: 25 May 2015 12:18 PM PDT

லண்டன் : 'வாய்ப்புகள் நம் அருகில் தான் இருக்கும், அதை கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளும் திறன் தேவை' என்பதை, பிரிட்டனை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவன் நிரூபித்துள்ளான். பிரிட்டனின் சாமர்செட் பகுதியில் வசிக்கும், ஹார்வே மிலிங்டன், 13, என்ற, எட்டாம் வகுப்பு மாணவனின் தினசரி வருமானம், இரண்டு லட்சம் ரூபாய். டிஜிட்டல் மயம்: அந்நாட்டு போக்குவரத்து துறை, கார்களுக்கு வரி செலுத்துவதற்கான தவணை குறித்த ஸ்டிக்கரை ஒட்டி வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல், இந்த பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், ...

மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Posted: 25 May 2015 12:12 PM PDT

மும்பை: மும்பை விமான நிலையத்திற்கு மேல் சில மர்ம பொருட்கள் பறந்ததால் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை மாலை பறந்த இந்த மர்ம பொருட்களை, ஜெட் ஏர்வேஸ் விமானிதான் முதலில் பார்த்து அச்சமடைந்து, விமானத்தை டேக்-ஆப் செய்யாமல் உடனடியாக விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். சில அதிகாரிகள் இது ரிமோட் மூலம் இயக்கப்படும் பாராசூட்டாக இருக்கலாம் என்று கூறினர். இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்த ...

இது இன்னுமொரு செல்ஃபி விபரீதம்!

Posted: 25 May 2015 12:06 PM PDT

செல்ஃபி விபரீதங்களில், இன்னொரு எண்ணிக்கையாக இணைந்திருக்கிறார் ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர். 21 வயதான ரஷ்யப் பெண், தன் அலுவலகத்தில் இருந்த சமயத்தில் பிஸ்டலை தலையில் வைத்து சுடுவதுபோல 'அல்டிமேட்' செல்ஃபி எடுக்க ஆசைப்பட, தவறுதலாக டிரிக்கரை அழுத்தியதால் குண்டு பாய்ந்தது. மாஸ்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு, சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இளம்பெண்ணுக்கு எப்படி பிஸ்டல் கிடைத்தது என்று போலீஸ் விசாரணை நடந்துகொண்டிருக்க, விடுமுறையில் ...

பார்வையற்றவர்களுக்கு வரபிரசாதமாகும் பயோனிக் கண்!

Posted: 25 May 2015 12:02 PM PDT

பார்வை என்பது நம் கண்களுக்கு இயற்கை கொடுத்திருக்கும் ஓர் அற்புத வரம். வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்குப் பார்வை முக்கியம். இருட்டில் இருந்து கொண்டு பூட்டைத் திறந்து பாருங்கள். அப்போது தெரியும், பார்வையின் அவசியம். பிறவியிலேயே பார்வை இழப்பதற்கும், வளர்ந்த பிறகு பார்வையைப் பறிகொடுப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் இரண்டரை கோடிப் பேர் பார்வையை இழந்து தவிக்கிறார்கள். இப்படி இழந்த பார்வையை மீட்டுத் தருவதற்கு மருத்துவ உலகம் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறது. இவற்றில் ...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாங்காய்!

Posted: 25 May 2015 11:50 AM PDT

மாங்காய் நமக்கு அதிக பலன்களை தருகிறது. மாங்காயில் உப்புச்சத்து இல்லாததால், இதனை எடையை குறைக்க நினைப்போர் அச்சமின்றி சாப்பிடலாம். உங்களுக்கு நெஞ்செரிச்சல் இருந்தால், மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் மாங்காய் நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும். கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் மிகுந்த சோர்வு மற்றும் வாந்தி ஏற்படும். அப்போது மாங்காயை சாப்பிட்டால், அந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம். மாங்காய் சாப்பிட்டால், உடலின் சத்து அதிகரிக்கும். அதிலும் இதனை மதிய உணவிற்கு பின் உட்கொண்டால், ...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்- தெரிந்துக்கொள்ளுங்கள் தமிழர்களே

Posted: 25 May 2015 11:13 AM PDT

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்க கொடுத்தது யார் ? இந்தியரளே நன்றி மறப்பது நன்றன்று!இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் . அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ?அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ? சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் ...

பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...

Posted: 25 May 2015 11:07 AM PDT

அனைவருக்கும் வணக்கம்.

சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.

சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.

இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?

என்னை பற்றி (ஜான்)

Posted: 25 May 2015 11:06 AM PDT

என்னை பற்றி :
பெயர்: கு. ஜான் எப் கென்னடி ,
ஊர்: திருவண்ணாமலை மாவட்டம், மேல் வன்னியனுர் கிராமம்,
பாலினம்: ஆண்,
கல்வி: Mca, Mphil.
பணி: கல்லூரி துணை பேராசிரியர்,
ஆர்வம்: இணையத்தளம், ஓவியம், பாடல் மற்றும் ஆராய்ச்சி.
ஈக்கரை தெரிந்துகொண்ட விதம்: இணையத்தளம்.

கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை!

Posted: 25 May 2015 10:58 AM PDT

சமுதாயத்தில் ஆண் ஒரு காரியத்தை செய்து விட்டால், அதை ஒரு சம்பவமாக நினைத்து தாண்டி போகும் பட்சத்தில், ஒரு பெண் செய்யும் சின்ன தவறான காரியம் கூட, ஒரு வரலாறாக, ஒரு தலைமுறையின் பதிவாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது. ஒரு குடும்பத்தின் வேரும், அந்த குடும்பம் என்ற வாகனத்தை, சரியான பாதையில் நடத்திச் செல்லும் ஓட்டுனரும் பெண் தான். படிப்பறிவு இல்லாத காலத்திலேயே, பெண்கள் தங்கள் குடும்பத்தை திறம்பட நடத்தி, தங்கள் திறமையை நிலை நாட்டினர். ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு பிரச்னைக்கான தீர்வையும், அவர்கள் குடும்பத்தை ...

E-Tweets

Posted: 25 May 2015 10:54 AM PDT

முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!


கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?

டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்!

Posted: 25 May 2015 10:50 AM PDT

டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடிகள் தாண்டி விடும் என்ற "சாதனையை" நோக்கி தமிழக அரசு சென்று கொண்டிருக்கிறது. இதைப்போல வேறு வருமானம் அரசுக்கு இல்லை என்று சொல்லி மக்களை சாக வைத்தாவது டாஸ்மாக் சரக்கின் வருமானத்தின் மூலம் அரசு ஊழியருக்கு சம்பளமும், ஓட்டு வாங்க 'இலவசம்' என்ற பெயரில் லஞ்சமும் கொடுக்க முடிகிறது. டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு என்ற பெயரில் இருந்து டாஸ்மாக் மக்களை வாழவைக்கும் "சாதனைக்குரிய" திரவமாக மாறி விட்டது. உணவுப்பொருளில் கலப்படம் என்றால் கூட வழக்கு போடும் சட்டமுள்ள ...

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை

Posted: 25 May 2015 10:09 AM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைமையகம், "சொத்துக் குவிப்பு வழக்கைப் பொருத்தவரை கர்நாடக அரசின் பங்கு என்பது நிர்வாக ரீதியானதே தவிர சட்டப்பூர்வமானது அல்ல. மேலும், இவ்வழக்கில் கர்நாடக அரசு சம்பந்தப்பட்ட 4 பேரால் கர்நாடக அரசு நேரடியாக பாதிக்கப்படவில்லை. ...

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Posted: 25 May 2015 10:08 AM PDT

நம் தளத்தின் சமையல் அரசி கிருஷ்ணாம்மா, தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் அடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார்கள். தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பயனடையுங்கள்! மறவாமல் தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!   இங்குள்ள சுட்டிகளின் ஏதாவது ஒன்றை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! http://goo.gl/RBNbnk http://eegarai.org/apps/Kitchen4All.apk http://eegarai.com/apps/Kitchen4All.apk http://goo.gl/mKFgVO குறிப்பு: இன்று 23.5.2015 முதல் ...

டிமான்ட்டி காலனி - திரை விமர்சனம்

Posted: 25 May 2015 09:56 AM PDT

நடிகர் : அருள்நிதி நடிகை : - இயக்குனர் : ஆர் அஜய் ஞானமுத்து இசை : கேபா ஜெரமியா ஓளிப்பதிவு : அரவிந்த் சிங் நண்பர்களான அருள்நிதி, ரமேஷ் திலக், ஷனத், அபிஷேக் ஜோசப் அனைவரும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். இதில் அருள்நிதி எந்த வேலைவெட்டிக்கும் செல்லாமல், வேறொருவர் மனைவியை உஷார் செய்து, அவளிடம் பணத்தை கறந்து நண்பர்களுக்கு செலவு செய்து வருகிறார். ரமேஷ் திலக் போட்டோ டிசைனில் பயங்கரமான ஆள். ஷனத், கதை எழுதி வைத்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன் வாய்ப்பு தேடி வருகிறார். அபிஷேக் ஜோசப் ...

திமுக செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞர் ஆற்றிய உரை

Posted: 25 May 2015 09:55 AM PDT

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் ஆற்றிய உரை: ''மாவட்டச் செயலாளர்களுடைய கூட்டத்தில் இதுவரையில் சொல்லப்பட்ட கருத்துகள் - விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள முடிவு - இவைகள் எல்லாம் ஏடுகளில் வெளிவரவுள்ளது. குறிப்பாக முதல் தடவையாக நம்முடைய கழகத்தின் பொதுச் செயலாளர், பேராசிரியர் அவர்கள் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலே கலந்து கொள்ள இயலாமைக்காக, அவருடைய கவலைகளில் நானும் பங்கேற்று, அந்தக் கவலையைப் போக்குகின்ற வகையில், அவருடைய உடல் நிலை விரைவில் ...

கையிலே தவழும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை

Posted: 25 May 2015 09:35 AM PDT

- - 1) தங்கை வெளிச்சம் காட்ட, அண்ணன் மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அது என்ன? - 2) ஊரெல்லாம் அலையும், தண்ணீர் பருகாது, உலகெல்லாம் சுற்றினாலும் வீட்டுக்குள் வராது.. அது என்ன..? - 3) எங்கள் தோட்டம் பெரிய தோட்டம் பூக்கள் பலவும் பூத்த தோட்டம் நின்று பறிக்க இடமில்லை..! அது என்ன..? - 4) கையிலே தவழும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை - அது என்ன..? - 5) மதியுறள்ளவர் விரும்பும் மதி, மதியாதவர்களுக்கு கிடைக்காத மதி - அது என்ன..? - 6) கறுப்புக் குதிரையை கழுவினால் வெள்ளையானது அது ...

சிரிங்க

Posted: 25 May 2015 09:31 AM PDT

ஒருவர்:இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் என்ன வித்தியாசம் மற்றவர்:இலங்கையர்கள் போராடுவோம் என்று தான் சொல்வார்கள் ஆனால் பாகிஸ்தான் காரன் எல்லாம் தீவிரவாதி பையன்கள் சுட்டுபோட்டு நாங்க சுடல என்று வாக்கு வாதம் பன்னுவானுள் ஒருவர்:அப்ப கல்லுல சுட்ட தோசை நாமே! அவனுள் அயல்ன்ல சுட்ட ஆம்லட் என்று தெளிவா சொல்லுங்க மற்றவர்:உன்ன போல் புத்திசாலி இந்த மண்ணுக்கு கட்டாயம் தேவை கடல் பக்கம் போகாத? ஒருவர்:ஏன் மற்றவர்:உன்ன தூக்கிடும் டா

மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Posted: 25 May 2015 08:47 AM PDT

மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சி மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மியான்மர் ...

அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் சாப்பிடலாம்..!- விடுகதைகள்

Posted: 25 May 2015 08:37 AM PDT


-

-விடை தெரிந்தவர் சொல்லுங்கள்

GST என்ற பொருட்கள் சேவைகள் வரி

Posted: 25 May 2015 08:37 AM PDT

வரி விதிப்பது ஓர் அரசின் முக்கிய அதிகாரங்களில் ஒன்று. வரி விதிக்காத அரசு, அரசாக இருக்கவும் முடியாது. வரி என்பதே நாம் கட்டாயமாக அரசுக்கு செலுத்த வேண்டியத் தொகை, அதே நேரத்தில் ஒவ்வொருவரும் செலுத்திய வரிக்கு ஏற்ப தனக்கு அரசு சேவைக் கொடுக்கவேண்டும் என்று கேட்க முடியாது. ஆனால் குடி உரிமை பெற்ற ஒவ்வொருவருக்கும் அரசின் சேவை களைக் கேட்கும் உரிமை உண்டு. எதற்கு பொருட்கள் சேவைகள் மீது வரி? ஒவ்வொருவரும் அவரின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப வரி செலுத்தவேண்டும் என்பது ஒரு கோட்பாடு. வரி செலுத்தும் ...

தமிழக அரசின் திட்ட பணிகள்

Posted: 25 May 2015 08:31 AM PDT

கொடைக்கானல் ஏரியை அழகுபடுத்த ரூ.88 கோடி சென்னை, ஆக.28:கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அங்குள்ள ஏரி ரூ.87 கோடியே 96 லட்சம் செலவில் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகர்ப்புறங்களில் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குதிலும், பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரினை வழங்குவதிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், மக்களின் ...

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு

Posted: 25 May 2015 07:39 AM PDT

1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான உ வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர். உலகக் கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் ...

திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Posted: 25 May 2015 07:31 AM PDT

திருவள்ளுவர் "புலால் மறுத்தல்" அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும் உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக ...

எனது கதைகள்

Posted: 25 May 2015 07:22 AM PDT

ஓட்டைப் படகு. ============ காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று ...

கடுக்காய்

Posted: 25 May 2015 07:02 AM PDT

தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள். கடுக்காய்தான் அது. அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர். மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த ...

இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள்.

Posted: 25 May 2015 07:00 AM PDT

இந்து சமயமானது பல்வேறு விதமான கடவுள்களை வணங்கி வழிபடுவதை வலியுறுத்துகிறது. அவை ஆறு விதமான பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அவை... 1 . சைவம் - சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்குவது. 2 . வைணவம் - மகாவிஷ்ணு பகவானை முழுமுதற் கடவுளாக வணங்குவது. 3 . சாக்தேயம் - ஆதிபராசக்தி தேவியே முழுமுதற் கடவுள் என்று வழிபடுவது. 4 . காணபத்தியம் - கணபதியாகிய விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது. 5 . கௌமாரம் - குமரக் கடவுளாகிய முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது. 6. சௌரம் - சூரிய ...

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Posted: 25 May 2015 05:58 AM PDT

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! மும்பை: 'ரிலையன்ஸ்' குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தன் புதிய, 'பி.எம்.டபிள்யு., - 760ஐ' சொகுசு காருக்கு, 1.60 கோடி ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளார். அச்சுறுத்தல் காரணமாக, முகேஷ் அம்பானிக்கு, 2013 முதல், 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்காக அரசு செய்யும் செலவை, முகேஷ், திரும்ப அளித்து விடுகிறார். இந்நிலையில், அவரின் பாதுகாப்புக்கு, குண்டு துளைக்காத, நவீன வசதிகளுடன் கூடிய, பி.எம்.டபிள்யு., காரை வாங்க ...

விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்

Posted: 25 May 2015 05:29 AM PDT

நாம் எந்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம் என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட நாளா அல்லது சிவபெருமானால் தலை கொய்யப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளா என்று அறிந்தவர்கள் விளக்கவும். அதோடு நாம் எப்போதிருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் என்பதைப் பற்றி தெரிந்தாலும் கூறவும். அமரர் கல்கியின் கூற்றுப்படி நரசிம்ம பல்லவரின் காலத்தில்தான் (கி.பி 630 - 668) விநாயகர் சிலை தமிழகத்திற்கு அறிமுகமானது. மீனாட்சியம்மன் கோவிலில் பெண் வடிவில் ஒரு விநாயகர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™