Tamil News | Online Tamil News |
- நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் இல்லை: வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சி முடிவு
- ஹிலாரியின் மின்னஞ்சல்கள் வெளியீடு
- கறுப்பு பணம் ஒழிய கடும் சட்டம் தேவை: எஸ்.ஐ.டி., தலைவர் பேச்சு
- 5வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார் ஜெயலலிதா: 28 அமைச்சர்களுக்கு இரண்டு குழுக்களாக பதவி பிரமாணம்
- நாடு முழுவதும் 5,000 பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டம்: மோடி அரசின் ஓராண்டு சாதனையை விளக்க பா.ஜ., அதிரடி
- 'பிரதமர் பதவிக்கான கவுரவத்தை பா.ஜ., மீட்டுள்ளது'
- கதவை திறந்து வைத்து காத்திருக்கிறது தி.மு.க.,: தே.மு.தி.க., சந்தேகம்; பா.ம.க., மீது பார்வை
- நூடுல்சை தொடர்ந்து சமையல் எண்ணெயிலும் கலப்படம்
- ராணுவ வீரர்களுக்கான திட்டம் என்னாச்சு? ராகுல் கேள்வி
- அதிகாரிகள் வீடுகளில் பாத்திரம் கழுவும் போலீஸ்: டில்லிக்கு போன தமிழக போலீசாருக்கு அவமானம்
- ஜெ., அதிரடியில் இருந்து அமைச்சர்கள் தப்பியது எப்படி?ஏழு மாத வழிபாடும், நேர்த்திக்கடனும் காரணம் என தகவல்
| நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் இல்லை: வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சி முடிவு Posted: கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (மேனேஜ்மென்ட் கோட்டா), கல்விக் கடன் வழங்குவதற்கு, இந்திய வங்கிகள் சங்கம், புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. இதனால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கடன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.சுயநிதி கல்வி நிலையங்களில், மொத்த முள்ள இடங்களில், 50 சதவீதம் கல்லூரி நிர்வாகத்தாலும், 50 சதவீதம், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின்படியும் நிரப்பப்படுகின்றன. இதில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதில் தான், புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. பொதுவாக, ... |
| ஹிலாரியின் மின்னஞ்சல்கள் வெளியீடு Posted: வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனின், 296 மின்னஞ்சல்களை, அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது, அதிபர் ஒபாமா அரசு.அமெரிக்காவில், 2016 நவம்பரில், அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், அதிபர் வேட்பாளராக நிற்க திட்டமிட்டுள்ள, அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், அதுதொடர்பான ஆதரவு திரட்டும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், வெளியுறவு அமைச்சராக இருந்த போது, ஹிலாரி கிளின்டன் பரிமாறிய, 296 மின்னஞ்சல்களை, அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்களின் முக்கிய சாராம்சங்களில், எந்த ... |
| கறுப்பு பணம் ஒழிய கடும் சட்டம் தேவை: எஸ்.ஐ.டி., தலைவர் பேச்சு Posted: புதுடில்லி: ''நாட்டை பீடித்துள்ள கறுப்பு பணம் என்ற புற்று நோயை ஒழிக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும், கடுமையான சட்டங்கள் அவசியம்,'' என, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணம் குறித்து, விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழுவான - எஸ்.ஐ.டி.,யின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான எம்.பி.ஷா தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெற்ற, புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், அவர் பேசியதாவது: உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கறுப்பு பணம் பதுக்கப்படுகிறது. அதை தடுத்து, கறுப்பு பண பதுக்கல் பேர்வழிகளுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும். அதற்கு, வரி ஏய்ப்பை ... |
| 5வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார் ஜெயலலிதா: 28 அமைச்சர்களுக்கு இரண்டு குழுக்களாக பதவி பிரமாணம் Posted: சென்னை: சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடந்த கோலாகல விழாவில், தமிழக முதல்வராக, ஐந்தாவது முறையாக, ஜெயலலிதா பதவியேற்றார். அவருடன், 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். சென்னை, மெரினா கடற்கரை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள, நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று காலை, 11:00 மணிக்கு பதவியேற்பு விழா நடந்தது. நீதிபதிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அதிகாரிகள், நாட்டு தூதரக அதிகாரிகள் என, அனைவருக்கும் தனித்தனியே, இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.ஜெயலலிதா, காலை, 10:55 மணிக்கு பல்கலை வளாகத்திற்கு வந்தார். அனைவரும் ... |
| Posted: புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின் ஓராண்டு சாதனையை, மக்களுக்கு எடுத்து கூறும் வகையில், நாடு முழுவதும், 5,000 பொதுக் கூட்டங்களை நடத்த பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. உ.பி.,யில் நாளை நடக்கும் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று, வரும், 26ம் தேதியுடன், ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இதை பிரம்மாண்டமாக கொண்டாட, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்தனர். இதுகுறித்து, மூத்த அமைச்சர்களை அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு அமைச்சகங்கள் ... |
| 'பிரதமர் பதவிக்கான கவுரவத்தை பா.ஜ., மீட்டுள்ளது' Posted: புதுடில்லி: ''முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இழந்த, பிரதமர் பதவிக்குரிய பெருமையை, கடந்த ஓராண்டு ஆட்சியில், பா.ஜ., மீட்டெடுத்துள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பெருமிதத்துடன் கூறியுள்ளார். பா.ஜ., ஆட்சியின் ஓராண்டு சாதனைகள் குறித்து, அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: முந்தைய மத்திய அரசை, வெளியில் இருந்த ஓர் அதிகார மையம் ஆட்டுவித்து வந்தது. ஜனநாயக நாட்டில், பிரதமர் பதவியின் மதிப்பை குறைக்கும் இத்தகைய முயற்சி, ஒரு போதும் தொடரக் கூடாது என, பா.ஜ., விரும்பி, அதை மாற்றிஉள்ளது. பிரதமர் அலுவலகம் மீதான நம்பகத் தன்மை, கண்ணியம், ... |
| கதவை திறந்து வைத்து காத்திருக்கிறது தி.மு.க.,: தே.மு.தி.க., சந்தேகம்; பா.ம.க., மீது பார்வை Posted: பேரன் திருமணத்தை காரணமாக வைத்து, புதிய கூட்டணிக்கு, தி.மு.க., தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பு பட்டியலில், பல கட்சிகள் இருந்தபோதிலும், தே.மு.தி.க., - காங்கிரஸ் - ம.தி.மு.க., கட்சிகளுக்கு விடுத்துள்ள அழைப்புக்கு, கூட்டணி ஆசை மட்டுமே பிரதான காரணம் என, தெரியவந்துள்ளது.இதில், த.மா.கா., - பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு, தி.மு.க.,வுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், இக்கட்சிகளை தவிர்த்து, மற்ற கட்சிகளுடன் வலுவான அணி அமைக்கும் முயற்சியை துவங்க, தி.மு.க., தலைமை விரும்புகிறது. அதிலும் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., தலைவர் ... |
| நூடுல்சை தொடர்ந்து சமையல் எண்ணெயிலும் கலப்படம் Posted: புதுடில்லி: 'மேகி நூடுல்சை' அடுத்து, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயிலும் பெரும்அளவில் கலப்படம் செய்யப்படுவதாக, இந்திய உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் எச்சரித்துள்ளது.குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் திறனுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, மோனோ சோடியம் குளூடோமேட் (எம்.எஸ்.ஜி.,) என்ற, அமினோ ஆசிட் ரசாயனம், மேகி நூடுல்சில் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, பல ஆயிரம், மேகி பாக்கெட்டுக்களை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டு உள்ளது. கடுகு எண்ணெயில் உணவுப் பொருட்களை பொரிக்கும்போது, எண்ணெய் எளிதாக பிரிந்துவிடும். எளிதில் ஒட்டும் தன்மை இல்லாத ... |
| ராணுவ வீரர்களுக்கான திட்டம் என்னாச்சு? ராகுல் கேள்வி Posted: புதுடில்லி: ''ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தாமல், மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது,'' என, காங்., துணை தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார். |
| அதிகாரிகள் வீடுகளில் பாத்திரம் கழுவும் போலீஸ்: டில்லிக்கு போன தமிழக போலீசாருக்கு அவமானம் Posted: டில்லி, திகார் சிறையில் பணியாற்றி வரும் தமிழக போலீசாரை, உயர் போலீஸ் அதிகாரிகள், பாத்திரம் மற்றும் கழிப்பறை கழுவச் சொல்லி கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
| Posted: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும்போது, அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்படும் என்றும், ஒன்பது அமைச்சர்கள் வரை நீக்கப்படலாம் என்றும், பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், பெரிய மாற்றம் எதுவுமின்றி, அதே பழைய அமைச்சரவையுடன், ஜெயலலிதா நேற்று பதவியேற்றுள்ளார்.இதன் பின்னணி காரணங்கள் குறித்து, அ.தி.மு.க., வட்டாரம் கூறுவதாவது:வழக்கில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றம், விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய, இரண்டு நாட்களுக்கு பின், அமைச்சர்களால் ஜெயலலிதாவை சந்திக்க முடிந்தது. அதுவும், 20 அமைச்சர்களுக்கு மட்டுமே அழைப்பு கிடைத்தது. அதில், பாதி அமைச்சர்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 24,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |